வெள்ளி, 19 ஏப்ரல், 2019

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

கனகரத்தினம் கொலை முயற்சி நடைபெற்ற சில நாட்களின் பின்னதாக கணேஸ் வாத்தி கொழும்பில் பொலீசாரால் கைது செய்யப்படுகிறார்.வழமைபோல அவரும் பஸ்தியாம்பிள்ளை என்ற காவல்துறை அதிகாரியால் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார். பஸ்தியாம்பிள்ளையின் சித்திரவதை தொடர்பாக நாம் அனைவரும் அறிந்திருந்தோம் கணேஸ் வாத்தி கைதானது தொலைத் தொடர்புகள் அரிதான அந்தக் காலப்பகுதியில் எமக்குத் தெரிந்திருக்கவில்லை.



1978 பெப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாத ஆரம்பமாக இருக்கலாம். அப்போது தான் கணேஸ் வாத்தி கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்.அவர் எமது மத்திய குழு உறுப்பினர் என்பது தவிர முழு நேரமாக வேலை செய்து கொண்டிருந்தார். வார இறுதிகளில் கொழும்பு சென்று மேலதிக வேலைகளில் ஈடுபடுவதும் உண்டு. இதனால் எமக்கு அவர் கைதுசெய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழவில்லை.

கணேஸ் வாத்தி சித்திரவதைகளின் கோரத்தில் எம்மைப்பற்றி தகவல்களைச் சொல்லிவிடுகிறார். பொலிசார் எமது பலம், நாம் வைத்திருந்த ஆயுதங்கள், உறுப்பினர்கள் போன்ற அடிப்படைத் தகவல்களைச் சேகரித்துக்கொள்கின்றனர்.

தேடப்பட்டவர்கள்,முக்கிய உறுப்பினர்கள் அனைவரும் மடுப் பண்ணையிலேயே வாழ்ந்தார்கள். அங்குதான் எமது முக்கிய முடிவுகளும், பிரதான தொடர்புகளும் பேணப்பட்டன.

நான் நிரந்தரமாக ஒரு குறித்த பண்ணையில் தங்குவதில்லை. பண்ணைகளின் நிர்வாகம் எனது பொறுப்பிற்கு உட்பட்டிருந்ததால் நான் நிரந்தரத் தங்குமிடம் ஒன்றை வைத்துக் கொள்ளவில்லை. சந்தர்ப்பவசமாக அன்று நானும் மடுப்பண்ணையில் தங்கவேண்டியதாயிற்று.

பொழுது இன்னும் முழுதாகப் புலராத நேரம். அதிகாலை ஐந்து மணியிருக்கும். அடர்ந்த காட்டில் சேவல் கூவவில்லை. பறவைகள் மட்டும் அங்கும் இங்குமாய் சோம்பல் முறித்து மெல்லிய மொழியில் பேசிக்கொண்டன.

பண்ணையின் அமைப்பு முறை ஓரளவு பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் கூடியதாகவே அமைந்திருந்தது. மரங்களுக்கு மேலே நான்கு பேர் தங்கியிருக்கக் கூடிய வகையிலான பரண் அமைக்கப்பட்டிருந்தது. தவிர ஒரு குடிசையும் அமைத்திருந்தோம். பரணில் நானும், உமாமகேஸ்வரனும், நாகராஜாவும் உறங்கிக் கொண்டிருந்தோம். நான் அப்போது சற்று கண்விழித்திருந்தேன்.

கீழே கொட்டிலில் செல்லக்கிளி, ராகவன், நிர்மலன்,ரவி, சித்தப்பா,யோன் ஆகியோர் இருந்தனர். பரணுக்கும் கொட்டிலுக்கும் இடையே அரைக் கிலோமீட்டர் இடைவெளி இருந்தது. இதே வேளை அந்தக் காலை நேரத்தில் பொலீஸ் வாகனத்தில் அதன் சாரதியோடு கைது செய்யப்பட்ட கணேஸ் வாத்தியையும் சற்றுத் தூரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு பஸ்தியாம்பிள்ளை தனது உதவியாளர்களுடன் குடிசையை நோக்கி நடந்துவருகிறார்.

அவரோடு இன்னும் இரு முக்கிய அதிகாரிகள் இருந்தனர். பேரம்பலம், பாலசிங்கம் ஆகிய அந்த இருவரும் கூட தமிழ் இளைஞர்களின் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக அறியப்பட்டவர்கள் தான்.

மூவரும் குடிசைக்கு வந்தவுடன் உறக்கத்திலிருந்த அனைவரையும் சுற்றிவளைத்துக் கொள்கின்றனர். பொலீசாரின் சந்தடியில் விழித்துக்கொண்ட அனைவரும் செய்வதறியாது திகைக்கின்றனர். அதிர்ச்சியில் எழுந்த அவர்கள் பஸ்தியாம்பிள்ளை குழுவினருடன் பேச்சுக்கொடுக்க ஆரம்பிக்கின்றனர்.

பஸ்தியாம்பிள்ளை திறமைமிக்க அதிகாரி. அந்த நேரத்தில் தீவிரவாத அரசியலில் ஈடுப்படுள்ளவர்களின் தரவுகள் பல அவரின் மூளைக்குள்ளேயே பதியப்பட்டிருந்தது. ஆக செல்லக்கிளி போன்ற தேடப்படுகின்றவர்களை அவர் அடையாளம் கண்டுகொண்டிருப்பார் என்பது எமது எல்லோரதும் ஊகம்.

அங்கிருந்த போராளிகள் தாம் வந்திருப்பது விவசாயம் செய்வதற்காகத் தான் என்று பொலீசாருக்குச் சொல்கின்றனர். அக்காலப்பகுதியில் இளைஞர்கள் காடுகளைச் சுத்திகரித்து விவசாயம் செய்வது வழமையன நிகழ்வு என்பதால் அவர்கள் அவ்வாறு கூறுகிறார்கள். பஸ்தியாம் பிள்ளை குழுவினர் இவர்கள் கூறியதை நம்பினார்களோ என்னவோ நம்புவது போல் நடித்துக்கொண்டிருந்தார்கள்.

நான் ஏனைய பண்ணைகளுக்குச் சென்று வேலைகளை கவனிக்க வேண்டும் என்பதால் வழமையாகவே நேரத்துடன் எழுந்துவிடுவேன். அன்றும் பாதி உறக்கத்தில் என்னோடு பரணில் இருந்த உமாமகேஸ்வரன்,நாகராஜா ஆகியோரிடம் விடைபெற்றுக்கொண்டு மற்றப்பண்ணைகளுக்குச் செல்லும் வழியில் குடிசையை நோக்கி நடக்கிறேன். அங்கு நிலைமைகள் வழமைக்கு மாறானவையாக இருப்பதை சற்று அண்மித்ததும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

உறக்கம் கலைந்த அவர்கள், பரணைவிட்டு இறங்கி மூவருமாக குடிசையை நோக்கிச் செல்கிறோம்.

அதிகாலையில் அமைதியாக இருக்கும் பண்ணையில் ஆள் அரவமும் பேச்சுக்குரல்களும் கேட்டன. இவற்றை அவதானித்த நான் ஏதோ அசம்பாவிதம் நடந்திருப்பதாக எண்ணி மிக அவதானமாக ஓசை படாமல் அருகே சென்ற போது அன்னியர்களின் பேச்சுக் குரல்களை அவதானிக்கின்றேன். உடனே பரணுக்குத் திரும்பிச் சென்று உமாமகேஸ்வரனையும், நாகராஜாவையும் உசார்படுத்துகிறேன்.

நாங்கள் மூவரும் மெதுவாக அடர்ந்த காட்டு வழியில் வேறு வேறு திசைகளில் சென்று குடிசையைச் சுற்றி வளைத்துக்கொள்கிறோம். நாகராஜவிடம் ஒரு குறிசுடும் துப்பாக்கியும் உமாவிடமும்,என்னிடமும் ஒவ்வொரு கைத்துப்பாக்கியும் இருந்தது. அருகே சென்றதும் அங்கிருப்பது பொலீஸ் என்பது எமக்குத் தெரியவருகிறது. நாம் மூவரும் நகரவில்லை நடப்பதை மறைவிலிருந்தே அவதானிக்கிறோம்.
இதற்கிடையில் குடிசையிலிருந்த எம்மவர்கள் பஸ்தியாம் பிள்ளை குழுவினருடன் சாதரணமாக பேச்சுக்கொடுத்துக் கொண்டிருந்தனர்.

பஸ்தியாபிள்ளை குழுவினருக்கு அவர்கள் அனைவரையும் பொலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் நோக்கமும் இருந்தது.

பொலீஸ் அதிகாரிகளைத் தேனீர் தயாரித்து அருந்த அழைத்ததும் அவர்களும் ஒத்துக்கொள்கிறார்கள். அவ்வேளையில் அங்கே இருந்த குறி சுடும் துப்பாக்கியைக் கண்ட பஸ்தியாம்பிள்ளை அது எதற்காக எனக் கேள்வியெழுப்புகிறார். யானைகள் அதிகமான காடு என்பதால் பாதுகாப்பிற்காக வைத்திருக்கிறோம் எனக் கூறி எம்மவர்கள் தப்பித்துக்கொள்ள முனைகின்றனர்.

தேனிர் தயாரித்தாயிற்று. குடிசையைச் சூழ மரக் குற்றிகள் இருந்தன. அவற்றின் மேல் அமர்ந்து இளைப்பாறியபடியே தேனீர் அருந்துகின்றனர்.

பரணிலிருந்து இறங்கிவந்து குடிசையைச் சுற்றி மறைவிடங்களிலிருந்து அவதானித்துக் கொண்டிருந்த எமக்கு அங்கு என்ன நடக்கிறது என்பது குறித்துக் குழப்பமடைந்திருந்தோம்.

மரக் குற்றிகளில் அமர்ந்திருந்த போது பஸ்தியாம்பிள்ளை கொண்டு வந்திருந்த இயந்திரத் துப்பாகியை தனக்கு அருகில் வைத்துவிட்டு பேசிக்கொண்டிருந்தார். எம்மில் அனைவரும் இயந்திரத் துப்பாக்கி பற்றி அறிந்திருந்தோம் ஆனால் யாரும் தொட்டுக்கூடப் பார்த்ததில்லை.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி துப்பாக்கியக் கைப்பற்றினால் தப்பித்துவிடலாம் என அங்கிருந்த எம்மவர் மௌனமாகத் திட்டமிட்டுக்கொண்டனர். அதற்கு முதலில் பொலீஸ் அதிகாரிகள் ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்த வேண்டும் என்பதையும் திட்டமிடுகிறார்கள்.

இவ்வேளையில் பேரம்பலம் முகம் கழுவிக்கொள்ள கிணற்றுக்கு அருகே அழைத்துச் செல்லப்படுகிறார். கிணறும் கூப்பிடு தொலைவில் இருந்தாலும் குடிசைக்கு மறைவாகவே இருந்தது.

யோனும், சித்தப்பாவும் பேரம்பலத்தைக் கிணற்றிற்குக் கூட்டிச் செல்கின்றனர். அவர் போக மற்றைய இருவரும் இன்னும் உரையாடலில் இருந்தனர். ஆக இரண்டு பொலீசார் நான்கு போராளிகள் அங்கு எஞ்சியிருந்தனர்.

நாகராஜாவும் தொலைவிலிருந்தே என்ன நடக்கப் போகிறது என்பதை ஊகித்துக்கொண்டதால் குறிசுடும் துப்பாகியோடு குடிசையை மேலும் அண்மிக்கிறார்.

இவ்வேளையில் தான் திகில் சம்பவம் ஒன்று நிகழ்கிறது. ரவி பஸ்தியாம்பிள்ளையின் இயந்திரத்துப்பாகியை எடுத்துவிடுகிறார். பதட்டம் பரபப்பு எல்லாம் ஒருங்கு சேர ரவிக்கு அதனை இயக்கத் தெரியவில்லை. அங்கும் இங்குமாக பல தடவை இயக்குவதற்கு முனைகிறார்.
 
 
ரவி துப்பாகியைக் கைப்பற்றிய அதே கணத்தில் விரைந்து செய்ற்பட்ட ராகவன் பஸ்தியாம்பிள்ளையை மடக்கிக் கட்டிப் புரள்கிறார். மறுபுறத்தில் பாலசிங்கத்தை மடக்கிய கறுப்பி என்ற நிர்மலன் அவரோடு குறிசுடும் துப்பாகியொன்றைக் கைப்பற்றுவதற்காக மல்யுத்தம் நடத்திக்கொண்டிருந்தார். இவ்வாறு இரு முனை யுத்தம் நடக்க திகில் நிறைந்த திரைப்படக் காட்சிபோல அனைத்தையும் நாம் அவதானித்துக்கொண்டிருந்தோம்.

இதே வேளை பாலசிங்கத்தை நோக்கி மறைவிலிருந்த நாகராஜா தன்னிடமிருந்த துப்பாக்கியால் சுடுகிறார். இதனால் நிர்மலனது கையில் கூட ஒரு காயம் ஏற்படுகிறது.

ரவி இயந்திரத் துப்பாகியை இயக்க முனைந்து கொண்டிருந்த வேளையில் விரைந்து செய்ற்பட்ட செல்லக்கிளி பஸ்தியாம் பிள்ளையின் தலையில் குறிசுடும் துப்பாக்கியால் அடித்துவிடுகிறார். அடிவிழுந்ததும் பஸ்தியாம்பிள்ளை நினைவு குலைந்த நிலையிலேயே ராகவனோடு கட்டிப்புரழ்கிறார்.

இது நடந்துகொண்டிருந்த வேளையில் பேரம்பலம் என்பவர் கிணற்றுக்கு முகம்கழுவச் சென்றவரை அவரோடு சென்ற யோனும் சித்தப்பாவும் கிணற்றுகுள் தள்ளிவிடுகின்றனர். இவ்வேளை ஒரு எதிர்பாராத சம்பவமும் நிகழ்ந்தது. அவரைத் தள்ளி விழுத்தும் போது யோனும் சேர்ந்து கிணற்றினுள் விழுந்துவிடுகிறார். அதிஷ்டவசமாக யோனுக்கு நீச்சல் தெரிந்திருந்ததால் அவர் நீந்திக்கொண்டிருக்க பேரம்பலம் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டுருந்தார்.

அனைத்துமே திகில் நிறைந்த திரைப்பட்ம் போல் ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்கின்றன. கண்ணிமைக்கும் நேரத்துள் அனைத்தும் தலை கீழ் நிகழ்வுகளாகிவிடுகின்றன. ஆரம்பத்திலிருந்தே எம்மவர்கள் யாரும் சரணடைவதற்கோ விட்டுக்கொடுப்பதற்கோ தயாராக இருக்கவில்லை. இறுதிவரை போராடுவதாகவே தீர்மானித்திருந்தனர்.

ரவியிடமிருந்து இயந்திரத் துப்பாக்கியை வாங்கிக்கொண்ட செல்லக்கிளி சில கணங்களுள் அதனை எவ்வாறு இயக்குவது என்று கற்றுக்கொள்கிறார். உற்சாகமாகிவிட்ட அவர் விழுந்துகிடந்த பஸ்தியாம்பிள்ளையைச் சுட்டுக்கொல்கிறார். உடனடியாகவே கிணறு இருந்த திசையை நோக்கி ஓடிய செல்லக்கிளி அங்கு கிணற்றினுள் தத்தளித்துக் கொண்டிருந்த பேரம்பலத்தையும் சுட்டுக்கொல்கிறார்.

மூன்று பொலீசாரும் திகில் நிறைந்த சில கண நேரத்துள் மரணித்து விடுகின்றனர்.

ஆர்ப்பாட்டமில்லாத இராணுவ வெற்றி நிலைநாட்டப்படுகிறது. இலங்கையில் தமிழர்கள் எங்கிருந்தாலும் பஸ்தியாம்பிள்ளையை அறிந்திருந்தனர். இலங்கையில் இருதயப்பகுதியில்,பலத்த காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நிகழ்ந்த கனகரத்தினம் கொலை முயற்சி ஜெயவர்தன அரசை உலுக்கியிருந்ததது.

