This note is published. Edit note
நியங்களில் இருந்து அகம் நிரம்பித்தந்த
நெஞ்சுணர்வில் எப்பொழுதும்
நினைவலைகளில் தித்திக்கும்
நிழல் பாடசாலை நட்ப்பு

புலம்பெயர்ந்து நம் வாழ்வில் எத்தனையோ கோடி மகிழ்ச்சியான தருணங்களை கடந்து சென்றிருந்தாலும் அது நம் தோழர்களுடன் கூடி கழித்த சிலமணிநேரங்கள் மகிழ்ச்சிக்கு ஈடாகுமோ .....
குட்டிசுவற்றின் மேல் அமர்ந்து குட்டிகதைகள் பேசி அரட்டை அடித்ததில் தொடங்கி தேநீர்விடுதியில் மறைவாக நின்று ஒரு புகயிலைசுருள் வாங்கி நட்போடு பகிர்ந்த்திளுத்த நினைவு ...

பாடசாலை பெண்கள் சாலையில் செல்லும் போது கூடி சண்டையிட்டு பார்வையால் ரசித்தது...
எப்பவும் எங்கள் ஹிரோ தனது ஆடம்பர துவிச்சக்கரவண்டியில் வந்து எங்களுக்கு இலவச விருந்தோம்பல் செய்யும் நண்பன்
தனக்கு பிடித்த பெண்களுக்கு தான் விரும்பிய கண்டோஸ் வாங்கிக்கொடுத்து மகிழ்ந்த நாட்க்கள் ...

காதலிக்கும் பெண் தன் விருப்பத்தை தெரிவித்த கடிதம் அண்ணனின் கையில் பிடிபட்ட தருணம் ...
அதே பெண் தன் நண்பனின் காதலியாக மாறிவிட்டால் அவளை தன் தமக்கையாக பாவித்து
பாசமலரானது......
சினிமா கொட்டகையில் சேர்ந்து சென்று அப்பாவிடம் சிக்கி தர்மஅடிவாங்கி நண்பனிடத்தில் மச்சான் வலி எப்புடிடா இருக்கு என்று கேள்வி வினவி அந்த வலியிலும் கூடி சிரித்தது......
முதல் முதல் களவாக பார்த்த படத்தின் பாடல்கள் படி மகிழ்வு ...

ஆசிரியர் இருந்து சக தோழர் வரை புனைப்பெயர் வைத்தவர் யார் என்று அறிந்து மகிழ்வு
^நாங்க எல்லாம் அந்த காலத்துல^ என்று போதனை செய்ய வரும்ஆசிரியர்களை ^நாராயணா இந்த கொசுதொல்ல தாங்கலடா^ என்று குறும்பு செய்தது..
ஒரேவகுப்பறை தோழர்கள்

மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை புகழ்பெற்ற நினைவு சுவடு அனுபவப்பகிர்வு....
முற்சந்தி நிலவொளியில் ஒருவரையொருவர் சீண்டிக்கொண்டே அறடடை அடித்த நேரம் இலங்கை இராணுவத்தின் கொடுபிடியில் பிடியின்றி தப்பித்த நாட்க்கள்....
எங்கும் காக்கை கூட்டம்போல ஒன்றாக சுற்றித்திரிந்தது

சிறுவயதில் இருந்து ஒரே வகுப்பறையில் படித்த தோழர்கள் பிரிவு கொண்ட போராட்ட அமைப்புளுடன் இணைந்து வாழ்ந்த அனுபவப்பகிர்வு .....
நண்பனின் மரணம் அவன் பெற்றோர் கொண்ட துயர்
வயோதிபர் இல்லத்தில் இருக்கும் ஆசிரியரை ஒன்றாய் சென்று சந்தித்து மகிழ்வு
சிறு சிறு நினைவு விவாத சண்டைகள் இட்டு பின் பிரிவின் வலியை உணர்ந்து கூடி திளைத்து......

ஒரு யுகம் கடந்து மீண்டும் இந்த இரு நாட்கள் புது உணர்வுகள்
இதைவிட மகிழ்ச்சியான தருணங்கள் வாழ்வில் கிடைக்குமா? எப்போதும் இப்படியே வாழ்ந்துவிட வேண்டும் என்று மனது நினைக்கிறது , ஆனால் காலமோ நம்மை இதனை கடந்து செல்லவைத்து அதனை வெறும் நினைவலைகளாக மட்டும் உலாவர

செய்கிறது......
நன்றி ஒருங்கிணைப்பு நண்பர்கள் குட்டி ,வினோ உடன் பவான்
பாடசாலை நட்பின் சுகம் வேறு எதிலுண்டு கூறுங்கள் தோழர்களே .......


அன்புடன் நண்பன் நரேன்


