
மனிதனே!
ஞானத்தைத் தேடுகிறேன்
ஞானத்தைத் தேடுகிறேன்
ஆன்மீகத்தைத் தேடுகிறேன்
என்று உன்னை நீ தொலைத்து விடாதே!
உனக்குள்
ஆயிரமாயிரம் புதையல்கள்
கோடிகோடியாய் இரகசியங்கள்
புதைந்து கிடக்க நீயோ
சகதி என்று நினைத்து
தேட தயங்குகிறாய்
இறங்கிப்பார் தெரியும்
அது சகதி அல்ல
உன்னை உனக்குக் காட்டும்
நீ தான் அது என்று!
ஞான சபை
ஆன்மீக சபை
அமைதி சபை
என்றெல்லாம்
ஞானத்தை கூவி கூவி
விற்கின்றனர்.
வாங்குவதற்கு எத்தனையோ
வாடிக்கையாளரகள்
வரிசை கட்டி நிற்கின்றனர்.
அந்த வரிசையில்
நீயும் நின்றுவிடாதே.
தொலைந்து போய் விடுவாய்.
இவைகள் கால்வாய்கள் அல்ல
தேக்கங்கள் கட்டி உன்னை தேடுவதற்கு
கடல் அலைகள்
உன்னை எங்கு சென்று சேர்க்கும்
என்றே தெரியாது!
இதுவரை நீ தொலைந்தது போதும்.
உன்னை நீயே தேடிக்கண்டுபிடித்து
வெளியில் வா!
ஆயிரமாயிர அற்புதங்களைப் பார்
கோடிகோடியான படைப்பினங்களைப் பார்
அதிலுல்ல ஆச்சர்யங்களையும்
வியக்க வைக்கும் அதிசயங்களையும்
கண்டு ரசி
விளங்கிக்கொள்வாய் நீ
யாரென்று!

