திங்கள், 16 செப்டம்பர், 2013
சமரன்: சமரன்: ஈழமும் தேசிய இனப்பிரச்சனையும் - நூல் முன்னு...
சமரன்: சமரன்: ஈழமும் தேசிய இனப்பிரச்சனையும் - நூல் முன்னு...: சமரன்: ஈழமும் தேசிய இனப்பிரச்சனையும் - முன்னுரை சமரன் வெளியீட்டகத்தின் இந்நூல் - சமரன் மற்றும் அதன் தோழமை அமைப்புகளான முற்போக்கு இளைஞர...
ஞாயிறு, 15 செப்டம்பர், 2013
வெகு விமரிசையாக நடைபெற்ற அரங்கேற்றம்
நோர்வே லிலேஸ்ரோம் (Liilestørm) இசையரங்கில் நிறைந்த மக்களுடன் நடந்த எனது
நண்பன் குகநேசன்னின் மகள் நீராவின்
அரங்கேற்றம்…
வெகு விமரிசையாக
நடைபெற்றது.
அவர்கள் சலங்கை பூஜையை நடாத்த அரங்கேற்ற நாயகி
குருவிடமிருந்து சலங்கையை பக்திபூர்வமாகப் பெற்றுக் கொண்டார்.
நாட்டிய கலைமாமணி
திருமதி மாலதி யோகேந்திரன் நடன அமைப்பு
எழுச்சிக்கு ஈடாக இசைக்கலைமணி Dr
. கரிகரன் சுயம்பு
அவர்கள் பாடல்களை இசைத்தார்.
நீரா சிறு வயது முதலே சுமார் 8 வருடங்கள் பரதக்கலையை முறைப்படி கற்றுவந்த
காரணத்தால் அவருடைய நடனங்கள் மிகவும் காத்திரமாகவும், சிறப்பாகவும் அமைந்திருந்தன.
பாடல்களுக்கு
ஏற்றவாறு அவருடைய உடல் அசைவும், பாவனைகளும்,
உடல் மொழியும், கருத்துணர்ந்து முத்திரைகளும், தாளம் தப்பாத அசைவுகளும் அவையோருக்கு தொடர்
மகிழ்வினை உண்டாக்கி அவை நிறைந்த கரகோஷத்தை தொடர்ந்து எழுப்பியவண்ணமிருந்தன.
நிகழ்ச்சிக்கு
வந்த மக்களை வரவேற்பது, விருந்தளித்து,
நல்ல அரங்கில் நிகழ்ச்சி
வழங்கி கலையையும், கலைஞரையும்
பெருமைப்படுத்துவதில் அரங்கேற்றத்திற்கு பக்கபலமாக நின்றஅணைத்து நண்பர்களும் சிறந்த பணியாற்றினார்கள்.
புலம்பெயர்ந்து
தமிழ் மக்கள் வாழும் பல்வேறு நாடுகளில் இருந்தும் உறவினர்கள் வந்து அரங்கேற்ற
நாயகியை இதயபூர்வமாக வாழ்த்தியது நெஞ்சை உருக்கும் நிகழ்வு.
நிகழ்ச்சிக்கு
தமிழகத்தில் இருந்து வருகைதந்த விதுவங்களின் மிருதங்கம் ,வயலின் , புல்லாங்குழல் போன்ற பாடலுக்கு பக்கபலமான
இசைகருவிகளை இசைத்தனர்.
பரதநாட்டிய
அரங்கேற்றத்திற்கே உரிய புஸ்பாஞ்சலி, அலாரிப்பு, ஜதீஸ்வரம்,சப்தம்
,வர்ணம் பதம் ,
கீர்த்தனம்,கவடிசிந்து , தில்லானா, மங்களம் என்ற ஒழுங்கில் அனைத்து நடங்களும்
சிறப்புடன் நடைபெற்றன.
நடன அரங்கேற்றம்
கண்ட பல நடன கலைகர்கள் வெளிப்பாட்டை மிகச்
சிறப்பாக அரங்கப்படுத்தி இன்றைய நாளை வெற்றிநாளாக மலரச் செய்துள்ளார் என்று
பிரதமவிருந்துனர் காரைக்குடி R .கிருஷ்ணமூர்த்தி பாராட்டினார்.
நீண்ட
இடைவெளிக்கு பின்னர் தனது மனதிற்கு பெரு மகிழ்வு தந்த நடன நிகழ்வு என்றும் கூறி,
அனைத்திற்கும் காரணமான
தாயார் சித்திரவை நீண்ட நேரம்
புகழ்ந்துரைத்தார்.
மேலும் ஆற்றும்
இசைப்பணிகளை பெரிதும் மெச்சி, அத்தோடு அனைத்து
வாத்தியக் கலைஞர்களையும் பாராட்டினா
நிகழ்ச்சியில் வரவேற்ப்புரை
வழங்கிய பிரித்தானியாவில் இருந்து வந்திருந்த செல்வி அழகா தமிழிலும் ,ஆங்கிலமொழியிலும் வழங்கினார்
இனிய குரல்லால் செல்வி கவிதாவும் கவிப்புயல் இளவலை விஜெந்திரனும் நிகழ்வை தொகுத்து வழங்கினர்.
இனிய குரல்லால் செல்வி கவிதாவும் கவிப்புயல் இளவலை விஜெந்திரனும் நிகழ்வை தொகுத்து வழங்கினர்.
நிகழ்ச்சியில்
உரையாற்றிய முத்தமிழ் அறிவாலய முதல்மைஅசிரியர் திரு .சிவநாதன் அவர்கள் புலன்பெயர்நாட்டில் முத்தமிழுக்கு கிடைத்த
பொக்கிஷம் நீரா என்று புகழ்த்து வாழ்த்துமடல்
ஒன்றை வாசித்து, உரையாற்றினார்.
நிகழ்ச்சியில்
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நீராவின் பாடசாலை ஆசிரியர் சிறப்புரையாற்றினார்.
நிகழ்வின் நாயகி
நீர அழகான தமிழில் நன்றி கூறி மங்களா
நிகழ்வுடன்
விழா இனிது
நிறைவடைந்தது.
மனதிற்கு மகிழ்வு தந்த அரங்கேற்றம்
செவ்வாய், 10 செப்டம்பர், 2013
திங்கள், 10 ஜூன், 2013
சனி, 13 ஏப்ரல், 2013
உரிமை குரல் இலக்கை நோக்கி
சுதந்திர வான் நோக்கி
தனிப் பறவையாய் நான்
இணைச்சிறகடித்து பறக்கின்றேன் !
நண்பனே உன்னை ?( என் கனவு )
தோழனாய் சிறகாக்கி
என்றோ என்
கனவுச் சிலையில்
செதுக்கி வைத்துளேன் ..!
நாளை என் சிறகுகள்
பலமிழந்தால்....
உடல் வீழ்வது உறுதி........
என் இலட்சியம்
என்னோடு கனவாகிச் சிதறவும் கூடும்
அவ்வேளை உன் தோழமை மட்டும்
எனைத் தாங்கும் தோல் கண்டால்
மீண்டும் எழுவேன்...!
வேற்றுமையில்லா தோழமை நட்ப்பு ..!
போதுமட என் சிறகுகள் இயங்க....!
இன்று போதும் ........
உன் நன்பிக்கையான சத்தியம்
என்னோடு வா....- எம்
இனத்தின் போரொளி காட்டுறேன்!
அதுவரை உற்சாகமாய்
என் சிறகுகள் அடித்தபடி
உனக்காயே நான்...!
முகம் அறிய முகப்புத்தகத்தில் நட்பு தோழமை
இன அறியோம் !
மத அறியோம் !
மொழி அறியோம் !
ஊர் அறியோம் !
பிறப்பிடம் அறியோம் !
நட்பெனும் மொழியால் !
அனைவரும்
இங்கே ஓர் தளம் !
சந்தித்துக் கொண்டோம்!
இதயத்தை தோழமை நட்பால் !
புரிந்து கொண்டோம்!
