ஞாயிறு, 3 டிசம்பர், 2017
விரும்பிய வரிகள்
நிலா தேய்வதால் வானம் வருத்தப்படுவதில்லை...
உயிருள்ள்ள ரோஜா பூவே உனக்காக பிறந்தவன் நான் நீ என்னை விட்டு போனால் என் இதயம் தாங்காது
வெள்ளி, 3 நவம்பர், 2017
கதை பரப்புரையாளர்

ஒன்றை மட்டும்
சொல்லிக்கொள்வதாகத்தான்
துவக்குகிறார்கள்
அந்த ஒன்று
இன்னொன்றைக் கூடி
பிறக்கும் ஒவ்வொன்றும்
ஒன்றை பெருக்கி
ஓராயிரம் ஒன்றுகள்
ஒன்றாய் கூடிய பிறகினும்
அவர்கள் கூறிய
அந்த ஒன்று மட்டும்
முற்றுப் பெறுவதேயில்லை
எது சுயநலம்??? யார் சுயநலவாதி???
அதாவது, மனிதனாக பிறந்துவிட்டால் அங்கு சுயநலம் இருந்தே தீரும். இதில் எந்தவொரு சந்தேகமும் எனக்கில்லை. நான் நன்மையான காரியம் ஒன்றினைச் செய்தாலும,; தீயன பலவற்றுக்கு தர்மகர்த்தா வேலை செய்தாலும் அதன் பின்னால் சுயநலம் இருந்தே தீரும். ஆனால் நான் மற்றவர்களிடம் இருந்து எப்படி பொதுநலத்தை மட்டும் எதிர்பார்க்க முடியம். இதுதான் பிரச்சினைக்குரிய வினா? இவை இரண்டிற்கும் மத்தியில் ஒரு தெளிவான கோட்டை உங்களால் தெளிவாக காட்ட முடியுமானால் நீங்கள் உண்மையில் சுயநலவாதியில்லை என்று என்னால் கூறமுடியும்.
நீங்கள் மற்றவர்களுக்கு கிடைப்பதனையெல்லாம் வாரி வழங்குகின்றீர்கள், கேட்டவர்களுக்கெல்லாம் உதவுகின்றீர்கள், இரவுபகலாக உதவுகின்றீர்கள், கவலையில் அவர்கள் வாடுகின்ற போது அவர்களுக்கு ஆறுதல் தருகின்றீர்கள், துன்பங்கள் துயரங்கள் அவர்களுக்கு ஏற்படுகின்ற வேளை அவர்களை உங்களுடைய குடும்பத்தினரை போன்று அரவணைக்கின்றீர்கள், மேலும் இப்படியெல்லாம் உங்களுடைய உதவிகள் நீண்டுகொண்டே செல்கின்றதென்றால் இதற்கு காரணம் என்ன? என்னைப் பொறுத்தவரை சுயநலம்தான். ஏனெனில் அவற்றிலிருந்து நீங்கள் பிரதிபலன்கள் அல்லது பலாபலன்கள் எதனையும் எவரிடமிருந்தும் எதிர்பார்த்திருக்கவில்லை என உங்களால் உறுதியாக கூறமுடியுமா?
இதேவேளை, நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவது கிடையாது, மற்றவர்களை சந்திந்தால் உங்களுடைய வாயிலிருந்து வருகின்ற அனைத்தும் பொய்கள்தான், உங்களுடைய பிழைப்பே மற்றவர்களை ஏமாற்றுவதும், அவர்களை ஓட்டாண்டியாக நடுத்தெருவில் விட்டுவிடுவதும்தான், மற்றவர்கள் சந்தோசத்தில் இருக்கின்ற வேளை அவர்களுடன் ஒட்டி உறவாடுகின்றீர்கள், அவர்களுக்கு ஒரு கஷ்டம் வருகின்ற போது சூசகமாக விட்டும் விலகி விடுகின்றீர்கள், அவர்களுடன் உறவாயிருக்கின்றீர்கள், நீங்கள் ஒரு உயர் இடத்தை அடைகின்றபோது அவர்களை விட்டும் தூர ஓடிவிடுகின்றீகள் அல்லது உங்களுடைய தேவைகள் நிறைவேறிவிடுகின்ற வேளையில் அவர்களை கைகழுவி விட எத்தணிக்கின்றீர்கள் என்றால் இதெற்கெல்லாம் காரணம் நான் முன்பு கூறியதைப் போன்றே சுயநலம்தான்.
இவைதான் மனிதனில் பொதுவான இயல்பு. இவைகளுக்கு மத்தியில் சிலர் அவதியுறுவதற்கு காரணம் அவர்கள் இதனால் ஏமாந்துவிடுகின்றனர். மறுபுறத்தில், இவைகளை இந்த உலக வாழ்வில் நாம் முற்றாக அழித்தொழித்துவிட்டு வாழ முடிவெடுப்போமானால் எம் ஆயுள் காலத்தை முற்றாக வீணடித்த பெருமை எமக்கு மட்டும்தான் என்பதில் எந்த சந்தேகமும் இருக்காது. நாம் நொந்து நோய்வாய்ப்பட்டு இருக்கின்ற வேளைகளில் மற்றவர்களை நாம் சுயநலவாதி என்று பச்சை குத்தி விடுகின்றோம். இதன் போது நாம் மற்றவர்களுடைய தேவைகள், உணர்வுகள், அவர்களுடைய சூழ்நிலைகள் எவ்வாறிருந்தன என்பதனைப் பற்றி சற்றேனும் கவலைப் பட்டதே கிடையாது. எனவே, இந்த மாத்திரத்தில், நாமும் சுயநலவாதிகள்தான். நாம் மற்றவர்களை பற்றி கவனத்தில் கொள்ளவில்லையே!
மறுபுறம் நாம் அதிக சந்தோசமாக, குதூகலமாக எமது பொழுதுகளை கொண்டிருக்கின்ற வேளை மற்ற எல்லோரையும் எமது சொந்தங்களாக, நண்பர்கள் கூட்டங்களாக தீர்ப்பிட்டுக் கொள்கின்றோம். ஆனால் அவை நெடுநாளைக்கு நிலைப்பது கிடையாது. ஏனெனில் எமக்கு சந்தோசம், குதூகலம் என்பன அதிக நாளைக்கு நீடிப்பது கிடையாதே!
வாழ்க்கையில் எமாற்றம் என்பதுதான் பலரை நோந்து நோகடிக்கச் செய்கின்றது. மனிதருக்கு இருக்கின்ற நியாயத்திற்கு அப்பால் தீர்ப்பிடும் இயல்பினைத் தோற்றுவிப்பதும் இந்த மோசமான ஏமாற்றங்கள்தான். சிலர் கூறுவார்கள் 'இந்த உலகில் ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்' என்று. இது ஒரு குறுகிய சிந்தனை என்பதனால் நான் அதனை ஆழமாக சென்று நோக்க கருதவில்லை. இங்கு ஏமாற்றுபவர்கள் ஏமாறுபவர்கள் என்று உண்மையில் இரு வகுப்பார்கள் கிடையாது. உலகில் அவ்வாறு இறைவன் படைத்திருப்பதற்கோ அல்லது உலக இயக்கத்திற்கு அவ்வாறான வகுப்புக்களின் அவசியமோ என்னைப் பொறத்தவரையில் சாத்தியமே கிடையாது. எனது கருத்தில் இவ்வுலகில் வாழ்கின்ற மனிதர்கள் யாவரும் ஒன்றில் எமாற்றுபவர்களாக அல்லது ஏமாறுபவர்களாக இருக்க வேண்டும்.
எனது விரிவுரையாளர் ஒருவர் இருக்கின்றார். அவரிடம் நான் பல கருத்துக்களை கற்றுக்கொள்ள வாயப்பு கிடைத்தது. 'நாம் நம்பினால்தான் ஏமாறுவோம்' என்று அவர் அடிக்கடி கூறுவார். ஆக, நாம் எதனையும் நம்பினால் ஏமாறத்தான் வேண்டும், அத்துடன் ஏமாற்றத்திற்கு தயாராக இருப்பது எமக்கு அவசியமான ஒன்று.' அப்படி நாம் தயாராக இருப்போமானால் அது எமக்கு எந்தவொரு தீங்கினையும் இழைக்காகது என்பதுடன் யதார்த்ததத்தில் அது எமக்கு கிடைத்த ஒரு ஏமாற்றமாகவும் இருக்காது. அனுபவித்துப் பாருங்கள் புரியும். நாம் எதிலும் நம்பிக்கை வைப்பது தவறல்ல. ஆனாலும், நாம்தான் அதில் ஏமாறமாட்டோமே என்று எமக்குள்ளேயே எம்மைப்பற்றி தீர்ப்பிட்டுக் கொள்கின்றோமே அதுதான் தவறு. மாறாக நீங்கள் குறித்த விடயத்தில் அதிக நம்பிக்கையுடன் அல்லது குறித்த நபரில் அதிக ஆழ்ந்த நம்பிக்கை வைத்து கொண்டாடினீர்களாயின் இறுதியில் துன்பத்தை சுவைக்க நேரிடும். ஆனால் ஏமாறாமலிருக்க எந்த அளவு உங்களுடைய நம்பிக்கை குறித்த விடயதானத்தில் இருக்க வேண்டும் என்று கூறும் அளவுக்கு எனக்கு அனுபவம் பத்தாது. அதனைப் பற்றி நான் கூற நீங்கள் கேட்க வேண்டுமானால் சில காலம் பொறுத்திருங்கள், நானும் ஏமாறவேண்டிய விடயங்கள் இன்னும் பல இருக்கின்றன.
இப்படி நீங்கள் வாழக் கற்றுக் கொண்டாலும் உங்களுக்கு பிரச்சினை முடிந்திடவில்லை. மனிதர்களிடத்தில் பொதுவான இயல்பொன்றிருக்கின்றது. அதாவது மனிதர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும், இப்படி நடந்தால் இப்படித்தான் இருப்பார்கள், இப்படி அவர்கள் இருக்கவில்லை அதனால் அவன் முன்பு இப்படி இருந்தது பொய் என்றெல்லாம் ஊகித்தவைகளைக் கொண்டு தீர்ப்பு வழங்கும் பழக்க தோசம்தான் அவை. இவைகளினால் அவர்கள் எமக்கும் ஏதாவது பட்டமளிப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்துவிடுவார்கள் என்பது தவிர்க்க முடியாதது. அதாவது, உங்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு அதனை நீங்கள் அவ்வளவு கருத்தில் கொள்ளாது விட்டு விட்டு, பட்ட கவலைகளை துடைத்தெறிந்துவிட்டு நீங்கள் கவலையேதும் இல்லாமலிருந்தால் அது இவர்களுக்கெல்லாம் அசாதாரணமாக தோன்றும். இதன் போது, இவன் என்னடா இவ்வளவு நடந்தும் ஒன்றுமே நடக்காதவன் போன்று இருக்கிறான், நடிக்கிறான், இவன் இவ்வளவு காலமும் நடந்து கொண்டது வெறும் பசப்புடா. என்றெல்லாம் இவர்கள் கூறலாம். கவலையே இல்லை. ஊங்களுக்கு தெரியும்தானே இவர்கள் இப்படித்தான் கூறவார்கள் என்று.
எனவே, நாம் ஏமாற்றத்திற்கு எப்போதும் தயாரக இருக்க வேண்டும். மறுகோணத்தில் ஒன்றை நீங்கள் மனத்தில் நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு விடயத்தில் ஏமாறாமல் தப்பித்து விட்டீர்கள் என்று தெரிந்து கொண்டால், அதே நேரத்தில், அதே விடயம் தொடர்பாக உங்களுடைய உறவுச் சங்கிலியில் ஏதோவொரு மூலையில் மற்றொருவர் ஏமாந்துவிட்டார் என்பது உறுதி. நீங்கள் ஏமாந்துவிட்டால் உங்களில் மற்றொருவர் தப்பித்துக் கொண்டார் என்பது உறுதி. இங்குதான் வாழ்க்கை என்பதன் தத்துவத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதனை நீங்கள் மனத்தில் பதித்து வைத்துக் கொண்டால் நீங்களும் குட்டையில் இருக்கின்ற மீனும் ஒன்றுதான். திமிங்கிலமாக இருந்தாலும் அல்லது சின்னக் குறுமினி பொட்டியான் குஞ்சாக இருந்தாலும் ஒரு நாள் தூண்டிலுக்கு இரையாகத்தான் வேண்டும். குட்டையென்று நான் கூறியது இந்த வாழ்வைத்தான்.
இதில் நான் திமிங்கிலமா அல்லது பொட்டியான குஞ்சுவா என்று எனக்கு தெரியாது. ஆனால் தூண்டிலில் இரையாக குத்தப்பட்டிருக்கிறேன் என்பது எனக்கு புரிகின்றது.
இப்படி என்னால் வாழவும் முடியாது,
நித்தமும் நான் அழுகிறேன்,
என்ன செய்வது? எனக்குத் தெரியாது,
எப்படி மாறுவது? எனக்குத் தெரியாது.
மற்றவர்களுக்கு நான் உதவுகிறேன், ஏன்?
அவர்களால் நான் ஏன் நாறடிக்கப்பட வேண்டும்?
இந்த சுயநலவாதிகளுக்கு மத்தியில் நான் திண்டாடுகின்றேன்.
அவர்கள் என்னை உதைக்கும் வரை,
உதறித் தள்ளும் வரை,
கொன்று தின்னும் வரை,
காத்துக் கிடக்கின்றேன்.
நான் மாறவேண்டும்,
இவர்களுக்கு உதவக் கூடாதெனும்
தீர்மானம் மட்டும் தினமும் எஞ்சிக்கிடக்கின்றன.
அவர்கள் என்னை வேண்டும் வேளை,
என்னால் முடியாமல் போகிறது.
நான் எப்போதும் அவர்களுக்காகத்தான்.
எனக்குத் தெரியும்
அவர்கள் எனது சாவுக்கும் வரமாட்டார்கள்.
அவர்கள் என்னை உபயோகித்துக் கொள்கின்றனர்,
என் மீது அவர்களுக்கு கிஞ்சிற்றேனும் கவலை கிடையாது,
இவையெல்லாம் எனக்குத் தெரியும்.
ஆனாலும் நான் எனக்கு உதவிக்கொள்ள வழியேயில்லை.
நான் எனக்காக வாழ முடியாது,
அது நியாயமும் அல்ல,
நீதியுமல்ல.
எவராவது உதவுபவர்கள் இருந்தால்
நான் அவர்களை இரஞ்சுகின்றேன்,
யாரவது எனக்கு உதவுங்கள்...
இவ்வாறே எனக்குச் செல்ல முடியாது,
நான் மாறவேண்டும்!!!
இவர்கள் ஏன் சுயநலவாதிகளாய் கிடக்கின்றனர்???
அவர்களை மற்றும் சிந்திக்கின்றனர், ஏன்;?
மற்றவர்களின் தேவை அவர்களுக்கு புரிவதில்லை, ஏன்???
இன்னும் அவர்கள் நண்பர்களை வீசி விடுவதென்றாலும்
மற்றவர்களின் கண்களுக்கு நல்லதாக மட்டும் காட்டிக்கொள்கின்றனரே!
அவர்களுக்கு உதவாத,
மோசக்காரர்களை ஆரத்தழுவுகின்றனரே!
இவர்களால் அவர்களுக்கு எந்த அக்கரையும் இல்லை,
அவர்களின் சாவுக்கு கூட இவர்கள் வரமாட்டார்கள்.
என்ன செய்வதென்று எனக்கு புரியவில்லை.....:'((((
மிகவும் மடத்தனமான கவிதை இது... எனக்குத் தெரியும்:(
இவைகள் அனைத்தும் எனது வாழ்வின் யதார்த்த நிலை. இவை யாவுக்காகவும் நான் மிகவம் களைத்துப் போய்விட்டதனால் தூக்கி வீசிட எத்தணிக்கின்றேன்.
திங்கள், 23 அக்டோபர், 2017
அமைப்பு சார் ஜனநாயகம்
##############################################
குழு ஆழ்மை
கொண்ட பொது அமைப்பு வீழ்த்தபின் அந்த
அமைப்பை கட்டி எழுப்ப புதியதோர் கூட்டு
ஐனநாயக முறை அல்லது மறைமுக சார்பாளி
ஆட்ச்சி முறையில் அவர்களின் சார்பாளிகளைத் (பிரதிநிதிகளைத்) தேர்ந்தெடுத்து . இந்தத்
தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பாளர்கள் நிர்வாக
கட்டமைப்பபை உருவாக்கி அமைப்பு சார் முக சீரமைப்பு செய்யப்பட்டு,விதிகள் அல்லது யாப்பை உருவாக்கி, பின் பொதுமக்களை அங்கத்துவ பிரதிநிதித்துவபடுத்தி அதை நேரடி பொதுசபைக்கு கொடுவரவேண்டும்
ஜனநாயகத்தில் சட்ட
சமத்துவம், அமைப்பு சார் அரசியல்
சுதந்திரம் மற்றும் சட்ட விதிமுறை ஆகியவை முக்கிய அம்சங்களாக அடையாளம் காணப்பட்டு .
இந்த நியமங்கள் எல்லா தகுதியுள்ள அங்கத்துவ பொது மக்களுக்கும் சட்டத்திற்கு முன்
சமமாக இருப்பதுடன், சட்டப்பூர்வ
செயல்முறைகளுக்கு சமமான அணுகலைக் கொண்டிருக்க்கவேண்டும் .
உதாரணமாக:- ஜனநாயகத்தில் ஒவ்வொரு வாக்குக்கும் சமமான எடை
உள்ளது. தகுதிவாய்ந்த அங்கத்துவ பொது மக்களின் சுதந்திரம் சட்டபூர்வமான உரிமைகள்
மற்றும் சுதந்திரம் ஆகியன பொதுவாக ஒரு அமைப்புசாரர் அரசியலமைப்பின் மூலம்
பாதுகாக்கப்படவேண்டும்
பொது மக்கள் அமைப்பு "மக்களால் மக்களுக்காக நடத்தப்பெறும் பொது
அமைப்பு " பொதுவாக ஒரு பொது மக்கள்அமைப்பு அல்லது சங்கம், தங்களின் கருத்துக்களைத் தேர்தலின் மூலம் பதிவு
செய்து, தங்கள் நிர்வாக
பிரதிநிதிளைத் தேர்ந்தெடுப்பர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக பிரதிநிதிகள் தனிச்சசையாகவோ அல்லது மற்ற
நிர்வாக பிரதிநிதிகளுடன்
சேர்ந்து அமைப்பின் கட்டமைப்பு
விதி முறைக்கிணங்க
அமைப்பின் முன்னேற்றத்துக்கு வேலை செய்வார்கள்
வெள்ளி, 20 அக்டோபர், 2017
நினைவு கொப்பளிப்பு

கந்தசட்டி கவசம்
இன்னும் மறக்கவில்லை
6 நாள் 6 மிளகு பால் பழம்
காலை 6 மணியில் உன் ராகம்
6 நாள் 6 மிளகு பால் பழம்
காலை 6 மணியில் உன் ராகம்
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு ட ங்கு டிங்குகு
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு ட ங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து
உன் மொழியில் உன் சுரத்தில்
முந்து முந்து முருகவேள் முந்து
உன் மொழியில் உன் சுரத்தில்
எனக்கு பிடிக்கவில்லை
உனக்கும் தெரியும்
உன்னால் நான் மறந்ததை
இன்னும் மறக்காமல் இருக்கிறேன்
உன் நினைவுக்காக அப்பா
உனக்கும் தெரியும்
உன்னால் நான் மறந்ததை
இன்னும் மறக்காமல் இருக்கிறேன்
உன் நினைவுக்காக அப்பா
ஏதோ அப்பா நீ இல்லாத இந்த உலகில்...
உங்களுக்கு பிடித்ததெல்ல்லாம
நினைவுக்கு வருகின்றது !
-பங்கிரையான் -
உங்களுக்கு பிடித்ததெல்ல்லாம
நினைவுக்கு வருகின்றது !
-பங்கிரையான் -
வெள்ளி, 6 அக்டோபர், 2017
புதன், 27 செப்டம்பர், 2017
கடவுள் தோன்றிய கதை
சில சமயம் தோன்றும் மதத்தை தோற்றுவித்தவன் யார். வேதங்களும் புராணங்களும் எப்படி தோன்றின. ஹிந்து மதம் என்ன வித்யாசங்களோடு தோன்றியது. எப்படி இப்படி ஒரு முழு பெற்ற மதம் அதன் வேதங்களாலும் வழிமுறைகளாலும் இதனை காலமாய் வந்து கொண்டிருகிறது . திராவிடம் ஆர்யம் என்ற வேறுபாடுகள் மறைந்து எப்படி ஹிந்து என்ற ஒரே குடையின் கீழ் வந்தது. வேதங்களில் எந்த இடத்திலும் ஹிந்து என்ற ஒரு வார்த்தையே கிடையாதே. எப்படி அதிலிருந்து ஹிந்து மதம் என்று வந்தது. மிக விரிவான விளக்கங்கள் சில சமஸ்கிருத வார்த்தைகளுடன் உங்களுடன் பரிமாறி கொள்ள இந்த பதிவுகள் இருக்கும்.

கடவுள் தோன்றிய கதையே வித்தியாசமானது. கற்கால மனிதன் எவனுக்கும் மதம் என்ற ஒன்று இல்லை. அன்றைய உலகம் மிகவும் பயம் நிரந்த மாய உலகமாக இருந்தது. காடுகள். மிருகங்கள். ஆபத்து நிறைந்த ஜந்துக்கள் அவைகளுடன் கொஞ்சம் மனிதர்கள். ஆம். இன்றைக்கு மனிதர்கள் எவ்வளவு பேரோ அவ்வளவு மிருகங்கள், இன்றைக்கு எதனை மிருகங்களோ அத்தனை மனிதர்கள். பகலெல்லாம் சூரியனின் வெளிச்சம், இரவெல்லாம் பயமுறுத்தும் இருட்டு. கடவுள் தோன்றியதே இருட்டு அறையில் தாம். கொடிய மிருகங்கள் மூலம் ஆபத்து. கும்மிருட்டு, பயம் இரவானால் குகைகளினுள் வாசம். பகல் வந்த பின்பு தான் உலகமே தெரியும். அறிவு வளரத மிருகமாய் மனிதன். மத எந்த உயிரினத்திற்கும் இல்லாத ஒரு பாக்கியம் மனித இனத்துக்கு உண்டு. சிந்தை செய்யும் திறன். அன்றைய காடு மனிதனிடமும் இருந்த இந்த சிந்தனாசக்தி தான் கடவுளின் பிறப்பிற்கு மூலம். மலை பெய்து மின்னல் தாக்கி மரங்கள் எறிந்த பொது தான் நெருப்பு என்ற ஒன்றே அறிமுகம். அதில் மாமிசத்தை சுட்டு சாப்பிட்ட பொது தான் சுவை என்பது அறிமுகம். இரவில் மின்னல் தோன்றியதால் ஏற்பட்ட வெளிச்சம் பயத்தை தந்தாலும், அது ஒரு விதத்தில் மனித அறிவை தீமூட்டியது என்பதை மறுக்க முடியாது.
ஏன் எரிகின்றது என்ற சிந்தனை சக்தி தான் பிற்காலத்தில் இயற்கையை குடைய முற்பட்டது. விளைவு. கடவுள். இருட்டை போக்க முதல் முதலில் வெளிச்சம் தந்த அந்த மின்னல் தான் கடவுள், அதற்க்கு தன உடலை தந்த மரம் கடவுள், மலை கடவுள், நதி கடவுள், மழை கடவுள்... இப்படிதான் முதல் கடவுள் தோன்றினான். இயற்கையே கடவுள் என்றான பிறகு அவனை போற்ற வேண்டாமா, வழிபட நெறிமுறைகள் வேண்டாமா. உண்டு, கடவுளை கண்டுபிடித்த அந்த முதல் மனிதன் தான் அதற்கும் விஞ்ஞானி. இப்படி ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து கண்டுபிடித்தவனுக்கு "ரிஷி" என்று பெயர். "ரிஷி"என்றால் "பார்பான்" என்று பொருள். "பார்பனன்" என்பதும் இதன் திரிபு தான். எப்படி இந்த சிந்தனைகளுக்கு கட்டு பட்டு வாழ்வது என்பது வந்த போது தோன்றியது வேதம். வேதத்தின் உட்பொருளே "இந்த உலகமே தெய்வம்தான். நாம் வாழ, தெய்வத்தை பயன்படுத்த வேண்டும்." இப்படிதான் ஆர்ய இனத்தவரிடம் வேதம் தோன்றியது. நினைவிருக்கட்டும். இன்னும் மதம் தோன்றவில்லை. வேதம் பிறந்த பின்பு தான் சமூக அமைப்பே பலப்பட்டது. காரணம் உண்டு. கலாச்சாரத்தை கட்டுபடுத்த ஒரு ஒரு கட்டுமானம் தேவை. கட்டி காக்க ஆள்பவன் தேவை. அவனுக்கு பணிவிடை செய்ய பாட்டாளி தேவை, இதையெல்லாம் கட்டு படுத்த வேத நெறிமுறைகள் தெரிந்த ஒரு குரு தேவை.

பிரித்தார்கள் மூன்றாக, ஆள்பவன் சத்ரியன் ஆனான், ஆளபடுபவன் வைசியன் ஆனான்,இவர்களை நெறிபடுதுபவன் பிராமணன் ஆனான். இப்படி தோன்றிய பிரிவினகளுள், சத்ரியன் ஆள்வதற்கும், வைசியன் உழைப்பதற்கும் சென்ற பிறகு வேதத்தை கட்டி காப்பது யார். அதை நாமே செய்வோமே என்று தான் அது பிராமணர்கள் கைக்கு போனது.
இப்படி வேதன் பிராமணர் கைக்கு போனதும், அறமும், கர்மாக்களும் செவ்வனே நடந்து வந்ததால் வேத மதம் பிராமண மதம் என்று ஆனது. ஆர்ய மதம், வேதம் மதமாகி, வேத மதம் , பிராமண மதமாகி இந்தியாவிற்குள் அவர்கள் அடியெடுத்து வைக்கும் போது இங்கு 450 இனங்கள் பக்கம் இருந்தது. ஒவ்வொன்றும் ஒரு மதம் போல தான். அப்படியா அப்போ இந்து மதம் இங்கு தோன்றவில்லையா என்று கேட்காதீர். நிச்சியமாக இங்கு தோன்றவில்லை. ஆர்ய மக்கள் வாழ்ந்த இடம் சிந்து சமவெளி. அது பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் உள்ளது.

அப்படிஎன்றால் ஹிந்து மதம் என்று எவ்வாறு பெயர் வந்தது. அதையும் இப்போதே சொல்லிவிடுகிறேன். சிந்து நாகரீகத்தின் பக்கத்தின் அன்று இருந்த இன்னொரு நாகரீகம் மெசபடோமியா. அவர்களுக்கும் சிந்து நாகரீகத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. கடவுள் விஷியத்தில் அது இன்னும் அதிகம். ஆனால் மொழியில் அவர்களுக்கு ஒரு ஒற்றுமை இருந்தது. ஹிந்தி சமஸ்கிருதத்தில் ஒலிக்கும் "ச" என்ற வார்த்தையை அவர்கள் "ஹ" என்று ஒலிக்கும். சிந்து என்பது ஹிந்து என்றானது. அது மட்டும் அல்ல. இந்த வார்த்தையை official ஆகா நாம் பயன் படுத்தியதே நகைச்சுவையான ஒன்று. ஹிந்து மதம் என்ற பேர் நமக்கு நாமே வைத்து கொண்டது அல்ல. வெள்ளைகாரர்கள் நமக்கு வைத்த பெயர். நமக்கு முதல் முதலில் வைத்த பெயர் zindoo உச்சரிப்பு தவறி அது ஹிந்து என்று கோப்புகளிலும் இடம் பெற்றது. சொல்ல போனால் இது ஒரு chirstian நமக்கு சூடிய பெயர். எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய வேதங்கள், மநு ஸ்மிருதி, சாஸ்திரம், புராணம் இவைகளில் இருந்து ஒரு பெயர் கூட இந்த மதத்திற்கு சூட்ட முடியவில்லை. ஏன் என்று கேட்காதீர். நான் முன்னமே சொல்லியிருக்கிறேன் அவ்வளவு பெரிய வேத நூலில் ஒரு இடத்தில கூட ஹிந்து என்ற ஒரு வார்த்தை கிடையாது.

சரி எதோ ஒரு மதம் தோன்றியாயிற்று புத்தர் எப்போது வந்தார். அவர் ஒரு அரசரமே, அதாவது சத்ரியர். அவர் எப்படி ஒரு மதத்தை தோற்றுவித்தார். எப்படி துறவியானார். இதற்கும் வரலாற்றில் மிக பெரிய பக்கம் உண்டு. பிராமண மதத்தின் எத்ர்பாளர்களில் புத்தர் முதல் ஆளாக நிற்கிறார். கௌதமானாக பிறந்து ஒரு நாட்டின் அரசனாக வாழ்ந்து வந்த புத்தர் எவ்வாறு துறவியானார் என்பதே கொஞ்சம் சிக்கலான ஒன்று. கூறுகிறேன். புத்தர் துறவறம் பூண்டுவத்ர்கு முன்பே அவர் பிராமண மதத்தின் கோட்பாடுகளுக்கு எதிராக தான் பிரசாரத்தை மேற்கொண்டார். காரணம் உண்டு. வேதங்களை முழுமையாக அறிந்து அத்யயனம் செய்வது என்பது பெரிய வேலை. அது மற்றவர்களின் சிறந்த பார்வைக்கு புரியும் விதத்தில் அதை மறு உருவாக்கம் செய்யப்பட்டது தான் மநுஸ்ம்ருதி. ஹிந்து மதத்தின் கோட்பாடுகள் அதன் வாழ்வு முறைகளாக கூறபடுவது முக்கால்வாசி இந்த மநுவிலிருந்து தான் வந்தது. அதாவது மூட பழக்கங்கள் என்று பொதுவாக கூறப்படும் பல மநுவிலிருந்து தான் உண்டானது.
புத்தர் போர்களத்திற்கு வந்ததற்கான காரணங்களுள் ஒன்றை விளக்குகிறேன். கொஞ்சம் முகம் சுளிக்கும் படி தான் இருக்கும். அனால் அதை பற்றிய ஸ்லோகமே இப்படி தான் இருக்கிறது. பிராமணர்கள் சொன்னார்கள், ஊரெல்லாம் நலமாக இருக்க, நாமெல்லாம் வலமாக இருக்க, அக்னி வளர்க்க வேண்டும், அதில் பசுக்களை பலியிட வேண்டும் என்று. இங்கு ஒன்றை சொல்ல வேண்டும். பசு என்பது நாம் இப்போது அழைக்கும் படி மாடு என்றல்ல, பசு என்பது எதாவது நாலு கால் மிருகதையே குறிக்கும். பின்னாளில் அது பசு என்றாக மாறியது வேறு கதை. யாகம் வளர்த்து அதில் பசுக்களை பலியிட்டு புண்ணியம் பெறுவது தான் இப்போதைய வேலை. யார் யாகம் வளர்ப்பது. ? அதையும் நாங்களே செய்கிறோம், எங்களிடம் தான் வேதங்கள் இருகின்றதே,மநு இருக்கின்றதே அதில் இதை பற்றி எல்லாம் கொடுக்கப்பட்டுள்ளன என அழுத்தமாக சொன்னார்கள்.பிராமணர்கள் மந்திரம் சொல்வது யாருக்கும் புரியவில்லை. காரணம் அப்போது மக்களிடையே இருந்த மொழி பிராக்ருத மொழி. சமஸ்கிருதம் வேததிர்க்காகவே உருவானது. இந்த ஒரு சமயத்தில் தான் புத்தர் அந்த கொடுமையும் ஆபாசத்தையும் கண்டு கொதித்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


