திங்கள், 19 ஏப்ரல், 2021

கவிதை


ஓர் இடத்தில் கவிதை என்பது
கற்பனை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
உணர்வு.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
தேடல்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
வார்த்தை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
வாழ்க்கை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
மகிழ்ச்சி.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
கண்ணீர்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
தாகம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
பசி.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
மௌனம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
வேகம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
தீர்வு.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
அன்பு.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
உண்மை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
பொய்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
கானல்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
ஊற்று.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
பேச்சு.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
மூச்சு.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
வார்த்தைகளின் கோர்வை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
வாழ்க்கையின் கோர்வை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
விதை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
விலை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
உணவு.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
குப்பை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
மருந்து.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
மொழி.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
ஊமை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
நாதம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
தாளம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
உயிர்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
சுவாசம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
வாசம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
இலக்கணம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
பிழை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
நந்தவனம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
பாலை நிலம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
புதிர்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
எளிமை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
புதுமை......
ஓர் இடத்தில் கவிதை என்பது
ஆடம்பரம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
வலி.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
வழி.......
ஓர் இடத்தில் கவிதை என்பது
அமைதி.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
உணர்வுகளின் மொழி.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
கண்ணீரின் மொழி.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
வீரத்தின் மொழி......
ஓர் இடத்தில் கவிதை என்பது
கையாளாகாத தனத்தின் மொழி.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
எண்ணத்தின் வெளிப்பாடு.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
சமூகத்தின் வெளிப்பாடு.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
அழகு.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
அழுகை.....
கவிதை எங்கேயும் இல்லை
உனக்குள்ளேயே இருக்கிறது
உன்னை சுற்றி இருக்கிறது
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
Yaso Sivakumar, Suseenthira Sambhanthar மற்றும் 8 பேர்
1 கருத்து
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்

ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

 காலத்தின் சூழ்நிலை

ஒற்றையாகவும் இரு

என்பதற்க்கு

அடையாளமாக நான்

தனி ஒருவன் !

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் தாடி இன் கருப்பு-வெள்ளை படமாக இருக்கக்கூடும்
Arul Sivanesasundarm, Sudda Ramakrishnan மற்றும் 49 பேர்
8 கருத்துகள்
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்

ஒரு குரல்

நகரும் காலம்
திட்டமிட முடியாது
என்றெனக்குத் தெரியும்
இது முடியும்போது
இருந்தால் நான்
இன்றைய முகமூடி
கழட்டிடப்படும்
ஆரம்பத்தில் இருந்தவனாக
ஆரம்பிப்பேன்






1 நபர் மற்றும் தாடி இன் படமாக இருக்கக்கூடும்
Kuganesan Murugiah, Arul Sivanesasundarm மற்றும் 17 பேர்
2 கருத்துகள்
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்

காடுகளை அழிப்பதற்கு எதிராக……


சிங்கராஜா வனம் – மார்ட்டின் ஐயா

Lanka Tourism: குவேனிக்கு அடைக்கலம் கொடுத்த சிங்கராஜ வனம்

இலங்கையில் சப்பிரகமுவ மாகாணத்தில் ஒரு புறம் களுகங்கையும் மறுபுறம் ஜின் கங்கையும் பாய்ந்து செல்ல, இடையில் 44.375 சதுர மைல் பரப்பளவினுள் பெரம் குன்றுகளையும் காடுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது சிங்கராஜா வனம்.

இது கடல் மட்டத்திலிருந்து 1000 அடிமுதல் 4500 அடி வரைய உயரமான குன்றுகளையுடைய காடு. நாட்டில் கால நிலையை, நீர் வீழ்ச்சியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

சிங்கராஜ வனம் இலங்கையில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட தேசிய வனமாகும். இது  இலங்கையின் சபரகமுவா, தென் மாகாணங்களின் எல்லையில் இரத்தினபுரி ...

சிங்கராஜா வனத்தில் தாவர இனங்கள் 800 முதல் 900 வரை இருக்கின்றன. இதில் 76 இன வகைகள் இலங்கையில் மட்டுமே உள்ளவை. 5 இனங்களைச் சேர்ந்த மிக மிக உயரமான மரங்கள் அதிகமாக உள்ளன. புதிதாக உருவாக்கிய மர இனங்களில் 8-10 வரை எண்ணிக்கையுள்ள மரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள பறவை இனங்கள் 142. இதில் இலங்கையில் மட்டும் உள்ளவை 21 வகைகள். ஆனால் சிங்கராஜ வனத்தில் உள்ளது 20 இனங்களே. இலங்கைக்கு உரித்தான மற்ற ஒன்பது பறவைகள் நுவரெலியா போன்ற மலைப் பிரதேசங்களில் உள்ளன. இது “சிலோன் அரங்கா” எனப்படும் பறவையாகும். வண்ணத்துப்பூச்சிகள் சுமாராக 70 இன வகைகள்  காணப்படுகின்றன. இவற்றில் இலங்கையில் மட்டும் உள்ளவை 20 இன வகைகளாகும்.

35 பாம்பு வகைகளில் ஆறு மட்டுமே இலங்கையில் உள்ளவை.

மிருகங்களில் பெரிய மிருகமாக கருதப்படுவது மான் குடும்பத்தைச் சேர்ந்த சாம்பார் என்னும் மிருகமாகும். மற்றும் சிறுத்தைப் புலிகளும் காணப்படுகின்றன.

இவ்வாறு சிங்கராஜ வனத்தின் விலங்குகள், தாவரங்கள், பறவைகள் தொடர்பான சகல விடயங்களையும் அறிந்தவர் மார்ட்டின் விஜயசிங்க என்பவராவர்.  பல்கலைக்கழகம் செல்லாது அனுபவ கல்வியினாலும் முயற்சியினாலம் கற்றறிந்து கல்விமான்களுக்குரிய தகைமை பெற்றுள்ள மார்ட்டின் ஐயா என அனைவராலம் ன்புடன் அழைக்கப்படும் 52 வயதான இவர் வன மேற்பார்வையாளராக கடமையாற்றுகிறார்.

இவர் குடவ அரச பாடசாலையில் எட்டாம் வகுப்புவரையும் பின்பு கரவிட்ட மத்திய மகா வித்தியாலயத்தில் சிறிது காலமும் கல்வி கற்று பின் 1958ம் ஆண்டு தனத திருமணம் முடிந்த பின் வனத்திற்கு அருகில் உள்ள கிராமத்தில் குடியேறி வசிக்கத் தொடங்கினார்.

அப்பொழுது கிராம மக்கள் சட்ட விரோதமாக மரங்களை வெட்டி காட்டை அழிப்பதற்கு எதிராக காட்டு அதிகாரி அவர்கள் மீது வழங்குத்  தொடுத்தார். இதனால் அதிகாரிக்கும்  சில கிராம மக்களுக்கும் இடையில் பிரச்சனை ஆரம்பித்தது.  தாவரங்கள் மேல் அன்பும் ஈடுபாடும் கொண்ட மார்ட்டின் ஐயா இயல்பாகவே அதிகாரிக்கு பக்கபலமாக இருந்து பிரச்சனையை சுமூகமாக தீர்த்து வைத்தார். இச் சந்தர்ப்பத்தில் அதிகாரியுடன் ஏற்பட்ட நட்பு இவரின் வன தவார விலங்குகள் மீதான ஆர்வத்திற்கு தீனி போட்டது. வன பாதுகாவலனாக தனது பணியை மேற்கொள்வதற்கு உதவிற்று. இதன்போது ஏற்பட்ட நம்பிக்கையினால் 1968ம் ம் ஆண்டு “பைன்ஸ்” மரங்கள் வளர்க்கும் திட்டத்தில் கங்காணியாக வேலையைப் பொறுப்பேற்று மரங்கள் நன்றாக வளரவும் பாதுகாக்கவும்  தன்னால் இயன்றதைச் செய்தார்.

1972ம் ஆண்டு கொழும்புத் திட்டத்திற்கு அமைய 5000 ஏக்கர் காட்டை இயந்திரம் மூலம் வெட்டி அழித்தார்கள். இச் செயற்பாட்டை எதிர்த்து தடுத்து நிறுத்த300-400 வரையிலான கை ஒப்பங்களை சேகரித்து மனு ஒன்றை அனுப்பினார். ஆனால் 1977ம் ஆண்டே திரு. காமினி திசாநாயக்காவினால் இடை நிறுத்தப்பட்டது.

இவரது தொழில் 1984ம் ஆண்டு நிரந்தரமாக்கப்பட்டது. இக் காலகட்டத்தில் சிங்கராஜா வனத்தில் உள்ள தாவரங்கள், விலங்குகள், பற்றி ஒருவரும் பூரணமாக அறிந்திருக்கவில்லை என்பதை உணர்ந்த இவர் அத தொடர்பான விபரங்களைத் திரட்ட முனைந்து கொண்டார். இவரது ஆர்வத்திற்கு பக்கபலமாக மறைந்த பேராதனை  தாவரவியற் பேராசிரியர் பாலசுப்பிரமணியம், பேராசிரியர் நிமில் குணத்திலக்க, பேராசிரியர் சாவித்திரி குணத்திலக்க ஆகியோரின் ஒத்துழைப்பும் உதவிகளும் கிடைத்தன. மற்றும் சிலர் மிரகங்கள் பற்றி பி.பி.கருணாரத்ன, ரணம அமரசேகர பறவை இனங்கள் பற்றி சரத் கொட்டகம (வன அதிகாரி) பொன்றோரது உதவிகளும் கிடைத்தன.

இவரது வனவிலங்குகள், தாவரங்கள் தொடர்பான விபரங்களை அறியும் ஆர்வத்தைக் கேள்விப்பட்ட ஜெர்மன் உயர் ஸ்தானிகர் புத்தகங்கள் பலவற்றைக் கொடுத்து உதவியதன் மூலம் ஊக்குவித்தார்.

கண்டுவிடிக்கப்பட்ட புதிய மரங்கள் சிலற்றில் ஒன்றுக்கு  இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளமை இவரது  ஆற்றலையும் தகைமையையும் பிரதிபலிக்கின்றது. அதன் பெயர் டயஸ்; கோரியா சோயாமா ஜயசூரிய அன்ட் விஜயசிங்க என்பதாகும்.

மேற்கூறப்பட்ட பேராசிரியர்கள் மூலம் தனத அறிவை வளர்த்துக்  கொண்டது மட்டுமல்லாமல் தனது அனுபவ அறிவை அவர்களுடன் பகிர்ந்து கொண்டார். அது மட்டுமல்லாமல் ஆங்கிலம் இலத்தின் மொழிகளை தானாகவே கற்றுக்கொண்டார். இவரிடம் பல ஆயிரம் ரூபா பெறுமதியுள்ள நூல்களின் சேகரிப்பும் உள்ளன.

மார்ட்டின் ஐயா தனத குடும்ப வாழ்க்கை பற்றி கூறும்போத நான் என் மனைவியுடனும் ஆறு பிள்ளைகளுடனும் கானகத்தின் நடுவில் வீடமைத்துத் தனியாக வாழ்கின்றேன். என் மூத்த மகள் தினமும் மூன்று மைல்களுக்கு மேல் கானகத்தினூடே நடந்து சென்று உயர்தரம் வரை படித்து சித்தி அடைந்துள்ளார். எனது பிள்ளைகளும் வனம் பற்றிய அறிவை வளர்ப்பதிலும் வன பாதுகாப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

இன மத பேதமின்றி எல்லோருடனும் சரிசமமாகப் பழகும் இவர்களிடம் “மனிதம்” நிறைந்துள்ளதை நடைமுறை மூலமும் பேச்சுக்கள் மூலமும் காணக்கூடியதாக இருந்தது.

கல்விமானாகத் திகழும் மார்ட்டின் ஐயா எல்லோரிடமும் கேட்பது இதுதான். “உலகம் வெப்ப அதிகரிப்பினால் வரட்சியையும் வறுமையையும் நாடிச் செல்கின்றது. இதற்கு காடுகளை அழிப்பதும் ஒரு காரணம். ஆகவே காடுகளைப் பாதகாப்பது மட்டுமல்லாமல் வீட்டுக்கு ஒரு மரத்தை நட்டு வளர்த்தெடுப்பது இன்றைய காலத்தில் இன்றியமையாத தேவையாகின்றது”

பாரதி

24-05-1992

நன்றி வீரகேசரி வார வெளியீடு

ஆசிரியர் நடராஜா அவர்கள்.

சிங்கராஜா காடு பற்றியும் அது அழிக்கப்படுவது தொடர்பான விபரங்கள் கீழே

No photo description available.
90களின் ஆரம்பத்தில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் கற்கும் பொழுது சிங்கள மாணவ நண்பர்களுடன் சிங்கராஜா காட்டிற்குப் பயணம் செய்தபோது அங்கு வேலை செய்கின்ற காட்டைப் பராமரிக்கின்ற மார்ட்டின் ஐயா அவர்களுடன் தற்செயலாக உரையாடியபோது அவரின் ஆற்றலையும் அறிவையும் அறிந்து அதைக் கட்டுரையாக்கினேன். அப்பொழுது வீரகேசரியில் அப்பாவின் நண்பர் நடராஜா அவர்கள் ஆசிரியராக இருந்தார். அவரினுடாக இதைப் பிரசுரிக்க அனுப்பினேன்.

https://firefriendz.blogspot.com/2011/11/15.html?showComment=1616098525980#c8181861961327813175

காடு என்பது சமவெளியிலும் காணப்படும். மரஞ்செடிகொடிகள் வளர்ந்தும் இருக்கும். பட்டுப்போயும் இருக்கலாம். அளவின்றிப் பெருகினாலும் சரி, சிதைந்தாலும் சரி – அது காடாகும். கட்டைகள் மண்ணோடு தீயோடு சிதையுமிடம் என்பதால்தான் இடுகாடு, சுடுகாடு. தானே உருவாகும். முயற்சியாலும் உருவாக்கப்படலாம். வனம் என்பது பல்லுயிர்ப் பெருக்கமுள்ள, ஆதியிலிருந்து வளர்ந்து செழித்த பகுதி. வனம் என்பதில் உள்ள வன்மையைக் கவனிக்கவும். கானகம் என்பது மலைப்பாங்கான பகுதியில் இருப்பதைக் குறிப்பது. மலையும் மலைசார்ந்த இடமுமான குறிஞ்சி நிலத்தோடு தொடர்புடைய வனப்பகுதி கானகம்.

– கவிஞர் மகுடேசுவரன்

‘வனம் குறித்த தமிழ்ச் சொற்கள் ஏராளம். அடவி, இறும்பு, கடம், கட்சி, காடு, கானகம், கானல், கான், சோலை, பழுவம், புறவு, பொதும்பு, பொழில், என ஏறக்குறைய 25 சொற்கள் உள்ளன. அவை யாவும் ஒருபொருட் பன்மொழி (அதாவது ஒரே பொருளைத் தரும் பல சொற்கள்) என்று அறியப்பட்டாலும் மொழி வல்லுநர்கள் பார்வையில் ஒவ்வொரு சொல்லும் ஏதோ ஒரு விதத்தில் மற்ற சொற்களிடமிருந்து வேறுபட்டதாகவே கருதப்படுகிறது. இந்தக் கருத்து எல்லா ஒருபொருட் பன்மொழி சொற்களுக்கும் பொருந்தும். அறிவியல் பார்வையில் வனங்கள் பல வகைகளாக அடையாளங் காணப்படுகின்றன. வேறுபடும் வனங்களின் வகைகளுக்குத் தனித்தனியாகப் பெயரிட வேண்டியுள்ளது.’

http://www.viruba.com/final.aspx?id=VB0003251

https://ta.maywoodcuesd.org/difference-between-jungle-and-forest-8560