சனி, 26 அக்டோபர், 2019

இராமாயணம் - பரதன் 3


பிறப்பு

பரதன் பிறந்து தொட்டிலில் குழந்தையாக கிடக்கிறான்.

குழந்தைகளுக்குப் பெயரிட வேண்டும். யார் பெயரிடுவது ?

பெற்றோர் பெயரிடலாம், தாத்தா பாட்டி பெயரிடலாம். சில இடங்களில் மாமன் மடியில் வைத்து பெயரிடுவார்கள்.

இப்போதெல்லாம், அரசியல் தலைவர்களை பெயரிடச் சொல்கிறார்கள்.

தசரதன், குல குருவான வசிட்டரிடம் சொல்லி அவரை பெயரிடச் சொல்கிறான். குருவின் மேல் அவ்வளவு நம்பிக்கை. மதிப்பு.

வசிட்டன் ஒவ்வொரு குழந்தைக்கும் பெயரிடுகிறான். மற்ற பிள்ளைகளின் பெயரிட்ட பாடல்களை விட்டு விடுவோம்.

பரதனுக்கு பெயரிட்ட பாடலை பார்ப்போம்.

தன்னுடைய தவத்தினால் வேதங்களின் உட்பொருளை அறிந்த வசிட்டன், உள்ளங்கை நெல்லிக் கனி போல ஒளி விடும் அவனுக்கு பரதன் என்று பெயர் தந்தான்.

பாடல்

கரம் தலம் உற்று ஒளிர் நெல்லி கடுப்ப
விரதம் மறைப் பொருள் மெய்ந் நெறி கண்ட
வரதன் உதித்திடும் மற்றைய ஒளியைப்
‘பரதன் ‘எனப் பெயர் பன்னினன் அன்றே.

பொருள் 

கரம் = கை , உள்ளங்கை

தலம் = இடத்தில்

உற்று = சேர்ந்து

ஒளிர் = ஒளிரும் , விளங்கும்

நெல்லி = நெல்லிக் கனியைப்

கடுப்ப = போல , ஒத்த

விரதம் = விரதத்தினால், தவத்தினால்

மறைப் = வேதம் போன்ற உயர் நூல்களின்

பொருள் = பொருளையும்

மெய்ந் நெறி = அவை சொல்லும் உண்மையான வழிகளையும்

கண்ட = கண்ட, அறிந்த

வரதன் = வசிட்டன்

உதித்திடும் = தோன்றிடும்

மற்றைய ஒளியைப் = வேறு ஒளியை

‘பரதன் ‘ = பரதன்

எனப் = என்று

பெயர் =பெயர்

பன்னினன் அன்றே = பண்ணினான் , தந்தான்

சற்று ஆராய்வோம்.

உள்ளங்கை நெல்லிக் கனி - அது என்ன உள்ளங் கை நெல்லிக் கனி போல என்ற தொடர் ? மற்ற கனிகள் உள்ளங்கையில் இருந்தால் தெளிவாகத் தெரியாதா ? மாங்கனி இருந்தால் தெரியாதா ? ஏன் நெல்லிக் கனியை மட்டும்
குறிப்பாகச் சொல்ல வேண்டும் ?

காரணம் இருக்கிறது.

நெல்லிக் கனியைப் பார்த்தால் தெரியும், அதில் சில வரிகள் இருக்கும். மேலிருந்து கீழாக செல்லும். அந்த வரிகளின் மேல் கத்தியை வைத்து வெட்டிப் பார்த்தால்  , அந்த வரிகளுக்கு நேர் உள்ளே உள்ள விதையிலும் அதே போல  வரிகள் இருக்கும். அதாவது விதையில் எப்படி இருக்கிறதோ அதே போல வெளியிலும் இருக்கும்.

உள்ளே என்ன இருக்கிறதோ, அப்படியே வெளியிலும் இருக்கும். உள்ளும் புறமும் ஒன்றாக இருக்கும்.

உள்ளே ஒன்று, வெளியே ஒன்று என்று வேறுபாடு கிடையாது.

பரதனுக்கு மனமும் செயலும் ஒன்றாக இருந்தது. அல்லது இருக்கும் என்று முதலிலேயே கம்பர் காட்டுகிறார்.

யோசித்துப் பார்ப்போம். நாம் நினைப்பது எல்லாம் வெளியே சொல்ல முடியுமா ? நமக்கு மிக மிக நெருங்கியவர்களிடம் கூட நம் மனதில் உள்ளதை வெளியில் சொல்ல முடியாது.

மனதில் ஒன்றை நினைப்போம், வெளியில் ஒன்றைச் சொல்வோம், செய்வோம்.  கணவன், மனைவி, பிள்ளைகளிடமே இப்படி என்றால் மற்றவர்களிடம் எப்படி இருப்போம் என்று சொல்லவே வேண்டாம்.

உள்ளும் புறமும் பிரிந்து கிடக்கிறோம்.

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்றார்  இராமலிங்க அடிகளார் .


ஒருமை யுடனினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்

பெருமை பெறும் நினதுபுகழ் பேசவேண்டும்
பொய்ம்மை பேசா திருக்க வேண்டும்

பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்
பிடியா திருக்க வேண்டும்

மருவு பெண்ணாசை மறக்கவேண்டும் உனை
மறவா திருக்க வேண்டும்

மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வு நான் வாழ வேண்டும்

தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத் துள்வளர்
தல மோங்கும் கந்த வேளே

தண்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.

என்பது திருவருட்பா.

எப்போது உள்ளும் புறமும் ஒன்றாக இருக்கும் ?

மனம் தூய்மையாக இருந்தால் , அது அப்படியே வெளிப்படுவதில் சிக்கல் ஒன்றும் இருக்காது. மனத் தூய்மை இல்லாவிட்டால் தான், அது வெளிப் படுவதை மறைக்க  வேண்டி இருக்கும்.

வள்ளுவரிடம் ஒரு மாணவன் கேட்டான், ஐயா உங்கள் 1330 குறளையும் படித்து அதன் உள் அர்த்தங்களை புரிந்து அதன் படி நடப்பது என்பது இயலாத காரியம்.

குறள் மட்டும் அல்ல, உலகில் உள்ள அனைத்து புத்தகங்களிலும் உள்ள அறங்களை  தொகுத்து சுருக்கமாகச் சொல்ல முடியுமா என்று கேட்டான்.

வள்ளுவரும், "சொல்லுகிறேன் , நாலே வார்த்தைகளில் சொல்கிறேன் குறித்துக் கொள் " என்றார்.

"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்"

அவ்வளவுதான்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற

என்பது வள்ளுவம்.

மனதில் எந்த விதமான குற்றமும் இல்லாமல் இருப்பது அனைத்து அறங்களும் சேர்ந்த ஒன்று என்றார்.

மனம் தூய்மையாக இருந்து விட்டால் , தவறு எப்படி நிகழும் ?

மனம் செயல் படுவதால் , மனிதன் என்று முன்னொரு பிளாகில் பார்த்தோம்.

மனம் சரியாகச் செயல் பட்டால் , சிறந்த மனிதனாக முடியும்.

அப்படி மனம் உயர்ந்ததால், தான் உயர்ந்தவன் பரதன்.

எப்படி என்று காப்பியத்துக்குள் சென்று பார்ப்போம்.


"உதித்திடும் மற்றைய ஒளியை" - உதித்தல் என்றால் முன்பே இருந்த ஒன்று மீண்டும் வெளிப்படுவது. சூரியன் உதித்தான் என்று சொல்ல வேண்டும். சூரியன் தோன்றினான் என்று   சொல்லக் கூடாது. சூரியன் எப்பவும் உள்ளது. இரவில் மறைந்து  இருந்தது. பகலில் உதித்தது.

ஒரு திரு முருகன் வந்து அங்கு உதித்தனன் என்பார் கச்சியப்ப சிவாச்சாரியார். முருகன் எப்போதும் உள்ளவன். நெற்றிக் கண்ணில் உதித்தான். எனவே தான் முருக ஜெயந்தி ஒன்று கிடையாது.



அருவமும் உருவமாகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
    பிரம்மாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகி
    கருணைகூர் முகங்களாறும் கரமது பன்னிரண்டுங் கொண்டே
    ஒருதிரு முருகன் வந்து அங்கு உதித்தனன்

என்பது கந்த புராணம். ( சைவ சித்தாந்தத்தின் சாரம் அனைத்தும் அடங்கியது இந்தப் பாடல் என்பது பெரியவர்களின் கருத்து).

இராம , இலக்குவன , பரத  மற்றும் சத்ருக்கனன் என்போர் அவதாரம். எப்போதும் உள்ளவர்கள். இங்கு வந்து உதித்தனர் என்ற அவதார இரகசியத்தை ஒரு வார்த்தையில் சொல்லிப் போகிறான் கம்பன்.


"மற்றைய ஒளியை"....இராமனை மெய் பொருள் என்ற கம்பர், பரதனை "மற்றைய ஒளி" என்றார். மெய் பொருளில் இருந்து பிறக்கும் ஞான ஒளி பரதன்.  அஞ்ஞானத்தை இருள் என்று ஞானத்தை ஒளி என்றும் சொல்லுவது மரபு. பரதனை "மற்றைய ஒளி" என்றார்.

அவன் வாழ்க்கையைப் பற்றி மேலும் சிந்திப்போம்.

இராமாயணம் - பரதன் 2



இராமாயணம் என்பதே தவறான தலைப்பு. பரதாயணம் என்றுதான் இருந்திருக்க வேண்டும் என்பது என் கருத்து.

ஏன் ?

உலகில் இந்த ஒரு கதையோ, நாவலோ, இலக்கியமோ அதில் வரும் எந்த ஒரு கதா பாத்திரமும் அதில் வரும் கதாநாயகன் மற்றும் கதாநாயகிக்கு மேலான குண நலன்கள் உள்ளவர்களாக கட்டுவது இல்லை - இராமாயணத்தைத் தவிர.

ஒரு இடத்தில் அல்ல, மூன்று இடத்தில், மூன்று வெவ்வேறு முக்கியமான பாத்திரங்கள் மூலம் பரதன் இராமனைவிட பல மடங்கு உயர்ந்தவன் என்று சொல்ல வைக்கிறான் இராமன்.

கம்பனுக்கு இராமன் மேல் அளவு கடந்த வாஞ்சை உண்டு. இருந்தும், பரதன் இராமனைவிட மிக மிக உயர்ந்தவன் என்று சொல்கிறான்.

சொல்வது யார் ? இராமனின் தாய்.

இராமனின் செயல்களைக் கூட சரியா தவறா என்று வாதம் செய்யலாம்.

தாடகை என்ற பெண்ணைக் கொன்றது,  வாலியை மறைந்து நின்று கொன்றது, சீதையை தீ குளிக்க  சொன்னது, கும்பகரணனோடு சண்டை போடும் போது கை நடுங்கியது,  தந்தை சொன்னார் என்பதற்காக அரச கடமையை துறந்து  கானகம்  சென்றது என்று இராமனின் சில செயல்கள் விமர்சினத்துக் உட்பட்டது.

பரதனின் ஒரு செயல் கூட , ஒரு நூல் கூட பிறழாதது. அதை பற்றி விரிவாக பார்க்கப்  போகிறோம்.

அதற்கு முன்னால் , ஒரு சின்ன முன்னுரை.

பரதனைப் படிப்பதால் என்ன பயன் என்ற கேள்விக்கு விடை சொல்லிவிட்டு அவனைப் பற்றி படிப்போம்.

ஒரு நாள், வள்ளுவரிடம் ஒரு மாணவன் சென்று

மாணவன்: ஐயா, நீங்கள் எதையும் சுருங்கச் சொல்லி விளங்கச் செய்வீர்கள் தானே.

வள்ளுவர்: ஆமாம்

மா: அப்படியானால், வாழ்வில் முன்னேற என்ன செய்ய வேண்டும் ? எந்தத் துறையானாலும்.....மாணவப் பருவம் ஆனாலும், வேலை செய்தாலும், தொழில் முனைந்தாலும், ஆன்மீகத் துறையில் சென்றாலும், பொது வாழ்வில் ஈடு பட்டாலும் ....முன்னேற என்ன வழி.

வ:  அதற்கு பதில் சொல்லுவதற்கு முன்னால் , என்னோடு கூட நடந்து வா என்று அவனை அழைத்துக் கொண்டு ஊருக்கு வெளியே இருக்கும் ஒரு குளத்தைக் காண்பித்தார்.

பார்த்தாயா, எவ்வளவு தாமரை மலர்கள் இருக்கின்றன.

மா: ஆமாம் ஐயா..அதற்கும் நான் கேட்ட கேள்விக்கும் என்ன சம்பந்தம் ? புரியவில்லையே

வ: புன்னகைத்துக் கொண்டே, தம்பி, அந்த மலர்கள் எவ்வளவு உயரத்தில் இருக்கின்றன ?

மா: ஐயா அது தண்ணீரில் மிதக்கின்றன...எனவே அவை நீரின் உயரம் எவ்வளவோ அவ்வளவு உயரமே இருக்கும்

வ: சரி, அந்த தாமரை மலரை கொஞ்சம் உயரமாக வளர என்ன செய்ய வேண்டும் ..செய் பார்ப்போம் என்றார்.

மா: இது என்ன பிரமாதம் என்று குளத்தில் இறங்கி, ஒரு மலரை பிடித்து தூக்கிப் பிடித்தான்...அந்தோ, அது தண்டில் இருந்து பிரிந்து வந்து விட்டது.  சரி, இது சரி வராது என்று ஒரு உயரமான குச்சியை நட்டு, ஒரு தாமரை மலரை பிடித்து  உயர்த்தி, அந்த குச்சியின் மேலே வைத்து கட்டினான். பிடித்து இழுத்து கட்டியதில் தாமரை மலரின் இதழ்கள் எல்லாம் உதிர்ந்து அது வாடிப் போய் விட்டது.....

மாணவன் குழம்பிப் போய் வள்ளுவரைப் பார்த்தான்.

வள்ளுவர் சிரித்துக் கொண்டே...சரி நாளை வா உன் கேள்விக்கு விடை தருகிறேன் என்றார்.

அன்று இரவு நல்ல மழை பொழிந்தது.   குளத்தின் நீர் மட்டம் இரண்டு அடி உயர்ந்து இருந்தது.

மாணவனை அழைத்து வந்து வள்ளுவர் காண்பித்தார்....பார்த்தாயா நேற்று பெய்த மழையில் நீர் மட்டம் உயர்ந்து இருக்குறது என்றார்.

மா: ஆமாம் ஐயா.

வ: பார்த்தாயா, தாமரை மலரின் உயரமும் உயர்ந்து இருக்கிறது .

மா: ஆமாம் ஐயா. அதற்கு என்ன இப்போ. மழை வந்தால் குளம் நிறைவதும், அதனால் பூக்கள் உயர்வதும் இயற்கை தானே என்றான்.

வ: அது தான் உன் கேள்விக்கு விடை.

எப்படி மலரின் உயரம் நீர் மட்டத்தைப் போல இருக்கிறதோ, வாழ்வில் நீ அடையும் உயரம் உன் மனத்தைப் பொறுத்து இருக்கிறது.

வெள்ளத்து அனையது மலர் நீட்டம், மாந்தர் தம் உள்ளத்து அனையது உயர்வு.

உன்னுடைய உயரம் , உன் உள்ளத்தின் உயரம்.

யோசித்துப் பார், ஒவ்வொரு காரியம் செய்வதற்கு முன்னாலும், நீ அந்தக் காரியத்தைப் பற்றி யோசிப்பாய் , அதை எப்படி செய்வது, எவ்வளவு காலம் ஆகும், என்ன என்ன இடையூறு வரும், யார் துணை செய்வார்கள் என்று எல்லாம்  யோசிப்பாய் அல்லவா. உன் மனம் அந்த வேலையை முடிப்பதைப் பற்றை  சிந்திக்க ஆரம்பித்து விடுகிறது. மனம் முதலில் உயர்ந்து விடுகிறது. பின் வேலை நடக்கிறது. நீ எவ்வளவு நினைத்தாயோ, அவ்வளவு செய்கிறாய்.

மா: ஐயா புரிந்த மாதிரி இருக்கு. முழுவதும் புரியவில்லை.

வ: ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு மாணவன் பள்ளியில் சேர்கிறான். அவன் மனம் எப்படி இருக்கும் ? நல்லா படிக்கணும், நிறைய மதிப்பெண் வாங்க வேண்டும், வகுப்பில் முதல் மாணவனாக வர வேண்டும், நல்ல கல்லூரியில் இடம்  கிடைக்க வேண்டும் என்றெல்லாம்யோசிப்பான் அல்லவா ? பயம் இருக்கும். குழப்பம் இருக்கும். சந்தேகம் இருக்கும். இருந்தும், மனம் எதை அடைய வேண்டும் என்று நினைக்கிறது அல்லவா ? நினைத்தால் மட்டும் நடந்து  விடாது. ஆனால், நினைக்காவிட்டால் நடக்கவே நடக்காது.

மனிதனின் மனம் எவ்வளவுக்கெவ்வளவு உயர்கிறதோ, அவ்வளவுக்கு அளவு அவன் உயர்வான்.

கூர்ந்து சிந்தித்தால் ஒன்று தெரியும்.

வள்ளுவர், மனிதன் எவ்வளவு படிக்கிறானோ, எவ்வளவு உழைக்கிறானோ, எவ்வளவு  மற்றவர்களுக்கு நல்லது செய்கிறானோ அவ்வளவு உயர்வான் என்று சொல்ல வில்லை. உயர வேண்டுமானால், மனம் உயர வேண்டும். அவ்வளவு தான்.

பரதன் , உயர்ந்தான், உயர்ந்தான், உயர்ந்து கொண்டே போனான். காப்பியம் பூராவும் அவன் உயர்வை காட்டுகிறது.

பரதனின் வாழ்வு நமக்கு ஒரு நல்ல பாடம்.

என்னென்ன பாடங்கள் ?

இராமாயணம் - பரதன் - 1



இராமாயணத்தில் அப்படி என்ன இருக்கிறது ? ஒரு குடும்பச் சண்டை. இளைய மனைவியின் பேச்சைக் கேட்டு, மூத்த மகனுக்கு சேர வேண்டிய நாட்டை அவனுக்குத் தராமல், இளைய மனைவியின் மகனுக்கு ஒரு அரசன் தந்து விட்டான். அரசன் சொன்னான் என்பதற்காக , அந்த மூத்த மகன் கானகம் போனான். போன இடத்தில் அவனுடைய மனைவியை இன்னொருவன் தூக்கிக் கொண்டு போய் விட்டான். தூக்கிப் போனவனோடு சண்டை இட்டு, மனைவியை மீட்டு வந்தான்.

இவ்வளவுதான் கதை.

இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது. இதை விட அருமையான கதைகள் எவ்வளவோ இருக்கிறது. இருந்தும் இராமாயணம் ஏன் காலம் கடந்து நிற்கிறது ?

அதில் உள்ள பாத்திரங்கள் எல்லாம் இப்போது இருப்பதை போலத்தான் இருக்கிறது. நல்லவர்களும் உண்டு. தீயவர்களும் உண்டு. நல்லவர்களிடமும் சில  தவறுகள் உண்டு. தீயவர்களிடமும் சில நல்ல குணங்கள் உண்டு.

நல்லவர்கள் பாதையில் போகலாம் என்றால் அவர்களும் அங்கங்கே சில சந்தேகத்து  இடமான காரியங்களை செய்து இருக்கிறார்கள். அது சரியா , தவறா என்ற சர்ச்சை இன்று வரை நீள்கிறது.

தீயவர்கள் போன பாதையில் போகக் கூடாது என்று நினைத்தால் , அவர்களும் பல நல்ல  குணங்களுக்கு உறைவிடமாக இருக்கிறார்கள்.

எதை எடுப்பது, எதை விடுவது என்ற குழப்பம் இருக்கிறது.

அது ஒரு புறம் இருக்க.

இராமாயணம் என்பது , என்றோ எப்போதோ ஒரு அரசனின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகளின் தொகுப்பு.

இராமாயணம் முடிந்து எத்தனையோ காலம் கழிந்து விட்டது. சூழ் நிலைகள் மாறி விட்டது.  சமுதாயம், அதன் விதி முறைகள், சட்ட திட்டங்கள் மாறி விட்டன. இன்றும், இராமாயணம் படித்து, அதன் படி வாழ நினைத்தால் சரியாக இருக்குமா ?  சுவாரசியமான கதை என்று படிக்கலாமே தவிர அது நடைமுறைக்கு  வழி காட்டுமா ?

இதை எல்லாம் படிப்பது ஒரு கால விரயம். இராமன் நல்லவன், வல்லவன் என்றே இருந்து விட்டு ப் போகட்டும். ஒவ்வொரு கதையிலும் கதாநாயகன் நல்லவன் வல்லவனாகவே  இருப்பான். செய்ய முடியாத காரியங்களை செய்வான்.  அதெல்லாம் நிஜ வாழ்வில் நடக்க முடியாத கற்பனை சம்பவங்கள் . எனவே ஒரு கதையைப் படித்து விட்டு, அதன் படி வாழ நினைப்பது  யதார்த்தத்துக்கு ஒவ்வாத செயல் என்ற நினைப்பது வரும்.

அது இன்னொரு புறம் இருக்கட்டும்.

வாழ்வில் முன்னேற, மிக உயர்ந்த நிலையை அடைய,  சிறப்பாக வாழ இராமாயணம்  வழி காட்டுகிறது என்பது உண்மை. சத்தியம்.

என்ன ஒரு சிக்கல் என்றால் அதை நேரடியாகச் சொல்லவில்லை.

கதையோடு, கதை மாந்தர்களோடு அதை பிணித்து வைத்திருக்கிறது.

மண்ணில் புதைந்து கிடைக்கும் வைரம் போல அது கிடக்கிறது. கொஞ்சம்  தோண்டித்தான் எடுக்க  வேண்டி இருக்கிறது.

வாருங்கள். இராமாயணம் தரும் வைரங்களை தோண்டி எடுப்போம்.

வாழ்வில் முன்னேற, மிக மிக உறுதியான வழியை பரதன் என்ற பாத்திரத்தின் மூலம் இராமாயணம் சொல்லுகிறது.

அப்படி என்ன பரதன் செய்து விட்டான் ? சண்டை போட்டானா ? அரக்கர்களை அழித்தானா ? மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ததாக குறிப்பு ஏதேனும் இருக்கிறதா ?  நாட்டை விரிவு படுத்தினானா ?

அப்படி என்ன தான் பெரிதாக  செய்து விட்டான் ?

வாழ்வின் மிகப் பெரிய இரகசியங்களை உள்ளடக்கியது பரதன் பாத்திரம்.

வாருங்கள். அது என்ன இரகசியம் என்று அறிவோம்.

தேவாரம் - நல்லக விளக்கது நமச்சி வாயவே


Bilderesultat for வணக்கம்


வீடுகளில் , சாயந்தரம் விளக்கு ஏற்றுவார்கள். கார்த்திகை போன்ற மாதங்களில் நிறைய அகல் விளக்கு ஏற்றுவார்கள்.


                                            எதற்கு விளக்கு ஏற்ற வேண்டும் ?

Relatert bilde

திருநாவுக்கரசர் சைவ சமயத்தில் பிறந்து, தடம் மாறி சமண சமயத்தில் சேர்ந்தார். 


அந்த சமண சமயத்தில் நீண்ட காலம் இருந்தார். பின் , மீண்டு சைவ சமயத்தில் வந்து சேர்ந்தார். அவர் அப்படி சமண சமயத்தை விட்டு விட்டு சைவ சமயத்தில் சேர்ந்ததில் சமணர்களுக்கு மிகுந்த கோபம். அரசனிடம் சொல்லி நாவுக்கரசருக்கு நிறைய துன்பங்கள் செய்தார்கள்.
கல்லைக் கட்டி கடலில் போட்டார்கள்,அந்த சமயத்தில், நாவுக்கரசர் நமச்சிவாய பதிகம் என்ற பத்து பாடல்களை பாடினார்.அதில் ஒன்றுபொருள்


இல்லக = இல்லத்தினுள்விளக்கது = உள்ள விளக்கானதுவிருள்கெ டுப்பது = இருளை கெடுப்பது. அதாவது ஒளி தருவதுசொல்லக = சொல்லினுள் உள்ளவிளக்கது = விளக்கானதுசோதி யுள்ளது = ஜோதி வடிவில் உள்ளதுபல்லக = பலருடைய மனதில் உள்ளவிளக்கது = விளக்கு அதுபலருங் காண்பது = எல்லோரும் காண்பதுநல்லக = நல்லவர்களின் மனதில் உள்ளவிளக்கது = விளக்கு அதுநமச்சி வாயவே = "நமச்சிவாய" என்ற மந்திரம்


ன்ன இது வீட்டில் உள்ள உள்ள விளக்கு, சொல்லில் உள்ள விளக்கு, பலருடைய மற்றும்  நல்லவர்களின் மனதில் உள்ள விளக்கு என்று ஒரே விளக்காக இருக்கிறதே...என்ன அர்த்தம் ?விளக்கு என்பது இருளை போக்குவது. இருளை விலக்க வேண்டும் என்றால் , இருளை குறைக்க முடியாது. ஒரு விளக்கை ஏற்றினால் தானே இருள் விலகி விடும்.எத்தனை ஆயிரம் ஆண்டுகள் சேர்ந்த இருளாக இருந்தாலும் ஒரே ஒரு விளக்கை கொண்டு வந்தால் அந்த இருள் அகன்று விடும்.அஞ்ஞானம் என்ற இருள் நம்மிடம் மண்டிக் கிடக்கிறது. எத்தனையோ பிறவிகளில் சேர்த்த இருள்.  அந்த இருளை எப்படி போக்குவது ? நிறைய புத்தகங்களை கொண்டு வந்து வைத்தால் 


அந்த விளக்கு "நமச்சிவாய" என்ற மந்திர விளக்கு.இல்லத்தினுள் இருக்கும் இருளை எப்படி விளக்கின் ஒளி கெடுக்கிறதோ,அது எப்படி, நமச்சிவாய என்று சொன்னால் இருள் போகுமா ? அந்த சொல்லுக்குள் ஜோதி இருக்கிறது."சொல்லக விளக்கது ஜோதி உள்ளது"அந்த சொல்லுக்குள் ஜோதி உள்ளது.சரி, அது சைவ சமயத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் தானே பொருந்தும்.


