வெள்ளி, 12 மார்ச், 2021

அவன் வேறு ! நான் வேறு !


சாலையில் நடந்து போகையில்
பனிமழை சாரல்
குடையெடுத்து
வந்திருக்கலாமோ
என்ற சலிப்பில்
நான் வேகமாய் நடக்க,
நல்லவேளை
குடையெடுத்து
வரவில்லை
என்ற சந்தோசத்தில்
மெதுவாய் பின்தொடர்கிறான்
மகன்!
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
விரும்பு
கருத்துத் தெரிவி

கருத்துகள் இல்லை: