சனி, 5 நவம்பர், 2011

வாழ்க்கை


எத்தனை கோடி மலர்கள் மலர்ந்தன




இதயச் சோலையிலே - இதில்




எத்தனை எத்தனை வாடி உதிர்ந்தன




எந்தன் வாழ்வினிலே




எத்தனை பாதைகள் எதிரே தெரிந்தன




எனது கண்களிலே - அதில்




எத்தனை எத்தனை இருண்டு மறைந்தன




எந்தன் வாழ்க்கையிலே




பாசமும் ஆசையும் பற்றிப் படர்ந்தன




பாழும் மனதினிலே -
அதில்



ஓசையில்லாமல் ஓய்ந்தவை பற்பல




உலக வாழ்க்கையிலே




கொள்கையும் நேர்மையும் உண்மையும்




பூத்துக் குலுங்கின நெஞ்சினிலே – அதில்




கல்லால் அடித்த கனிபோல்
உதிர்ந்தவை


கணக்கில வாழ்க்கையிலே
உனக்கொன்று தெரியுமா..?


நான் கவிதை எழுதுவது
என் நண்பர்களுக்கு
புதுமை...
ஆனால் நான்
உனக்கே உனக்கான கவிதை
என்பதில்தான்
எனக்கு 'நிரம்ப' பெருமை!!



இவரால்: Shan Naranderan
இதயத்தின் முதல் எதிரி
கண்கள் தான்........
ஏன் என்றால், இதயம்
மறைத்து வைக்கும் எல்லாவற்றையும்
கண்கள் கட்டி கொடுத்துவிடும் ....!
கண்ணீராக.......



இவரால்: Shan Naranderan
நான் சோகத்தில் வாடும் போது
உன் மடி சாயும்
அந்த ஒரு நொடி
என் சோகத்தை மறந்து
சொர்க்கத்தை நான் காண்பேன்!
ஈர விழிகளுடன்
இமைகள் மூடாமல்
இரவுகள் கனக்க
இதய கண்ணீரோடு
இறைமை இழந்தால்


இவரால்: Shan Naranderan

நேசம்


கண்ணீர் விடுகின்றேன் தினம் தினம்!
கண்ணீரை துடைக்க கரம் கிடக்கும் என்று !

உதவி செய்கின்றேன் தினம் தினம் !
ஒரு இதயமாது உதவி செய்ய வருமாம் என்று !

இறக்கம் படுக்கின்றேன் தினம் தினம்!
ஒரு இதயமாது இறக்க பட வருமாம் என்று

எம் தேசம்

தூக்கியெறியப்பட்ட கனவுகள்..!!
சிதைந்து போன உணர்வுகள்..!!

வர்ணமிழந்த கவிதைகள்,மீள முடியா என் வலிகள்என தனிமையாக்கப்பட்ட நினைவுகள் வழியேநடைபிணமாய் செல்கிறது .......!!!
தூக்கியெறியப்பட்ட கனவுகள்..!!!
சிதைந்து போன உணர்வுகள்..!!!
வர்ணமிழந்த கவிதைகள்..!!
மீள முடியா என் வலிகள்என தனிமையாக்கப்பட்ட நினைவுகள் வழியேநடைபிணமாய் செல்கிறது

.....!!!

எம் தேசமே !



இனி எங்கள்

கனவுகளுக்கு மதிப்பளிக்க வேண்டாம்

கண்ணீருக்கு விலை கொடுங்கள்

எங்கள்

கண்ணீருக்கு விடை கொடுங்கள்
நிலவு கிடைக்கவில்லை என்று நீ ஏன்
தேயந்து போகிறாய்
உன் பார்வையை கூர்மையாக்கு
பின்பு
நீ காணபோகும் ஒவ்வொரு
நட்சத்திரமும்
நிலவுதான் !!!!!!!

அன்னையே!



உன் கருவறைக்குள்
மீண்டும் என்னை
மீட்டெடுப்பாயா?
இந்த உலகம்
என்னை பயமுறுத்துகிறது

சனி, 15 அக்டோபர், 2011

நானோர்இலங்கை குடிமகன்!






என்றைக்காவது சாப்பிடுவோம் என்ற

இறுமாப்பில் நிமிர்ந்துப் பார்க்கும்

என் நெஞ்செலும்புகள்.



என் முனகல் சத்தத்தை கேட்க முடியாமல்

தூங்கிப் போகும் இரவுகள்.



தோப்புகளாய் வளர்ந்திருக்கும் என்

மயிர்க் கால்களை விடுத்து ஓடிப் போகும்

என் மயிற்றுப் பேண்கள்.



என் எலும்புகளில் இரத்தத்தின் ருசி

தேடி ஏமாந்துப் போகும் என் குடி

நீர்ப் பானைக் கொசுக்கள்.



வறண்டுப் போயிருக்கும் என் தொண்டைக்

குழியை ஈரப் படுத்த என் குடிசைக்குள்

ஓடி வரும் மேல்தட்டு வர்க்கத்தின்

சாக்கடை நீர்.



இவ்வளவும் இருந்தும்...

குடிமகன் நான்...

இலங்கையில்

அப்பா என்றொரு அற்புதம்


விரல் கொடுத்து வழிநடத்தினாய்


விழும் போது தாங்கிகொண்டாய்

அழும் போது ஆறுதல் தந்தாய்

நான் ஆனந்தித்திருக்க வழிசெய்தாய்

வானத்து நிலவும்,வண்ண பூக்களும்

வாழ்வில் வர வகை செய்தாய்

அப்பா என் அப்பா

உன் மார்பில் எட்டி உதைத்தபோதும்

மீசை பற்றி இழுத்தபோதும்

அந்த ஆனந்த முகத்தில்

எத்தனை அமைதி

கடை வீதிகளில்

உன் கரம் பிடித்து நடந்தபோது

கர்வத்தில் உயர்ந்திருந்தேன்...

நட்பில் கோபம் கூட கவிதைதான்


என்மீது நீ கொண்ட அக்கறையாய்

உன் கோபம் வெளிபடுகையில்

ரசிக்கிறேன் அதையும் கவிதையாய்

வர்ணனை இன்றி எதுகை மோனை இன்றி

உன் கோபம் ஒரு கவிதையாய்

என் முதல் கவிதை ம்மா ம்மா ம்மா ம்மா

அம்மா உன்னைப்பற்றி கவிதையா

என்னால் முடியாது!
இயற்கையை ரசித்து
பொய் கலந்து எழுதுவேன்
நட்பை விவரித்து
கவிதைகளா எழுதுவேன்



கடவுளைப் பற்றி
கதை கதையாக எழுதுவேன்
அம்மா உன்னைப் பற்றி
என்ன எழுதுவேன்!

எதைஎதையோ படைத்த
இயற்கைக்கு
நன்றி!
உன்னையும் படைத்த தற்காக!

அம்மா!
நான் சொன்ன முதல் வார்த்தையே !
கவிதை தானே

வலிதீராத வாழ்க்கை

வலிதீராத வாழ்க்கை...

அழுகிறது மனம்


புரியாத வலியுடன்
துடிக்கிறது தேகம்
புரியாத உணர்வுடன்
கண்ணீர் வடிக்கிறது கண்கள்
புரியாத நிகழ்வுகளுடன்
எரிகிறது அங்கங்கள்
புரியாத வேதனைகளுடன்


பிறந்தபோது அழுதிருந்த
தாயின் கடன்...
வளர்ந்தபோது அழுதிருந்த
தந்தையின் கடன்....
பிரிந்தபோது அழுதிருந்த
துணையின் கடன்.....
விட்டகன்றபோது அழுதிருந்த
சேயின் கடன்.....


அத்தனையும் தீர்ந்திடாத
பரிமாற்றத்தின் வலிகளாய்....
வாழ்வோடு பிணைந்திட்ட
துயர்களின் தொடர்களோடு......

தாடியின் தத்துவம் தெரியுமா உனக்கு?


தாடியின் தத்துவம் தெரியுமா உனக்கு?
காதலிக்கும் போது, என் காதலி முகம் பார்க்க வேண்டுமென்பதற்காக
சவரம் செய்து எங்கள் முகத்தை சலவைக் கல்லாக வைத்திருக்கிறோம்!
பிரிவு நேர்ந்தால்,
அவள் முகம் பார்த்த கண்ணாடியில், வேறு யாரும்
முகம் பார்த்து விடக் கூடாது என்பதற்காக
ஒரு கருப்புத் திரை போட்டு வைத்திருக்கிறோம்
அதற்கு நீங்கள் தாடி என்று பெயர் வைத்திருக்கிறீர்கள்!!!!

