உரிமைச் சொல்லாடல் மீதான திறனாய்வு
நான்கு நூல்கள், நான்கு பரிந்துரையாள
சனிக்கிழமை 25.03.23 மாலை நோர்வே ஒஸ்லோவில்
கனடா ,பிரித்தானிய என நாடுகளின் இருந்து வருகை தந்த
அறிஞர் ,நெறிஞர்கள் ,சமூக மெய்யியலாளர்,முற்போக்கு சிந்தனையாளர்கள்,கல்விச் சிந்தனையாளர்கள், தற்கால சமூக அரசியல் விரும்பிகள் என மண்டபம் திரள் கொண்ட பங்களிப்பாளர்களுடன் தோழர் சமுத்திரனின்( பேராசிரியர் சண்முகரத்தினம்) அவர்களின் #சமுத்திரனின் எழுத்துக்கள்" நூல் அறிமுக விழா
பேராசிரியர் சண்முகரத்தினம் பல்துறைசார்ந்த ஆளுமையும், விஞ்ஞானபூர்வமான இயற்பியல்(Experimental Science) பார்வையைக் கொண்ட அவரது செயற்பாடு இலங்கை இடதுசாரி இயக்க வரலாற்றில் தனக்கென தனித்துவமான பங்களிப்பு ,இவர் சமுத்திரன் என்ற புனைபெயரில் சமூகம் சார்ந்த தன கருத்துக்களை தயகம்மின்றி முதிர்ந்த வயதிலும் போர் முனைப்புடன் எழுதிவருபவர்
இவரின் திறந்த வெளி அரசியல் பார்வையும் நடைமுறைசார்ந்த போராட்டமும், சிரமப்படாமல் எளிதானதொரு இயல்பாகக்சி பார்வை அவரது மார்க்சிய சார்புநிலை,மார்க்சியத்தை ஏற்றுக் கொண்ட அவர், அதனை மாறிவருகின்ற எமது சூழலுக்கு ஏற்றவகையில் பிரயோகித்து அதற்கான நடைமுறையை முன் வைத்த சொல்லாடல்
தமிழ்ச் சமூகத்தில் சாதி, மதம், இனம், மொழி அடையாளங்கள் என்பதைப் புரிந்து கொள்வதன் மூலமே அம்மக்களை அணிதிரட்டுவதற்கான மார்க்கத்தைக் கண்டடைய முடியும். என்ற நம்பிக்கை கொண்ட சிந்தனையே இந்த நூல்கள்
#நூல் பதிவு :
சமூகம் சார்ந்த நீண்ட பார்வை கொண்ட Fauzer Mahroof அவர் சார்ந்த குழிவினார் தோழர் சமுத்திரனுடன்
இணைந்து, இதழில்,இணையங்களில் அவரால் எழுதப்பட்ட கட்டுரைகளை தேர்வுசெய்து , பின் அவை செம்மையாக்கப்பட்டு, நூலக சமூகம் இயல் பதிப்பகதினரால் , இலண்டன், பாதிக்கப்பட்டது .
Fauzer Mahroof அவர் சார்ந்த குழிவினார் மிகவும் மதிப்புக்கும், இவர்களின்
செயல்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும் கடமைப்பாடு எமக்கு உண்டு
இலங்கையின் மீள் சிந்திப்புக்கான சில முன்மொழ்வுகள் ,சர்வதேச அரசியல் பொருளாதாரம் ,இலங்கையின் சிங்கள பெரும் தேசியவாத இனவாதத்தின் அடிப்படைகளும் மேலாதிக்கமும் ,கலை இலக்கிய சமூக அரசியல் விமர்சனப்பார்வை
அரசியல் தத்துவ உரையாடல்களில் அறம்சார் (ethics) வறட்சி ஏற்பட்டபோது அந்த வெற்றிடத்தை நிரப்பும் சொல்லாடல்கள் நிரம்பி சொற்பிறப்பு சமுத்திரனின் எழுத்துக்கள்
உலகப் பொருளாதாரம் பாரிய மாற்றங்களை சந்தித்துக் கொண்டிருக்கும் நேரமிது. இச்சந்தர்ப்பத்தில் புவியில் முரண்பாடுகள், வர்த்தகப் போர், பொருளாதார தடை என்பன இடம்பெற்ற வண்ணமுள்ளன.
இன்றிய நடைமுறையில் உள்ள ‘மனித உரிமை’க்கும், மனித உரிமை அமைப்புகளின் சொல்லாடல்களுக்கும் வித்தியாசங்கள் இருக்கவே செய்கின்றன.
அன்றாட ஒடுக்குமுறைகளுக்கு முகங்கொடுக்கும் விதமாக இதன் மூன்று நூல்கள் முக்கியமான இடையீட்டையும், பங்களிப்பையும் செய்கின்றன என்பதை மறுக்க முடியாது. எனினும், இக்கட்டுரையானது சிறுபான்மையினர் உரிமைகள் மற்றும் அரசியல் வன்முறைகளை மனித உரிமைச் சொல்லாடல்களைக் கொண்டு அணுகுவதை விமர்சனத்திற்குட்படுத்துகிறது.
