காலையில் கமலம்
கதிரவன்முகம் நோக்கும்
மாலையில் அல்லி
மதிமுகம் நோக்கும்
உவமையெல்லாம்
இவள் முகம் நோக்கும் !
ஈழத்தின் கொண்டையில்
பொழில் சூழ்ந்த சோழியபுரத்தின்
பறாளையம் பதி மண்ணிலே
இவளின் யனனம் !
அறம், பொருள், இன்பம், வீடு
நான்கு நாற்பொருழும்
சீரான உறவும் பொங்கி பொலிந்து
யாசித்து வாழும் பண்பு சூழ்ந்த குடும்பத்தவள் !
மருத நிலத்துச் செந்நெல் சோலையில்
வயல்புலத்தில் வலம் வந்த
சிவலிங்கம் ,மங்கை அரசி
ஓருயிர் என்று ஓங்கிய காதலில்
துதித்த ஐவரரில் இவள் இளையவள்
ஆதிக்கத்தில் மூத்தவள் !
வெண்பனி முகட்டில்நின்று
இந்திரசித்தன் புனைந்த வேடத்ததை
வல்லோர்அணி சொல்லுரைக்க
மனத்திரையில் இவள்
கண்ட கற்பனையை !
என்னவள் என்றேன்
என்பெயர் கொண்டாள்
கரம் பிடித்த புதையலில்
கிடைத்த இரு வைரங்கள் !
பெண்ணென்றும் ,ஆண்ணென்றும்
பெற்றெடுத்தவள் தாயென்று
துயருற்ற நிலையில் அயர்ச்சி இன்றி
விழித்திருப்பாய் நம் மகிழ்சசிக்கு
மகிழ் வித்து மகிழ!
நம்பிக்கையும் முயற்சியும்
நல்கும் பலன் கொண்ட இவள்
இம்மியும் மாறாதென
இன்றளவும் உணர்ந்துநின்று!
நம்மிடம் காட்டும் நல்சேது
தன் செயலை பாசத்தின் தத்தம்
தயைகாட்டும் ஆண்டாள் !
இலக்கணம் வென்ற காவிய காதல்
வஞ்சமின்றி பெண்ணடிமை
பேசியதில்லை
ஆண் ஆதிக்கத்தை ஏற்றதில்லை
ஒருவருக்கு ஒருவர் உதவி
ஒருவருக்கு பின் ஒருவரும்மில்லை
நாம் நமக்கே தோழனும் ,தோழியும்
இது இவளின் சிந்தனையின் துளி
இவளின் வாழ்வின் சிறப்பு
அரைநூற்றாண்டு பூர்த்தி
வாழ்க வாழியவே
வாழ்
வாழும்போது வாழ்வை ரசி
வாழ்
வாழ்ந்தபின்
வாழ்கை உன்னை ரசிக்கும் படி
"சண் நரேந்திரன்"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக