வெள்ளி, 3 நவம்பர், 2017

எது சுயநலம்??? யார் சுயநலவாதி???










எம்மத்தியில் பரவலாக பேசப்படும் ஒரு விடயம். ஆனால் இதுவரையில் அதன் ஆளம் புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றனவா என்றால் தெரியாது. சுயத்தைப் பற்றி சரியாக புரிந்துகொண்டால்தானே யார் சுயநலவாதி என்ற வினாவுக்கு விடைகாண முடியும். இப்படித்தான் எம்மில் பலர் முக்கியமான விடயங்களை விட்டு முக்கியமல்லாத விடயங்களுக்கு அதிக முக்கியத்துவத்தினை அளித்துவிடுகின்றோம். காரணம், எமக்கு புரிதலில் ஓட்டை ஒடிசல்கள் நிறையவே இருக்கின்றன என்பதனை நாம் அதிக நேரங்களில் மறந்துவிடுகின்றோம். எமது ஓட்டை ஒடிசல்களை நாம் புரிந்து கொண்டாலும் சுயநலவாதி யார் என்ற வினாவுக்கு சரியாக அல்லது அச்சொட்டாக விடையளிக்க முடியாதுதான் என்பது வேறுவிடயம். இங்குதான் பிரச்சினையே எழுகின்றது.

அதாவது, மனிதனாக பிறந்துவிட்டால் அங்கு சுயநலம் இருந்தே தீரும். இதில் எந்தவொரு சந்தேகமும் எனக்கில்லை. நான் நன்மையான காரியம் ஒன்றினைச் செய்தாலும,; தீயன பலவற்றுக்கு தர்மகர்த்தா வேலை செய்தாலும் அதன் பின்னால் சுயநலம் இருந்தே தீரும். ஆனால் நான் மற்றவர்களிடம் இருந்து எப்படி பொதுநலத்தை மட்டும் எதிர்பார்க்க முடியம். இதுதான் பிரச்சினைக்குரிய வினா? இவை இரண்டிற்கும் மத்தியில் ஒரு தெளிவான கோட்டை உங்களால் தெளிவாக காட்ட முடியுமானால் நீங்கள் உண்மையில் சுயநலவாதியில்லை என்று என்னால் கூறமுடியும்.

நீங்கள் மற்றவர்களுக்கு கிடைப்பதனையெல்லாம் வாரி வழங்குகின்றீர்கள், கேட்டவர்களுக்கெல்லாம் உதவுகின்றீர்கள், இரவுபகலாக உதவுகின்றீர்கள், கவலையில் அவர்கள் வாடுகின்ற போது அவர்களுக்கு ஆறுதல் தருகின்றீர்கள், துன்பங்கள் துயரங்கள் அவர்களுக்கு ஏற்படுகின்ற வேளை அவர்களை உங்களுடைய குடும்பத்தினரை போன்று அரவணைக்கின்றீர்கள், மேலும் இப்படியெல்லாம் உங்களுடைய உதவிகள் நீண்டுகொண்டே செல்கின்றதென்றால் இதற்கு காரணம் என்ன? என்னைப் பொறுத்தவரை சுயநலம்தான். ஏனெனில் அவற்றிலிருந்து நீங்கள் பிரதிபலன்கள் அல்லது பலாபலன்கள் எதனையும் எவரிடமிருந்தும் எதிர்பார்த்திருக்கவில்லை என உங்களால் உறுதியாக கூறமுடியுமா?

இதேவேளை, நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவது கிடையாது, மற்றவர்களை சந்திந்தால் உங்களுடைய வாயிலிருந்து வருகின்ற அனைத்தும் பொய்கள்தான், உங்களுடைய பிழைப்பே மற்றவர்களை ஏமாற்றுவதும், அவர்களை ஓட்டாண்டியாக நடுத்தெருவில் விட்டுவிடுவதும்தான், மற்றவர்கள் சந்தோசத்தில் இருக்கின்ற வேளை அவர்களுடன் ஒட்டி உறவாடுகின்றீர்கள், அவர்களுக்கு ஒரு கஷ்டம் வருகின்ற போது சூசகமாக விட்டும் விலகி விடுகின்றீர்கள், அவர்களுடன் உறவாயிருக்கின்றீர்கள், நீங்கள் ஒரு உயர் இடத்தை அடைகின்றபோது அவர்களை விட்டும் தூர ஓடிவிடுகின்றீகள் அல்லது உங்களுடைய தேவைகள் நிறைவேறிவிடுகின்ற வேளையில் அவர்களை கைகழுவி விட எத்தணிக்கின்றீர்கள் என்றால் இதெற்கெல்லாம் காரணம் நான் முன்பு கூறியதைப் போன்றே சுயநலம்தான்.

இவைதான் மனிதனில் பொதுவான இயல்பு. இவைகளுக்கு மத்தியில் சிலர் அவதியுறுவதற்கு காரணம் அவர்கள் இதனால் ஏமாந்துவிடுகின்றனர். மறுபுறத்தில், இவைகளை இந்த உலக வாழ்வில் நாம் முற்றாக அழித்தொழித்துவிட்டு வாழ முடிவெடுப்போமானால் எம் ஆயுள் காலத்தை முற்றாக வீணடித்த பெருமை எமக்கு மட்டும்தான் என்பதில் எந்த சந்தேகமும் இருக்காது. நாம் நொந்து நோய்வாய்ப்பட்டு இருக்கின்ற வேளைகளில் மற்றவர்களை நாம் சுயநலவாதி என்று பச்சை குத்தி விடுகின்றோம். இதன் போது நாம் மற்றவர்களுடைய தேவைகள், உணர்வுகள், அவர்களுடைய சூழ்நிலைகள் எவ்வாறிருந்தன என்பதனைப் பற்றி சற்றேனும் கவலைப் பட்டதே கிடையாது. எனவே, இந்த மாத்திரத்தில், நாமும் சுயநலவாதிகள்தான். நாம் மற்றவர்களை பற்றி கவனத்தில் கொள்ளவில்லையே! 

மறுபுறம் நாம் அதிக சந்தோசமாக, குதூகலமாக எமது பொழுதுகளை கொண்டிருக்கின்ற வேளை மற்ற எல்லோரையும் எமது சொந்தங்களாக, நண்பர்கள் கூட்டங்களாக தீர்ப்பிட்டுக் கொள்கின்றோம். ஆனால் அவை நெடுநாளைக்கு நிலைப்பது கிடையாது. ஏனெனில் எமக்கு சந்தோசம், குதூகலம் என்பன அதிக நாளைக்கு நீடிப்பது கிடையாதே!

வாழ்க்கையில் எமாற்றம் என்பதுதான் பலரை நோந்து நோகடிக்கச் செய்கின்றது. மனிதருக்கு இருக்கின்ற நியாயத்திற்கு அப்பால் தீர்ப்பிடும் இயல்பினைத் தோற்றுவிப்பதும் இந்த மோசமான ஏமாற்றங்கள்தான். சிலர் கூறுவார்கள் 'இந்த உலகில் ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்' என்று. இது ஒரு குறுகிய சிந்தனை என்பதனால் நான் அதனை ஆழமாக சென்று நோக்க கருதவில்லை. இங்கு ஏமாற்றுபவர்கள் ஏமாறுபவர்கள் என்று உண்மையில் இரு வகுப்பார்கள் கிடையாது. உலகில் அவ்வாறு இறைவன் படைத்திருப்பதற்கோ அல்லது உலக இயக்கத்திற்கு அவ்வாறான வகுப்புக்களின் அவசியமோ என்னைப் பொறத்தவரையில் சாத்தியமே கிடையாது. எனது கருத்தில் இவ்வுலகில் வாழ்கின்ற மனிதர்கள் யாவரும் ஒன்றில் எமாற்றுபவர்களாக அல்லது ஏமாறுபவர்களாக இருக்க வேண்டும். 

எனது விரிவுரையாளர் ஒருவர் இருக்கின்றார். அவரிடம் நான் பல கருத்துக்களை கற்றுக்கொள்ள வாயப்பு கிடைத்தது. 'நாம் நம்பினால்தான் ஏமாறுவோம்' என்று அவர் அடிக்கடி கூறுவார். ஆக, நாம் எதனையும் நம்பினால் ஏமாறத்தான் வேண்டும், அத்துடன் ஏமாற்றத்திற்கு தயாராக இருப்பது எமக்கு அவசியமான ஒன்று.' அப்படி நாம் தயாராக இருப்போமானால் அது எமக்கு எந்தவொரு தீங்கினையும் இழைக்காகது என்பதுடன் யதார்த்ததத்தில் அது எமக்கு கிடைத்த ஒரு ஏமாற்றமாகவும் இருக்காது. அனுபவித்துப் பாருங்கள் புரியும்.  நாம் எதிலும் நம்பிக்கை வைப்பது தவறல்ல. ஆனாலும், நாம்தான் அதில் ஏமாறமாட்டோமே என்று எமக்குள்ளேயே எம்மைப்பற்றி தீர்ப்பிட்டுக் கொள்கின்றோமே அதுதான் தவறு. மாறாக நீங்கள் குறித்த விடயத்தில் அதிக நம்பிக்கையுடன் அல்லது குறித்த நபரில் அதிக ஆழ்ந்த நம்பிக்கை வைத்து கொண்டாடினீர்களாயின் இறுதியில் துன்பத்தை சுவைக்க நேரிடும். ஆனால் ஏமாறாமலிருக்க எந்த அளவு உங்களுடைய நம்பிக்கை குறித்த விடயதானத்தில் இருக்க வேண்டும் என்று கூறும் அளவுக்கு எனக்கு அனுபவம் பத்தாது. அதனைப் பற்றி நான் கூற நீங்கள் கேட்க வேண்டுமானால் சில காலம் பொறுத்திருங்கள், நானும் ஏமாறவேண்டிய விடயங்கள் இன்னும் பல இருக்கின்றன.

இப்படி நீங்கள் வாழக் கற்றுக் கொண்டாலும் உங்களுக்கு பிரச்சினை முடிந்திடவில்லை. மனிதர்களிடத்தில் பொதுவான இயல்பொன்றிருக்கின்றது. அதாவது மனிதர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும், இப்படி நடந்தால் இப்படித்தான் இருப்பார்கள், இப்படி அவர்கள் இருக்கவில்லை அதனால் அவன் முன்பு இப்படி இருந்தது பொய் என்றெல்லாம் ஊகித்தவைகளைக் கொண்டு தீர்ப்பு வழங்கும் பழக்க தோசம்தான் அவை. இவைகளினால் அவர்கள் எமக்கும் ஏதாவது பட்டமளிப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்துவிடுவார்கள் என்பது தவிர்க்க முடியாதது. அதாவது, உங்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு அதனை நீங்கள் அவ்வளவு கருத்தில் கொள்ளாது விட்டு விட்டு, பட்ட கவலைகளை துடைத்தெறிந்துவிட்டு நீங்கள் கவலையேதும் இல்லாமலிருந்தால் அது இவர்களுக்கெல்லாம் அசாதாரணமாக தோன்றும். இதன் போது, இவன் என்னடா இவ்வளவு நடந்தும் ஒன்றுமே நடக்காதவன் போன்று இருக்கிறான், நடிக்கிறான், இவன் இவ்வளவு காலமும் நடந்து கொண்டது வெறும் பசப்புடா. என்றெல்லாம் இவர்கள் கூறலாம். கவலையே இல்லை. ஊங்களுக்கு தெரியும்தானே இவர்கள் இப்படித்தான் கூறவார்கள் என்று.

எனவே, நாம் ஏமாற்றத்திற்கு எப்போதும் தயாரக இருக்க வேண்டும். மறுகோணத்தில் ஒன்றை நீங்கள் மனத்தில் நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு விடயத்தில் ஏமாறாமல் தப்பித்து விட்டீர்கள் என்று தெரிந்து கொண்டால், அதே நேரத்தில், அதே விடயம் தொடர்பாக உங்களுடைய உறவுச் சங்கிலியில் ஏதோவொரு மூலையில் மற்றொருவர் ஏமாந்துவிட்டார் என்பது உறுதி. நீங்கள் ஏமாந்துவிட்டால் உங்களில் மற்றொருவர் தப்பித்துக் கொண்டார் என்பது உறுதி. இங்குதான் வாழ்க்கை என்பதன் தத்துவத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதனை நீங்கள் மனத்தில் பதித்து வைத்துக் கொண்டால் நீங்களும் குட்டையில் இருக்கின்ற மீனும் ஒன்றுதான். திமிங்கிலமாக இருந்தாலும் அல்லது சின்னக் குறுமினி பொட்டியான் குஞ்சாக இருந்தாலும் ஒரு நாள் தூண்டிலுக்கு இரையாகத்தான் வேண்டும். குட்டையென்று நான் கூறியது இந்த வாழ்வைத்தான்.

இதில் நான் திமிங்கிலமா அல்லது பொட்டியான குஞ்சுவா என்று எனக்கு தெரியாது. ஆனால் தூண்டிலில் இரையாக குத்தப்பட்டிருக்கிறேன் என்பது எனக்கு புரிகின்றது.

இன்னும் என்னால் செல்ல முடியாது,
இப்படி என்னால் வாழவும் முடியாது,
நித்தமும் நான் அழுகிறேன்,
என்ன செய்வது? எனக்குத் தெரியாது,
எப்படி மாறுவது? எனக்குத் தெரியாது.

மற்றவர்களுக்கு நான் உதவுகிறேன், ஏன்?
அவர்களால் நான் ஏன் நாறடிக்கப்பட வேண்டும்?
இந்த சுயநலவாதிகளுக்கு மத்தியில் நான் திண்டாடுகின்றேன்.
அவர்கள் என்னை உதைக்கும் வரை,
உதறித் தள்ளும் வரை,
கொன்று தின்னும் வரை,
காத்துக் கிடக்கின்றேன்.

நான் மாறவேண்டும்,
இவர்களுக்கு உதவக் கூடாதெனும்
தீர்மானம் மட்டும் தினமும் எஞ்சிக்கிடக்கின்றன.
அவர்கள் என்னை வேண்டும் வேளை,
என்னால் முடியாமல் போகிறது.
நான் எப்போதும் அவர்களுக்காகத்தான்.

எனக்குத் தெரியும்
அவர்கள் எனது சாவுக்கும் வரமாட்டார்கள்.
அவர்கள் என்னை உபயோகித்துக் கொள்கின்றனர்,
என் மீது அவர்களுக்கு கிஞ்சிற்றேனும் கவலை கிடையாது,
இவையெல்லாம் எனக்குத் தெரியும்.
ஆனாலும் நான் எனக்கு உதவிக்கொள்ள வழியேயில்லை.
நான் எனக்காக வாழ முடியாது,
அது நியாயமும் அல்ல,
நீதியுமல்ல.
எவராவது உதவுபவர்கள் இருந்தால்
நான் அவர்களை இரஞ்சுகின்றேன்,
யாரவது எனக்கு உதவுங்கள்...
இவ்வாறே எனக்குச் செல்ல முடியாது,
நான் மாறவேண்டும்!!!
இவர்கள் ஏன் சுயநலவாதிகளாய் கிடக்கின்றனர்???
அவர்களை மற்றும் சிந்திக்கின்றனர், ஏன்;?
மற்றவர்களின் தேவை அவர்களுக்கு புரிவதில்லை, ஏன்???
இன்னும் அவர்கள் நண்பர்களை வீசி விடுவதென்றாலும்
மற்றவர்களின் கண்களுக்கு நல்லதாக மட்டும் காட்டிக்கொள்கின்றனரே!
அவர்களுக்கு உதவாத,
மோசக்காரர்களை ஆரத்தழுவுகின்றனரே! 
இவர்களால் அவர்களுக்கு எந்த அக்கரையும் இல்லை,
அவர்களின் சாவுக்கு கூட இவர்கள் வரமாட்டார்கள்.
என்ன செய்வதென்று எனக்கு புரியவில்லை.....:'((((

மிகவும் மடத்தனமான கவிதை இது... எனக்குத் தெரியும்:(  
இவைகள் அனைத்தும் எனது வாழ்வின் யதார்த்த நிலை. இவை யாவுக்காகவும் நான் மிகவம் களைத்துப் போய்விட்டதனால் தூக்கி வீசிட எத்தணிக்கின்றேன்.

திங்கள், 23 அக்டோபர், 2017

அமைப்பு சார் ஜனநாயகம்


##############################################
குழு ஆழ்மை கொண்ட  பொது அமைப்பு வீழ்த்தபின் அந்த அமைப்பை கட்டி எழுப்ப புதியதோர் கூட்டு  ஐனநாயக முறை  அல்லது மறைமுக சார்பாளி ஆட்ச்சி முறையில் அவர்களின் சார்பாளிகளைத் (பிரதிநிதிகளைத்) தேர்ந்தெடுத்து . இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பாளர்கள்  நிர்வாக கட்டமைப்பபை உருவாக்கி  அமைப்பு சார்  முக சீரமைப்பு செய்யப்பட்டு,விதிகள் அல்லது யாப்பை உருவாக்கி, பின் பொதுமக்களை அங்கத்துவ  பிரதிநிதித்துவபடுத்தி அதை நேரடி  பொதுசபைக்கு கொடுவரவேண்டும்
ஜனநாயகத்தில் சட்ட சமத்துவம், அமைப்பு சார் அரசியல் சுதந்திரம் மற்றும் சட்ட விதிமுறை ஆகியவை முக்கிய அம்சங்களாக அடையாளம் காணப்பட்டு . இந்த நியமங்கள் எல்லா தகுதியுள்ள அங்கத்துவ பொது மக்களுக்கும் சட்டத்திற்கு முன் சமமாக இருப்பதுடன், சட்டப்பூர்வ செயல்முறைகளுக்கு சமமான அணுகலைக் கொண்டிருக்க்கவேண்டும்  .

உதாரணமாக:-  ஜனநாயகத்தில் ஒவ்வொரு வாக்குக்கும் சமமான எடை உள்ளது. தகுதிவாய்ந்த அங்கத்துவ பொது மக்களின் சுதந்திரம் சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் சுதந்திரம் ஆகியன பொதுவாக ஒரு அமைப்புசாரர் அரசியலமைப்பின் மூலம் பாதுகாக்கப்படவேண்டும்



 பொது மக்கள் அமைப்பு  "மக்களால் மக்களுக்காக நடத்தப்பெறும் பொது அமைப்பு " பொதுவாக ஒரு பொது மக்கள்அமைப்பு அல்லது சங்கம், தங்களின் கருத்துக்களைத் தேர்தலின் மூலம் பதிவு செய்து, தங்கள் நிர்வாக பிரதிநிதிளைத் தேர்ந்தெடுப்பர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக பிரதிநிதிகள்  தனிச்சசையாகவோ அல்லது  மற்ற  நிர்வாக பிரதிநிதிகளுடன்  சேர்ந்து  அமைப்பின் கட்டமைப்பு விதி முறைக்கிணங்க அமைப்பின் முன்னேற்றத்துக்கு வேலை செய்வார்கள்

வெள்ளி, 20 அக்டோபர், 2017

நினைவு கொப்பளிப்பு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், குளோஸ் அப்
கந்தசட்டி கவசம்
இன்னும் மறக்கவில்லை
6 நாள் 6 மிளகு பால் பழம்
காலை 6 மணியில் உன் ராகம்
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு ட ங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து
உன் மொழியில் உன் சுரத்தில்
எனக்கு பிடிக்கவில்லை
உனக்கும் தெரியும்
உன்னால் நான் மறந்ததை
இன்னும் மறக்காமல் இருக்கிறேன்
உன் நினைவுக்காக அப்பா
ஏதோ அப்பா நீ இல்லாத இந்த உலகில்...
உங்களுக்கு பிடித்ததெல்ல்லாம
நினைவுக்கு வருகின்றது !
        -பங்கிரையான் -

வெள்ளி, 6 அக்டோபர், 2017

உருவத்தின் அழகு


எனக்கும் உனக்கும்
முரண்பாடு இல்லை என்றால் 
நாங்கள் தூக்கிய சிவந்த கொடிக்கு 
கேலிக்கை குறைத்திருக்கும்
எங்களுக்கு பல தோழர்களும்
பெண் தோழிகளும் கிடைத்திருப்பார்கள்
வாதிப் பிரதிவாதங்கள் எற்பட்டிருக்காது
நமக்கானவை எமக்கு கிடைத்திருக்கும் !
-பங்கிரையான் -

புதன், 27 செப்டம்பர், 2017

கடவுள் தோன்றிய கதை



சில சமயம் தோன்றும் மதத்தை தோற்றுவித்தவன் யார். வேதங்களும் புராணங்களும் எப்படி தோன்றின. ஹிந்து மதம் என்ன வித்யாசங்களோடு தோன்றியது. எப்படி இப்படி ஒரு முழு பெற்ற மதம் அதன் வேதங்களாலும் வழிமுறைகளாலும் இதனை காலமாய் வந்து கொண்டிருகிறது . திராவிடம் ஆர்யம் என்ற வேறுபாடுகள் மறைந்து எப்படி ஹிந்து என்ற ஒரே குடையின் கீழ் வந்தது. வேதங்களில் எந்த இடத்திலும் ஹிந்து என்ற ஒரு வார்த்தையே கிடையாதே. எப்படி அதிலிருந்து ஹிந்து மதம் என்று வந்தது. மிக விரிவான விளக்கங்கள் சில சமஸ்கிருத வார்த்தைகளுடன் உங்களுடன் பரிமாறி கொள்ள இந்த பதிவுகள் இருக்கும்.

கடவுள் தோன்றிய கதையே வித்தியாசமானது. கற்கால மனிதன் எவனுக்கும் மதம் என்ற ஒன்று இல்லை. அன்றைய உலகம் மிகவும் பயம் நிரந்த மாய உலகமாக இருந்தது. காடுகள். மிருகங்கள். ஆபத்து நிறைந்த ஜந்துக்கள் அவைகளுடன் கொஞ்சம் மனிதர்கள். ஆம். இன்றைக்கு மனிதர்கள் எவ்வளவு பேரோ அவ்வளவு மிருகங்கள், இன்றைக்கு எதனை மிருகங்களோ அத்தனை மனிதர்கள். பகலெல்லாம் சூரியனின் வெளிச்சம், இரவெல்லாம் பயமுறுத்தும் இருட்டு. கடவுள் தோன்றியதே இருட்டு அறையில் தாம். கொடிய மிருகங்கள் மூலம் ஆபத்து. கும்மிருட்டு, பயம் இரவானால் குகைகளினுள் வாசம். பகல் வந்த பின்பு தான் உலகமே தெரியும். அறிவு வளரத மிருகமாய் மனிதன். மத எந்த உயிரினத்திற்கும் இல்லாத ஒரு பாக்கியம் மனித இனத்துக்கு உண்டு. சிந்தை செய்யும் திறன். அன்றைய காடு மனிதனிடமும் இருந்த இந்த சிந்தனாசக்தி தான் கடவுளின் பிறப்பிற்கு மூலம். மலை பெய்து மின்னல் தாக்கி மரங்கள் எறிந்த பொது தான் நெருப்பு என்ற ஒன்றே அறிமுகம். அதில் மாமிசத்தை சுட்டு சாப்பிட்ட பொது தான் சுவை என்பது அறிமுகம். இரவில் மின்னல் தோன்றியதால் ஏற்பட்ட வெளிச்சம் பயத்தை தந்தாலும், அது ஒரு விதத்தில் மனித அறிவை தீமூட்டியது என்பதை மறுக்க முடியாது. ஏன் எரிகின்றது என்ற சிந்தனை சக்தி தான் பிற்காலத்தில் இயற்கையை குடைய முற்பட்டது. விளைவு. கடவுள். இருட்டை போக்க முதல் முதலில் வெளிச்சம் தந்த அந்த மின்னல் தான் கடவுள், அதற்க்கு தன உடலை தந்த மரம் கடவுள், மலை கடவுள், நதி கடவுள், மழை கடவுள்... இப்படிதான் முதல் கடவுள் தோன்றினான். இயற்கையே கடவுள் என்றான பிறகு அவனை போற்ற வேண்டாமா, வழிபட நெறிமுறைகள் வேண்டாமா. உண்டு, கடவுளை கண்டுபிடித்த அந்த முதல் மனிதன் தான் அதற்கும் விஞ்ஞானி. இப்படி ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து கண்டுபிடித்தவனுக்கு "ரிஷி" என்று பெயர். "ரிஷி"என்றால் "பார்பான்" என்று பொருள். "பார்பனன்" என்பதும் இதன் திரிபு தான். எப்படி இந்த சிந்தனைகளுக்கு கட்டு பட்டு வாழ்வது என்பது வந்த போது தோன்றியது வேதம். வேதத்தின் உட்பொருளே "இந்த உலகமே தெய்வம்தான். நாம் வாழ, தெய்வத்தை பயன்படுத்த வேண்டும்." இப்படிதான் ஆர்ய இனத்தவரிடம் வேதம் தோன்றியது. நினைவிருக்கட்டும். இன்னும் மதம் தோன்றவில்லை. வேதம் பிறந்த பின்பு தான் சமூக அமைப்பே பலப்பட்டது. காரணம் உண்டு. கலாச்சாரத்தை கட்டுபடுத்த ஒரு ஒரு கட்டுமானம் தேவை. கட்டி காக்க ஆள்பவன் தேவை. அவனுக்கு பணிவிடை செய்ய பாட்டாளி தேவை, இதையெல்லாம் கட்டு படுத்த வேத நெறிமுறைகள் தெரிந்த ஒரு குரு தேவை.
பிரித்தார்கள் மூன்றாக, ஆள்பவன் சத்ரியன் ஆனான், ஆளபடுபவன் வைசியன் ஆனான்,இவர்களை நெறிபடுதுபவன் பிராமணன் ஆனான். இப்படி தோன்றிய பிரிவினகளுள், சத்ரியன் ஆள்வதற்கும், வைசியன் உழைப்பதற்கும் சென்ற பிறகு வேதத்தை கட்டி காப்பது யார். அதை நாமே செய்வோமே என்று தான் அது பிராமணர்கள் கைக்கு போனது. இப்படி வேதன் பிராமணர் கைக்கு போனதும், அறமும், கர்மாக்களும் செவ்வனே நடந்து வந்ததால் வேத மதம் பிராமண மதம் என்று ஆனது. ஆர்ய மதம், வேதம் மதமாகி, வேத மதம் , பிராமண மதமாகி இந்தியாவிற்குள் அவர்கள் அடியெடுத்து வைக்கும் போது இங்கு 450 இனங்கள் பக்கம் இருந்தது. ஒவ்வொன்றும் ஒரு மதம் போல தான். அப்படியா அப்போ இந்து மதம் இங்கு தோன்றவில்லையா என்று கேட்காதீர். நிச்சியமாக இங்கு தோன்றவில்லை. ஆர்ய மக்கள் வாழ்ந்த இடம் சிந்து சமவெளி. அது பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் உள்ளது.
அப்படிஎன்றால் ஹிந்து மதம் என்று எவ்வாறு பெயர் வந்தது. அதையும் இப்போதே சொல்லிவிடுகிறேன். சிந்து நாகரீகத்தின் பக்கத்தின் அன்று இருந்த இன்னொரு நாகரீகம் மெசபடோமியா. அவர்களுக்கும் சிந்து நாகரீகத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. கடவுள் விஷியத்தில் அது இன்னும் அதிகம். ஆனால் மொழியில் அவர்களுக்கு ஒரு ஒற்றுமை இருந்தது. ஹிந்தி சமஸ்கிருதத்தில் ஒலிக்கும் "ச" என்ற வார்த்தையை அவர்கள் "ஹ" என்று ஒலிக்கும். சிந்து என்பது ஹிந்து என்றானது. அது மட்டும் அல்ல. இந்த வார்த்தையை official ஆகா நாம் பயன் படுத்தியதே நகைச்சுவையான ஒன்று. ஹிந்து மதம் என்ற பேர் நமக்கு நாமே வைத்து கொண்டது அல்ல. வெள்ளைகாரர்கள் நமக்கு வைத்த பெயர். நமக்கு முதல் முதலில் வைத்த பெயர் zindoo உச்சரிப்பு தவறி அது ஹிந்து என்று கோப்புகளிலும் இடம் பெற்றது. சொல்ல போனால் இது ஒரு chirstian நமக்கு சூடிய பெயர். எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய வேதங்கள், மநு ஸ்மிருதி, சாஸ்திரம், புராணம் இவைகளில் இருந்து ஒரு பெயர் கூட இந்த மதத்திற்கு சூட்ட முடியவில்லை. ஏன் என்று கேட்காதீர். நான் முன்னமே சொல்லியிருக்கிறேன் அவ்வளவு பெரிய வேத நூலில் ஒரு இடத்தில கூட ஹிந்து என்ற ஒரு வார்த்தை கிடையாது.

சரி எதோ ஒரு மதம் தோன்றியாயிற்று புத்தர் எப்போது வந்தார். அவர் ஒரு அரசரமே, அதாவது சத்ரியர். அவர் எப்படி ஒரு மதத்தை தோற்றுவித்தார். எப்படி துறவியானார். இதற்கும் வரலாற்றில் மிக பெரிய பக்கம் உண்டு. பிராமண மதத்தின் எத்ர்பாளர்களில் புத்தர் முதல் ஆளாக நிற்கிறார். கௌதமானாக பிறந்து ஒரு நாட்டின் அரசனாக வாழ்ந்து வந்த புத்தர் எவ்வாறு துறவியானார் என்பதே கொஞ்சம் சிக்கலான ஒன்று. கூறுகிறேன். புத்தர் துறவறம் பூண்டுவத்ர்கு முன்பே அவர் பிராமண மதத்தின் கோட்பாடுகளுக்கு எதிராக தான் பிரசாரத்தை மேற்கொண்டார். காரணம் உண்டு. வேதங்களை முழுமையாக அறிந்து அத்யயனம் செய்வது என்பது பெரிய வேலை. அது மற்றவர்களின் சிறந்த பார்வைக்கு புரியும் விதத்தில் அதை மறு உருவாக்கம் செய்யப்பட்டது தான் மநுஸ்ம்ருதி. ஹிந்து மதத்தின் கோட்பாடுகள் அதன் வாழ்வு முறைகளாக கூறபடுவது முக்கால்வாசி இந்த மநுவிலிருந்து தான் வந்தது. அதாவது மூட பழக்கங்கள் என்று பொதுவாக கூறப்படும் பல மநுவிலிருந்து தான் உண்டானது.
புத்தர் போர்களத்திற்கு வந்ததற்கான காரணங்களுள் ஒன்றை விளக்குகிறேன். கொஞ்சம் முகம் சுளிக்கும் படி தான் இருக்கும். அனால் அதை பற்றிய ஸ்லோகமே இப்படி தான் இருக்கிறது. பிராமணர்கள் சொன்னார்கள், ஊரெல்லாம் நலமாக இருக்க, நாமெல்லாம் வலமாக இருக்க, அக்னி வளர்க்க வேண்டும், அதில் பசுக்களை பலியிட வேண்டும் என்று. இங்கு ஒன்றை சொல்ல வேண்டும். பசு என்பது நாம் இப்போது அழைக்கும் படி மாடு என்றல்ல, பசு என்பது எதாவது நாலு கால் மிருகதையே குறிக்கும். பின்னாளில் அது பசு என்றாக மாறியது வேறு கதை. யாகம் வளர்த்து அதில் பசுக்களை பலியிட்டு புண்ணியம் பெறுவது தான் இப்போதைய வேலை. யார் யாகம் வளர்ப்பது. ? அதையும் நாங்களே செய்கிறோம், எங்களிடம் தான் வேதங்கள் இருகின்றதே,மநு இருக்கின்றதே அதில் இதை பற்றி எல்லாம் கொடுக்கப்பட்டுள்ளன என அழுத்தமாக சொன்னார்கள்.பிராமணர்கள் மந்திரம் சொல்வது யாருக்கும் புரியவில்லை. காரணம் அப்போது மக்களிடையே இருந்த மொழி பிராக்ருத மொழி. சமஸ்கிருதம் வேததிர்க்காகவே உருவானது. இந்த ஒரு சமயத்தில் தான் புத்தர் அந்த கொடுமையும் ஆபாசத்தையும் கண்டு கொதித்தார்.

புதன், 31 மே, 2017

யாழ் பொதுநூலகம் இதே நாளில் எரிக்கப்பட்டது.

யாழ் பொதுநூலகம் இதே நாளில் எரிக்கப்பட்டது.