சந்தித்துக் கொண்டோம்!
இதயத்தை தோழமை நட்பால் !
புரிந்து கொண்டோம்!
எதிர்
பார்ப்புகள்
எதுவுமில்லை!
ஏமாற்றங்கள்
சிறிதுமில்லை!
எதுவுமில்லை!
ஏமாற்றங்கள்
சிறிதுமில்லை!
அவரவர்
கருத்துக்களை
இடம் (பரி) மாற்றிக்க கொள்வோம்!
பாரட்டுக்களை
பரிமாறிக்க கொள்வோம் !
இடம் (பரி) மாற்றிக்க கொள்வோம்!
பாரட்டுக்களை
பரிமாறிக்க கொள்வோம் !
சின்ன
சின்ன
சண்டைகள் இடுவோம்!
சீக்கிரத்திலேயே
சமாதானத்திற்கு வருவோம்!
சண்டைகள் இடுவோம்!
சீக்கிரத்திலேயே
சமாதானத்திற்கு வருவோம்!
ஆண்டுகள் புரண்டன நட்புகள் பல
சேர்ந்தனர்
சிந்தனை பரிமாற்றம் பெற்றன
சித்திரை புத்தாண்டு
நல் இரவு நேரத்தில்
மெல்ல மெல்ல அடியெடுத்து
மெல்லியலாள் சித்திரையும்
மெல்லியலாள் சித்திரையும்
மயக்குமொரு புன்னகையுடன்
மீண்டுமிங்கே வந்திட்டாள் விஜய வருடம் !
சாதி மத மோதலில்லா
சமத்துவத்தை அரவணைக்க !
நோய்நொடி இல்லாத
வாழ்க்கையை தந்துவர !
தரணியெல்லாம் ஏழ்மையில்லாத
எம் இனத்தின் விடுதலை பெரிகிவர !
வாழ்க்கையை தந்துவர !
தரணியெல்லாம் ஏழ்மையில்லாத
எம் இனத்தின் விடுதலை பெரிகிவர !
நித்தம் நித்தம் யுத்தமில்லா
நித்திரையை கொண்டுவர !
சித்திரை தமிழ்தாயே வருக -மக்களுக்கு
செழுமையான வாழ்வை தருக!
நித்திரையை கொண்டுவர !
சித்திரை தமிழ்தாயே வருக -மக்களுக்கு
செழுமையான வாழ்வை தருக!
நிதமும் திடமிருப்பின்,
புன்முறுவல் நிலையாயிருப்பின்,
தினமும் எனக்கு புத்தாண்டு
வெள்ளி, 22 பிப்ரவரி, 2013
செவ்வாய், 5 பிப்ரவரி, 2013
ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013
கலை வணக்கம்
அழகான கலை விடியல்
மிதமான குளிர் காற்று
வெண்பனி மூடிய பூமி
சில்லென்று வீசும் பனிக்குளிர்
மேக திரை மறைவில் நின்று
முத்தம் கொடுக்க துடிக்கும் சூரியன்
நடை பயிற்ச்சி எடுக்கும் மக்கள்
யன்னல் ஓரமாய் தேனீர் கோப்பையுடன் .நான்
இவைகளை இரசிக்கும் என் உள்ளதமான என் மனது
உங்களுக்கு எல்லாம் எனது மனம் நிறைந்த காலை வணக்கம்
திங்கள், 21 ஜனவரி, 2013
Listen">http://musicmazaa.com/tamil/audiosongs/movie/Neethaane+En+Ponvasantham.html?e">Listen to Neethaane En Ponvasantham Audio Songs at MusicMazaa.com
சனி, 8 டிசம்பர், 2012
ஈழப்போரட்டடில் எனது
ஒரு புத்தகத்தில் உள்ளடக்கியிருக்கின்ற
விடயங்களில் மாத்திரம் அல்லாமல் அது உருவாகிய முறை, எழுதப்படும் சூ நிலை , வாசிக்கப்படும் காலங்களாலும்
முக்கியத்துவம் பெறுகின்றது.
எமது போராட்ட வரலாற்றில் விடுதலை போராட்டம்
முன்னெடுக்கப்பட்ட விதத்தையும்
நாங்கள்
விடப்பட்ட பிழைகளை மீள்பரிசீலனை செய்வதற்குமான தேவையும்
அதிகரித்தே இருக்கின்றது
இந்த வகையில் ஈழப்போராட்டம் இராணுவ ரீதியான ஒரு பெரிய இன அழிவுக்கு பின்
மகிந்தவினால் ஒரு த தற்காலிய ஒரு
முடிவுக்கு கொண்டுவந்த காலப்பகுதியில்
வந்திருக்கின்ற வரலாறு பதிவுகளுடன் புஸ்பராஜா எழுதிய
ஈழப்போரட்டடில் எனது
சாட்சியம் என்ற பதிவுகள்” என்கிற நூலை முக்கியமானதாகவே நான் உணர்கின்றேன்
1952 இல் தமிழரசு கட்சி சந்தித முதல் தேர்தல் சாதனைகளில் இருந்து தொடங்கப் படுகின்றது
1961 இல் நடைபெற்ற உணவிரத போராட்டம்முலம்
இவரது போராட்ட வரலாறு பதிவு
துவங்குகிறது. அவரது மாணவர் காலங்களில்
*தமிழ்
மாணவர் பேரவையின் தோற்றம்செயல்பாடுகள்
*தமிழ்
இளைஞர் பேரவையின் தோற்றம்
*தமிழர்
கூட்டணியின் துவக்கம்
*செல்வநாயகத்தின்
செயல்பாடு
.இளைஞர்
பேரவையின் பிளவு
*புலிகளின்
தோற்றம்
*ஈபிஆர்எல்எ·பின்
தோற்றமும் வளர்ச்சியும்
*வங்கிக்
கொள்ளை,
*போலிஸ்
அதிபர் கொலை,
*சிறையில் சித்திரவதை அனுபவங்கள்,
* நூலக எரிப்பு,
*ஜனாதிபதிகள்
கொலை,
*சகபோராளிகளின்
அழிவுகள்,
என்று
சம்பவங்களின் பெரும்பாலான இடங்களில் நேரடிப் பார்வையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பின்பு இலங்கையில் போராட்டதிற்கு
ஓய்வு கொடுத்து ஐரோப்பா சென்று
அங்கு போராட்டத்தின்
செயல்பாடுகள்
விளக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த நூலை ஒரு முக்கியமான
காலகட்டத்தின் நேரடி வரலாற்றுப் பதிவாகக் கொள்ள வேண்டும்
ஒரு
வரலாறு பதிவு செய்யும்போது அதில் தன்னை முன்னிலைப்படுத்தியாக வேண்டும்
இந்த
பதிவில் புஸ்பராஜாவின் பங்கு மிகவும்
மிகைப்படுத்தப்பட்டுத்தான்உள்ளது
பல
இயக்கங்களைத் துவக்கியது, ஆரம்ப நாட்களிலேயே மலையகத் தமிழர்களின் நலனை மனதில்
கொண்டு செயல்பட்டது, சிவகுமாரன் போன்றோருக்கு தலைமை செயல்படர்ரகவும்
வன்முறையை விருன்பதவரகவும் பின்னாளில் மிக முக்கியமான தலைவராகக் கருதப்பட்ட
பத்மநாபாவைப் பின்னின்று இயக்கியது உள்ளிட்டுப் பல விஷயங்களில் தன்னை
முதன்மைப்படுத்தியிருக்கிறார்
புஸ்பராஜா. தன்னை முதன்மைப்படுத்திக் கொண்டதைப் போலவே தான்
சார்ந்திருந்த இயக்கத்தையும் உயர்த்திப் பிடித்திருக்கிறார்.