அதன் பின்னர் இலங்கையின் உளவுத்துறையில் பஸ்தியாம்பிள்ளையின் செல்வாக்கு உச்சமடைந்திருந்தது. அவர் இப்போது எமது குடிசைக்கு முன்னால் உயிரற்ற உடலாக… எல்லாம் ஒரு கனவுபோல நடந்து முடிந்தது.
 
செல்லக்கிளி ஒரு உணர்ச்சிப் பிழம்புபோல. எதையும் உணர்வுபூர்வமாக மட்டுமல்ல உணர்ச்சி பூர்வமாகவும் ஈடுபாட்டோடு செய்யவல்லவர். இயந்திரத் துப்பாக்கியை இயக்கி பஸ்தியாம்பிள்ளையைச் சுட்டதும் உரத்த குரலில் ‘வாழ்க தமிழீழம்’ எனச் சத்தமிட்டது காடுமுழுவதும் மறுபடி மறுபடி எதிரொலித்தது. செல்லக்கிளியின் குதூகலத்தோடு மறைந்திருந்த நான்,உமாமகேஸ்வரன். நாகராஜா ஆகியோரும் கலந்து கொள்கிறோம். எம்மையே எம்மால் நம்ப முடியவில்லை. இளைஞர்களுக்கும், தமிழ்த் தேசியக் குரலுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்த பஸ்தியாம் பிள்ளையை அவரது துப்பாக்கியாலேயே சுட்டுக் கொலை செய்த சம்பவம் எமக்கெல்லாம் ஒரு பெரும் சாதனை.

07ம் திகதி ஏப்பிரல் மாதம் 1978 ஆம் ஆண்டு இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகப் பல குறிப்புகள் பதியப்பட்டிருக்கின்றன.

அந்த இராணுவ வெற்றியின் அரசியல் பலாபலன்களை எடை போடவும் அதன் பின்னரான அரசியலை வழி நடத்தவும் நாம் திட்டமிடவில்லை. அதற்கான கட்டமைப்பும் மக்கள் திரளமைப்புக்களும் இருந்ததில்லை. எமது நோக்கம் பலமான இராணுவத்தைக் கட்டியமைப்பதாக மட்டும் தான் அமைந்தது. அதற்கு மேல் எதுவும் இல்லை. அந்தப் பலமான இராணுவத்தை நோக்கிய பயணத்தில் இந்தக் கொலைகள் ஒரு மைற்கல்லாகவே எமக்குத் தெரிந்தன.
அன்று மட்டுமல்ல முள்ளிவாய்க்கால் வரை யாருமே அரசியல் எதிர்விளைவுகள் குறித்துச் சிந்தித்ததில்லை. எத்தனை மனித் உயிர்கள் எத்தனை இராணுவ வெற்றிகள் !

இதன் பின்னர்தான் இவர்கள் வந்த வாகனம் பற்றியும் அதில் வேறு யராவது இருக்கலாம் என்ற நினைவும் வருகிறது.செல்லகிளியும் வேறு இருவரும் பாதை வழியே பதுங்கியபடி செல்கின்றனர். இவர்கள் காரை நோக்கி ஒடிச்செல்லும் போது சாரதி காரிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இறங்கி ஓட முனைகிறார். அவரை சிறிது தூரம் துரத்திச் சென்ற செல்லக்கிளி இறுதியில் சுட்டுக் கொலை செய்துவிடுகிறார்.

சிறிவெர்தன என்ற அந்தச் சாரதியைக் கொலை செய்வதைத் தவிர அவர்களுக்கு வேறெந்த மாற்றும் இருக்கவில்லை. அவர் அங்கேயே கொலை செய்யப்படுகிறார்.

கொலைகளின் பின்னால்,அது எந்த வடிவில் அமைந்திருந்தாலும்,தனிமனித வக்கிர உணர்வுகள் மட்டும் தான் காரணம் என்பது வரட்டுத்தனமான வாதம். அதன் பின்புலமாக அமைந்த அரசியல் தான் மாற்று வழிமுறையற்ற கொலைகளை ஏற்றுக்கொள்ளுமாறு நிர்ப்பந்தித்தது. நாம் மக்கள் என்ற கடலில் மீன்கள் போல வாழ்ந்த கெரில்லாப் போராளிகளல்ல, மக்களிலிருந்து அன்னியமாக வாழ்ந்த வெறும் தலைமறைவுப் போராளிகள் தான்.
 
நிலைமையை புரிந்துகொண்ட கணேஸ் வாத்தி கையை மேலே தூக்கிக் கொண்டு இறங்கி வருகிறார். பின் அவரையும் ஏற்றிக் கொண்டு குடிசையை நோக்கி வாகனத்தை செல்லக்கிளி ஓட்டி வருகிறார்.

எமக்கு அதன் பின்னர்தான் இவை அனைத்துமே கணேஸ் வாத்தி வழங்கிய தகவல்களின் அடிப்படையில் தான் நிகழ்ந்தது என்பது தெரியவருகிறது. அதிர்ச்சிக்கு மேலாக அனைவருக்கும் அவர் மீதான ஆத்திர உணர்வு மேலிடுகிறது. அப்போது ராகவன் கணேஸ் வாத்தியைச் சுடவேண்டும் என்று துரத்திக்கொண்டு வரும் போது கணேஸ் வாத்தி எனக்குப் பின்னால் பதுங்கிக் கொண்டு உயிர்ப்பிச்சை கேட்கிறார். நான் தவறு செய்துவிட்டேன் மன்னித்துவிடுங்கள் என்று கெஞ்சுகிறார். அப்படியிருந்தும் ராகவன் ரவி ஆகியோர் அவரை தாக்கிவிட்டார்கள். கணேஸ் வாத்தியோ எனக்குப்பின்னால் ஒரு குழந்தை போல பயத்தில் பதுங்கிக் கொண்டார்.
இப்போது சூடு பட்டடதில் நிர்மலனுக்கு கையிலிருந்து இரத்தம் வடிந்துகொண்டிருந்தது. முதலில் நாம் அனைவரும் அங்கிருந்து தப்பித்துகொள்ள வேண்டும். அதுதான் எமது அடுத்த திட்டம். எங்கே போவது என்பதெல்லாம் பின்னர் முடிவெடுக்க வேண்டும் ஆனால் தப்பித்தாக வேண்டும்.அது தான் பிரதான நோக்கம்.

கிணற்றினுள் இறந்து கிடந்த பேரம்பலத்தை வெளியே எடுத்து எரிப்பதற்கு எமக்கு நேரமிருக்கவில்லை. அவரை அப்படியே விட்டுவிடுகிறோம். பாலசிங்கத்தினதும் பஸ்தியாம் பிள்ளையினதும் உடல்களைத் தூக்கி குடிசைக்குள் போட்டுவிட்டு, கிடைத்த காய்ந்த மரங்களையும் சருகுகளையும் அவற்றின் மீது போட்டுவிட்டு தீவைத்து விடுகிறோம்.

அவ்வேளையில் அங்கே தண்ணீர் இறைக்கும் இயந்திரம், சைக்கிள் போன்றன இருந்தன. அவற்றையும் அங்கேயே வைத்து எரிக்கிறோம்.
ஆக, தடயங்களையும் உடல்களையும் அழிப்பதற்கான வேலையை ஓரளவு செய்து முடித்து விடுகிறோம்.

இப்போது எவ்வளவு விரைவாகத் தப்பிச் செல்ல முடியுமோ அவ்வளவு விரைவாகச் செல்லவேண்டும் என்பது தான் அடுத்த நோக்கம். அதற்கு முன்பதாக நிர்மலனின் கையிலிருந்து இரத்தப்பெருக்கு அதிகமாக, அவரை மன்னாருக்குக் கூட்டிச் சென்று சிகிச்சையளிப்பது என்பதும் முடிவாகிறது. அப்போது எமக்கு பொலிசார் வந்த கார் கைவசம் இருந்ததால் அதே காரில் மன்னாரை நோக்கிச் செல்ல முடிவெடுத்து, நாகராஜாவும், ராகவனும், நிர்மலனும் செல்ல செல்லக்கிளி காரைச் செலுத்துகிறார். அவர் ஒரு திறமையான வாகன ஓட்டுனரும் கூட.

மன்னாருக்குச் சென்று அங்கிருந்த தெரிந்த வைத்தியரின் உதவியோடு நிர்மலனுக்கு மருத்துவம் சிகிச்சை மேற்கொள்ளப் படுகிறது. ராகவனும்,நிர்மலனும் அங்கேயே தங்கி விடுகிறார்கள்.

செல்லக்கிளி திரும்பி வந்து சேர்வதற்குள் நாங்கள் எம்மால் முடிந்த அளவிற்குத் தடயங்களை அழித்துவிட்டோம். அந்த இடைவெளியில் கணேஸ் வாத்திக்கு மரண தண்டனை வழங்குவதில்லை எனவும் முடிவெடுக்கிறோம். ஆனாலும் அவர் தொடர்ந்தும் இயக்கத்தில் இணைந்து இயங்குவதற்கு அனுமதிப்பதில்லை எனவும் கூடவே மற்;றொரு முடிவையும் அங்கிருந்த அனைவரும் சேர்ந்தே மேற்கொள்கிறோம்.

பின்னர் முகாமிலிருந்து புறப்பட்ட அனைவரும் வவுனியா வரை பஸ்தியாம்பிள்ளை குழுவினர் பயன்படுத்திய காரிலேயே வருகிறோம். செல்லக்கிளி தான் காரின் சாரதி. எங்களை எல்லாம் பொலீசார் எப்போதும் கைது செய்யலாம், சித்திரவதைக்கு உட்படலாம் என்று எண்ணியிருந்தோம். ஆனால் பொலீஸ் வாகனமொன்றில் முழுச் சுதந்திரத்தோடு பிரயாணம் செய்வோம் என நாம் எதிர்பார்த்ததில்லை.
எல்லோரும் வெற்றியின் பெருமிதத்தில் இருந்தோம். கணேஸ் வாத்தியைத் தவிர. கணேஸ் வாத்தியை வவுனியாவில் இறக்கிவிட்டு இனிமேல் இயக்கத்தோடு தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கிறோம். அவர் அங்கு இறங்கி எம்மோடு எதுவும் பேசாமலே சென்றுவிடுகிறார்.

இன்று உச்சமடைந்திருக்கும் இனப்படுகொலையின் கோரம் அப்போதும் பண்பியல் மாற்றமின்றி இருந்தது. அப்போது கூட நட்பு சக்திகளுக்கும், எதிரிகளுக்கும் இடையேயான இடைவெளி கூட மிக நெருக்கமானதாகத் தான் இருந்தது. சில மணி நேரங்களில் கணேஸ் வாத்தி என்ற மத்திய குழு உறுப்பினர் துரோகியாகிப் போய் மயிரிழையில் உயிர் பிழைத்த நிகழ்வு, ஆயுதப் போராட்டத்தில் ஆய்வுகளினதும் அரசியலினதும் தேவையை உணர்த்தி நிற்கிறது.

எம்மால் உருவாக்கப்பட்ட துரோகிகளை அழிக்கும் செயன்முறை மறுபடி மறுபடி வேறு வேறு வடிவங்களில் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. மக்கள் திரள் அமைப்புக்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் போராட்டங்களிலெல்லாம் நீதிக்கும் தீர்ப்பு வழங்கலுக்கும் புதிய வடிவங்களைக் காண்கிறோம். மக்களின் பிரதிநிதிகள் மக்கள் மன்றத்தில் வழங்கிய தீர்ப்புக்கள் குறித்தும் அவற்றின் நடைமுறை குறித்தும் நாம் அப்போது அறிந்திருக்கவில்லை. தனிமனிதர்களின் முடிவுகளே தீர்ப்புகளாயிருந்தன. அதிலும் ஆயுத பலம் கொண்ட மனிதர்கள் சிலர், தாம் சரி அல்லது தவறு என்று முடிவு செய்வதற்கு தமக்குத் தாமே அதிகாரத்தை வழங்கியிருந்தனர். புலிகளுக்கு மட்டுமல்ல சிறுகச் சிறுக ஈழத்தின் ஒவ்வொரு மூலைகளிலும் உருவான இயக்கங்கள் அனைத்திற்கு இது பொருந்தும்
கணேஸ் வாத்தியை கொலை செய்வதற்கு என்னோடு இணைந்து எதிர்ப்புத் தெரிவித்தவர்களுள் உமாமகேஸ்வரனும் ஒருவர். அவர் மற்றவர்களோடு வாத்தியை மன்னித்து விடவேண்டும் என்று விவாதித்தார்.

இந்தச் சம்பவங்கள் எதுவுமே பிரபாகரனுக்குத் தெரியாது. அவர் அவ்வேளையில் யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்தார்.

இப்போது எனது வேலைகள் கடினமானவையாக அமைகின்றன. நான் ஏனைய பண்ணைகளுக்குச் செல்லவேண்டும். அவர்களின் இடங்களை மாற்ற வேண்டும். இலங்கை அரசின் உளவுப்படை அவை குறித்தெல்லாம் தகவல்கள் வைத்திருக்கின்றனவா என்பதெல்லாம் எமக்கு உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது. ஆக, நான் பண்ணைகளை மீழமைப்புச் செய்யவேண்டிய நிலையில் இருந்தேன்.

இதனால் நான் புளியங்குளம் பண்ணைக்கு அருகாமையில் இறங்கிக் கொள்கிறேன். ரவி, நாகராஜா போன்றோர் ஏனைய பண்ணைகளை நோக்கி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிக்க விரைகிறார்கள்.

உமாமகேஸ்வரனும் செல்லக்கிளியும் முறிகண்டிக் காட்டினுள் சென்று காரை எரித்துவிட்டு கைப்பற்றப்பட்ட இயந்திரத் துப்பாக்கியையும் மறைத்து வைத்துவிட்டு பிரபாகரனிடம் தகவல் சொல்வதற்காக யாழ்ப்பாணம் நோக்கி விரைகிறார்கள் .எல்லாவற்றிற்கும் மேலாக ஆயுதங்கள் மட்டுமே விடுதலை பெற்றுத்தரும் என முழுமையாக நம்பியிருந்த எம் வசம் இப்போது ஒரு இயந்திரத் துப்பாக்கி இருக்கிறது. போராட்டம் என்பது அடுத்த நிலையை நோக்கி வளர்ச்சியடைந்து விட்டதான பிரமையில் அனைவரும் உற்சாகத்திலிருக்க அந்த மக்ழ்ச்சியைப் பிரபாகரனோடு பகிர்ந்துகொள்ள உமாமகேஸ்வரனும் செல்லக்கிளியும் யாழ்ப்பாணம் நோக்கிச் செல்கின்றனர்.

இன்னும் வரும்…

கொலைகளை உரிமைகோரும் புலிகள்– ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பதினொன்று)

பஸ்தியாம்பிள்ளை குழுவினர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை பிரபாகரனுக்குத் தெரிவிக்க உமாமகேஸ்வரனும் செல்லக்கிளியும் யாழ்ப்பாணம் நோக்கிச் செல்கின்றனர். எம் அனைவருக்குமே பிரபாகரன் இது குறித்து மகிழ்ச்சியடைவார் என்பது தெரியும்.



உமாமகேஸ்வரனும் செல்லக்கிளியும் சில நாட்களில் திரும்பி வந்த போது பிரபாகரன் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விபரிக்க முடியாது என்று என்னிடம் கூறினர். தவிரவும், கணேஸ்வாத்தியின் காட்டிக்கொடுத்த துரோகச் செயலுக்கு அவரைக் கொலைசெய்திருக்க வேண்டும் என்று பிரபாகரன் கடிந்து கொண்டதாகவும் கூறினார்கள். அப்போது இருபத்தி நான்கு வயதை எட்டிப்பிடித்துக் கொண்டிருந்த இளைஞன் பிரபாகரனின் தூய இராணுவ வழிமுறை மீதான நம்பிகையில் பஸ்தியாம்பிள்ளை கொலை நிகழ்வு ஒரு மைற்கல்.

