இப்போதெல்லாம் முகமூடிக்கு மேல்
மற்றொரு முகமூடி
அணியச் சொல்கிறார்கள்..
பல காலமாய் அணிந்த
பழைய முகமூடியால்
அரிப்பெடுத்து முகம் எரிகிறது.
எரிச்சல் தாளாமல்
முகமூடிகளை அனைவரும்
கழட்டி எறியும் போது,
இந்த உலகம் பிணங்கள்
வேகும் சுடுகாடாய்
மாறி இருக்கும்!