மற்றைய ஈழவிடுதலை இயக்கங்களின் செயல்பாடுகள் குறித்த
தன்னுடைய விரிவான விமர்சனங்களை முன்வைத்த புஸ்பராஜா, தான் சார்ந்திருந்த இயக்கத்தைப் பற்றியும் தன்னுடைய
நிலைப்பாடுகளைத் தெளிவாக எழுதியிருக்கலாம்
ஈபிஆர்எல்எ·ப் இயக்கத்தின் வெற்றிகளுடனும், நேர்மையான வழிமுறைகளுடனும் தன்னை
அடையாளப்படுத்துகின்ற அவர் சில பதிவுகளில் உள்கட்சி பிரட்சனைகளில் தனக்கும்
இதுக்கும் சம்மந்தம் இல்லை என்று நலிவிவிடுவது .இந்த சாட்சியத்தில் உணர்கின்றேன்
1981இல் கீரிமலைக்கு
தமது திணைக்களத்திற்கு ஆதரவு தேடி வந்த சந்ததியாரை தான்
வெளியேற்றியதை பெரும்
விலாசமாக எழுதியுள்ளார்.
இங்கு உமாமகேஸ்வரன் சந்ததியாரை
பகைவராகவே காட்டுகின்றார். அவர்களை பற்றி எதிரியைக்
குறித்து எழுவது போலவே எழுதுகின்றார். புஸ்பராசாவைப் பொறுத்து கூட்டணிக்கு எதிராக
சிந்திப்பது அமிர்தலிங்கத்திற்கு மாறாக கருத்துக் கொண்டிருப்பது மாபெரும்
குற்றமாகும். தனக்கும் சந்ததியாருக்குமான முரண்பாடு அரசியல் சார்ந்தது என்பதை கடைசி வரை
அவர் சொல்லவில்லை. சந்ததியாரை அதிகம் பேசுபவராக கொச்சையாகக் காட்டுவதன் மூலம்
அரசியல் உள்ளடக்கத்தை, கருத்துக்களை
தந்திரமாய்த் தவிர்த்து
விடுகிறார்
மற்றெல்லோரையும் விட போராட்டத்தில் தானே அதிகம் பாரம் சுமந்து துன்ப்பப்பட்டவரகவும்
காட்டும் புஸ்பராசா,
ஏன் காந்தீயம் பற்றிய எந்தொரு பதிவும் இதில்
இடம்பெறவில்லை ஏன் ?
இறைகுமாரன் -
உமைகுமாரன் கொலைக்கு சந்ததியாரே காரணம் குற்றச்சாட்டை புஸ்பராசா எழுதியுள்ளார். அதுசார்ந்த
உண்மைகள் ஆதாரங்கள் குறித்தான கவலை
எதுவும் அவரிடம் இல்லை. சந்ததியார் மீதான கூட்டணிக்காலத்துக் கோபங்கள், தமிழர் இளைஞர் பேரவை காலத்தைய பகைமைகளை புஸ்பராசா
தீர்த்துக் கொள்கிறார். இறைகுமாரன்-
உமைகுமாரன் கொலைக்கு காரணம் சுந்தரம் என அழைக்கப்படும் சிவசண்முகமூர்த்தியின் கொலைபற்றிக் கவனயீனமாகப் புஸ்பராசா எழுதாமல் விடவில்லை. அதைக் குறிப்பிட்டால் இறைகுமாரன் - உமைகுமாரன்
கொலையானது சில அடிப்படை நியாயங்களை பெற்றுவிடும் என்று புஸ்பராசா அஞ்சியிருக்கிறார்.
இறைகுமாரன், உமைகுமாரன்
போன்றோர் சுந்தரம் கொலையினை எப்போதுமே நியாயப்படுத்தி வந்தார்கள். இருவரும் அமிர்தலிங்கம்; பிரபாகரன் இருவருக்கும் மிகவும் நெருக்கமானவர்களாக
அப்போது இருந்தார்கள். சந்ததியாரும்
இந்தியாவில் ஒரு முறை பிரபாகரனால் கடத்தப்பட்டு மொட்டையடிக்கப்பட்டு கொல்லப்படும்
வேளையில் தப்பினார். அமிர்தலிங்கம் பிரபாகரன் கூட்டுச் சதியால் தான்
சுந்தரத்தின் கொலை நிகழ்ந்தது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)