மக்கள் எழுச்சியைப் பாதுகாக்கவும், அதனை மேலும் உரமிட்டு வளர்க்கவும் ஆயுதப் போராட்டம் பயன்பட்டிருப்பதாக வரலாறுகள் கூறுகின்றன. ஆயுதங்கள் வெகுஜன எழுச்சியைத் தற்காத்துக்கொள்ளும் கேடயங்களாகப் பயன்பட்டிருக்கின்றன. மக்களின் நிறுவன மயப்பட்ட எழுச்சியைத் தூண்டுவதும், அவ்வெழுச்சி உருவாக்கும் சூழலில் மக்கள் மத்தியில் ஆயுதம் தாங்கிய கெரில்லாக்கள் தம்மை வலுப்படுத்துவம் வெற்றியின் இன்னொரு அம்சம். கடந்த அரை நூற்றாண்டு காலம் உருவாக்கிய சிந்தனைப் போக்கு ஈழத்தில் மட்டுமல்ல, அதிகாரமும் அடக்குமுறையும் கோலோச்சுகின்ற எந்த நாட்டிலும் மக்களைச் சாரா ஆயுத அமைப்புக்களே ஆதிக்கம் செலுத்தின. இராணுவ வெற்றிகளின் இறுதியில் இவ்வமைப்புகள் எல்லாம் தோற்றுப் போய் சரணடைந்திருக்கின்றன. சோமாலியாவில், இந்தோனேசியாவில், காஷ்மீரில், பங்களாதேஷில், இலத்தினமரிக்க நாடுகளில், கிழக்காபிரிக்காவில் எல்லாம் இது ஒரு சாபக்கேடு போல மக்களை அழித்துப் போராட்டங்களையும் அழித்துக் காட்டிக்கொடுத்திருக்கிறது.

சமூக உணர்வு கொண்டவர்களும், தேசப்பற்றாளர்களும், ஜனநாயக வாதிகளும் ஆயுதங்களின் மீதும் தூய இராணுவவாதத்தின் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தவர்களாகவே வாழ்ந்த வரலாறுகள் துன்பகரமானவை. பிரபாகரன் என்ற தேசப்பற்று மிக்க இளைஞனின் ஒட்டுமொத்த சிந்தனையும், செயற்பாடும் போராட்டத்தை நோக்கியே ஒருமுகப்பட்டிருந்தது. தனது சுய லாபத்தையோ, சுய விளம்பரத்தையோ அனறு அவர் முதன்மைப்படுத்தியதில்லை.

70 களின் சூழல் வடகிழக்கில் பொருளாதார அபிவிருத்தியும் அதனோடு கூடவே இயல்பான தாராள வாதக் கலாச்சாரமும் துளிர்விட்டடிருந்தது. வடகிழக்குப் பெண்கள் ‘மினி ஸ்கேட்’ அணிவது கூட சமூக வழமையாகியிருந்த கலாச்சார மாற்றம் துளிர்விட்டிருந்த காலமது. சுப்பிரமணியம் பூங்கா இளம் காதலர்களால் நிரம்பி வழிந்தது. பிரபாகரனின் வயதை ஒத்த மத்தியதர வர்க்க இளைஞர்கள், உருவாகி வளர்ந்து கொண்டிருந்த அந்தக் கலாசாரத்தை நுகர்ந்து கொண்டிருந்த வேளைகளில் பிரபாகரனுக்கு இயந்திரத் துப்பாக்கி மீது அளவற்ற காதல் ஏற்பட்டிருந்தது. தமிழீழத்தை எப்போதாவது அடைந்தே தீருவோம் என்று தீர்க்கமான நம்பிக்கை கொண்டிருந்தார்.

கைப்பற்றப்பட்ட துப்பாக்க்கியைத் தன்னுடனேயே வைத்துக்கொண்ட பிரபாகரன், அடிக்கடி அதைத் தொட்டுப்பார்த்துக் கொள்வார். குழந்தைகள் போல தன்னோடு வைத்துக்கொண்டே உறங்கச் சென்றுவிடுவார். சில வேளைகளில் நள்ளிரவு கடந்த வேளைகளிலும் திடுமென எழுந்து உட்கார்ந்து கொண்டு துப்பாகியைச் சுத்தம் செய்து கொள்வார். எங்கள் உறக்கத்தைக் கலைத்து இயக்கத்தின் அடுத்த நடவடிக்கைகள் குறித்துப் பேசுவார். நாம் ஒரு இராணுவக் குழுவைக் கட்டமைத்து விடுவோம், தமிழ் ஈழம் கிடைத்துவிடும் என்ற கருத்தில் துளியளவும் குலைந்து போகாத நம்பிக்கை வைத்திருந்ததார்.

பஸ்தியாம்பிள்ளை உட்பட்ட இரகசியப் பொலீசாரைக் கொலைசெய்த நிகழ்வு எமக்கு மட்டுமே தெரிந்திருந்ததது . இலங்கை அரசிற்கு அவர் கொல்லப்பட்டாரா, தலைமறைவானாரா, விபத்தில் சிக்கிவிட்டாரா என்பதெல்லாம் மர்மமாகவே இருந்தது இலங்கை முழுவதும் தேடுதல்களும், திடீர்ச் சோதனைகளும் அதிகரித்திருந்தன. இலங்கை அரசு அதிர்ந்து போயிருந்தது. அரச படைகளைப் பொறுத்தவரை கனகரத்தினம் கொலைமுயற்சியின் தாக்கத்திலிருந்து இன்னமும் மீட்சியடையாத நிலையில் இன்னொரு மூன்று முக்கிய பொலீஸ் அதிகாரிகள் குறித்த மர்மம் நீடித்தது.

இந்த மர்மம் நீண்டகாலம் நீடிக்கவில்லை. ஏதோ வழியில் அரச படைகள் பஸ்தியாம்பிள்ளை குழுவினரின் கொலைகளை அறிந்துவிடுகின்றனர். சம்பவம் நிகழ்ந்து சரியாக நான்கு நாட்களுள் இரகசியப் பொலீசாரின் இறந்த உடல்களைப் பொலீசார் மீட்டதாக 12.04.1978 இல் அனைத்து பிரதான இலங்கை ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன. அதுவும் எங்கு எப்போது நடைபெற்றது என்ற நுண்ணிய தகவல்கள் பத்திரிகைகளில் வெளியாகின்றன. கொல்லப்பட்டவர்களின் உடல்கள் மீட்கப்படுகின்றன. இலங்கை முழுவதும் ஒரே பரபரப்பு.

வீரகேசரி, தினகரன், டெயிலி நியூஸ் போன்ற தினசரிகளின் தலைப்புச் செய்திகள் இதுவாகத்தான் இருந்தன.

‘வன்செயல் சம்பவங்கள் தொடர்பாக மன்னார் பகுதிக்கு விசாரணை செய்யச் சென்ற இரகசியப் பொலீஸ் உத்தியோகத்தர்கள் நால்வர், துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் வெட்டியும் கோரமாகக் கொல்லப்பட்டார்கள். மடுவுக்கும், மடுவீதிக்கும் இடையிலுள்ள மூன்றாவது கட்டையிலுள்ள காட்டுப்பிரதேசத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. இரகசியப் பொலீஸ் இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை, சப்-இன்ஸ்பெக்டர் பேரம்பலம், சார்ஜன்ட் பாலசிங்கம், கான்ஸ்டபிள் சிறிவர்தனா(சாரதி) ஆகியோரே இவ்வாறு கொல்லப்பட்டவர்கள்’ என்று வீரகேசரியின் தலைப்புச் செய்தி அறிவித்தது.

‘ பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் சேபால ஆட்டிகல, வடபகுதி பொலீஸ் மா அதிபர் அனா செனிவரத்ன, இரகசியப் பொலீஸ் அதிபர் நவரட்ணம் ஆகியோர் விசாரணையை முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பியுள்ளனர். இவ்விசாரணை தொடர்பான அறிக்கையை ஜனாதிபதியிடம் நேற்றிரவு அவர்கள் கையளித்தனர்’ என்று மறு நாள் வீரகேசரிச் செய்தி தெரிவித்தது.

தமிழீழக் கனவிலிருந்த தமிழ்ப் பேசும் மக்கள் ‘பொடியள் கெட்டிக்காரங்கள்’ என்று பரவலாகப் பேசிக்கொண்டார்கள். தலமறைவு வாழ்க்கை நடத்திய நாம் வெளியே சென்று வரும் வேளைகளில் தமிழர்கள் பேசிக்கொள்ளும் போதெல்லாம் மௌனமாய் பெருமையடைந்து கொள்வோம்.அரசபடைகள் எப்படி இந்தத் தகவல்களைப் பெற்றுக்கொண்டார்கள் என்பது எமக்குப் புதிராக இருந்தது. புளியங்குளம் முகாமில் பிரபாகரன் உட்பட மத்திய குழுக் கூட்டங்களை நடத்தினோம். அவ்வேளைகளில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தெல்லாம் ஆராய்வோம்.

விரைவிலேயே தகவல்கள் அரச உளவாளிகளுக்கு தெரிய வந்தது எப்படி என்பதை நாம் அறிந்து கொண்டோம். பதினேழு வயதில் செட்டியின் சாகச நடவடிக்கையால் கவரப்பட்டிருந்த பிரபாகரன் உட்பட நாமெல்லாம் இப்போது செட்டி தான் இந்தத் தகவல்களை இராணுவத்திற்கு வழங்கியிருந்தார் என்று அறிய வந்ததும் சற்று அதிர்ச்சியாகத் தான் இருந்தது. அவ்வேளையில் செட்டி சிறையிலிருந்து திரும்பி சில மாதங்களே இருக்கும். பிரபாகரன் செட்டியோடு எந்தத் தொடர்புகளும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பதில் நானும் குலமும் ஆரம்பத்திலிருந்தே உறுதியாக இருந்தோம். இந்த விடயத்தில் எம்மிருவராலும் பிரபாகரன் மீது ஆளுமை செலுத்த முடிந்தது என்பது என்னவோ உண்மைதான்.

துரையப்பா கொலையை ஒட்டிய காலகட்டத்தில் பிரபாகரன் எம்மைச் சந்திக்க வந்த வேளையில் செட்டியின் ஆளாகவே அறிமுகமானதால் நாம் தொடர்பு வைத்துக்கொள்வதை நிராகரித்திருந்தோம். செட்டியுடன் உறவுகளை அறுத்துக்கொள்வது என்ற உறுதி வழங்கப்பட்ட பின்னரே நாம் இணைந்து செயற்பட ஆரம்பித்தோம்.

பஸ்தியாம்பிள்ளைக் கொலையில் செல்லக்கிளி அதிரடி நடவடிக்கைகள் எமக்கு உண்மையில் பிரமிப்பாகவே இருந்தது. செட்டி கூட இப்படித்தான். இப்படியான சந்தர்ப்பங்களில் துணிவாகச் செயற்படும் திறமை படைத்தவர். அவரது வாழ்க்கை முழுவதும் குற்றச் செயல்களோடு தொடர்புடையதாக இருந்ததால் தயக்கமின்றி முன்செல்லக் கூடியவர். பலம்மிக்க கட்டுக்கோப்பான இராணுவத்தைக் கட்டியமைப்பதே விடுதலையைப் பெற்றுத்தரும் என நம்பியிருந்த பிரபாகரன், அந்த இராணுவத்தைக் கட்டியமைப்பதில் செட்டி போன்ற துணிச்சல் மிக்கவர்கள். காத்திரமான பங்கு வகிக்க கூடியவர்கள் என நம்பியிருந்தார்.

மக்களின் பலத்தில் தங்கியிருக்காத, தனிமனித சாகசங்களில் நம்பிக்கையுள்ளவர்களைப் பொறுத்தவரை எதிரிக்கும் நண்பர்களுக்கும் இடையேயான இடைவெளி மிகக் குறுகியது என்பதற்கு செட்டி முதல் உதாரணமாக அறிமுகமானவர். இப்போது செட்டி அரசின் உளவாளியாகிவிட்டார் என்பது எங்களைவிட பிரபாகரனுக்கு அதிர்ச்சியானதாக இருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டிருந்த எமது மத்திய குழு உறுப்பினர் உமாமகேஸ்வரன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் அணிச் செயலாளராகச் செயற்பட்ட வேளையில் அதன் மகளிர் அணியின் செயலாளராகவிருந்த ஊர்மிளா என்பவருடன் அறிமுகமாகியிருந்தார். ஊர்மிளா மிகுந்த தேசிய உணர்வுகொண்ட போராளி என்பது தவிர அடக்கு முறைகள் மிகுந்த சமூகத்தில் எமக்கு ஆதரவாகக் கிடைத்த முதல் பெண் என்பது இன்னொரு சிறப்பம்சம். அவருடனான தொடர்புகளை உமா தொடர்ச்சியாகப் பேணிவந்தார். ஊர்மிளாவிற்கு அறிமுகமான பெண் ஒருவருக்கு தொடர்பான இன்னொருவர் இலங்கை உளவுப்பிரிவில் வேலைசெய்து கொண்டிருந்தார். அவரூடாக உளவாளியாக மாறியிருந்த செட்டி சிறிலங்கா இரகசியப் பொலீசாருக்கு எழுதியிருந்த கடிதத்தின் பிரதியொன்று ஊர்மிளாவிற்குக் கிடைக்கிறது. அந்தக் கடிதத்தில் மடுப் பண்ணையில் பஸ்தியாம்பிள்ளையைக் கொலைசெய்த சம்பவத்தின் விபரமும் தொடர்புபட்ட போராளிகளின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்தக் கடிதத்த்தின் பிரதியை கொழும்பு சென்றுவரும் சாந்தன் ஊடாக ஊர்மிளா எமக்குச் சேர்பிக்கிறார். ஆக, செட்டிதான் காட்டிக்கொடுப்பாளன் என்பதை உறுதி செய்து கொள்கிறோம். இனிமேல் இந்த விபரங்கள் எப்படி செட்டிக்குத் தெரிய வந்தது என்று ஊகிக்க எமக்கு நேரமெடுக்கவில்லை. செல்லக்கிளி செட்டியின் ஒன்றுவிட்ட சகோதரர். அவரூடாகத் தான் செட்டி இவற்றை அறிந்திருக்க வேண்டும் என்பது சற்று வெளிப்படையாகவே அனுமானித்துக் கொள்ளக்கூடிய நிலையில், செல்லக்கிளியிடம் இது குறித்துக் கேட்கிறோம். செல்லக்கிளி யாழ்ப்பாணம் சென்ற வேளையில் கள்வியங்காட்டில் செட்டியைச் சந்தித்திருக்கிறார். அங்கு தனது வீரச்செயல்கள் குறித்து செட்டியிடம் பேசியிருக்கிறார். அவரோ செல்லக்கிளி சொன்னவற்றையெல்லாம் எழுதி இலங்கை உளவுத் துறைக்கு அனுப்பியிருக்கிறார். அவர் அனுப்பிய கடிதத்தின் பிரதி இப்போது எம்மிடம் இருந்தது.

நாம் கணேஸ் வாத்தி இல்லாத ஐந்து உறுப்பினர்களாகச் சுருங்கிப் போன மத்திய குழுவை இப்போது அவசரமாகக் கூட்டுகிறோம். ஏனைய பண்ணைகள் குறித்த விபரங்களை செல்லக்கிளி செட்டியிடம் தெரிவிக்கவில்லை என முதலில் உறுதிப்படுத்திக் கொள்கிறோம். ஆக,பண்ணையின் கட்டமைப்புக்கள் அனைத்தும் அப்படியே இருக்க மேலதிக நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கிறோம்.

அரசபடைகளுக்கு இப்போது ஒரு தலைமறைவு இயக்கம்ஒழுங்குபடுத்தப்பட்ட வகையில் இயங்கி வருவதாகத் தெரிந்துவிட்டது. கனகரத்தினம் எம்.பி இன் கொலை முயற்சிக்கும் பஸ்தியாம்பிள்ளை குழுவினரின் கொலைக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக பாதுகாப்புச் செயலகம் அறிக்கை வெளியிட்டது. எம்மை நோக்கிய அவர்களின் நடவடிக்கைகளும் தீவிரமடைய ஆரம்பித்திருந்தது. இப்போது எதிர்பார்புடனிருந்த தமிழ் மக்களுக்கு எம்மை அறிமுகப்படுத்திக் கொள்ள இது சரியான சந்தர்ப்பம் எனத் தீர்மானிக்கிறோம். இந்த வகையில் நமது அனைத்து நடவடிக்கைகளையும், தாக்குதல்களையும் உரிமை கோருவதாக முடிவிற்கு வருகிறோம்.அந்த முடிவின் அடிப்படையில் துண்டுப்பிரசுர வடிவிலான கடிதம் ஒன்றைத் தயாரித்து பத்திரிகைகளுக்கு அனுப்புவதாகத் தீர்மானிக்கிறோம். அதற்கான பொறுப்பு அவ்வேளையில் செயலதிபராகவிருந்த உமாமகேஸ்வரனிடம் வழங்கப்படுகிறது.

உமாமகேஸ்வரனால் எழுதப்பட்டு அவர் கையொப்பத்தோடு வெளியிடப்பட்ட பிரசுரம் தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது துண்டுப் பிரசுரம். இந்தப் பிரசுரத்தில் நாம் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகள் அனைத்தும் உரிமை கோரப்படுகின்றன.

துண்டுப் பிரசுரத்தின் முழுமையான விபரம்:

தொடர்புடையோரின் கவனத்திற்கு,

தமிழ்ப் புதிய புலிகள் என்ற ஸ்தாபனத்தின் ஸ்தாபகப் பெயர் 05.05.1976 முதல் மாற்றி அமைக்கப்பட்டு ‘தமிழீழ விடுதலைப் புலிகள்’ என்ற புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பின்வரும் மரணங்களுக்கு நாங்கள் பொறுப்பு ஏற்கிறோம்:

1. திரு.அல்பிரட் துரையப்பா ( யாழ். மேயர், வடபகுதி சுதந்திரக் கட்சி அமைப்பாளர் சுட்டுக் கொலை)

2. திரு என். நடராஜா (உரிமையாளர் பெற்றோல் கராஜ், உரும்பிராய்; கோப்பாய் சுதந்திரக் கட்சி அமைப்பாளர், குண்டு வீச்சு)

3. திரு ஏ.கருணாநிதி, (இரகசியப் பொலீஸ், காங்கேசந்துறை,சுட்டுக்கொலை)

4. திரு. சண்முகநாதன் (இரகசியப் பொலீஸ், காங்கேசந்துறை.

(அதே நாளில் சுட்டுக்கொலை)

5. திரு.சண்முகநாதன் (இரகசியப் பொலீஸ் வல்வெட்டித்துறை)

6. திரு. தங்கராஜா (முன்நாள் நல்லூர் சுதந்திரக் கட்சி எம்பீயான திரு.அருளம்பலத்தின் காரியதரிசி)

7. திரு.சி.கனகரத்தினம் (முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி, தற்போது ஐ.தே.க வில் அங்கம் வகிக்கும் பொத்துவில் எம்.பி)

8. திரு,பஸ்தியாம்பிள்ளை (இரகசியப் பொலிஸ் இன்ஸ்பெக்டர்)

9.திரு.பேரம்பலம் (இரகசியப் பொலீஸ் சப் இன்ஸ்பெக்டர்)

10. திரு.பாலசிங்கம் (இரகசியப் பொலீஸ் சார்ஜன்ட்)

11. திரு.சிறிவர்தன(இரகசியப் பொலீஸ் சாரதி)

1978 ஏப்பிரல் ஏழாம் திகதி காலை ஆறு மணியளவில் பஸ்தியாம்பிள்ளை கோஷ்டியினர் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தேடிவந்தனர். அவர்கள் வசம் எஸ்.எம்.ஜி, ஷொட்கன், கைத் துப்பாக்கி ஆகியவை இருந்தன. அவர்கள் புலிகளைத் தாக்கினார்கள். அப்புலிகள் தங்களுக்கு உடல் காயமோ உயிர்ச் சேதமோ எதுவுமின்றி அவர்களை அழித்தார்கள். காரும் அழிக்கப்பட்டது.

இந்த மரணங்களுக்கு வேறு எந்தக் குழுவோ அல்லது இயக்கமோ அல்லது தனி நபர்களோ உரிமை கொண்டாட முடியாது. இலங்கையிலும் வெளிநாட்டிலும் உள்ள புலிகளைத் தவிர இவற்றுக்கு உரிமை கொண்டாடும் வேறு எவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தங்கராஜா கொலைமுயற்சி புலிகளால் மேற்கொள்ளப்படவில்லை. அப்போது ஒரு குழுவாக சில இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட தங்கதுரை குட்டிமணி சார்ந்த குழுவினராலேயே மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் அப்போதும் இந்தியா இலங்கைக்கு இடையேயான கடத்தல் வியாபாரம் மேற்கொண்டிருந்தனர். அக்குழுவினர் தமது நடவடிக்கைகளையும் புலிகளின் பெயரிலேய்ர்ர் உரிமை கோருமாறு ஏற்பட்ட இணக்கத்தின் அடிப்படையிலேயே தங்கராஜாவின் பெயரும் எமது பிரசுரத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டது.

துண்டுப் பிரசுரத்தை எழுதி முடித்ததும், சாந்தன் அதனைக் கொழும்பிற்குக் கொண்டு சென்று ஊர்மிளாவிடம் ஒப்படைத்து தட்டச்சுச் செய்கிறார். அங்கிருந்தே அதன் பிரதிகள் பத்திரிகைகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. அது அனுப்பப்பட சில தினங்களிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னத்தோடும்,உமாமகேஸ்வரனின் கையொப்பத்துடனுமான அந்தத் துண்டுப்பிரசுரம் பத்திரிகைகளில் வெளியாகின்றது. தமிழ்ப் பகுதிகளில் மட்டுமல்ல சிங்கள மக்கள் மத்தியிலும் பெரும் பரபப்பை ஏற்படுத்திய இப் பிரசுரம், இலங்கை அரசையும் கூட மிகவும் பாதித்தது.

இப் பிரசுரம் வெளியான மறு தினத்திலிருந்து, இலங்கைத் தீவு தனது அனைத்து வாழ்வலங்களையும் ஒரு புறத்தே ஒதுக்கி வைத்துவிட்டு, புலிகள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தது. தமிழ்ப் பேசும் சிறுபான்மையினர் தம்மைப் பாதுகாக்க இறைவனால் அனுப்பிவைக்கப்பட்ட பாதுகாவலர்கள் போலவே புலிகளை நேசிக்க ஆரம்பித்தனர். சிங்கள மக்கள் பெருந் தேசியவாதம் இன்னொரு படிநிலை வளாச்சியை அடைவது போல் தோற்றமளித்தது. இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் அனா செனிவரத்ன கொக்காவிலில் சிங்களக் குடியேற்றங்கள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று வவுனியா பொலீஸ் நிலையத்தில் பேசினார். 77 இன வன் முறையால் இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்கியிருந்த தமிழ் அகதிகள் பொலீசாரால் தாக்கப்பட்டனர். புலிகள் தடைச் சட்டம் குறித்து பாராளுமன்றத்தில் பேசப்படுகிறது. தமிழர் விடுத்லை கூட்டணி உறுப்பினர்கள் தாக்கப்படுகிறார்கள்.

பிரபாகரன் கனவுகண்ட இராணுவ வெற்றிக்கும்,ஒழுங்கு படுத்தப்பட்ட இராணுவத்திற்கும் மக்கள் ஆதரவைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. பிரபாகரன் ஹிட்லரின் நாசிக் கொள்கையாலோ, சுபாஸ் சந்திரபோசின் எதிர்ப்பு அரசியலாலோ ஆட்கொள்ளப்படவில்லை. அவை பற்றியெல்லாம் அவருக்கு கரிசனை இருந்தது கிடையாது. அவர்கள் கட்டமைத்திருந்த இராணும் குறித்தும் அதன் ஒழுங்கு முறைகள் குறித்துமே அவரின் முழுக் கவனமும் ஒருங்குபடுத்தப்பட்டிருந்தது. அன்று மாவோசேதுங்கின் இராணுவப்படைப்புகளை இவர் வாசிக்கச் சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் அவராலும் பிரபாகரன் ஆட்கொள்ளப்பட்டிருப்பார் என்று பிற்காலங்களில் நான் எண்ணுவதுண்டு.

இன்னும் வரும்..

அடிமைச் சாசனம்- புலிகளின் எதிர்வினை – ஈழப்ப்போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 12)

இலங்கை அரசின் இன ஒடுக்குமுறையும் ஜே.ஆர் ஜயவர்த்தன அரசின் சர்வாதிகாரமும், பாசிசமும் ஒழுங்கமைக்கப்பட்ட பேரினவாதமாக விரிவடைகின்றது. புலிகளின் இருப்பைச் சுட்டிக்காட்டியே பேரினவாதம் சிங்களப்பகுதியில் தன்னை மேலும்மேலும் நிறுவிக்கொள்கிறது.

தமிழ்ப் பேசும் சிறுபான்மையினர் மீதான, மொழி, கலாச்சார, பண்பாட்டு அடக்கு முறைகள் அதன் எல்லைகளைத் தாண்டி இராணுவ அடக்குமுறையாக விரிவடைகிறது. மறுபுறத்தில் அரச ஆதரவு தமிழ் அரசியல் வாதிகள் அரசாங்கத்துடன் இணைந்து தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சனைக்குத் தீர்வு முன்வைக்கப்படும் என்கின்றனர். நீதி அமைச்சராகப் பதவிவகித்த கே.டபுள்யூ.கே.தேவநாயகம் தமிழ்ப் பிரதேசங்களின் அபிவிருத்தியையே தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர், வன்முறையை அல்ல என பத்திரிகையாளர் மாநாட்டில் கூறுகிறார். அரசியல் அமைப்பை மாற்றியமைத்து தமிழர் பிரச்ச்னைகளுக்குத் தீர்வு காணப்படும் என்று மேலும் அவர் கூறிய அதே வேளை அம்பாறை, திருகோணமலை போன்ற பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் தீவிரமடைகின்றன.

பஸ்தியாம்பிள்ளை உட்பட்ட இரகசியப் பொலீசாரின் கொலை ஏற்படுத்திய அதிர்வலைகள், புலிகளின் பலம் குறித்த வாதங்களைப் பரவலாகத் தோற்றுவித்திருந்தது. இப் படுகொலை நிகழ்ந்து சரியாக ஒருமாதமும் பத்து நாட்களும் ஆன நிலையில் புலிகள் தடைச் சட்டத்தை ஜெயவர்தன அரசாங்கம் நிறைவேற்றுகிறது. 19.05.1978 அன்று இலங்கைப் பாராளுமன்றம் புலிகளும் அதை ஒத்த அமைப்புக்களையும் தடைசெய்வதாகச் சட்டமூலம் ஒன்றை நிறைவேற்றுகின்றது. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத்திற்கு எதிராக இலங்கை தொழிலாளர் காங்கிரசைச் சேர்ந்த தொண்டைமான், தமிழர் விடுதலைக் கூட்டணி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன வாக்களிக்க, 131 ஆதரவான வாக்குகளுடனும் 25 எதிரான வாக்குகளுடனும் சட்டமூலம் நிறைவேறுகிறது.

இச்சட்டமூலம் இலங்கைப் பாதுகாப்புப் படைகளுக்கு முதல் தடைவையாக எல்லை மீறிய அதிகாரத்தை வழங்கியது.

சட்டமூலம் குழு நிலையில் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்ட போது தமிழ் அமைச்சரான தேவநாயகம் அதனை ஒரு வருடத்திற்கு மட்டுமே அமுல்படுத்த வழிகோலும் சட்டமூலம் ஒன்றைப் பிரேரித்தார். அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவ்வேளையில் எதிர்க்கட்சித் தலைவராக திரு.அமிர்தலிங்கம் இருந்தார். தடைச் சட்டத்தின் கீழ் நியமிக்கப்படும் ஆலோசனைக் குழுவில் எதிர்க்கட்சித் தலைவரால் முன்மொழியப்படும் ஒருவரும் ஏற்றுக்கொள்ளப்படுவார் என பிரதமமந்திரி ஆர்.பிரேமதாச தெரிவித்தார். அந்த ஆலோசனைக் குழு மூன்று உறுப்பினர்களை மட்டுமே கொண்டதாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

சபையில் விவாதத்தின் போது கருத்துத் தெரிவித்த அமிர்தலிங்கம், வீரகேசரிப் பத்திரிகையில் வெளியான புலிகளின் கடிதம் உண்மைக்குப் புறம்பானது. அதில் குறிப்பிடப்படுள்ளது போல கனகரத்தினம் கொலைசெய்யப்படவில்லை. இது உண்மையானதல்ல சிருஷ்டிக்கப்பட்ட கடிதம் எனக் குறிப்பிட்ட அவர், ஒரு சில புலிகளைக் கைது செய்வதன் மூலம் இனப்பிரச்சனையைத் தீர்த்துவிட முடியாது என்றார்.

இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதும் அரசபடைகளின் அதிகாரம் வெளிப்படையாகவே தெரிய ஆரம்பித்தது. தமிழ் இளைஞர்களின் கைதுகளும் தாக்குதல்களும் அதிகரித்தன. எமது இயக்கத்திற்கான ஆதரவும் திடீரென ஒரு பாய்ச்சல் போல அதிகரித்ததை உணரக் கூடியதாக இருந்தது. இவ்வேளைகளில் மத்திய குழுவை அடிக்கடி கூட்டிக்கொள்வோம்.

தேடப்படுவோரின் படங்கள் அடங்கிய சுவரொட்டி தமிழ்ப் பேசும் மக்கள் நடமாடும் பகுதிகளில் பரவலாக ஒட்டப்பட்டிருந்தது. நாகராஜா, உமாமகேஸ்வரன், கண்ணாடி பத்மனாதன், வாமதேவன் ஆகியோரின் படங்கள் முன்னணியில் பதிவு செய்யப்பட்டிருந்தன. இவர்களைக் காட்டிக்கொடுப்போருக்கு ஒருலட்சம் ரூபா சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது, இவர்களைத் தொடர்ந்து பிரபாகரன், ரவி போன்றோரின் படங்கள் பிரசுரிக்கப்பட்டு இருபத்து ஐயாயிரம் ரூபா சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழ்ப் பேசும் மக்களைப் பொறுதத் வரையில் இவர்கள் எல்லாம் தம்மை விடுதலை செய்யவந்த கதாநாயகர்களாகவே நோக்கப்பட்டனர். இலங்கை முழுவதும் ஒரு புதிய அரசியல் சூழலுக்குள் இழுத்துச் செல்லப்படுவாதான நிலை தென்பட்டது.

வாமதேவன் என்பவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் கார்ச் சாரதியாக வேலைபார்த்தவர் என்பதைத் தவிர போராட்ட நடவடிக்கைகளுடன் அவருக்கு எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. சில தனிப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட இவர் குற்றவியல் வழக்குகளிலும் பதிவாகியிருந்தார். கண்ணாடி பத்மநாதன் ஏற்கனவே 1973 ஆம் ஆண்டு செட்டியால் கொல்லப்பட்டிருந்தார்.

புலிகள் தடைச் சட்டம் நிறைவேற்ற சில நாட்களிலேயே புதிய சுவரோட்டி ஒன்று இரகசியப் பொலீசாரால் தயாரிக்கப்படுகிறது. அச் சுவரொட்டியில் காசியானந்தன், வண்ணையானந்தன், அமிர்தலிங்கத்தின் மகன் காண்டீபன் போன்ற வெளிப்படையான உறுப்பினர்கள் உள்ளிட்ட 38 தமிழ் இளைஞர்கள் தேடப்படுவோராக அறிவிக்கப்பட்டனர்.