வெள்ளி, 29 ஜூலை, 2011

சாதியும் சாமியும் ..ஒஸ்லோ முருகன்


உச்சி முதல் பாதம் வரை

ஊரு மெச்சும் அலங்காரம்

தங்கத்தால மேனியெல்லாம்

தகதகனு மின்னுதய்யா

தள்ளி நின்னு பார்க்கையிலே

மனச ஏதோ பண்ணுதய்யா

வான ஒசரம் தேருகட்டி

வகையாய் முருகனை அதுல வச்சு

வடம் பிடிச்சு இழுக்கையில

வந்ததையா வாய்ப்பேச்சு

வடக்கு வழி போனா ஒரு சாதி

கிழக்கு வழி போனா ஒரு சாதி

எந்த வழி போறதுனு ரெண்டும் மோதி

சாமிய மறந்துட்டான்

சாக்கடையில சாச்சு புட்டான்

தேரேரி வந்த முருகன்

தெருவோரம் கிடக்குதய்யா

காவல்காக்குற முருகனுக்கு

காக்கி சட்டை

காவலுக்கு நிக்குதய்யா

வெள்ளி, 28 ஜனவரி, 2011

கண்ணீர்

வழியும் கண்ணீர்
என் விழியைப்பார்த்து(க்) கேட்டது...

எதற்காக என்னை
மண்ணில் விழச்செய்கிறாய் (என்று.)
...
எண்ணிலடங்கா சோகம்
என்னை வாட்டும் போது..
என்னையறியுமறியாமல்..
என் விழிகள் உன்னை அனுப்பிவைக்கின்றனவே...மேலும் பார்க்க
..

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

அம்மா

அம்மா.

உன்னை உச்சரிக்கும் போதெல்லாம்

எனக்குள்

நேசநதி

அருவியாய் அவதாரமெடுக்கிறது.



மழலைப் பருவத்தின்

விளையாட்டுக் காயங்களுக்காய்

விழிகளில் விளக்கெரித்து

என்

படுக்கைக்குக் காவலிருந்தாய்.



பசி என்னும் வார்த்தை கூட

நான் கேட்டதில்லை

நீ

பசியை உண்டு வாழ்ந்திருக்கிறாய் .



என் புத்தகச் சுமை

முதுகை அழுத்தி அழுதபோது

செருப்பில்லாத பாதங்களேடு

இடுப்பில் என்னை

இரண்டரை மைல் சுமந்திருக்கிறாய்.



அகரம் அறிமுகமான ஆரம்ப நாட்களில்

அன்பின் அகராதியை எனக்கு

அறிமுகப் படுத்தியது

என் தலை கோதிய உன் விரல்களல்லவா ?



எனது சிறு சிறு வெற்றிகளுக்கு

கோப்பைகள் கொடுத்தது

உனது

இதயத் தழுவலும்

பெருமைப் புன்னகையுமல்லவா ?



வேலை தேடும் வேட்டையில்

நகர நெரிசல்களில் கீறல் பட்ட போது

ஆறுதல் கரமானது

உனது ஆறுவரிக் கடிதமல்லவா ?



எனக்கு வேலை கிடைத்தபோது

நான் வெறுமனே மகிழ்ந்தேன்

நீதானே அம்மா

புதிதாய்ப் பிறந்தாய் ?



உனக்கு முதல் சம்பளத்தில்

வாங்கித்தந்த ஒரு புடவையை

விழிகளின் ஈரம் மறைக்க

கண்களில் ஒற்றிக் கொண்டாயே

நினைவிருக்கிறதா ?



இப்போதெல்லாம்

என் கடிதம் காத்து

தொலை பேசியின் ஒலிகாத்து

வாரமிருமுறை

போதிமரப் புத்தனாகிறாய்

வீட்டுத் திண்ணையில்.



எனக்கும்

உன் அருகாமை இல்லாதபோது

காற்றில்லா ஓர் வேற்றுக் கிரகத்துள்

நுழைந்த வெறுமை.



போலியில்லா உன்முகம் பார்த்து

உன் மடியில் தலைசாய்த்து

என் தலை கோதும் விரல்களோடு

வாழத்தான் பிடித்திருக்கிறது எனக்கும்



இந்த

வாழ்க்கை நிர்ப்பந்தங்கள் தான்

வலுக்கட்டாயமாய்

என் சிறகுகளைப் பிடுங்கி

வெள்ளையடிக்கின்றன.

Suttum Vizhi Chudare - Tamil Karaoke by AR - Gajani