மனித உரிமைச் சொல்லாடல்கள் நவதாராளவாதச் சிந்தனைகள் வளர்ந்துவந்த சமயத்தில் மீண்டும் புழக்கத்திற்கு வந்ததன் பின்னணியையும் பேசுகிறது.
#தாராளவாதம்’ Liberalism என்ற ஆங்கில வார்த்தையின் தமிழாக்கம். இச்சொல்லை அரசியலுக்கும், பொருளாதாரத்திற்கும், சமய கொள்கைகளுக்கும் கூட சொல்லலாம். இக்கட்டுரையில் பேசப்படுவது பொருளாதார தாராளவாதம். நவதாராளவாதம் இதன் ஒரு அம்சமே.
‘நவதாராளவாதம் அறமற்ற தர்க்க விதிகளைக் கொண்டு மனிதர்களை வெறும் பொருளாதார உயிரிகளாகக் கருதுகிறது’ எனும் பொதுவான புரிதலை தோழர் சமுத்திரன் தர்க்கரீதியான நிலைத்தன்மை (Logical consistency) கூறுகின்றார்
உரையாடல் :
விழாவுக்கு வந்தவர்களுடன் இணைந்து காத்திரமான நேரடி உரையாடலின்போது
#கூட்டுறவுசங்களின் ஊடக தமிழ்த் தேசத்தின் பொருளாதாரம், முதல் நிலை உற்பத்தி, வேளான் உற்பத்தி, கடற்தொழில் உற்பத்தி மற்றும் தொழில்கள் வளர்ச்சிகளை செயல் மேன்மை முறை உத்திகளை நடைமுறைப் படுத்துவதன் ஊடக உயர்வுகளை காணமுடியும் என்று சுட்டிக்காட்டி இவர் ,தமிழதேசியத்தின் பொருளாதார கட்டமைப்புகளை பெரும் தேசியவாத அரசு தன் கட்டமைப்புக்குள் உள்வாங்க முயற்சிப்பதை கவனத்துக்கு எடுக்கப்படவேண்டும் என்று அறிவுறுத்தினார்
#பேரினப் பொருளாதார முதலீடு பொருந்தாரா வேறுபாடுகள் இயல்புமுறை ,அணுகுமுறை சமந்தமானது பொருளாதார இயல்
இயல் தனித்த அழகுகளிக்கிடையே செயல் பிணைப்பு
வடக்கின் காசு கலசரமும், இலங்கையில் பேரினப் பொருளாதார முதலீடு மக்களின் நுகர்வு மட்டத்தில் தாக்கம்
ஒரு நாட்டின் முழுப் பொருளாதாரத்திலும் ஏற்படுகின்ற மாற்றங்களையே இப்பேரினப் பொருளாதாரம் ஆய்வு
ஒரு மாறியில் ஏற்படுகின்ற மாற்றம் முழுப் பொருளாதாரத்திலும் மாற்றத்தை ஏட்படுத்துகின்ற நிலைப்பாடு
பேரினப் பொருளியல் மாறியான பணநிரம்பலில் ஏற்படுகின்ற அதிகரிப்பு நாட்டின் பொது விலை மட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. இது மக்களின் நுகர்வு மட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி சேமிப்பு முதலீடு என்பவற்றில் ஏற்படுத்துகின்ற மாற்றங்கள் சர்ந்து அறிவியல் ரீதியான உரையாடல்
தோழர் சமுத்திரனின் இடதுசாரிச் சிந்தனை கருத்துகளினுள் சமூக மாற்ற கருத்தமைவுகள் உறைந்துக் கிடக்கின்றன அதன் வரலாற்றுச் சூழமைவை அறிவதன் மூலம்
மேற்குலக விழுமியங்கள் உலகப் பொதுமைகளாக மாறுவதன் பின்னணியைத் தெரிந்துகொள்ள முடியும்.
உரையின் நிறைவாக, அனைத்து பங்கேற்பாளர்களின் கருத்துக்கள் ஆலோசனைகள் மற்றும் அனுபவங்கள் சிறப்பாகவும் செயல்படுத்த உதவும் என்று நம்பிக்கை
“சுதந்திரம் குறித்த மொழியை தனித்துவ குழுக்களிடம் விட்டுவிட முடியாது. விட்டுவிடவும் கூடாது. முதலாளித்துவத்தின் மீதான விமர்சனம் முக்கியம். ஆனால் அதுவே போதுமானதும் அல்ல. சோசலிசத்தின் ஊடாக மாற்றங்களை உருவாக்கும் சாத்தியத்தை நாம் முன்னெடுக்க வேண்டும்
(படம் :ரமேஷ் )

.jpg)













கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக