ஞாயிறு, 3 டிசம்பர், 2017

விரும்பிய வரிகள்

காதலாய் நீ பார்த்த போதெல்லாம் உன் விழியில் விழுந்து உயிரில் கலந்தேன் உணர்வில் மெல்ல வருடிய உன் இமைகளின் தாக்கம் மெல்லியதாய் கேட்டது என்னிடம் உன் இதயத்தை தருவாயா.....! என்று



இறுதியாக ஒரு கவிதை எழுது என்றால்

உயிர் மூச்செடுத்து ஒரு கவிதை எழுதுவேன்




என் இறுதி ஊர்வலத்தில்
பூக்களை தூவாதிர்கள் முட்களை தூவுங்கள்
அப்பொழுதாவது என்னை
பின் தொடராமல் இருப்பாள்-அவள்
என் நிம்மதியை கெடுக்க


சிரிதுகொண்டிருப்பது என் இதழ்கள் மட்டும் தானடி உன்னையே நினைத்து அழுதுகொண்டிருக்கும் என் இதயத்தின் வலி தெரியாமலே போகட்டும் உனக்கு


உன்னை பார்க்காதபோது என் சிந்தனைகள்
சிதைந்து போகின்றது ... இதை நீ அறிவாயா .


காதலை சொல்ல உதடுகள் வேண்டும்
என நினைத்திருந்தேன். கண்ணீர்த்துளிகளை
கண்டபிறகு தெரிந்துகொண்டேன்....
காதலை சொல்ல கண்ணில் ஈரமிருந்தால் போதுமென்று....



கனவுகள் எனக்கு பிடிக்கும் ... நீ வருவதால் .. கண்ணீர் எனக்கு பிடிக்கும் .. உனக்காக வருவதால்... தனிமை எனக்கு பிடிக்கும்.. உன் நினைவுகள் என்னோடு இருப்பதால்...





ஒருவர் இதயத்தில் இன்னொருவர் வாழ்வது காதல்,ஆனால் ஒருவர் இன்னொருவரின் இதயமாக வாழ்வது நட்பு 




பிரிந்துவிட்டால் இறந்து விடுவோம் இது love " "இறந்து விட்டால் மட்டுமே பிரிந்துவிடுவோம் இதுதான் friendship.....




நண்பர்கள் யாரும் மீண்டும் பிரபதில்லை , நட்புகள் என்றும் இரபதில்லை , உன் நட்பை நான் ஒருபோதும் மறப்பதில்லை , என்றும் நட்புடன் உன் .........




காதலைவிட நட்பு சிறந்தது காதல் சில காலம் தான் இனிக்கும் ஆனால் நட்பு உயிர் உள்ள வரை இனிக்கும்


காதல் என்பது காற்றாடி போல பறந்து விடும் ஆனால் நட்பு என்பது நடைபாதை போல தொடர்ந்து வரும்

உன் நினைவால் உன்னை பார்க்க வந்தேன் என்பதற்காக,
பாதையை மாற்றினாய்!
உன்னுடன் தான் நான் இருக்கின்றேன், என்பதை மறந்து.
உன்னிடம் பேச வந்தேன் மறுத்துவிட்டாய்,
உன் நினைவுதான் என்னை பேச வைக்கிறது, என்பதை மறந்து.


தூண்டிலில் சிக்கிய மீனாய் சிக்கி தவிக்கிறேன்....
என் இதயத்தில் உன் பார்வை பட்ட நாள்முதல்.


மாயம் செய்யவில்லை... மயங்கிவிட்டேன்.... நீ பார்த்த ஒரேஒரு பார்வையில்.

கண்கள் உன்னை கண்டதும் கவலைகள் பறந்தன
கண்ணீர் மறைந்தன புன்னகை பூத்தது முழு நிலவுடன்-என்
வாழ்க்கை பயணம் தொடந்தது- ஒரு தலை காதலுடன்



தென்றலை நேசித்தேன் புயல் வரும் வரை...!பூக்களை நேசித்தேன் வாடும் வரை...!நிலவை நேசித்தேன் விடியும் வரை...!உன்னை நேசித்தேன் என் உயிர் போகும் வரை...!


இறக்கப் பிறந்த இதயம் ஏனோ துடிக்கத் துடிக்கின்றது
உன்னைக் காணும் பொழுதுகளில்
உயிர்க்கத் துடிக்கும் இதயம் ஏனோ துடிக்க மறுக்கின்றது உன்னைக் காணாத பொழுதுகளில்


காதல் என்பது மனிதர்களுக்கிடையே ஏற்படும்
பாலியல் ஈர்ப்பு, அன்பு, அக்கறை கலந்து ஒர் உணர்வு, சேர்ந்து வாழவேண்டும் என்றஆசை




நீ பிரிந்தற்காக வருந்தவில்லை புரிந்து கொள்ளாமல் சென்றுவிட்டாய் என்பதுதானே என் வருத்தம்......

பிரிவு என்பது மறக்க முடியாத சோகம் கண்ணீரால் நடத்தப்படுகிற யாகம்....



எத்தனை எத்தனை உறவுகள் வந்தாலும் உள்ளம் திறந்து உண்மை வடித்து உணர்வுகள் கொட்டி தோள் சாய்ந்திட உன்னையே நாடும் என் மனம்!



நெஞ்சம் ஏனோ கலங்குது கரணம் சொல்ல நானறியேன்!!
வீட்டின் முற்றத்தில் தள்ளாடும் சிட்டு குருவின் கூட்டை போல் என் மனமும் தள்ளாடுது! தாங்கி கொள்ள யாரும் இன்றி ..



நீ நடப்பது என்னவோ நிலத்தில் தான் ஆனால் அதிர்வுகளை என் இதயத்தில் உணருகிறேன். காத்திருத்தல் சுகம் அதுவும் உனக்காய் காத்திருத்தல் தவம். என் இதயத்தில் உன் பெயர் எழுதி என் உதட்டில் கையொப்பம் இட்டவன் உனக்காய் அழுது என் கண்கள் வறட்சி கொண்டது உன் நினைவுகள் தடுக்கி விழுந்தே நான் காயம் கொள்கிறேன் மருந்தாய் வா விடை சொல்ல வா



நிழலும் நிஜம் தான்...வெளிச்சம் உள்ள வரை... காதலும் நிஜம் தான்... நீ என்னை நினைக்கும் வரை... நீ இன்றி நிழலும் துணை இல்லை... மீண்டும் நீ என்னை தொடரும் வரை... கரைக்கு ஈரம் அலைகள் அடிக்கும் வரை... பெண்ணே உன் நினைவுகள்... என் இதயம் துடிக்கும் வரை...



எத்தனை முறை சொன்னாலும் எப்படி சொன்னாலும் எழுதிவைத்து சொன்னாலும் எழுதாமல் சொன்னாலும் என் இதயம் உனக்காகத் துடிக்கிறது



இமை இல்லாமல் கண் இல்லை... இரவு இல்லாமல் பகல் இல்லை...: இதயம் இல்லாமல் சுவாசம் இல்லை. நீ இல்லாமல் நான் இல்லை..



பணம் உலகத்தை கவரும்,
அழகு உள்ளத்தை கவரும்,
என்னால் இந்த உலகத்தையும் கவர முடிய வில்லை, அவள் உள்ளதையும் கவர முடியவில்லை,
ஏன் என்றால் எனக்கு இந்த இரண்டுமே இல்லை....



எத்தனையோ நிகழ்வுகள் உருவாக்கியிருக்கலாம் நம்மில் சச்சரவுகளை.. உன்மீது நான் கொண்ட நட்போ என்மீது நீ கொண்ட அன்போ.... எது தடுத்ததெனத் தெரியவில்லை. எதிர்பார்த்தேன் உன் இதழ்களில் சிறு புன்னகையொன்றை..... ஆனால், செவியில் விழுந்த வார்த்தைகளோ கல்லாகி உடைத்தெறிந்தது - "என் கண்ணாடி போன்ற மனதை..............



சாஜஹான் தன காதலிக்காக அன்று ஒரு நாள் தாஜ் மகால் கட்டினான் ,, என்னுயிரே நான் உனக்காக தாஜ் மகால் எல்லாம் கட்டுவேன் என்று பொய் சொல்ல வில்லை நான் உனக்காக என் உயிரை தருகிறேன் நீ எனக்காக உன் இதயத்தை தருவாயா



பெண்ணே தாலிக்கட்டி உன்னை தாரமாக்க நினைத்தேன் நீயோ... வேறொருவனை மனதில் நினைத்துக்கொண்டு என்னை தாடிக்காரனாய் மாற்றிவிட்டாய இது நியாயமா 



வாழ்கையில் ஒரு அழகான பொண்ண காதல் பண்றத விட நம்ம வாழ்கை அழகா வச்சுகுற பொண்ண காதல் பண்றதுதான் நல்லது..



காதலித்துபார் வாழ்கை புதிதாகவும்
காதலித்து தோற்றுபார் உலகமே உனதாகும்
தோல்வி உன்னை வெற்றிஇன் விளிம்பிற்கு அழைத்து செல்லும் !!!!!!!



நீயும் நானும் கைகோர்த்து நடந்தால் அதை காதல் என்று சொல்லும் இந்த சமுதாயத்திற்கு என்ன தெரியும் நீயும் நானும் நட்பு என்னும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் என்று,,,,,



நான் சிரிக்கும் போதெல்லாம் உன் இதயம் திறக்கவில்லை நீ சிரிக்கும் போதெல்லாம் என் இதயம் என்னிடம் இல்லை



உன்னை நிழலாய் தொடர நினைக்கும் என் நட்பு உன் இதயம் தன்னில் மறைந்து கொண்ட சோகங்களை தோண்டி எடுத்து என்னுள் புதைத்து கொள்ள விரும்புகிறது நான் பார்க்க நீயாவது புன்னகை அணிந்து கொள் ...!!



எனக்குள் வாழ்ந்து கொண்டு எனக்காய் துடிக்கும் உனது நட்பின் ஆழம் கண்டு கண்ணீர் வடிக்கிறேன் என் அருகில் நீ இல்லை என..



ஆயிரம் உறவுகள் எல்லோருக்கும் அன்பான உறவு நட்பு மட்டுமே.. பொறுமையாய் பாசமாய் ஆறுதலாய் அரவணைக்க நட்பு இருக்குமே ஆனால் நம்மை விட அதிர்ஷ்டசாலி யாரோ??நட்புக்கு அர்த்தம் அறிந்து பழகுங்கள்.. நட்பை அறியாமல் பழகி நட்பை அழித்து விடாதீர்கள்....



உன்னை காணாமல் என்னை விட்டு பிரியமாட்டேன் , என்கிறது என் உயிர் !

நிம்மதி இல்லாமல் துடிக்கிறது உன்னையே நினைத்து என் நெஞ்சம் !



மனதினுள் வைத்தால் தொலைந்துவிடும் என்று உன் இதயத்தை என் இதயத்தினுள் வைத்தேன் பத்திரமாய்! நீயோ என் இதயத்தையே அறுத்து உன் இதயத்தை எடுத்துச் செல்கிறாய்!!



கண்ணை காப்பது இமைதானடி
காதலின் சுகம் இதயத்தின் வலிதானடி
ஒரு முறை பார்த்தால் போதும்
ஆயுள் வரை சுகம் நீளும்
இறந்தாலும் மீண்டும் பிறப்பேன்
உன் காதலனாக மட்டும்
உன் காதலுக்காக மட்டும்



கண்களின் அனுமதி கேட்டா நான் உன்னைப் பார்த்தேன்?

இதயத்தின் அனுமதி கேட்டா நீ உள்ளே வந்தாய்?
நம் இருவரின் அனுமதி கேட்டா காதல் நம்முள் வந்தது?

இப்போது யார் அனுமதி கேட்டு என்னை நீ பிரிந்தாய்???



கவிதை எழுதினேன் உன் அழகை பற்றியே மொழியை திருப்பினேன் உன் வடிவாமாக்கியே கனவு காண்கிறேன் உன்னுடன் வாழவே பகல் கனவாய் போவதற்குள் பதில் ஒன்று சொல்லிவிடேன்



நிலா தேய்வதால் வானம் வருத்தப்படுவதில்லை...
பூக்கள் உதிர்வதால் செடிகள் புலம்புவதுமில்லை...
மழையில் நனைவதால் மரங்கள் குடை பிடிப்பதுவுமில்லை...
மதங்கள் வேறுபடுவதால் மனிதம் மாறுவதுமில்லை...
நம்பிக்கை தொடர்வதால் தோல்வி வெற்றியின் வேரறுப்பதுமில்லை..
அதே போல் உன் மௌனத்தை கலைப்பதால் உன் உயிர் உன்னை விட்டு பிரிவதும் இல்லை ...
கலைத்து விடு பெண்ணே உன் மௌனத்தை 



நீ பேசுவதெல்லாம் நிஜம் என்று நினைக்கும் என்னிடதிலா நிஜமாகவே நீ மௌனமா இருக்கிறாய்



உயிர் போகும் வலி
உன் நினைவுகள் என் நெஞ்சில் உளியாய்
செதுக்கியது காதலை மட்டுமல்ல
உன் உருவையும் தான்



சிலிர்க்க செய்யும் காற்று மெல்ல எட்டிபார்க்கும் சூரியன் கரையை அலசும் நதி சுமக்க முடியாத உன் நினைவுகளுடன் காத்திருக்கிறேன் இன்னமும்



நீ வேறு, நான் வேறல்ல என்பதாய் வளர்ந்தது நம் நட்பு நினைத்துக் கூட பார்க்கவில்லை நீ என்னை பிரிவாய்யென்று என்னை நீ மறந்ததை நினைத்து துடித்துப் போகிறேன்!



நான் உன்னை சந்திக்காமலே இருந்திருக்கலாம்
என் உயிரையும் தாண்டி சென்று விட்டது உன் நினைவுகள்
உன்னை மறப்பதா என்னையே மறப்பதா முடிவெடுக்க முடியாமல் தவிக்கிறேன்
உன்னை மறக்க நினைத்தால் என்னையே மறக்க செய்கிறது உன் நினைவுகள்



கடவுளைத் தேடித் தேடி தேய்ந்து போனது கால்கள்!
காண முடியாமல் காய்ந்து போயின கண்கள்!
இறுதியில் இமைகளை மூடிக் கொண்டு தேடினேன்!
ஞானம் பிறந்தது... பத்து மாதங்களாய் கருவறையில் காத்து பெற்று வளர்த்த தாயே கடவுள்..!



என் உயிரை எடுத்துக்கொண்டு என்னை விட்டு போனவளே என் இதயத்தை கிழித்துவிட்டு நிம்மதியாய் சென்றுவிட்டாய்... உன்னையே உலகம் என நம்பும் நான் உனக்காக சாவதா? என்னையே உலகம் என நம்பும் என் குடும்பத்துக்காக வாழ்வதா?



கண்ணை காப்பது இமைதானடி
காதலின் சுகம் இதயத்தின் வலிதானடி
நீ ஒரு முறை பார்த்தால் போதும்
என் ஆயுள் வரை அந்த சுகம் நீளும்
இறந்தாலும் மீண்டும் பிறப்பேன்
உன் காதலுக்காக மட்டும்
உன் காதலனாக மட்டும்



பல நாள் உன் பதிலுக்கு காத்திருந்து...
பல பொழுது உன் வரவுக்கு காத்திருந்து...
பல நேரங்களில் உன் அன்புக்கு காத்திருந்து...
பல இரவுகளில் உன் அணைப்பிற்கு காத்திருந்து...
நான் வாழும் நாள் வரை உன்னுடன் வாழ... உனக்காக காத்திருக்கிறேன்.



 நாம் ஒன்றாய் கழித்த அந்த நினைவுகளை என் இதயத்தில் செதுக்கி விட்டேன்.. என் கனவுகளை கவிதைகளாக வரைந்து கண்ணீரில் கரைக்கிறேன். யாருக்கும் தெரியாமல் என்னுயிரில் கலந்த உன்னை மட்டும் பிரிந்து செல்ல நினைக்காதே…… நானில்லாமல்நீயிருப்பாய்……… ஆனால்….. நீயில்லாமல் நானிருக்க மாட்டேன்….



உன்னை பிரிந்தால் உயிர் பிரியும் நிலையில் நானிருப்பேன் என்று தெரிந்தும் நீ பிரிந்து சென்று விட்டாய்



மனதுக்கு பிடித்தவர்களை பார்க்காமல் -கூட
இருந்து விடலாம் .......! - அனால்
நினைக்காமல் ஒரு போதும்
இருக்க முடியாது ......!
என்றும் உன் நினைவில் நான்.



காலையிலும் மாலையிலும் கனவிலும் நீ தானடி ...உறவிலும் உறக்கத்திலும் உயிரே நீதானடி ....காதல் வேண்டுமா..? கவிதை வேண்டுமா ..?கவிதை தான் வேண்டும் எனக்கு காரணம் என் கவிதையே நீதானடீ



என் தேவதையே நீ இன்றி என் இதயம் இறந்து கொண்டிருக்கின்றது நீ வந்து உயிர் கொடுப்பாயா அல்லது தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பாயா...? உன் வருகையை மட்டுமே எதிர் பார்த்து கொண்டு என் இதயம் அனாதையாக அழைத்து கொண்டிருக்கிறது



உயிருள்ள்ள ரோஜா பூவே உனக்காக பிறந்தவன் நான் நீ என்னை விட்டு போனால் என் இதயம் தாங்காது
என் இதயம் என்ற தோட்டத்தில் பாசம் என்னும் பூக்களை வளர்த்தேன்.,,அந்த பூக்கள் கூட வாடிப்போகும் நீ என்னை விட்டு போனால் ...
நான் ஒரு ஏழை என்பதக்காக என்னை விட்டு பிரிந்து செல்கிறாய் பெண்ணே என் இதயம் ஏழை அல்ல என்பதை நீ மறந்து விட்டாய் ,,, பெண்ணே உன்னை நினைத்து உருகுவது என் இதயம் மட்டுமல்ல என் உயிரும்தான் ....



உன் நினைவுகள் என் நெஞ்சினில் புதைந்ததினால் தீயால் என் நெஞ்சை சுடுகின்றேன் ....உன் உருவம் என் கண்களில் பதிந்ததினால் கண்ணீர் விட்டு அளிக்கின்றேன்.....பெண்ணே உன் தாய் தந்தைக்காக என்னை விட்டு பிரிந்து விட்டாய் ..... என் காதலை பழைய காகிதம் போல் தூக்கி எரிந்திட முடிந்தது .. ஆனால் என்னால் முடியவில்லை உன்னை மறக்கவும் உன்னைவெறுக்கவும் ..... இப்போதெல்லாம் எனக்கே என்னை பிடிக்கக வில்லை



கனவுகள் இல்லாத கண்களும் இல்லை ...உணர்வுகள் இல்லாத உயிரும் இல்லை ..பிரிவுகள் இல்லாத உறவுகள் இல்லை ...நட்பு இல்லாத இதயமும் இல்லை ....காதலிக்காத ஜீவனும் இல்லை 



கண்கள் அசையவில்லை,,, உதடுகள் பேசவில்லை,,, காதுகள் கேக்க வில்லைஅனால் இதயம் மட்டும் துடிக்கிறதடி அன்பே உன்னை காணாததால்



உன்னை நீங்கி எந்நாளும் எந்தன் ஜீவன் வாழாது,,, உந்தன் அன்பில் வாழ்வதுக்கு ஜென்மன் ஒன்று போதாது ..நீ என்னை சேர்த்திடும் வரையில் இதயத்தில் சுவாசங்கள் இல்லை நீ வந்து தங்கிய நெஞ்சில் யாருக்கும் இடமே இல்லை ஆசை காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சுவர்க்கம் ஆகுமே



உலகமெங்கும் காதல் இல்லாத இடமும் இல்லை அது நுழையாத மனமும் இல்லை ...சிலறது காதல் பேசும் காதல் ,, சிலறது காதல் மௌன காதல் ,, சிலறது காதல் சேர்த்திடும் காதல் ,, சிலறது காதல் பிரிந்திடும் காதல் ,,,சூழ்நிலை தடுத்தால் ஒரு தலை காதல் ,,,யோகம் இருந்தால் சிலறது காதல் இருதலை காதல் ஆகிவிடும்...,சொல்லாத காதல் செல்லாத காசாய் ஆக முன்பே உன் காதலை சொல்லிவிடு



பிரிந்து போன உன் நினைவுகள் ஒவ்வொரு நாளும் என் கண்களுக்குள் வந்து கொண்டு தான் இருக்கின்றன ... ??? ... கனவாக அல்ல ... ??? <<<... கண்ணீராக ... >>>



மலர்ந்த உன் நினைவுகளை பறித்து வீச நினைத்தேன் மனமில்லை ஆனால் உயிரோடு நீ கலந்ததால் சேமிக்கிறேன் என் சின்ன இதயத்தில் உன் இனிய நினைவுகளை மலரும் நினைவுகளாய்.....


உனக்காவே பிறந்த நான் இறைவனிடம் வரம் கேட்டால் உன்னோடு வாழ்ந்து உன்னில் இறந்துபோக வேண்டுமெனக் கேட்பேன்

காதல் நூலகத்தில் மௌனத்தின் அர்த்தத்தை அறிமுகப்படித்தியவள் நீ ! 
சிறகுகள் இல்லை என்றாலும் நீ என் தேவதை தான், 
செயற்க்கைகோளை போல உன்னை சுற்றியே என் கண்கள் படம் பிடிக்கின்றன, 
உன்மௌன மொழிக்கு ஒரு நிமிடம் விடுமுறை கொடுத்து சொல்லிவிடு, உன்காதலை!

என் இதயமே நீ தான் உன் மூச்சு காற்றில் தான் தான் என் இதயமே துடிக்கிறது பெண்ணே

உன் புன்னகையில் பூத்த காதல்-ஒரு
கண்ணீர் துளியில் கலந்து பிரிந்தாலும். காற்றிருக்கும் வரை-என் காதல் காத்திருக்கும்-என் இதயம்



நீ..!!! எனக்கு வேண்டும்.. நான் வேண்டும் வரம் இது ஒன்று தான்....

வானவில்லின் அழகு சிறிது நேரம் தான் 
ஆனால் உந்தன் நினைவுகள் என் காலம் முழுவதும்..!

உன்னுடன் வாழ்வதற்கும் , 
உன் நினைவுகளுடன் வாழ்வதற்கும், 
ஒரு-சிறு வித்தியாசம் தான்..., 

உன்னுடன் வாழ்வது --"வரம்" 
உன் நினைவுகளுடன் வாழ்வது--"தவம்

நீ பிறக்காமல் இருந்திருந்தால் 
நான் உன்னை நினைக்காமல் இருந்திருப்பேன் 
நீ பிறந்து விட்டதால் நான் இறந்து கொண்டிருக்கிறேன்

உன் சிரிப்பை பார்த்தேன், என் சிந்தனைகளில் கலந்தாய்.. 
உன் கண்ணை பார்த்தேன் என் கனவில் கலந்தாய். . எப்படி என்னுள் கலந்து இருக்க 
உன்னை பிரிந்த நாட்கள் மட்டும் எனை கலங்க செய்தாய்.

வெள்ளி, 3 நவம்பர், 2017

கதை பரப்புரையாளர்

Relatert bilde
ஒன்றை மட்டும்
சொல்லிக்கொள்வதாகத்தான்
துவக்குகிறார்கள்
அந்த ஒன்று
இன்னொன்றைக் கூடி
பிறக்கும் ஒவ்வொன்றும்
ஒன்றை பெருக்கி
ஓராயிரம் ஒன்றுகள்
ஒன்றாய் கூடிய பிறகினும்
அவர்கள் கூறிய
அந்த ஒன்று மட்டும்
முற்றுப் பெறுவதேயில்லை

எது சுயநலம்??? யார் சுயநலவாதி???










எம்மத்தியில் பரவலாக பேசப்படும் ஒரு விடயம். ஆனால் இதுவரையில் அதன் ஆளம் புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றனவா என்றால் தெரியாது. சுயத்தைப் பற்றி சரியாக புரிந்துகொண்டால்தானே யார் சுயநலவாதி என்ற வினாவுக்கு விடைகாண முடியும். இப்படித்தான் எம்மில் பலர் முக்கியமான விடயங்களை விட்டு முக்கியமல்லாத விடயங்களுக்கு அதிக முக்கியத்துவத்தினை அளித்துவிடுகின்றோம். காரணம், எமக்கு புரிதலில் ஓட்டை ஒடிசல்கள் நிறையவே இருக்கின்றன என்பதனை நாம் அதிக நேரங்களில் மறந்துவிடுகின்றோம். எமது ஓட்டை ஒடிசல்களை நாம் புரிந்து கொண்டாலும் சுயநலவாதி யார் என்ற வினாவுக்கு சரியாக அல்லது அச்சொட்டாக விடையளிக்க முடியாதுதான் என்பது வேறுவிடயம். இங்குதான் பிரச்சினையே எழுகின்றது.

அதாவது, மனிதனாக பிறந்துவிட்டால் அங்கு சுயநலம் இருந்தே தீரும். இதில் எந்தவொரு சந்தேகமும் எனக்கில்லை. நான் நன்மையான காரியம் ஒன்றினைச் செய்தாலும,; தீயன பலவற்றுக்கு தர்மகர்த்தா வேலை செய்தாலும் அதன் பின்னால் சுயநலம் இருந்தே தீரும். ஆனால் நான் மற்றவர்களிடம் இருந்து எப்படி பொதுநலத்தை மட்டும் எதிர்பார்க்க முடியம். இதுதான் பிரச்சினைக்குரிய வினா? இவை இரண்டிற்கும் மத்தியில் ஒரு தெளிவான கோட்டை உங்களால் தெளிவாக காட்ட முடியுமானால் நீங்கள் உண்மையில் சுயநலவாதியில்லை என்று என்னால் கூறமுடியும்.

நீங்கள் மற்றவர்களுக்கு கிடைப்பதனையெல்லாம் வாரி வழங்குகின்றீர்கள், கேட்டவர்களுக்கெல்லாம் உதவுகின்றீர்கள், இரவுபகலாக உதவுகின்றீர்கள், கவலையில் அவர்கள் வாடுகின்ற போது அவர்களுக்கு ஆறுதல் தருகின்றீர்கள், துன்பங்கள் துயரங்கள் அவர்களுக்கு ஏற்படுகின்ற வேளை அவர்களை உங்களுடைய குடும்பத்தினரை போன்று அரவணைக்கின்றீர்கள், மேலும் இப்படியெல்லாம் உங்களுடைய உதவிகள் நீண்டுகொண்டே செல்கின்றதென்றால் இதற்கு காரணம் என்ன? என்னைப் பொறுத்தவரை சுயநலம்தான். ஏனெனில் அவற்றிலிருந்து நீங்கள் பிரதிபலன்கள் அல்லது பலாபலன்கள் எதனையும் எவரிடமிருந்தும் எதிர்பார்த்திருக்கவில்லை என உங்களால் உறுதியாக கூறமுடியுமா?

இதேவேளை, நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவது கிடையாது, மற்றவர்களை சந்திந்தால் உங்களுடைய வாயிலிருந்து வருகின்ற அனைத்தும் பொய்கள்தான், உங்களுடைய பிழைப்பே மற்றவர்களை ஏமாற்றுவதும், அவர்களை ஓட்டாண்டியாக நடுத்தெருவில் விட்டுவிடுவதும்தான், மற்றவர்கள் சந்தோசத்தில் இருக்கின்ற வேளை அவர்களுடன் ஒட்டி உறவாடுகின்றீர்கள், அவர்களுக்கு ஒரு கஷ்டம் வருகின்ற போது சூசகமாக விட்டும் விலகி விடுகின்றீர்கள், அவர்களுடன் உறவாயிருக்கின்றீர்கள், நீங்கள் ஒரு உயர் இடத்தை அடைகின்றபோது அவர்களை விட்டும் தூர ஓடிவிடுகின்றீகள் அல்லது உங்களுடைய தேவைகள் நிறைவேறிவிடுகின்ற வேளையில் அவர்களை கைகழுவி விட எத்தணிக்கின்றீர்கள் என்றால் இதெற்கெல்லாம் காரணம் நான் முன்பு கூறியதைப் போன்றே சுயநலம்தான்.

இவைதான் மனிதனில் பொதுவான இயல்பு. இவைகளுக்கு மத்தியில் சிலர் அவதியுறுவதற்கு காரணம் அவர்கள் இதனால் ஏமாந்துவிடுகின்றனர். மறுபுறத்தில், இவைகளை இந்த உலக வாழ்வில் நாம் முற்றாக அழித்தொழித்துவிட்டு வாழ முடிவெடுப்போமானால் எம் ஆயுள் காலத்தை முற்றாக வீணடித்த பெருமை எமக்கு மட்டும்தான் என்பதில் எந்த சந்தேகமும் இருக்காது. நாம் நொந்து நோய்வாய்ப்பட்டு இருக்கின்ற வேளைகளில் மற்றவர்களை நாம் சுயநலவாதி என்று பச்சை குத்தி விடுகின்றோம். இதன் போது நாம் மற்றவர்களுடைய தேவைகள், உணர்வுகள், அவர்களுடைய சூழ்நிலைகள் எவ்வாறிருந்தன என்பதனைப் பற்றி சற்றேனும் கவலைப் பட்டதே கிடையாது. எனவே, இந்த மாத்திரத்தில், நாமும் சுயநலவாதிகள்தான். நாம் மற்றவர்களை பற்றி கவனத்தில் கொள்ளவில்லையே! 

மறுபுறம் நாம் அதிக சந்தோசமாக, குதூகலமாக எமது பொழுதுகளை கொண்டிருக்கின்ற வேளை மற்ற எல்லோரையும் எமது சொந்தங்களாக, நண்பர்கள் கூட்டங்களாக தீர்ப்பிட்டுக் கொள்கின்றோம். ஆனால் அவை நெடுநாளைக்கு நிலைப்பது கிடையாது. ஏனெனில் எமக்கு சந்தோசம், குதூகலம் என்பன அதிக நாளைக்கு நீடிப்பது கிடையாதே!

வாழ்க்கையில் எமாற்றம் என்பதுதான் பலரை நோந்து நோகடிக்கச் செய்கின்றது. மனிதருக்கு இருக்கின்ற நியாயத்திற்கு அப்பால் தீர்ப்பிடும் இயல்பினைத் தோற்றுவிப்பதும் இந்த மோசமான ஏமாற்றங்கள்தான். சிலர் கூறுவார்கள் 'இந்த உலகில் ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்' என்று. இது ஒரு குறுகிய சிந்தனை என்பதனால் நான் அதனை ஆழமாக சென்று நோக்க கருதவில்லை. இங்கு ஏமாற்றுபவர்கள் ஏமாறுபவர்கள் என்று உண்மையில் இரு வகுப்பார்கள் கிடையாது. உலகில் அவ்வாறு இறைவன் படைத்திருப்பதற்கோ அல்லது உலக இயக்கத்திற்கு அவ்வாறான வகுப்புக்களின் அவசியமோ என்னைப் பொறத்தவரையில் சாத்தியமே கிடையாது. எனது கருத்தில் இவ்வுலகில் வாழ்கின்ற மனிதர்கள் யாவரும் ஒன்றில் எமாற்றுபவர்களாக அல்லது ஏமாறுபவர்களாக இருக்க வேண்டும். 

எனது விரிவுரையாளர் ஒருவர் இருக்கின்றார். அவரிடம் நான் பல கருத்துக்களை கற்றுக்கொள்ள வாயப்பு கிடைத்தது. 'நாம் நம்பினால்தான் ஏமாறுவோம்' என்று அவர் அடிக்கடி கூறுவார். ஆக, நாம் எதனையும் நம்பினால் ஏமாறத்தான் வேண்டும், அத்துடன் ஏமாற்றத்திற்கு தயாராக இருப்பது எமக்கு அவசியமான ஒன்று.' அப்படி நாம் தயாராக இருப்போமானால் அது எமக்கு எந்தவொரு தீங்கினையும் இழைக்காகது என்பதுடன் யதார்த்ததத்தில் அது எமக்கு கிடைத்த ஒரு ஏமாற்றமாகவும் இருக்காது. அனுபவித்துப் பாருங்கள் புரியும்.  நாம் எதிலும் நம்பிக்கை வைப்பது தவறல்ல. ஆனாலும், நாம்தான் அதில் ஏமாறமாட்டோமே என்று எமக்குள்ளேயே எம்மைப்பற்றி தீர்ப்பிட்டுக் கொள்கின்றோமே அதுதான் தவறு. மாறாக நீங்கள் குறித்த விடயத்தில் அதிக நம்பிக்கையுடன் அல்லது குறித்த நபரில் அதிக ஆழ்ந்த நம்பிக்கை வைத்து கொண்டாடினீர்களாயின் இறுதியில் துன்பத்தை சுவைக்க நேரிடும். ஆனால் ஏமாறாமலிருக்க எந்த அளவு உங்களுடைய நம்பிக்கை குறித்த விடயதானத்தில் இருக்க வேண்டும் என்று கூறும் அளவுக்கு எனக்கு அனுபவம் பத்தாது. அதனைப் பற்றி நான் கூற நீங்கள் கேட்க வேண்டுமானால் சில காலம் பொறுத்திருங்கள், நானும் ஏமாறவேண்டிய விடயங்கள் இன்னும் பல இருக்கின்றன.

இப்படி நீங்கள் வாழக் கற்றுக் கொண்டாலும் உங்களுக்கு பிரச்சினை முடிந்திடவில்லை. மனிதர்களிடத்தில் பொதுவான இயல்பொன்றிருக்கின்றது. அதாவது மனிதர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும், இப்படி நடந்தால் இப்படித்தான் இருப்பார்கள், இப்படி அவர்கள் இருக்கவில்லை அதனால் அவன் முன்பு இப்படி இருந்தது பொய் என்றெல்லாம் ஊகித்தவைகளைக் கொண்டு தீர்ப்பு வழங்கும் பழக்க தோசம்தான் அவை. இவைகளினால் அவர்கள் எமக்கும் ஏதாவது பட்டமளிப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்துவிடுவார்கள் என்பது தவிர்க்க முடியாதது. அதாவது, உங்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு அதனை நீங்கள் அவ்வளவு கருத்தில் கொள்ளாது விட்டு விட்டு, பட்ட கவலைகளை துடைத்தெறிந்துவிட்டு நீங்கள் கவலையேதும் இல்லாமலிருந்தால் அது இவர்களுக்கெல்லாம் அசாதாரணமாக தோன்றும். இதன் போது, இவன் என்னடா இவ்வளவு நடந்தும் ஒன்றுமே நடக்காதவன் போன்று இருக்கிறான், நடிக்கிறான், இவன் இவ்வளவு காலமும் நடந்து கொண்டது வெறும் பசப்புடா. என்றெல்லாம் இவர்கள் கூறலாம். கவலையே இல்லை. ஊங்களுக்கு தெரியும்தானே இவர்கள் இப்படித்தான் கூறவார்கள் என்று.

எனவே, நாம் ஏமாற்றத்திற்கு எப்போதும் தயாரக இருக்க வேண்டும். மறுகோணத்தில் ஒன்றை நீங்கள் மனத்தில் நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு விடயத்தில் ஏமாறாமல் தப்பித்து விட்டீர்கள் என்று தெரிந்து கொண்டால், அதே நேரத்தில், அதே விடயம் தொடர்பாக உங்களுடைய உறவுச் சங்கிலியில் ஏதோவொரு மூலையில் மற்றொருவர் ஏமாந்துவிட்டார் என்பது உறுதி. நீங்கள் ஏமாந்துவிட்டால் உங்களில் மற்றொருவர் தப்பித்துக் கொண்டார் என்பது உறுதி. இங்குதான் வாழ்க்கை என்பதன் தத்துவத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதனை நீங்கள் மனத்தில் பதித்து வைத்துக் கொண்டால் நீங்களும் குட்டையில் இருக்கின்ற மீனும் ஒன்றுதான். திமிங்கிலமாக இருந்தாலும் அல்லது சின்னக் குறுமினி பொட்டியான் குஞ்சாக இருந்தாலும் ஒரு நாள் தூண்டிலுக்கு இரையாகத்தான் வேண்டும். குட்டையென்று நான் கூறியது இந்த வாழ்வைத்தான்.

இதில் நான் திமிங்கிலமா அல்லது பொட்டியான குஞ்சுவா என்று எனக்கு தெரியாது. ஆனால் தூண்டிலில் இரையாக குத்தப்பட்டிருக்கிறேன் என்பது எனக்கு புரிகின்றது.

இன்னும் என்னால் செல்ல முடியாது,
இப்படி என்னால் வாழவும் முடியாது,
நித்தமும் நான் அழுகிறேன்,
என்ன செய்வது? எனக்குத் தெரியாது,
எப்படி மாறுவது? எனக்குத் தெரியாது.

மற்றவர்களுக்கு நான் உதவுகிறேன், ஏன்?
அவர்களால் நான் ஏன் நாறடிக்கப்பட வேண்டும்?
இந்த சுயநலவாதிகளுக்கு மத்தியில் நான் திண்டாடுகின்றேன்.
அவர்கள் என்னை உதைக்கும் வரை,
உதறித் தள்ளும் வரை,
கொன்று தின்னும் வரை,
காத்துக் கிடக்கின்றேன்.

நான் மாறவேண்டும்,
இவர்களுக்கு உதவக் கூடாதெனும்
தீர்மானம் மட்டும் தினமும் எஞ்சிக்கிடக்கின்றன.
அவர்கள் என்னை வேண்டும் வேளை,
என்னால் முடியாமல் போகிறது.
நான் எப்போதும் அவர்களுக்காகத்தான்.

எனக்குத் தெரியும்
அவர்கள் எனது சாவுக்கும் வரமாட்டார்கள்.
அவர்கள் என்னை உபயோகித்துக் கொள்கின்றனர்,
என் மீது அவர்களுக்கு கிஞ்சிற்றேனும் கவலை கிடையாது,
இவையெல்லாம் எனக்குத் தெரியும்.
ஆனாலும் நான் எனக்கு உதவிக்கொள்ள வழியேயில்லை.
நான் எனக்காக வாழ முடியாது,
அது நியாயமும் அல்ல,
நீதியுமல்ல.
எவராவது உதவுபவர்கள் இருந்தால்
நான் அவர்களை இரஞ்சுகின்றேன்,
யாரவது எனக்கு உதவுங்கள்...
இவ்வாறே எனக்குச் செல்ல முடியாது,
நான் மாறவேண்டும்!!!
இவர்கள் ஏன் சுயநலவாதிகளாய் கிடக்கின்றனர்???
அவர்களை மற்றும் சிந்திக்கின்றனர், ஏன்;?
மற்றவர்களின் தேவை அவர்களுக்கு புரிவதில்லை, ஏன்???
இன்னும் அவர்கள் நண்பர்களை வீசி விடுவதென்றாலும்
மற்றவர்களின் கண்களுக்கு நல்லதாக மட்டும் காட்டிக்கொள்கின்றனரே!
அவர்களுக்கு உதவாத,
மோசக்காரர்களை ஆரத்தழுவுகின்றனரே! 
இவர்களால் அவர்களுக்கு எந்த அக்கரையும் இல்லை,
அவர்களின் சாவுக்கு கூட இவர்கள் வரமாட்டார்கள்.
என்ன செய்வதென்று எனக்கு புரியவில்லை.....:'((((

மிகவும் மடத்தனமான கவிதை இது... எனக்குத் தெரியும்:(  
இவைகள் அனைத்தும் எனது வாழ்வின் யதார்த்த நிலை. இவை யாவுக்காகவும் நான் மிகவம் களைத்துப் போய்விட்டதனால் தூக்கி வீசிட எத்தணிக்கின்றேன்.