வேலுப்பிள்ளை பிரபாகரன்(வல்வெட்டித்துறை) சபாரத்தினம் சபாலிங்கம் (யாழ்ப்பாணம்) ஆறுமுகம் விவேகானந்தன் (யாழ்ப்பாணம்) சபாரத்தினம் இரத்தினகுமார் ( யாழ்ப்பாணம்) துரையப்பா ராஜலிங்கம் (கொக்குவில்), செல்லையா சபாரத்தினம் (யாழ்ப்பாணம்), தம்பிப்பிள்ளை சந்ததியார் (சங்கானை), ஐயா துரைபாலரத்தினம் (அளவெட்டி), வேலாயுதபிள்ளை திசைவீரசிங்கம் (கொடிகாமம்), பொன்னுத்துரை சத்தியசீலன் (சுன்னாகம்), நவரத்தினம் நாராயணதாஸ்(யாழ்ப்பாணம்), வைரமுத்து நீர்த்தகுமார் ( மானிப்பாய்), கனகசபைமுதலி சிவராஜா(நல்லூர்), மாவை சேனாதிராஜா(தெல்லிப்பளை), ஆறுமுகம் கிருபாகரன் (அரியாலை), அலோசியஸ் கனகசுந்தர் (வேம்படி), சுந்தரம் சபாரத்தினம்(திருநெல்வேலி), எஸ்.புஸ்பராஜா(மைலிட்டி), பூபாலரத்தினம் நடேசாந்தன் (மட்டக்களப்பு), தம்பித்துரை ஜீவராசா(சாவகச்சேரி), அமிர்தலிங்கம் காண்டீபன் (லண்டன் குவின்ஸ் ரோட்), காசியானந்தன் (அமிர்தகளி), ஞானம்(யாழ்ப்பாணம்), சுப்பிரமணியம் குருகுலசிங்கம் (திருநெல்வேலி), விஸ்வசோதி இரத்தினம் என்ற இன்பம்(நவாலி), கந்தசாமி சிறீஸ்கந்தராஜா(கரணவாய் தெற்கு), கே.எஸ்.ஆனந்தன் (சுன்னாகம்),செல்லையா பாலசிங்க(கல்வியங்காடு), அமரசிங்கம் நாகராஜா(நீராவியடி), வேலுப்பிள்ளை சுப்பிரமணியம்(யாழ்ப்பாணம்), நடேசப்பெருமாள் கனகரத்தினம்(பரந்தன்), செல்வராசா யோகச்சந்திரன் (வல்வெட்டித்துறை), சிவராமலிங்கம் சந்திரகுமார்(திருநெல்வேலி), வண்ணையானந்தன் (யாழ்ப்பாணம்), உமாமகேஸ்வரன் (தெல்லிப்பளை) போன்றோர் தேடப்பட்ட பட்டியலில் இடம்பெற்றனர். இவர்களின் புகைப்படங்கள் அடங்கிய சுவரொட்டிகளை முன்னரைப் போலவே பொலீசார் பொது இடங்களில் ஒட்டியிருந்தனர்.

இதன் எதிரொலியாக சாவகச்சேரி எம்பி நவரத்தினம், நல்லூர் எம்.பி சிவசிதம்பரம் ஆகியோர் கடுமையான ஆட்சேபனை தெரிவித்தனர். ஏற்கனவே தேடப்பட்டு விடுவிக்கப்பட்டோரும், வெளிப்படையான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்வர்களான, காசியானந்தன், வண்ணையானந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோரும் தேடப்படுபவர்களாக அறிவிக்கப்பட்டமை குறித்து ஆட்சேபம் தெரிவிக்க புதிய தேடப்படுவோரின் பட்டியல் ஒன்றைத் தயாரிக்கவிருப்பதாக பிரதமர் பிரேமதாச தெரிவிக்கிறார்.

இந்தச் சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டவர்களில் பிரபாகரனையும், கிருபாகரனையும், உமாமகேஸ்வரனையும்.நாகராஜாவையும்.ரவி யையும் தவிர மற்ற எவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உறுப்பினர்களாக இல்லை. இலங்கை அரச உளவுத்துறையின் பலவீனமும், தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலிருந்து தகவல் சேகரித்துக்கொள்வதற்கான வழிமுறைகள் இல்லாதிருந்த்மையையும் நாங்கள் கணித்துக்கொள்கிறோம். ஒரு வகையில் எமது நடவடிக்கைகளுக்குத் தமிழ் மக்களின் ஆதரவை இது வெளிப்படுத்துவதாகவும் அமைந்தது. தேடப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்ட பலர் தமிழரசுக் கட்சியைச் சார்ந்தவர்களாகவும், இளைஞர் பேரவையைச் சார்ந்தவர்களாகவும் இருந்தனர். புலிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பதாக தம்பித்துரை ஜீவராசாவும் தியாகராஜா எம்.பிஐக் கொலைசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு போலிசாரால் தேடப்படும்போது பிரபாகரனுக்கு முற்பட்ட பகுதிகளில் என்னைத் தொடர்புகொண்டவர்.

பெப்ரவரி ஆறாம் திகதி 1978 அன்று இலங்கை நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாகப் பிரகடனப்படுத்திக்கொண்ட ஜே.ஆர்.ஜெயவர்தன, யாப்பியல் சர்வாதிகாரத்தை நிலை நாட்டினார். புலிகள் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட நான்கு மாத இடைவெளியில் இலங்கையை ஜனநாயகச் சோசலிசக் குடியரசாக்கும் அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதற்கான அங்கீகாரம் 31ம் திகதி ஓகஸ்ட் மாதம் 1978 ஆம் ஆண்டு அமைச்சரவையால் வழங்கப்பட்டது. இதே நாளில் சுபவேளையில் இலங்கை நேரப்படி காலை 9:02 இற்கு இச்சட்டவரைவில் சபாநாயகர் கைச்சாத்திட்டார். அரசியல் அமைப்பில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்திய இச்சட்டமூலம் ஒரு புறத்தில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியை மேலும் வலிமைபடைத்தவராக மாற்றியது, மறு புறத்த்தில் தமிழ் மொழியை இரண்டாவது மொழியாகச் சட்டரீதியாக மாற்றியமைத்தது.

ஒரு நாட்டில் ஒரு குறித்த மக்கள் பிரிவினரால் பேசப்படுகின்ற மொழியை அந்த நாட்டு அரசே இரண்டாவது மொழியாகப் பிரகடனப்படுத்தி தேசிய இன அடக்குமுறையை சட்டமாக்கிய துயர நிகழ்வு இலங்கையில் நடந்தேறியது.

இந்த அரசியல் அமைப்பிற்குரிய அங்குரார்பண வைபவம் 07ம் திகதி செப்டெம்பர் மாதம் 1978 இல் நடைபெற்றது. இந்த வைபவம் நாடுமுழுவதும் அரசாங்கத்தினால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இலங்கையிலுள்ள ஆலயங்கள் எங்கிலும் 7 ஆம் திகதி வியாழக்கிழமை 7 மணிமுதல் 8 மணிவரை கோவில் மணிகள் ஒலிக்க வேண்டும் என்றும் அதனைத் தொடர்ந்து பௌத்த ஆலயங்களிலும். கோவில்களிலும், பள்ளிவாசல்களிலும் பிரார்த்தனைகள் இடம்பெற வேண்டும் என ஜே.ஆர்.அரசு உத்தரவிட்டது. ஜே.ஆர்.ஜெயவர்தனவின் இனவாதத் தீயில் எரிந்து கொண்டிருந்த சிங்கள மக்களின் பௌத்த சிங்கள மேலாதிக்கவாத உணர்விற்கு இது எண்ணைவார்ப்பது போலிருந்தது. 7 ஆம் திகதி எதிர்பார்த்தபடி சிங்களப் பகுதிகள் முழுவதும் விழாக்கோலம் கொண்டிருந்தன. தெருக்களின் சிங்கள மக்கள் இலவச உணவு வழங்கி மகிழ்ந்தனர். இலங்கை சிங்கக் கொடியோடு அனைத்து வாகனங்களும் ஒலியெழுப்பி ஆர்ப்பரித்தன. வடகிழக்கு எங்கும் இனம்புரியாத சோகம் இழையோடியது. சொந்த தேசத்தில் இரண்டாம்தர குடிமகனாகிப்போன துயரம் ஒவ்வொரு தமிழ்ப் பேசும் இலங்கையனதும் முகத்தில் தெரிந்தது.

மூன்றம் திகதி தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம் வெளிநாடு பயணமானார். எமது இனத்தின் விடுத்லைக்காக வெளிநாடுகளில் பிரச்சாரம் செய்யச் செல்வதாக உணர்ச்சிகரமாக விமானநிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசினார்.

தமிழர்கள் கொதித்துப் போயிருந்தார்கள். வஞ்சம் தீர்க்கப்பட்டதான உணர்வு எல்லோர் மனதிலும் மேலோங்கியிருந்தது. இலங்கைமுழுவதும் வன்முறைச் சம்பவங்கள் ஆங்காங்கே தலை காட்டி மறைகின்றன. இவ் வன்முறைகளின் உணர்வு ரீதியான பிரதிபலிப்பாக நாம் எதையாவது செய்தாகவேண்டும் என்பதில் முழு நேரத்தையும் தேசியப் போராட்டத்திற்காக அர்ப்பணித்த எமக்கு முழுமையான உடன்பாடிருந்தது.

இந்த வேளையில், தமிழ்ப் பேசும் மக்களின் விடுதலைக்காக இராணுவத்தைக் கட்டியமைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் இலங்கை அரசு திகைத்துப் போகும் வகையில் ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணியிருந்தோம். அதற்கான தயாரிப்புகளை மேற்கொண்டிருந்தோம். அதுதான் பாகம் ஐந்தில் எனது பதிவில் குறிப்பிட்டிருந்த அவ்ரோ விமானக் குண்டுத் தாக்குதல்.

வழமை போல இதற்கான தயாரிப்பு வேலைகளில் உடனடியாகவே செயற்பட ஆரம்பித்துவிட்டோம். இதற்கான முன் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குலமும் பேபி சுப்ரமணியமும் பலாலியிலிருந்து கொழும்பு செல்லும் விமானத்தில் பயணம்செய்து நிலைமைகளை அவதானிப்பது எனத் தீர்மானிக்கப்படுகிறது. ஒத்திகை வேலைகளெல்லாம் முடிவடைந்து அவர்கள் இருவரும் கொழும்பிலிருந்து திரும்பிவந்து எம்மிடம் நிலைமைகளை விபரித்த பின்னர் குண்டுவெடிப்பிற்கான திட்டம் தீட்டப்படுகிறது.

பேபி சுப்பிரமணியம் நேரக் குண்டைத் தயாரிக்கும் வேலைகளில் ஈடுபடுகிறார். அவருக்கு இக்குண்டுவெடிப்பை நிறைவேற்றும் முக்கிய பணி வழங்கப்படுகிறது. இதற்கான தொழில் நுட்ப வேலைகளிலும் குண்டைத் தயாரிப்பதிலும் உமாமகேஸ்வரனின் பங்கு குறிப்பிடத்தக்கது. பலஸ்தீனத்தில் பெற்றுக்கொண்ட இராணுவப் பயிற்சிகளின் போது நேரக்குண்டு தயாரிப்பதற்கான முழுமையான அறிவை அவர் பெற்றிருந்தார் இதே வேளை ராகவனும் எம்மோடிருந்தார். பேபி சுப்பிரமணியத்துடன் இணைத்து விமானத்தில் கொழும்ப்பு வரை ராகவனும் பயணம்செய்து விமானத்தில் குண்டுவைத்துவிட்டுத் திரும்புவதாக ஏற்பாடாகிறது.

தகவல் சேகரிப்பு, பயணச் சீட்டு எல்லாம் தயாராகிவிட, திட்டமிட்டபடி அவர்கள் இருவரும் விமானத்தில் கொழும்பு நோக்கிப் பயணம் செய்கின்றனர். விமானநிலையத்தில் பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர் குண்டு வெடிக்கும் நேரம் தகவைமைக்கப்படுகிறது.

7 ஆம் திகதி செப்டெம்பர் மாதம் இலங்கை ஜனநாயகச் சோசலிசக் குடியரசு அங்குரார்ப்பண வைபவம் கொழும்பு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் வேளையில் அவ்ரோ விமானம் தமிழீழ விடுதலைப் புலிகளால் குண்டுவைத்துத் தகர்க்கப்படுகிறது. இலங்கையின் தேசிய விமானச் சேவையை நடத்திக்கொண்டிருந்த ஒரே விமானமான அவ்ரோவைக் குண்டுவைத்துத் தகர்த்த நிகழ்வானது ஜே.ஆர்.அரசின் இதயத்தில் இரும்பால் அறைந்தது போலிருந்தது.

மறு நாளே தேடுதல், கைது என்று கொழும்பு நகரமே யுத்தமுனை போலக் காட்சியளித்ததாக பத்திரிகைகள் செய்திவெளியிட்டன. தமிழ் மக்கள் ‘பொடியள்’ சாதித்துவிட்டதாக பெருமிதமடைந்தார்கள். எல்லாவற்றையும் ஓசைபடாமல் நிறைவேற்றிய வெற்றிக்களிப்புடன் ராகவனும் பேபி சுப்பிரமணியமும் பண்ணைக்குத் திரும்பிவிடுகிறார்கள்.

எமது தோள்களில் விடுதலையின் சுமையை உணர ஆரம்பிக்கிறோம். புதியவர்களை இணைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும், முறையான பயிற்சி வழங்கப்பட வேண்டியதன் தேவையையும் உணர்ந்து கொள்கிறோம். எம்மிடமிருந்த புத்தூர் வங்கிப்பணம் தனது இறுதியை நெருங்கும் தறுவாயிலிருந்தது. புதிய நடவடிக்கைகளுக்கான பணத்தைத் திரட்டிக்கொள்ள வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொள்கிறோம். அதற்கான சாத்தியமான அனைத்து வழிகளையும் விசாரணைசெய்கிறோம். இவ்வேளையில் திருநெல்வேலி அரச வங்கிக் கிளையிலிருந்து அங்கிருப்பவரூடாக ஊடாக சில தகவல்கள் எமக்குக் கிடைக்கின்றன.


இன்னும் வரும்..

ரெலோ இயக்கத்தில் இணையும் பிரபாகரன் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 24): ஐயர்

பிரபாகரன் குழுவில் அவரோடிருந்த அனைத்து உறுப்பினர்களும் மத்திய குழு ஒன்றை அமைப்பதற்கான முடிவிற்கு வருமாறு அவரை வற்புறுத்துகின்றனர். மத்திய குழு அமைப்பது என்பது இயக்கத்தின் இராணுவ அரசியலுக்கு எதிரானது என்ற கருத்தில் பிரபாகரன் மிகவும் உறுதியாயிருக்கின்றார். இதே வேளை குட்டிமணி தங்கத்துரை போன்றோர் தமது தொழிலை மட்டுப்படுத்திக்கொண்டு அரச எதிர்ப்பு இராணுவ நடவடிக்கைகளில் தமது கவனத்தைக் குவிக்கின்றனர். அப்போது அவர்கள் தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) என்ற அமைப்பாக உருவாகியிருந்தனர் என அறிந்திருந்தோம்.

இந்தப் பெயரை எப்போது உத்தியோக பூர்வமாக அறிவித்தனர் என்றோ அவர்களின் நடவடிக்கை குறித்த விபரங்களையோ நான் அறிந்திருக்கவில்லை.

பிரபாகரனின் இராணுவ வலிமை குறித்து தங்கத்துரைக்கு நேர்மறையான கருத்துக்களே இருந்தது. அவர் பிரபாகரன் உறுதியான போராளி என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.

புதிய புலிகளாக நாம் செயற்பட்ட காலப்பகுதியிலும் அதன் பின்னர்ரும் பல தடவைகள் தங்கத்துரை குட்டிமணி போன்றோர் எம்மிடம் பயிற்சி பெற்றிருக்கின்றனர். தவிர, தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயரில் முதல் முதலாக வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் கூட தங்கத்துரை குட்டிமணி போன்றோரின் இராணுவ நடவடிக்கைகள் சில எம்மால் மேற்கொள்ளப்பட்டதாகவே உரிமை கோருமாறு அவர்கள் அனுமதித்திருந்தனர். தங்கத்துரை குட்டிமணி போன்றோர் தனியான குழுவாகச் செயற்பட்டாலும் எம்மத்தியில் பகை முரண்பாடு நிலவியதில்லை.

இவ்வேளையில் தங்கத்துரையும் பிரபாகரனும் சந்தித்துக் கொள்கின்றனர். இவ்வாறு சந்தித்த வேளையில் பிரபாகரனிடம் தங்கத்துரை அனுதாபம் காட்டியிருக்கிறார். புலிகள் இயக்கம் பிரபாகரனது முயற்சியால் தான் ஆரம்பிக்கப்பதென்பதையும் அவர் தான் முதலில் தமிழீழத்திற்கான புலிகள் இயக்கத்தை பலம்மிக்கதாக உருவாக்கியவர் என்பதையும் தங்கத்துரை பிரபாகரனிடம் கூறியது மட்டுமன்றி புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்குத் தான் அதிக உரிமை உண்டு என்பதையும் கூறியிருக்கிறார்.

மேலும் பிரபாகரனுக்கு ஏனைய எல்லோருடனும் அதிர்ப்தி இருந்தால் தம்மோடு இணைந்துகொள்ளுமாறும் அறிவுறுத்தியிருக்கிறார்.

இதன் பின்பதாக சில நாட்கள் பிரபாகரன் சார்ந்த குழுவிலிருந்தவர்கள் அனைவரும் புலிகள் இயக்கத்தை ஜனநாயகப்படுத்த வேண்டும் என்றும் மத்திய குழு தெரிவுசெய்யப்பட வேண்டும் என்றும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர். இலங்கை அரசின் தேசிய இன அடக்குமுறை இவர்களை ஓரணியில் இணைத்திருந்தாலும், ஏனைய எல்லா உறுப்பினர்களும் ஒரே கருத்தைக் கொண்டிருந்ததால் பிரபாகரனால் அவர்களுடன் நீடிக்க முடியவில்லை.

இறுதியில் பிரபாகரன் புலிகள் இயகத்திலிருந்த ஏனையோரிடம் எஞ்சியிருந்த பணம், ஆயுதங்கள் ஆகியவற்றை மட்டுமன்றி தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயரையும் கூட, அந்தப் பெயரை அவர் இனிமேல் பயன்படுத்த மாட்டேன் என்று உறுதிய வழங்கி விட்டுச்செல்கிறார்.

இவ்வாறு பிரபாகரன் விலகிச்சென்ற வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஆளுமை செலுத்துபவர்களாக அன்டன், மனோ மாஸ்ரர், தனி, ராகவன் போன்றோர் திகழ்ந்தனர். மனோ மாஸ்டர் போன்றோர் பின்னதாக தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயருக்க்கு தாமே உரிமையுடைவர்கள் என்று குறிப்பிட்டதை அறிந்திருக்கிறேன்.

புலிகளிலிருந்து தனியாக விலகிச்சென்ற பிரபாகரன், தங்கத்துரை வழி நடத்திய ரெலோ என்ற அமைப்பில் இணைந்து கொள்கிறார்.

துரையப்பா கொலை நடத்தப்பட்ட சில நாட்களின் பின்னர் இலங்கை அரச படைகளால் பிரபாகரனோடு இணைந்திருந்த அனைவரும் கைது செய்யப்பட்டிருந்தனர். அவ்வேளையில் பிரபாகரன் தனிமைப்பட்டிருந்தார். எமது உதவியை நாடி எமது ஊரை நோக்கி அப்போது அவர் வந்த வேளையில் உண்பதற்கு மூன்றுவேளை உணவோ, தங்குவதற்கு நிரந்தர இடமோ இருந்ததில்லை. பதினேழு வயது பிரபாகரனின் தனியனாக நின்றிருந்தார்.

யாருமற்ற அவரிடம் ஆயுதம் தாங்கி இலங்கை அரசிற்கு எதிராகப் போராட வேண்டும் என்ற உறுதி மட்டும் எஞ்சியிருந்தது. அதே போன்று தான் சார்ந்த இயக்கத்திடமிருந்து அனைவராலும் நிராகரிக்கப்பட்டு தனிமையடைந்த இரண்டாவது நிகழ்வு இவ்வேளையில் நடைபெறுகிறது.

இனிமேல் தனது வாழ் நாள் போராட்டம் என்று வரித்துக்கொண்ட பிரபாகரன் போராடுவதற்காகவே தங்கத்துரை குட்டிமணி சார்ந்த அமைப்பில் இணைந்து கொள்கிறார்.

பிரபாகரன் எந்த நடவடிக்கைக்கும் மறுவார்த்தையின்றி ஒத்துழைக்கும் போக்கைக் கொண்டிருந்தவர் பேபி சுப்பிரமணியம். அவரும் பிரபாகரனோடு சென்று தங்கத்துரை – குட்டிமணி குழுவில் இணைந்து கொள்கிறார்.

1983 ஆம் ஆண்டில் இந்திய இராணுவப் பயிற்சி வழங்கப்படுவதற்கு சற்று முற்பட்ட காலப்பகுதி வரைக்கும் ரெலோ இயக்கத்தின் உறுப்பினராகவே பிரபாகரன் செயற்பட்டார்.

1982 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சுந்தரம் கொலை செய்யப்பட்ட வேளையில் தமிழ் நாட்டில் என்னோடு தங்கியிருந்த நாகராஜா, சுந்தரத்திற்கு அஞ்சலித் துண்டுப் பிரசுரம் ஒன்றை வெளியிடுகிறார். அப்போது ரெலோ இயக்கத்தைச் சார்ந்த சிறீ சபாரத்தினம், பிரபாகரன் ஆகிய இருவரும் நாகராஜாவைக் கொலைசெய்வதற்காகக் கடத்தி சென்ற சம்பவம் இங்கு குறிப்பிடத்தக்கது. அவ்வேளையிலும் பிரபாகரன் ரெலோ இயக்கத்தின் உறுப்பினராகவே செயற்பட்டார்.

யாழ்ப்பாணத்திலுள்ள சித்திரா அச்சகத்தில் சுந்தரம் கொலைசெய்யப்பட்ட நடவடிக்கையானது பிரபாகரனால் மேற்கொள்ளப்பட்டாலும் கூட, ரெலோ இயக்கத்தில் அவர் உறுப்பினராக இருந்த வேளையிலேயே மேற்கொள்ளப்பட்டது.

மனோ, அன்டன், தனி,ராகவன்,சசி,பண்டிதர்,சங்கர்,ஆசீர், போன்ற- பேபி சுப்பிரமணியம் தவிர்ந்த – அனைவரும் பிரபாகரனோடு ரெலோ இயக்கத்திற்குச் செல்லாமல் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்களாகச் செயற்பட ஆரம்பிக்கின்றனர்.

தங்கத்துரை குழுவோடு இணைந்த பிரபாகரன் சில நாட்களிலேயே பண்டிதர், சங்கர், போன்றோருடன் தனித்தனியாகப் சந்திக்கிறார். அவர்களுக்கு இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து ரெலோவில் தம்மோடு இணைந்துகொள்ளுமாறு கோருகிறார். உடனடியான இராணுவச் செயற்பாடுகளற்றிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளில் விரக்தியுற்ற இளைஞர்களான பண்டிதர், சங்கர், ஆசீர், புலேந்திரன் போன்றோர் பின்னதாக ரெலோ அமைப்பில் இணைந்து கொள்கின்றனர்.

இவ்வாறு ஒவ்வொருவராக இணைந்து கொண்டதும் மறுபுறத்தில் மனோ மாஸ்டர், ராகவன், தனி, அன்டன் போன்றோர் தனிமைப்பட்டுப் போகின்றனர்.

அன்டன் ராகவன் போன்றோர் சில காலங்களின் பின்னர் இணைந்து கொள்ள மனோ மாஸ்டர், தனி ஆகியோர் தொடர்புகளற்று செயற்பட முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். 1983 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மனோ மாஸ்டர் சிறீ சபாரத்தினம் தலைமையிலான தமிழீழ விடுதலை இயக்கத்தில் இணைந்து கொண்டதாக அறிந்தேன். பின்னதாக 1984 காலப்பகுதியில் வல்வெட்டியில் புலிகளால் அவர் கொலை செய்யப்பட்டார்.

*1980 ஆம் ஆண்டின் காலிறுதிப் பகுதியில் நடைபெறும் உடைவுகளும், இணைவுகளும் நிறைந்த இந்தச் சம்பவங்கள், பலர் மத்தியில் வெறுப்பையும் விரக்த்தியையும் உருவாக்குகின்றன. பல போராளிகள் போதைக்கு அடிமையாகின்றனர்.

இச் சம்பவங்கள் நடைபெற்ற அதே வேளையில் புளொட் இயக்கமாகப் பெயர் சூட்டப்பட்ட எமது குழுவில் பல வாதப் பிரதிவாதங்கள் நடைபெறுகின்றன. சந்ததியார் முழு நேரமாக எம்மோடு செயற்பட ஆரம்பிக்கிறார். சுந்தரம் மற்றும் உமா மகேஸ்வரனின் ஆதிக்கம் அதிகரிக்கின்றது. இராணுவத் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்றும் இயக்கதை இராணுவ ரீதியாகப் பலப்படுத்த வேண்டும் என்ற கருத்துக்கள் வலுப்பெறுகின்றன.

நாம் எவற்றிற்கு எதிராகப் போராடினோமோ அவை அனைத்தும் மறுபடி உருவாக்கப்படுவதாக பலர் விரக்க்திக்கு உள்ளக்கப்படுகின்றனர். சமூகப் புறச் சூழல் மனிதர்களை உருவாக்குகின்றது என்பது உண்மையாயினும் ஒவ்வொரு தனி மனிதனதும் பாத்திரம் வரலாற்றின் போக்கில் தற்காலிகத் திரும்பல்களை ஏற்படுத்துகின்றது. நாம் மக்கள் போராட்டம் என்ற அடிப்படையை முன்வைத்து உருவாக்கிய புதிய பாதை உமா மகேஸ்வரனின் வருகையோரு வேறு திசையில் பயணிப்பதாக உணர்கிறோம்.

*சம்பவங்களை நினைவிலிருந்தே எழுதுவதால் இனியொரு வாசகர்களின் பின்னூட்டங்களிலிருந்தும், என்னோடு முன்பிருந்தவர்களுடனான உரையாடலின் மூலமும் செழுமைப்படுத்திக் கொள்கிறேன். முன்னைய பதிவில் 1980 பின்பகுதி என்பது 1979 பின்பகுதி எனத் தவறாகப் பதியப்பட்டதற்கு வருந்துகிறேன்.

அர்த்தமுள்ள இந்துமதம் - 03

கவிஞர் கண்ணதாசனின்
***************************



வெள்ளம் பெருகும் ந்திகளும் ஒருமுறை வறண்டு விடுகிறது.



குளங்கள் கோடையில் வற்றி மழைக்காலத்தில் நிரம்புகின்றன.

நிலங்கள் வறண்ட பின்தான் பசுமை யடைகின்றன.



மரங்கள் இலையுதிர்ந்து பின் தளிர் விடுகின்றன.



இறைவனின் நியதியில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருப்பது மலை ஒன்றுதான்.



அதுவும் வளர்வதாகவும், அமிழ்வதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.



இறைவன் மனிதனையும் அப்படித்தான் வைக்கிறான்.



நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.



முதற்கட்டம் வரவு என்றால், அடுத்தக் கட்டம் செலவு.



முதற்கட்டம் இன்பமென்றால், அடுத்தக்கட்டம் துன்பம்.



முதற்கட்டமே துன்பமென்றால், அடுத்த கட்டம் இன்பம் இறைவனது தராசில் இரண்டு தட்டுக்களும் ஏறி ஏறி இறங்குகின்றன.



“இடுக்கண் வருங்கால் நகுக; அதனை

அடுத்தூர்வ தஃதொப்ப தில்”



என்றான் வள்ளுவன்.



எல்லாச் செல்வங்களையும் நிரந்தரமாக எவனுக்கும் இறைவன் வழங்கியதில்லை.



அந்த நாளில் எனக்கு நல்ல பசியெடுத்தது; உணவு கிடைக்கவில்லை.



பின் பசியுமிருந்தது; உணவும் கிடைத்தது.



இப்போது உணவு கிடைக்கிறது; பசியில்லை. அடுக்கடுக்காகப் பணம் சேர்த்து, ஆயிரம் வேலிக்கு மிராசுதார்ரானார் ஒருவர்.



ஆன மறுநாளோ, அவரை ‘அரிசி சாப்பிடக்கூடாது; சர்க்கரை வியாதி’ என்று சொல்லிவிட்டார் டாக்டர்.



சீனாலவில் மாசே - துங் புரட்சி நடக்கும்போது பல ஆண்டுகள் காடுமேடுகளில் ஏறி இறங்கினார். மனைவியைத் தோளில் தூக்கிக்கொண்டு அலையக்கூட வல்லம பெற்றிருந்தார்.



புரட்சி முடிந்து, பதவிக்கு வந்து இரண்டே ஆண்டுகளில் நோயில் படுத்தார்.



ரஷ்யாவில் லெனின் கதையும் அதுதான்.



புரட்சி நடக்கும்வரை லெனின் ஆரோக்கிய மாகவே இருந்தார்.



பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே படுக்கையில் விழுந்தார்; சில ஆண்டுகளிலேயே மரணமடைந்தார்.



எனது தி.மு.க நண்பர்கள் ஒவ்வொருவரும் கடுமையான உழைப்பாளிகள். ரயிலிலும் கட்டை வண்டிகளிலும், கால்நடையாவும் சென்று கூட்டத்தில் பேசுவார்கள். போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைச்சாலைக்குப் போவார்கள்.



அப்பொழுதெல்லாம் அவர்கள் உடல்நிலை நன்றாகவே இருந்தது.



அவரகள் பதவிக்கு வந்து நிம்மதியாக இருக்க வேண்டிய நேரத்தில் அவர்களில் பலருடைய ஆரோக்கியம் கெட்டு விட்டது.



எனது நண்பர் ஒருவர் படமெடுத்தார்.



முதற்படமே அபார வெற்றி. அளவுகடந்த லாபம்.



அடுத்த படத்திலிருந்து விழத் தொடங்கியது அடி. இன்னும் அவர் எழமுடியவில்லை.



இன்னொரு பட அதிபர்…



ஊமைப்படக் காலத்திலிருந்து தொழிலில் இருக்கிறார். ஆரம்பக் கட்டத்தில் பலபடங்கள் அவருக்குக் கை கொடுக்கவில்லை. மிகுந்த சிரம்ப்பட்டுச் சென்னைக்கு வந்து ஒருபடம் எடுத்தார்.



அவரது ‘வாழ்க்கை’யையே அந்தப் படம்தான் தீர்மானிக்க வேண்டும் என்று பேசிக்கொண்டார்கள்.



அந்தப் படம் அமோகமாக ஓடியது. ஒருபுது நடிகையை நட்சத்திர நடிகையாக்கிற்கு. அது தெலுங்கிலும் வெற்றி; இந்தியிலும் வெற்றி. அதுமுதல் அவர் தொட்டதல்லாம் வெற்றி.



பிறப்பிலிருந்து இறப்பு வரை துன்பமே இலாமல் வாழ்ந்தவர்கள் எத்தனை பேர்?



கண்களை மூடிக்கொண்டு எண்ணிப் பாருங்கள்.



ஒரு கட்டம் அப்படி என்றால், மறு கட்டம் இப்படி!



ஏற்றம் என்பது இறைவன் வழங்கும்பரிசு.



இறக்கம் என்பது அவன் செய்யும் சோதனை.



நீ நினைப்பது எல்லாமே நடந்துவிட்டால், தெய்வத்தை நம்ப வேண்டாம்.



எப்போது நீ போடும் திட்டம் தோல்வியுறுகிறதோ அப்போது உனக்கு மேலானவன் அதை நடத்துகிறன் என்று பொருள்.



எப்போது உன் திட்டங்கள் வெற்றி பெறுகின்றனவோ, அப்போது இறைவன் உனக்கும் அனுமதியளித்து விட்டான் என்று பொருள்.



“ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட டொன்றாகும்

அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை

நிறையாது முன்வந்து நிற்பினும் நிற்கும்

என்யாளும் ஈசன் செயல்”



என்பது முன்னோர் பழமொழி.



“கற்பகத்தைச்சேர்ந்தார்க்குக்

காஞ்சிரங்ககாய் ஈந்தேன்

முற்பவத்தில்செய்தவினை”



இதுவும் அவர்கள் சொன்னதே.



உனது வாழ்க்கை பூஜ்ஜியத்திஏ ஆரம்பமாகிறது. அதற்கு முன்பக்கம் நம்பர் விழுந்தால் இறைவனின் பரிசு; பின் பக்கம் விழுந்தால் அவனது சோதனை.



மேடும் பள்ளமுமாக ஆழ்க்கை மாறி மாறி வந்தால் உனக்குப் பெரிய வீழ்ச்சியில்லை.



ஒரேயடியாக உச்சிக்கு நீ போய்விட்டால் அடுத்துப் பயங்கரமான சரிவு காத்திருக்கிறது.



என் வாழ்க்கை மேடும் பள்ளமுமாகவே போவதால்,என் எழுத்து வண்டி இருப்பத்தைந்தாண்டுக் காலாக ஓடிக்கொண்டிருக்கிறது.



இதைத்தான் ‘சகடயோகம்’ என்பார்கள். வீழ்ச்சியில் கலக்கமோ எழுச்சியில் மயகமோ என்றார்கள் நம் முன்னோர்கள்.



‘ஆண்டவனின் அவதாரங்களே ஆண்டவன் சோதனைக்குத் தப்பவில்லை’ என்று நமது இதிகாசங்கள் கூறுகின்றன.



தெய்வ புருஷன் ஸ்ரீராமனுக்கே பொய் மான் எது, உண்மை மான் எது என்று தெரியவில்லையே!



அதனால் வந்த வனைதானே, சீதை சிறையெடுகப்பட்டதும், ராமனுக்குத் தொடர்ச்சியாக வந்த துன்பங்களும்!



சத்திய தெய்வம் தருமனுக்கே சூதாடக்கூடாது என்ற புத்தி உதயமாகவிலையே!



அதன் விளைவுதானே பாண்டவர் வனவாசமும் பாரத யுத்தமும்!



முக்காலும் உணர்ந்த கௌதமனுகே,பொய்க்கோழி எது, உண்மைக் கோழி எது என்றுதெரியவில்லையே!



அதனால்தானே அகலிகை கெடுக்கப்பட்டதும், சாபம் பெற்றதும்.



ஆம், இறைவனின் சோதனை எவனையும் விடாது என்பதற்கு, இந்தக கதைகளை நமது இந்துமத ஞானிகள் எழுதி வைத்தார்கள்.



துன்பங்கள் வந்தே தீருமென்றும், அவை இறைவனின் சோதனைள் என்றும், அவற்றுக்காக்க் கலங்குவதும் கண்ணீர் சிந்துவதும் முட்டாள்தனமென்றும் உன்னை உணர வைத்து, துன்பத்திலும் ஒரு நிம்மதியைக் கொடுக்கவே அவர்கள் இதை எழுதி வைத்தார்க்க்.



இந்தக் கதைகளை ‘முட்டாள்தனமானவை’ என்று சொல்லும் அறிவாளிகள் உண்டு.



ஆனால்,முட்டாள்தனமான இந்தக் கதைகளின் தத்துவங்கள், அந்த அறிவாளிகளின் வாழ்க்கையையும் விட்டதிலை.



நான் சொல்ல வருவது, ‘இந்து மத்த்தின் சாரமே உனது லௌகீக வாழ்க்கையை நிம்மதியாக்கித் தருவது என்பதையே.



துன்பத்தைச்சோதனை என்று ஏற்றுக்கொண்டு விட்டால், உனக்கேன் வேதனை வரப்போகிறது?



அந்தச் சோதனையிலிருந்து உன்னை விடுவிக்கும் படி நீ இறைவனை வேண்டிக்கொள்; காலம் கடந்தாவது அது நடந்துவிடும்.

தர்ம்ம் என்றும், சத்தியம் என்றும், நேர்மை என்றும், நியாயம் என்றும் சொல்லி வைத்த நமது மூதாதையர்கள்முட்டாள்களல்ல.



கஷ்டத்திலும் நேர்மையாக இரு.



நீ ஏமாற்றப்பட்டாலும் பிறரை ஏமாற்றாதே.

உன்வாழ் நாளிலேயே அதன் பலனைக்காண்பாய்.



தெய்வ நம்பிக்கை உன்னைக் கைவிடாது














நானும் பூவாய் தான்!!
பூத்தேன் .....
நீ பூத்த தோட்டத்தில்!!

நீயோ பல பூவையரின் !!
கூந்தலில் புன்னகைக்கிறாய்!!

நானோ புள் கட்டுகளின் !!
கூட்டத்தில் புதைக்க பட்டேன் !!

பறிப்பார் ஆள் இல்லாமல் !!
எடுப்பார் ஆள் இல்லாமல் ....

தனிமை அவதி

SHAN NARANDERAN·16 டிசம்பர் 201517 வாசிப்புகள்




நாள் முழுவதும் அமைதி இதயத்தில் அடைபட்ட வார்த்தைகளுக்கு விடுதலை என்றோ?? தெரியவில்லை.
பேச்சு சுதந்திரம் என் உரிமை பேசுவதற்கு ஆள் இருந்தால் தானே ?? அதை நடைமுறைபடுத்துவதற்கு.
ஒருவேலை ஊமையாக பிறந்திருந்தால் தனிமை இனிமைதானோ என்னமோ?? தெரியவில்லை.
என் இன்பங்களும் துன்பங்களும் தனிமையிலே கரைகின்றன.
தனிமையின் அவதி மரணத்தின் கடைசி நாள் கடைசி நிமிடம்.

இந்தியா கொண்டாடும் விவசாயிகள் திருவிழா!


2
கோப்புப் படம்: ஜி.என்.ராவ்
கோப்புப் படம்: ஜி.என்.ராவ்
ஜனவரி 15 எனக் குறிப்பிட்ட தேதியில் வரும் ஒரே தமிழர் பண்டிகை - பொங்கல் திருநாள். இது, தெற்குப் பகுதியில் இருந்து வடக்குப் பகுதிக்கு சூரியனின் இடப்பெயர்ச்சியை மையமாக வைத்து அமைந்தது. இதனால், வருடந்தோறும் வரும் இந்துப் பண்டிகைகளின் தேதிகளில் கண்டிப்பாக மாற்றம் இருக்கும். ஆனால், சூரியன் பெயரில் கொண்டாடப்படும் பண்டிகையான பொங்கல் தேதியில் மட்டும் பெரும்பாலும் மாற்றம் இன்றி, அது சரியாக ஜனவரி 15 அன்றே வருகிறது. இதற்கு, இது, இந்தியாவில் அறுவடைத் திருநாளாக நாடு முழுவதும் உள்ள விவசாயிகளால் கொண்டாடப்படுகிறது.
இது, அறுவடைத் திருநாளாக நாடு முழுவதும் உள்ள விவசாயிகளால் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பொங்கலை, வட மற்றும் மத்திய இந்தியாவில் 'மகர சங்ராந்தி' என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். இந்திக் காலண்டரின் மாக் மாதத்தின் முதல்நாளில் வருவதாலும் இதை மகர சங்ராந்தி என்றழைக்கிறார்கள். ஆனால், இந்தப் பண்டிகையில் பெரும்பாலான மாநிலங்களில் அரசு விடுமுறை கிடையாது. இதை வைத்தே மகர சங்ராந்தி அம் மாநிலங்களில் கொண்டாடப்படும் விதத்தை நாம் ஓரளவுக்குப் புரிந்து கொள்ளலாம்.
இது, தென் மாநிலங்களில் ஓரளவுக்கு தமிழகத்தை போல் இருப்பினும், மற்ற மாநிலங்களில் சுற்றுச்சூழல், பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் விளைச்சல்களைப் பொறுத்து அங்கு கொண்டாடப்படும் முறைகளிலும் நிறைய வேறுபாடு உண்டு. இதற்காகக் கூறப்படும் பெயர்களும் வேறாக இருக்கும் இந்தப் பண்டிகை நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் எப்படி எப்படி கொண்டாடப்படுகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
உபி, பீகார் மற்றும் ராஜஸ்தான்
உபி, பீகார், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அழைக்கப்படுகிறது. இந்நாளில் தம் பாவங்கள் தீர்ந்து மோட்சம் கிடைக்கும் என அருகிலுள்ள கங்கை, யமுனை, நர்மதா போன்ற புண்ணிய நதிகளில் குளித்து முடிப்பதே தலையாய கடமையாகக் கருதுகிறார்கள். இதனால், மகர சங்ராந்தியின் குதூகலம் மற்றும் கொண்டாட்டங்கள் நதிக்கரைகளில்தான் பார்க்கமுடியும். இங்கு ஊஞ்சல்களை அமைத்தும் ஆடி மகிழ்கிறார்கள். குளித்த பின் தானியங்களை பிராமணர்களுக்குத் தானமாக வழங்கிவிட்டு, இனிப்புகளை செய்து சாப்பிடுகிறார்கள். இவற்றில் உடலுக்குச் சூட்டைத் தரும் வெல்லம் மற்றும் எள் தவறாமல் இடம்பெறும். இது குளிர்காலம் என்பதே இதன் முக்கியக் காரணம்.
இத்துடன் கேழ்வரகுக் கிச்சடியும் செய்து சாப்பிடுகிறார்கள். ஒரே நாளில் முடிந்துவிடும் இவர்களுடைய இந்தப் பண்டிகையில் புத்தாடைகள் அணியப்படுவது இல்லை. கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் உண்டு. அதில், அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் உணவுப் பொருட்களை பூஜையில் படைக்கிறார்கள். சூரியன் தெற்கு திசையிலிருந்து வடக்கு நோக்கி நகரத் துவங்கும் நாள் இது. எனவே, பெரும்பாலான கும்பமேளாக்கள் இந்த நாளில்தான் தொடங்குகின்றன. குறிப்பாக இந்த நாளில் தந்தை மற்றும் மகனுக்கு இடையிலான உறவு வலுக்கும் என்றும், குடும்பப் பொறுப்பை மகன் ஏற்று நடத்தும் நாளாகவும் இது அனுசரிக்கப்படுகிறது. இந்தப் பண்டிகையில் செய்யப்படும் இனிப்புகளின் பெயர் சிக்கி (வேர்க்கடலை மற்றும் வெல்லம்), கஜக் (வெள்ளை எள் மற்றும் வெல்லம்), தில்கா லட்டு (வெள்ளை எள், கோவா மற்றும் வெல்லம்). பீகாரில் மட்டும் அவலுடன் தயிர் மற்றும் வெல்லம் கலந்து ஒரு பலகாரம் செய்து சாப்பிடுகிறார்கள்.
ஒரிசா மற்றும் சத்தீஸ்கர்
ஒரிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் மட்டும் ஆட்டம், பாட்டம் என இதை ஒரு வாரம் முழுவதும் கொண்டாடுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள் என்பதால், தம் அறுவடைகளை முடித்த லாபம், ஒவ்வொரு குடும்பத்தினரின் கைகளிலும் கண்டிப்பாக இருக்கும். எனவே, இந்த சந்தோஷத்தைக் கொண்டாட ஆண், பெண் இருபாலருமே மது அருந்தி மயங்கி இருப்பதும் பண்டிகையின் ஒரு அங்கமாகக் கருதுகிறார்கள். இந்த நாளுக்காக ஒரிசாவின் பூரி ஜெகநாத் கோயிலில் இரண்டுமுறை அலங்காரங்கள் செய்து சிறப்புப் பூஜைகள் செய்கிறார்கள். சத்தீஸ்கர் கோயில்களிலும் சிறப்புப் பூஜைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்படுவது உண்டு.
மகராஷ்டிரா
மகராஷ்டிராவில் இந்தப் பண்டிகையின் போது கருப்பு எள் மற்றும் வெல்லம் கலந்த இனிப்புகளை பரிமாறிக் கொள்வார்கள். கருப்பு எள்ளை மராத்தியர்கள் மிகவும் புனிதமாகக் கருதுவதால், அன்றைய நாளில் சில பழமைவாதிகள் கருப்புநிற உடைகளை அணிவதையும் ஒரு பாரம்பரியமாக கடைபிடிக்கிறார்கள். குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் சாதாரண புத்தாடை உடுத்துவார்கள். சொந்த நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் தங்கள் நிலங்களில் கரும்பு, வெல்லம் மற்றும் எள்ளை பானையில் வைத்து பூஜை செய்வார்கள். நகரவாசிகள் மாலையில் பூஜை செய்து வெல்லம், எள்ளு மற்றும் கரும்புத் துண்டுகளை ஒரு சிறிய பானையில் போட்டு பூஜை செய்வார்கள். இதற்கு அருகிலுள்ள பெண்களை ஒற்றைப்படை எண்ணிக்கையில் அழைத்து, அவர்களுக்கும் சிறுசிறு பானைகளில் வெல்லம், கரும்பு மற்றும் எள் ஆகியவற்றைப் போட்டுக் கொடுக்கிறார்கள். இந்த நாள் முதல் நல்ல காற்று இங்கு வீசத் தொடங்குவதால், பல்வேறு நிறங்களில் விதவிதமானப் பட்டங்களை செய்து மாலையில் பறக்கவிட்டு விளையாடும் பழக்கம் அவர்களிடம் உள்ளது.
குஜராத்
இந்த மாநிலத்திலும் மகர சங்ராந்தி என்ற பெயரில் கொண்டாடினாலும், பட்டங்கள் பறக்கவிடும் பண்டிகை என்றுதான் அதைக் கூற வேண்டும். அந்த அளவுக்கு ஒவ்வொரு வீட்டிலும் நபருக்கு ஒரு பட்டம் எனக் காலை முதல் மாலை வரை பறக்க விட்டபடியே இருக்கிறார்கள். பட்டங்களுக்காகவே மகர சங்ராந்தி அன்று அகில உலக அளவில் பட்டங்கள் பறக்கவிடும் போட்டிகளை அகமதாபாத், ராஜ்கோட், பரோடா மற்றும் சூரத் ஆகிய நகரங்களில் அரசே ஏற்று நடத்திவருகிறது. ஏராளமானவர்கள் கலந்துகொள்ளும் இந்தப் போட்டியில் பார்வையாளர்களாக வரும் வெளிநாட்டவர்களும் பட்டம் விடுவதற்காகப் பெரும்பாலான எண்ணிக்கையில் பங்கேற்பது உண்டு. இந்த நாளில் விதவிதமான டிசைன்களில், பலவர்ண நிறங்களில் பறக்க விடப்படும் பட்டங்களைப் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். அன்றைய தினம் அரசு விடுமுறை என்றாலும், புத்தாடைகள் அணிவது கிடையாது. இங்குள்ளவர்களுக்கு பலவகைகளான காய்கறிகள் சேர்த்து சமைக்கப்படும் 'உண்டியா' எனும் பதார்த்தத்தை பூரியுடன் சேர்த்து சாப்பிடுவதென்றால் கொள்ளைப் பிரியம். இவற்றை செய்து விற்பதற்கென்றே சாலையோர, தெருவோர திடீர் கடைகள் உருவாகி விடும்.
பஞ்சாப், டெல்லி, இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஹரியானா
பஞ்சாப்பில் 'லொஹரி' என்றழைக்கிறார்கள். இந்த மாநிலத்தில் இருந்து பிரிந்த இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஹரியானா, பஞ்சாபிகள் அதிகம் வாழும் டெல்லி ஆகிய மாநிலங்களிலும் இதை லொஹரி என்றே கொண்டாடுகிறார்கள். ஆனால், இது பஞ்சாபிகளின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரங்களை முன்நிறுத்தும் பண்டிகையாக இருப்பதால், அங்குள்ள அனைத்து மதத்தவர்களும் இதைக் கொண்டாடுகிறார்கள். இந்த லொஹரி 13ஆம் தேதி இரவு துவங்கி மறுநாள் வரை நீடிக்கும். குறிப்பாக 13.ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு குடும்பத்தார் அனைவரும் வந்து, தீயை மூட்டி அதைச் சுற்றிலும் அமர்ந்து கொள்வார்கள். தெருவாசிகள், இப்படி பொது இடங்களில் தீமூட்டி அமர்ந்துகொண்டு கொண்டாடுவது உண்டு. இதற்கேற்றபடி இந்தக் காலங்களில் அங்கு கடும் குளிர் நிலவுகிறது. அப்போது பாரம்பரிய பாடல்களுடன் நடனமாடி மகிழ்கிறார்கள். இங்கும் எள் மற்றும் வெல்லம் கலந்து செய்த இனிப்பு வகைகள் பரிமாறப்படும். அந்த வருடம் ஆண் பிள்ளைகள் பிறந்த பஞ்சாபிகளின் வீடுகளில் லொஹரி சிறப்புத் திருவிழாவாக இருக்கும். இந்த நாளில் வேண்டுதல் செய்துகொள்வதும் உண்டு. எள், வெல்லம் மற்றும் பால் கலந்த இனிப்புகள் அதிகம் செய்வார்கள்.
அசாம்
இம் மாநிலத்தில் 'போஹாலி பிஹு' (உணவுப் பண்டிகை) என்ற பெயரில் அசாமிய காலண்டரின் 'மாக்' மாதத்தின் முதல் நாளாக ஜனவரி 15-ல் கொண்டாடுகிறார்கள். இதன் முதல் நாள் விசேஷம் மாலையில் உருக்கா என்ற பெயரில் தொடங்குகிறது. அந்த நாளில் சொந்தபந்தங்கள் அனைவரும் அல்லது குடும்பத்துடன் ஒரே இடத்தில் கூடி இரவு விருந்தை அசைவ உணவுடன் உண்டு மகிழ்வார்கள். இரண்டாவது நாள், விடியலில் குளித்து மூங்கில் மற்றும் வைக்கோல் கொண்டு 'மேஜி' என்றழைக்கப்படும் ஒன்றை பிரமிடுகள் வடிவில் செய்வார்கள். இதை அறுவடை செய்த நிலங்களில் அமைத்து பூஜை செய்து நாம் போகியில் எரிப்பதுபோல் எரித்து விடுவார்கள். ஆனால், இதில் அவர்கள் பழைய சாமான்கள் எதையும் போடுவதில்லை. பிறகு பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுகிறார்கள். அன்றைய தினம், அவலில் தயிர் கலந்து ஒரு உணவுப்பண்டம் மற்றும் எள்ளில் வெல்லம் கலந்து ஒரு இனிப்பு சாப்பிடுவார்கள். சிம்பிளாக சாப்பிடுவார்கள். இந்தப் பண்டிகையில் அக்கம், பக்கம் உள்ளவர்கள் ஒருவொருக்கொருவர் அழைத்துக்கொள்வார்கள். அசாம் மாநில அரசு இரண்டு நாள் அரசு விடுமுறை அளிக்கிறது. இங்கு இப்பண்டிகைக்குப் புத்தாடைகள் அணிவது உண்டு.
ஆந்திரா
இந்தப் பண்டிகையில் முக்கியமாக முன்னிறுத்தப்படுவது பலவர்ணக் கோலங்கள். இங்கும் மகர சங்ராந்தி என்ற பெயரில் அழைக்கப்பட்டாலும், பெரும்பாலும் அது நம் பொங்கல் திருநாளைப் போல்தான். முதல் நாள் போகி, மறுநாள் மகர சங்ராந்தி மற்றும் மூன்றாவது நாள் கன்னுமா என மூன்று நாட்களுக்குக் கொண்டாடுகிறார்கள். போகியில் பழையனவற்றை எரித்து, மாலையில் கொலு வைக்கிறார்கள். மகர சங்ராந்தி அன்று காலையில் குளித்து பூஜை செய்து, பானையில் சூரியப் பொங்கல் வைத்து உண்டு மகிழ்கிறார்கள். இவர்களின் கன்னுமா என்பது மாட்டுப் பொங்கலாகும். முதல் இருநாள் மட்டும் அரசு விடுமுறை என்றாலும், கிராமங்களில் கன்னுமாதான் மிகவும் விசேஷம். இந்த நாளில் மாடுகளின் ரேஸ், கோழி சண்டை போன்ற கிராம விளையாட்டுக்கள் உண்டு. மகர சங்ராந்தி வரை இதற்கு முன்பாக வரும் மாதம் முழுவதும் விடியற்காலை பூம்பூம் மாட்டுடன் வருபவர்களுக்கு தானியங்களை பிச்சையாக அளிப்பார்கள்.
கர்நாடகா
மகர சங்ராந்தி என்ற பெயரிலேயே அழைக்கப்படும் பொங்கல் இங்கு ஒரேஒரு நாள் மட்டும் கொண்டாடப்படுகிறது. அரசு விடுமுறையும் கிடைக்கும் இது விவசாயிகள் இடையே மிகவும் பிரபலம். அன்றைய தினத்தில் விவசாயிகள் குளித்துவிட்டு அறுவடை தானியங்களுடன் தங்கள் வேளாண்மைக் கருவிகளையும் வைத்து பூஜை செய்வார்கள். இந்தப் பூஜையில் வைக்கப்பட்ட இளநீர்களை எடுத்துச்சென்று அருகிலுள்ள மலைகள் மீதுஏறிநின்று வேகமாக கீழே தூக்கி வீசுவார்கள். அது விழும் தூரத்திற்கு தங்கள் கிராம எல்லைகள் விரிந்து வளரும் என்பது நம்பிக்கை. மைசூர் மற்றும் மாண்டியா பகுதிகளில் மட்டும் மாட்டு ரேஸ் நடக்கிறது. இதுபோல், வெவ்வேறு பகுதிகளில் பல்வேறு விதமான சடங்குகள் உண்டு. இதை நகரங்களில் பிராமணர்கள் மட்டும் புத்தாடை அணிந்து சற்று விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். மற்றபடி பானையில் பொங்கல் வைக்கும் பழக்கம் இல்லை. கோயில்களில் சிறப்புப் பூஜைகள் உண்டு. வெல்லம், கரும்பு, வேர்க்கடலை மற்றும் எள் ஆகியவற்றை ஒரு சிறிய பாக்கெட்டுகளில் ஒன்றாகப் போட்டு உற்றார், உறவினர்களுக்கு கொடுத்து மகிழ்கிறார்கள்.
கேரளா
கேரளாவில் பொங்கல் தமிழக எல்லையில் உள்ள சில மாவட்டங்களில் மட்டும் கொண்டாடப்படுகிறது. மற்ற இடங்களின் கோயில்களில் அன்றைய தினத்தில் சிறப்பு ஆரத்திகள் எடுக்கப்படும். மற்றபடி புத்தாடை, புது உற்சாகம் மற்றும் அரசு விடுமுறை என எதுவும் கிடையாது. ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு அனுசரிக்கப்படும் தினம் மட்டும் அந்தக் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் விசேஷம். திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றங்கால் பகவதி அம்மன் கோயிலில் வருடந்தோறும் நடைபெறும் விசேஷத்தில் மட்டும் லட்சக்கணக்கான மக்கள் கூடி பொங்கல் வைக்கிறார்கள். பெருமளவில் தமிழர்களும் கலந்துகொள்ளும் அது மற்றொரு தினத்தில் கொண்டாடப்படும் பொங்கல் தவிர வேறு ஒன்றல்ல.

ஜனநாயக அரசு வேண்டுமெனில் சமூகம் ஜனநாயகமாக்கப்பட வேண்டும்

- பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்
பல்வேறு  தண்டனை பொருத்தமான அரசு முறைகளை வரலாறு கண்டிருக்கிறது. முடியாட்சி, பிரபுக்கள் ஆட்சி, மக்களாட்சி என்பவற்றுடன் சர்வாதிகார ஆட்சியையும் இணைத்துக் கொள்ளலாம். தற்காலத்தில் மிகவும் பரவலாகக் காணப்படுவது ஜனநாயகம். இருப்பினும், ஜனநாயகம் என்றால் என்ன என்பது பற்றிய கருத்தொற்றுமை இல்லை. ஒரு சமூகம் தனது வடிவிலும் அமைப்பிலும் ஜனநாயக முறையில் இல்லை என்றால், அந்த சமூகத்திற்காக செயல்படும் அரசு ஜனநாயக அரசாக இருக்க முடியாது. ஜனநாயகம் என்பது தேர்தல்கள் தவிர வேறொன்றும் இல்லை என்று நினைப்பவர்கள் மூன்று தவறுகளை செய்கிறார்கள்.
முதல் தவறு: அரசு என்பது சமூகத்திலிருந்து முற்றிலும் வேறானது, தனிப்பட்டது என்று நம்புவது. உண்மையில் அரசு, சமூகத்திலிருந்து வேறானதும், தனிப்பட்டதும் அல்ல. அரசு என்பது சமூகத்தின் பல அமைப்புகளில் ஒன்று. சமூகத்தின் கூட்டு வாழ்க்கைக்குத் தேவையான கடமைகளில் சிலவற்றைச் செய்யுமாறு சமூகம் அரசுக்கு குறிப்பிட்டுக் கொடுக்கிறது.
இரண்டாவது தவறு, ஓர் அரசு சமூகத்தின் இறுதி நோக்கங்களையும் குறிக்கோள்களையும் பிரதிபலிக்க வேண்டும் என்பதையும், அரசு வேரூன்றியிருக்கும் சமூகம் ஜனநாயக சமூகமாக இருந்தாலன்றி இது நடவாது என்பதையும் உணரத் தவறுவது. சமூகம் ஜனநாயக முறையில் இல்லையென்றால், ஓர் அரசு ஜனநாயக அரசாக ஒருபோதும் இருக்க முடியாது. சமூகம் இரண்டு வர்க்கங்களாக, ஆளுவோர் என்றும் ஆளப்படுவோர் என்றும் பிரிக்கப்பட்டிருந்தால், அரசு ஆளும் வர்க்கத்தின் அரசாகத்தான் இருக்கும்.
மூன்றாவது தவறு! அரசு நல்லதாக இருக்குமா, கெட்டதாக இருக்குமா, ஜனநாயகமாக இருக்குமா, அல்லது ஜனநாயகமற்றதாக இருக்குமா என்பது, சட்டத்தைச் செயல்படுத்துவதற்கு எல்லா அரசுகளும் சார்ந்திருக்கின்ற அமைப்புகளை, குறிப்பாக சிவில் சர்வீஸ் அமைப்பைப் பொறுத்தது என்பதை மறந்துவிடுவதாகும். சிவில் சர்வீஸ் பணியில் உள்ளவர்கள் எத்தகைய சமூகச் சூழலில் வளர்ந்தார்கள் என்பதைப் பொறுத்தே இது அமையும். சமூகச் சூழல் ஜனநாயகமற்றதாக இருந்தால், அரசும் ஜனநாயகமற்றதாகவே இருக்கும்.
ஜனநாயக வடிவிலான அரசு நல்ல பலனைக் கொடுக்குமா என்பது, சமூகத்தில் உள்ள தனி நபர்களின் மனப்பான்மையைப் பொறுத்தது. சமூகத்தில் உள்ள தனி நபர்களின் மனப்பான்மை ஜனநாயகப் பண்புள்ளதாக இருந்தால், ஜனநாயக வடிவிலான அரசு நன்மையைத் தரும் என்று எதிர்பார்க்கலாம். இல்லையென்றால் ஜனநாயக வடிவிலான அரசு ஆபத்தான அரசாக மாறிவிடக்கூடும்.
ஒரு சமூகத்தில் உள்ள தனி நபர்கள் தனித்தனி வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்தால், ஒவ்வொரு வகுப்பும் மற்ற வகுப்புகளிலிருந்து தனிமைப்படுத்தப் பட்டிருந்தால், ஒவ்வொரு தனி நபரும் தன்னுடைய விசுவாசம் வேறெதையும் விட, முதன்மையாகத் தன் வகுப்புக்கே அளிக்கப்பட வேண்டும் என்று நினைத்தால், தனிமைப்பட்ட தன் வகுப்பில் வாழ்ந்து கொண்டு, வகுப்பு உணர்வு பெற்று, தன்னுடைய வகுப்பின் நலனை மற்ற வகுப்புகளின் நலனுக்கு மேலாகக் கருதினால் , தன்னுடைய வகுப்பின் நலனை முன்னேற்றுவதற்காக சட்டத்தையும் நீதியையும் வக்கிரமாகப் பயன்படுத்துவதற்குத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தினால், இந்த நோக்கத்துக்காகத் தன்னுடைய வகுப்பைச் சாராத மற்றவர்களுக்கு எதிராக வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் எப்போதும் பாரபட்சத்துடன் செயல்பட்டால், ஒரு ஜனநாயக அரசு என்ன செய்ய முடியும்? வகுப்புகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு, சமூக விரோத உணர்வும், ஆதிக்க மனப்பான்மையும் அதிகமாக இருந்தால் அரசு நீதியுடனும் நியாயத்துடனும் ஆட்சி செய்யும் கடமையை நிறைவேற்றுவது கடினம்.
இப்படிப்பட்ட சமூகத்தில், அரசு தன் வடிவத்தில் மக்களால் நடத்தப்படும் மக்களுடைய அரசாக இருந்தாலும், ஒருபோதும் மக்களுக்கான அரசாக இருக்க முடியாது. அது ஒரு வகுப்பால், ஒரு வகுப்புக்காக நடத்தப்படும் அரசாகவே இருக்கும். ஒவ்வொரு தனி நபரின் மனப்பான்மையும் ஜனநாயக ரீதியில் இருந்தால்தான், அதாவது ஒவ்வொருவரும் மற்றவர்களில் ஒவ்வொருவரையும் தனக்குச் சமமாக நடத்தி, தான் உரிமை கொண்டாடும் அதே சுதந்திரத்தை மற்றவர்களுக்கும் கொடுக்கத் தயாராக இருந்தால் தான் மக்களுக்காக நடைபெறும் அரசாக அது இருக்க முடியும்.
இந்த ஜனநாயக மனப்பான்மை, தனி நபர்கள் சமூகத்தில் கலந்து பழகுவதன் விளைவாக உருவாவது. எனவே ஜனநாயக அரசு வேண்டுமென்றால், முதலில் ஜனநாயக சமூகம் வேண்டும். ஜனநாயக அரசுகள் வீழ்ச்சியடைந்துள்ளன என்றால் அதற்கு முக்கிய காரணம், அந்த அரசுகள் அமைந்திருந்த சமூகங்கள் ஜனநாயக சமூகங்களாக இல்லை என்பதேயாகும். நல்ல அரசின் பணி எந்த அளவுக்கு அதன் குடிமக்களின் மனப்பான்மையையும், அறநெறிப்பண்பையும் பொறுத்துள்ளது என்பது உணரப்படாதது வருந்தத்தக்கது. ஜனநாயகம் ஓர் அரசியல் எந்திரம் மட்டும் அல்ல; அது ஒரு சமூக அமைப்பு மட்டும் கூட அல்ல; அது ஒரு மனப்பான்மை அல்லது வாழ்க்கைத் தத்துவம் ஆகும்.

ஒவ்வொரு தனி நபரின் மனப்பான்மையும் ஜனநாயக ரீதியில் இருந்தால்தான், அதாவது ஒவ்வொருவரும் மற்றவர்களில் ஒவ்வொருவரையும் தனக்குச் சமமாக நடத்தி, தான் உரிமை கொண்டாடும் அதே சுதந்திரத்தை மற்றவர்களுக்கும் கொடுக்கத் தயாராக இருந்தால்தான் மக்களுக்காக நடைபெறும் அரசாக அது இருக்க முடியும். இந்த ஜனநாயக மனப்பான்மை, தனி நபர் ஜனநாயக சமூகத்தில் கலந்து பழகுவதன் விளைவாக உருவாவது. எனவே ஜனநாயக அரசு வேண்டுமென்றால், முதலில் ஜனநாயக சமூகம் வேண்டும்.

பாரதியுடன் இன்றய இரவு !

https://www.youtube.com/watch?v=QYreuLAzg7k

நான் கண்ட மனிதன்


#########################
ஆண்டுகள் பல கடந்த 
பொதுப்பணி பேச்சாளர் 
எள்ளி நகையாடும் 
எல்லோரையும்
யாரோ கதைகின்றாரென
புனை செவிடு பாய்ச்சுவது
இவன் அகம் அகந்தை ஆகும்
புறம் பேசுதல் தவறெனப்படாத
உலகத்தில் இவன் பங்காளி

சனி, 17 நவம்பர், 2018

தொலைந்த வெளிச்சம்





கார்த்திகை ராத்திரி                                                                                                                              
ஏற்றின கடைசி விளக்கை
வைத்து திரும்பும் முன் 
அணைந்துவிடுகின்றது
முதல் விளக்குகளுள் ஒன்று
எரிகிறபோது பார்க்காமல்
எப்போதுமே
அணைத்த பிறகு தான்
அதை சற்று
அதிகம் பார்க்கிறோம்
எரிந்த பொழுதில்
இருந்த வெளிச்சத்தை விட
அணைந்த பொழுதில்
தொலைத்த வெளிச்சம்
பரவுகிறது
மனதில் பிரகாசமாக.