அது எல்லோருடைய மனதிலும் உள்ளது. சைவ சமயத்துக்கு மட்டும் சொந்தம் இல்லை."பல்லக விளக்கது பலரும் காண்பது"பலருடைய மனதிலும் உள்ளது.  பலரும் காணும்படி உள்ளது.அப்படியானால், எல்லோரும் காணமுடியுமா ? சிலர் இதெல்லாம் இல்லை , தவறு என்று சொல்கிறார்களே ?நல்லவர்களின் மனதில் உள்ளது.நல்லக விளக்கது நமச்சிவாயவே . நல்லவர்களின் மனதில் தோன்றி சுடர் விடும் விளக்கு அது.


அதற்கு பாரதியார்  பதில் சொல்கிறார்."அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்- அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்வெந்து தணிந்தது காடு- தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோதத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!'காடு பெரியது தான், அதற்காக பெரிய நெருப்பு வேண்டாம்.சரி, இப்படி விளக்கு ஏற்றியவர் அப்பர் மட்டும்தானா ?அன்பே தகளியா ஆர்வமே நெய்யாகஇன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகிஞானச் சுடர்விளக்கு ஏற்றினேன் நாரணற்குஞானத் தமிழ்புரிந்த நான்என்று ஞான விளக்கு ஏற்றினார் பூதத்தாழ்வார்வையம் தகளியா வார்கடலே நெய்யாகவெய்ய கதிரோன் விளக்காகச் – செய்யசுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலைஇடர்ஆழி நீங்குகவேஎன்று கதிரோனையே விளக்காக ஏற்றினார் பொய்கை ஆழ்வார்.விளக்கு ஏற்றுங்கள். அறியாமை நீங்கட்டும். ஞானம் என்ற ஒளி பெருகட்டும்


 சுண்ணாம்பு உள்ள அறையில் அடைத்து வைத்தார்கள், அறையில் அடைத்து வைத்து விறகை போட்டு தீ மூட்டினார்கள்


யானையை கொண்டு அவருடைய தலையை மிதிக்கச் சொன்னார்கள்....


                                          பாடல்


இல்லக விளக்கது விருள்கெ டுப்பதுசொல்லக விளக்கது சோதி யுள்ளதுபல்லக விளக்கது பலருங் காண்பதுநல்லக விளக்கது நமச்சி வாயவே.


அது போகுமா ? நிறைய செல்வங்களை கொண்டு வந்து வைத்தால் போகுமா ?


 போகாது. ஒரே ஒரு விளக்கு போதும் அந்த இருளை விரட்ட.நமச்சிவாய என்று சொன்னால் அஞ்ஞான இருள் அகன்று விடும். அது போல் மனதில் உள்ள இருளை கெடுப்பது நமச்சிவாய என்ற மந்திரச் சொல்.அந்த சொல்லில் அப்படி என்ன இருக்கிறது ?


 நமச்சிவாய என்று மற்ற மதத்தில் , ஏன், இந்து சமயத்தில் உள்ள மற்ற பிரிவினர் கூட சொல்ல மாட்டார்களே..என்ன செய்வது ?கொஞ்சம் நம்பும்படி இல்லையே ... நமச்சிவாய என்று சொன்னால் அனைத்து 


பாவங்களும் அஞ்ஞானமும் போய் விடுமா ?Relatert bilde


 ஒரு சிறு நெருப்பு பொறி போதும்.காடு வெந்து தணியும். அது போல சேர்த்து வைத்த பாவங்களும், அஞ்ஞானமும் எவ்வளவு


இருந்தாலும் ஒரே வார்த்தையில் போகும்.

செவ்வாய், 8 அக்டோபர், 2019

மேகமற்ற


&&&&&&&&&&&&&&&&&&&
மேகமற்ற வானம் ஒன்றின் கீழ்
ஏதுமற்ற பகல்வெளியில்
பெரும் தாகம்
நிறைந்தவனாய் நடக்கின்றேன்
திக்குத் தெரியாமல்
நடைபோடுகின்றன கால்கள்
வெயில் ஒன்றே
புலப்படுகின்றது விழிகளுக்கு
நிழலும்
என் காலடியின் கீழ்
தஞ்சம்புக தவிதவிக்கின்றது
நீரெனப் படுகின்றது நெடும் சாலை
நிதர்சனம் ஏதுமில்லை அங்கே
காணாமல் போய்விட்ட காற்றை
நாசி தேடி இழுத்து
சுவாசப் பெருமூச்சிடுகின்றது
வாகன ஒலியின்
பேரிரைச்சல்
எனை மெல்லமெல்ல
கொன்று திண்கின்றது
தேகத்தீ
எண்ணையின்றி எரிய
குடல் சுருங்கி
கருகிக்கொண்டிருக்கின்றது
வெளியோடு
வெளியாகிப் போய்விடுவேனோ
என்ற அச்சம் மனம் சூழ
பசியெனப்பட்டதை
முதன்முறை உணர்கின்றேன் நான்
பெருமரத்தினில் பூத்து
சுக நிழலினில் குளுங்கிச்சிரித்து
காயாகிப் பழுத்து
சதை கவ்வப்பட்டு
தனித்துவிடப்பட்ட
விதை என்னும் நான்
மேகமற்ற
வானம் ஒன்றின் கீழ்
தாகம் நிறைந்தவனாய்
சிறு மழை
நோக்கி ஓடுகின்றேன் இன்று!

ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

தென்னிலங்கை கலை, கலாசார விழா2019 "பிரதிபா"



தென்னிலங்கை "கலை, கலாசார விழா2019 "பிரதிபா" நேற்று 28.09.19 சுவரசிக்கமாகவும் ,நேர்த்தியாகவும் ஒழுக்கமைக்கப்பட்டு அரங்கம் நிரம்பிய ரசிகத்திரளை கவர்வது
இந்த நிகழ்வு தென்னிலங்கை தமிழ் சிங்களவர்கள் நடத்தும் நிகழ்வாகவே உணரக்கூடியதாக இருந்தது
குறிப்பிட்ட நேரத்துக்குள் நிகழ்வுகள் தொடக்கி முடிந்தன பாரட்டக்கூடியது




தென்னிலங்கை கலாசாரம் பல்வேறுபட்ட காரணிகளால் தாக்கம் செல்லுத்தப்பட்ட போதிலும்
இன்று பௌத்த பரம்பரையை கொண்டு இசை, நடனம், காட்சிக் கலை ஆகிய நுண் கலைகளை
தன்னகத்தே தக்கவைத்துள்ளது என்பதே உணரமுடிந்தது

நிகழ்வு உள்வாங்களில் பௌத்த தொல்லியல் கலையான கண்டிநடனம் பௌத்த விழாக்களில் ஆடப்பட்டு வந்த நிகழ்வை ஒரு அரங்க நிகழ்வாக மாற்றி நடனத்துக்கு மெருகூட்ட பாரம்பரிய தென்னிலங்கை இசையான கண்டி மேளத்தினை (கெட்ட பெரய) உள்ளடக்கி ஆடை அலங்காரம், உள்கட்டமைப்புகாட்சி என சிறப்பாக முறையில் இத்தாலியில் இருந்து வருகை தந்த கலைஞர்களால் அரங்கம் மிளிர்ந்தது


நிகழ்வுகள் வரையறையான முறையில் , சமூகம், கலாச்சாரம், அழகியல், கலை, தார்மீக நெறிமுறைகள் மற்றும் சில வாழ்வியல் சார்ந்த முறையில் அமைந்தது .
சில நாட்டுப்புற நடனங்கள் முறைப்படுத்தப்பட்டு, சில கலை நுணுக்கத் திறன் நுட்பங்கள் இணைக்கப்பட்டதை இங்கு குறிப்பிடலாம்

இந்த நிகழ்வில் நோர்வேயிய இளையோர்களையும் இணைத்து இந்த நடன நிகழ்வுகள் நடந்தது இவர்களின் ஆடலில் அழகியலையும் விதி முறைகளையும் நுண்ணியமாக கையாண்டுள்ளார் இவர்களையும் வாழ்த்த வேண்டும்




இடைவேளை நேரத்தில் தென்னிலங்கை பாரம்பரிய சிற்றுண்டி கலாசாரத்தை உணரக்கூடிய முறையில் உணவுகள் விற்பனை செய்யப்பட்டது . இதுக்கும் ஒரு இனத்தை தக்கவைக்கும் செயல்முறையாகவே உள்ளது
ஒரு நிகழ்வு முறையில், இந்த செயல்முறை , இனங்களின் சுய விழிப்புணர்வு அதன் வலுவான இனத்துவத்தின் கலாச்சாரம், பழக்கவழக்கங்களை அடுத்த தலைமுறைகளுக்கு நகர்த்தும் செயல்முறையாகவே பார்க்கின்றேன்



நிகழ்வின் முடிவில் அனைவரும் எழுந்து நின்று இனங்களின் விடுதலைக்கான கோஷங்களுடனே முடிந்தது

விமர்சன சிந்தனை தொகுப்பு: சன் நரேந்திரன்