மே 31, 1981 எல்லோருக்கும் நினைவுகளின் படிகளில் அடிக்கோடிடும் என்று யாரும் நினைத்திருக்கவில்லை. அதை அந்த பின்னிரவு சிலரின் தீயா தீய்ந்த எண்ணங்களுக்கூடாக செய்தது. தமிழர்களின் அடையாளமாக் ஆசியாவின் அசைக்க முடியாத நூல்களின் கூடமாக் கல்வியின் திமிராக நிமிர்ந்து நின்ற புத்தகங்களின் ஆலயம் எரியூட்டப்பட்டது. அது மறுநாள் வரை எரிந்து புகைந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.—–யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 34வது ஆண்டு நிறைவுஎனது இந்தக் கட்டுரை ஒரு ஆராய்வாக அமைகிறது – காரணம் நூலக வரலாற்றை நான் அறிந்தவரை நிறைய முரணான தகவல்கள் இருக்கின்றதுபோலத் தோன்றுகிறது! நூலகத்தோடு சம்பந்தப்பட்ட விடயங்களை மாத்திரம் வரலாறாக பதிய முற்படும்போது வேறு சில விடயங்களையும் குறிப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. காரணம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டதாகத் தெரிகிறது! மேலும் வரலாறு எழுதுபவர்கள் தாம் நினைத்த விடயங்களையும் – தமக்குப் பிடித்தமானவர்களைப் புகழ்பாடும் விதங்களில் சில நிகழ்வுகளைத் தவிர்த்தும் சிலவற்றை புதிதாகப் புகுத்தியும் எழுதி எமது வரலாற்றை கொச்சைப்படுத்துவதுபோல நடந்துகொள்வதை பார்த்துக் கொண்டிருக்க முடியாத காரணத்தினாலேயே இக்கட்டுரையைத் தொகுத்து வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டேன். ஏனெனில் யாரும் இவற்றை தொடர்ச்சியாக மறுத்து உரிய நடவடிக்கை எடுக்க தவறியதே உண்மையாகிறது!தமிழ், தமிழர்கள், உரிமை, ஆட்சி என கொக்கரிக்கும் யாருக்கும் வரலாறு என்பது நூல்நிலையத்துடன் சம்பந்தப் பட்டிருக்கிறது என்பதை சொல்லி வைக்க வேண்டியிருக்கிறது, ஆவணப்படுத்தலில் நூல் நிலையங்களின் பெறுமதியை உணர்ந்தவன் நான்! ஆதனால்தான் ஆவணப்படுத்தலின் முக்கிய காரணியான நூல் நிலையமொன்றில் வரலாற்றுப் பதிவு தவறானதாக இருக்கக்கூடாது என்பதில் அதிக அக்கறை கொண்டுள்ளேன். அதிலும் யாழ்ப்பாண பொது சன நூலகம் எம்முடைய ஒரு கௌரவமான சொத்து என்பதால் அதில் அதிகூடிய அக்கறையை எடுத்து என்னுடைய அறிவுக்கு எட்டிய வரை சரியான ஒரு பதிவை – எங்கெங்கே என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும்! எங்கே மறைக்கப்பட்டவை சேர்க்கப்பட வேண்டும்! என்பதை நூலகம் சம்பந்தமாக ஈடுபாடு கொண்டவர்களுக்கு மாத்திரம் சமர்ப்பிக்க இக்கட்டுரைமூலம் விரும்புகின்றேன். இதனை நூலக ஆலோசனைக் குழு மற்றும் நூலகத்தில் அக்கறை கொண்டவர்கள் கொஞ்சம் அவதானத்துடனும் சிரத்தையுடனும் கொள்ளவேண்டும் என பணிவாக வேண்டுகிறேன்.சமயம் சம்பந்தமாகவும் அல்லது அரசியல் மற்றும் நாட்டுநடப்புகள் பற்றி அதிகம் நான் பத்திரிகைகளுக்கு முன்பும் இன்றைய காலகட்டத்தில் ஊடகங்களோடு, இணையத் தளங்களுக்கும் எழுதியிருந்தும் அவை முழுமையாகப் பிரசுரிக்கப்படாத அல்லது முற்றாகவே பிரசுரிக்கப்படாத மனவேதனை ஒருபுறம் – என்னைப்பற்றி அல்லது நான்சம்பந்தப்பட்ட சம்பவங்களை திரிவுபடுத்தி உண்மைக்குப் புறம்பாக செய்திகள் வரும்போதும் விமர்சிக்கும்போதும் நான் எழுதும் பதில்களைக் கூடப் பிரசுரிக்கத் திராணியற்ற சில பத்திரிகைகளுடன் மற்றும் இணையத் தளங்களோடு பிரச்சனைப்பட்டிருக்கிறேன். இதற்காக ஒருமுறை வீரகேசரி ஆசிரியர் பீடத்திற்கு நேரில்சென்று கருத்துத்தர்க்கம் செய்தபோது எனக்குக்கிடைத்த மறுமொழி வெளியே போ (Get Out). இது நடந்தது தந்தை செல்லாவின் சிலை திறப்பு விழாவின் (1999 ஏப்ரல்) பின்னர்.மிகவும் வேதனையான விடயம் யாழ்ப்பாண பொது நூலகத் திறப்பு விழாவுக்கு முன்னர் பத்திரிகைகள் நடந்துகொண்ட முறை என்னை மிகவும் ஆத்திரமடையச் செய்தது. நேரடியாக யாழ் தினக்குரல் பத்திரிகைக் காரியாலயத்திற்குச் சென்று எனது நண்பனிடம் சற்றுக் கோபமாகவே கேட்டேன். ஏன் என்னுடைய செய்தியைப் பிரசுரிக்கவில்லை என்று! அவர் உள்ளே சென்று எனது அறிக்கையை அவர் தொகுத்திருந்த மாதிரியைக் கொண்டுவந்து காட்டினார். வேறொருவருடைய அறிக்கையை போடுவதற்கு என் அறிக்கை பத்திரிகை மேலிடத்தினரால் அகற்றப்பட்டிருந்தது. இவை என்னை மாத்திரமல்ல – உண்மையான செய்திகளை அறிய விரும்பும் வாசகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தது. நடுநிலை தவறிய பெருமை அனைத்துத் தொடர்பு சாதனங்களுக்கும் உண்டு என்றால் அது உண்மைதான்.யாரோ ஒரு சாராரைத் திருப்திப்படுத்த அல்லது துதிபாடவே பத்திரிகையாளர்கள் துணிந்துநின்றார்கள். சிலவேளை குறிப்பிட்டவர்களால் நடாத்தப்படும் விருந்து மற்றும் உபசாரங்களுக்காகப் பத்திரிகை நடத்துகின்றார்களோ தெரியாது. நான் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி அகதியாக சுவிற்சர்லாந்தில் இருந்த காலத்தில் என்நாட்டில் எம்மவர்களுடன் வாழமுடியாது என ஏங்கிக்கொண்டிந்த அதேவேளை நாட்டைக் குழப்பிய பெருமையுடைய பத்திரிகையாளர்கள் பலர் தமது உயிருக்கு ஆபத்து என்று கூறி அரசியல் தஞ்சம் பெற்று சொகுசாக அங்கு வந்து வாழ்ந்ததோடு மட்டுமல்ல அங்கும் தமது பிதற்றல்களை கக்குவதுதான் வேதனை. இதை யாரிடம் சொல்வது? கட்டுரையின் நோக்கத்தை விட்டு வெளியே செல்ல விரும்பாவிடினும், சில முக்கிய திட்டமிட்ட செயல்கள் பற்றி நாம் விழிப்புடன் கவனமாயிருப்பது அவசியமாகிறது!நூலக எரிப்பு நடைபெற்ற காலம் ஒரு தேர்தல் நேரம்! அதுவும் இலங்கையின் வரலாற்றில் ஒரு தமிழ் அரசியற்கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணி நாட்டின் இரண்டாவது அதிகப்படியான பெரும்பான்மைப் பலம்பெற்று எதிர்க்கட்சியாக இருந்த நேரம்! வரலாற்றிலே பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற 1947இல் 3ம், 4ம் இடங்களிலும், 1952 இல் 5, 6ஆம் இடங்களிலும், 1956,1960, 1965களில் 3 ஆவதாகவும், 1970இல் 4, மற்றும் 6ஆவதாகவும், 1977இல் இரண்டாவதாகவும் 4ஆவதாகவும், அதன்பின் 1989இல் 3, 4ஆவதாகவும், 1994இல் 3ஆவதாகவும் 5ஆவதாகவும், 2000, 2001 இல் 4ஆவதாகவும் 6ஆம் ,7ஆம் இடங்களிலும், பின்னர் தற்போது இறுதியாக 2004, 2010களில் 3ஆவதாகவும் வெற்றிபெற்ற தமிழ்க் கட்சிகளின் விபரங்களை அவதானிக்க வேண்டும். 1977 தேர்தலில் அமோகவெற்றிபெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழ இலட்சியத்தை மறந்து பாராளுமன்ற சுகபோகங்களில் மூழ்கியருக்கிறது என இளைஞர்கள் தமது பாதையாக வன்முறையை தேர்ந்தெடுத்த காலம் 1980களில் ஆரம்பமானது. அரசியல் முறை தமிழர் பிரச்சினைக்கு தீர்வாகாது – சாத்வீகம் சரிவராது எனவும் தேர்தல்களைப் புறக்கணிக்க வேண்டும் எனவும் அதிலும் நடைபெறவிருந்த மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் முறையால் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை எனவும் தீவிரவாதப் போக்குடைய இளைஞர்கள் தேர்தலை எதிர்த்த நேரத்தில் – மே 31ஆந்திகதி நாச்சிமார் கோவிலடியில் நடைபெற்ற கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றை குழப்பும் நோக்குடன் ஆயுத இயக்கம் ஒன்று காவலுக்கு இருந்த பொலிசாரை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் ஆரம்பமாகியது அரச படையினரின் யாழ்ப்பாண அழிப்பு அட்டுழியம்.அதனால் ஜுன் முதலாந்திகதி எரியூட்டப்பட்டதே யாழ் பொது நூலகம்.இன்றைய இளம் சமூகத்தில் பலருக்கு வரலாறு தெரியாது – ஏதோ 2009இல் முள்ளிவாய்க்கால் படுகொலைதான் எமக்கு நடந்த ஒரு படுபாதகமான செயல் என்ற ஒரு மாயை இன்றும் பலரிடம் இருக்கிறது. அதற்கு முன்பே 1972இல் குடியரசாகிய நேரத்தில் ஏற்படுத்தப்பட்ட சட்டங்களின் பின் எமது மொழிக்கும் இனத்துக்கும் ஏற்பட்ட அவமானங்கள், அடக்குமுறைகள் போன்றவை விபரமாக எவராலும் நடுநிலையாக எழுதப்படவில்லை. 1974இல் நடைபெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதிநாள் நிகழ்ந்த அனர்த்தங்களின் பின் வலுப்பெற்ற இளைஞர்களின் தீவிரப் போக்கு – அதன்பின் நடந்த சம்பவங்கள் குறிப்பாக 1977 தொடக்கம் 2009 வரையான சம்பவங்கள் முறையாக ஆவணப்படுத்தப்பட வேண்டும். 1981 மே 31 முதல் நாளிரவு முதல் ஜுன் 4ஆந்திகதி வரை நடந்த நிகழ்வுகள் மிக அருமையாக மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது என்ற நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.ஆவணப்படுத்தலில் 1. மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது, 2. யாழ்ப்பாண பொது நூலகம் மீள்விக்கப்பெற்ற கட்டடத் திறப்பு விழா மலர், 3. யாழ்ப்பாண நூல்நிலையம் – ஓர் ஆவணம் – மூதறிஞர் க.சி. குலரத்தினம் 4. யாழ்ப்பாணப் பொது நூலகம் – ஒரு வரலாற்றுத் தொகுப்பு – என். செல்வராஜா 5. யாழ்ப்பாண நூலகம் அதன் சாம்பலிலிருந்து எழுகின்றது – வி.எஸ் துரைராஜா 6 .ஒரு வரலாற்றுக் குற்றம் – ஆகியவற்றையே தமிழில் நான் பார்த்திருக்கும் நூல்கள். இவற்றைவிட சோமீதரனின் எரியும் நினைவுகள் ஆவணப்படம் மிகமுக்கியமானது! இவைகளில் நான்காவதாக குறிப்பிட்ட யாழ்ப்பாணப் பொது நூலகம் என்ற நூலில் பக்கம் 92ல் இரண்டாவது பந்தியில் 4வது வரியில் ‘31.05.1981 அன்று இரவு சிங்களக்காடையர் கும்பலினால்’ என்றும், பக்கம் 100ல் மூன்றாவது பந்தியில் ‘1981 யூன்மாத முதல் நாளின் விடிகாலவேளை மே 31ஆம் திகதியின் நள்ளிரவில்’ என்றும், 102ம் பக்கத்தில் கட்டுரையின் முதல் வரியிலே ‘யாழ் பொது நூலகம் 31.05.1981 அன்று இரவு’ என்றும், 106ல் கடைசிப்பந்தியில் 2ஆவது வரியில் ‘அறிவுப்பெட்டகம் இக்காடையர்களால் 1981மே மாதம் 31ம் திகதி தீமூட்டி எரிக்கப்பட்டது’ என்றும் இருப்பவை தவறான செய்தியாகும்.சோமீதரனின் எரியும் நினைவுகள் ஆவணப்படத்தில் முன்னைய நூலகர் சுலோச்சனா ரகுநாதன் கருத்துத் தெரிவிக்கையில் 9.5.1985 ரொக்கட் லோஞ்சருடன் வந்த இளைஞரொருவரால் கோட்டை தாக்கப்பட்டதைத் தொடர்ந்து இராணுவத்தினர் தாக்குதல்களை மேற்கொண்ட பொழுது தான் ஆணையாளர் சீ.வி.கே. சிவஞானத்துடன் தொடர்பு கொண்டு நூலகத்தினுள் மாணவர்கள் படித்துக் கொண்டிருப்பதாகவும் அவர்களை வெளியேற்ற வேண்டுமெனவும் தெரிவித்ததைத் தொடர்ந்து ஆணையாளர் இராணுவ கொமாண்டருடன் தொடர்பு கொண்டு விபரத்தைத் தெரிவித்த சமயத்தில் உடனடியாக அனைவரையும் அவ்விடத்தைவிட்டு வெளியேறும்படி கூறியதைத் தொடர்ந்து நூலகத்தினுள் இருந்த ஏறக்குறைய 80பேர் வரையில் வெளியேறிய பொழுது கிட்டத்தட்ட மாலை 4.30 மணியாக இருக்கும் எனவும் பின்னர் அன்றிரவு சுமார் 9.30 மணியளவில் பாரிய குண்டுச்சத்தம் கேட்டதாகவும் தெரிவிக்கிறார்.ஆவணப்படுத்தல்களில் யாழ்ப்பாண நூல் நிலையம் சம்பந்தமான தகவல்களில் பிழை இருக்கக்கூடாது என்பதற்காகவே இந்த விடயங்களை நான் தகுந்த ஆதாரங்களோடு முன்வைக்கின்றேன். குறிப்பிட்ட பின்வரும் விடயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.இதை நூலகத்திற்குப் பொறுப்பான மாநகர சபையும், நூலக ஆலோசனைக் குழுவும் கூடிய அக்கறை எடுத்து நடைமுறைப்படுத்த வேண்டும்.1. நூலகத்தின் முன்பாக இருந்த மிக அற்புத வேலைப்பாடுகளைக் கொண்ட யாழ்மங்கையின் சிலை எங்கே என்று முதலில் கண்டறிய வேண்டும். அது எப்போது ஸ்தாபிக்கப்பட்டது என்பதற்கான எந்தவிதமான ஆதாரமும் இல்லை. ஏனெனில் 1968இல் வெளியான மாநகர சபை குடிநல – சுகாதார வாரமலரிலும் 1974இல் வெளியான வெள்ளிவிழா மலரிலும் நூல் நிலயத்தின் படங்களுக்கு முன்னால் எந்தச் சிலையும் இருக்கவில்லை. கடந்த (23.04.2014) நூல் நிலையத்திற்குச் சென்று திரு. என். செல்வராஜா அவர்களின் யாழ்ப்பாணப் பொது நூலகம் – ஒரு வரலாற்றுத் தொகுப்பு என்ற புத்தகத்தைப் பார்வையிட்டபோது ‘நூலகர் நெஞ்சை விட்டகலா நினைவலைகள்’ முன்னாள் பிரதம நூலகர் கலாநிதி வே. இ. பாக்கியநாதன் அவர்களின் கட்டுரையில் 113 ஆம் பக்கத்தில் ‘நூலகராகிய எனக்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். நிறுவப்பட்ட சரஸ்வதி சிலை சில விஷமிகளால் நூலகத்திலிருந்து பெயர்க்கப்பட்டு சுப்பிரமணியம் பூங்காவில் எறியப்பட்டது.இச்சிலை பின்னர் அங்கு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டது. அதேபோல் வேறொரு சரஸ்வதி சிலை நூலக முகப்பில் இன்றும் காட்சியளிக்கின்றது’ என்றிருக்கிறது! அதைத் தொடர்ந்து தனக்கு ஏற்பட்ட ஒரு மனக்குமுறலை எழுதுகிறார். அதில் ஆணையாளருக்கும் நூலகருக்குமிடையில் ஏற்பட்ட பிரச்சினை தெரிகிறது. இதை நான் குறிப்பிடுவது ஏனெனில் இந்தக் கதையில் சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளும் இன்றும் தொடர்ந்து கொண்டு இருப்பதனால்தான்! இதில் அவரும் சிலையை சரஸ்வதி என்றே சொல்கிறார். ஆனால் அது சரஸ்வதியின் சிலை அல்ல. யாழை மீட்டும் ஒரு மங்கை! அவர் குறிப்பிட்ட சிலை இன்றும் சுப்பிரமணியம் பூங்காவினுள் இருப்பதையும் அதேபோல முதல்வராயிருந்த அல்பிரட் துரையப்பா அவர்களின் குடும்பத்தவர்கள் இன்றும் அந்த யாழ். மங்கையின் சிலையை ஏனோ நினைவில் கொண்டு பண்ணைப் பாலச் சந்தியில் ஒரு புதிய சிலையை திறந்து வைத்ததும் கவனிக்க வேண்டியதே!2. யாழ்ப்பாண நூல் நிலையம் ஓர் ஆவணம் என்னும் மூதறிஞர் க.சி.குலரத்தினம் அவர்களின் புத்தகத்தில் பக்கம் 88ல் குறிப்பிட்ட அமெரிக்கரின் நன்கொடைப்பணம் சம்பந்தமான தமிழில் பொறிக்கப்பெற்ற நினைவுக் கல்லுக்கு என்ன நடந்தது! (யாரும் இதைப்பற்றி அக்கறைப்பட்டதாகத் தெரியவில்லை) மேலும் அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட 2 மிகவும் நகைச்சுவையான விடயங்களையும் குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கும்! ஏனெனில் கடந்த (23.04.2014) நான் வாசித்துக் கொண்டிருந்த மேசையில் யாரோ ஒரு தம்பி தன் பெயரை பதித்திருந்தார். அதை வாசித்துக் கொண்டிருந்த பொழுது பார்த்தபடியால் குறிப்பிடத் தோன்றியது.அதாவது அங்கே வாசிக்கச் சென்ற இளைஞர் இருவர் ஒருவர் பின் ஒருவராய்உட்புகுந்து ஹிட்லர், முசோலினி என்று கையொப்பமிட்டு அமைதியாகப் படித்துவிட்டு வெளியேறினார்கள். ஹிட்லர், முசோலினியின் கையொப்பங்களைக் கண்டதும் நூலகருக்கு வெயர்த்துக் கொட்டியது. தன் கண்காணிப்பில் இப்படி நடந்ததே என்று கண்கலங்கினார்.எனினும், சித்தங் கலங்காது ஹிட்லரையும், முசோலினியையும் எதுவிதத்திலும் கண்டு பிடிப்பதற்கு வழிவகுத்தார். மூன்றாம் நாள் இருவரும் அகப்பட்டுக் கொண்டனர். அவர்களுக்குத் தண்டனை விதிப்பதற்கு வேறுவழியில்லாமையினால் அவர்கள் மண்டபத்துக்குள் கால்வைத்தலாகாது எனத் தடை விதித்தார். அவர்கள் பெயர்களை அறிந்து அறிவித்தல் பலகையில் தடையுத்தரவை எழுதி ஒட்டியிருந்தார். இளைஞர் இருவரும் அதன்பின் அந்தப்பக்கம் தலைகாட்டவே இல்லை. அக்காலத்துச் சிட்டாசாரம் என்னும் ஒழுக்கம் அத்தகையது.ஆங்கிலத்தில் ஈசிசெயர் என்றும் சோபா என்றும் வழங்கும் நீண்ட நாற்காலிகள் வயது முதிர்ந்தவர்களுக்கு, வசதிக்காக அங்கே இருந்தன. ஒரு நாள் இளைஞன் ஒருவர் அதிலே சாய்ந்து படுத்துப் படித்தபின், புத்தகத்தை நெஞ்சிலே உறங்க வைத்துவிட்டுத் தானுறங்கி குறட்டையும் விட்டபடிக் கிடந்தார்.காலை, நண்பகல், மாலை ஆகிய முப்பொழுதுகளிலும் நேரில் சென்று மேற்பார்வை செய்து வந்த நகரபிதா சாம். ஏ. சபாபதி அவர்கள் உடனடியாக அலுவலகஞ் சென்று பணியாட்களை அனுப்பி உறங்கியவரைத் தட்டியெழுப்பி, நாற்காலிகளையும் அப்புறப்படுத்திவிட்டார்.அதன்பின் வயது முதிர்ந்த ஓய்வூதியக்காரரும் நின்றும் இருந்தும் படிக்க வேண்டியவராயினர்.இதை நான் இங்கே குறிப்பிடுவதற்கு காரணம் – படிக்கச் சென்று நூலகத்தில், பலரும் காலை மேசைமேல் வைத்தும், அருகிலிருக்கும் கதிரைமேல் வைத்தும் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொள்வதை பலதடவைகள் நேரில் பார்த்திருக்கிறேன். கோவில் என்று எண்ணும் எம்போன்றோருக்கு வருத்தத்தை ஏற்படுத்தும் என அவர்கள் உணர்ந்து, தம்மைத் திருத்தி, வாழ பழகவேண்டும்.3. நூலகம் எரிக்கப்பட்ட சம்பவம் 01.06.1981இல் நடந்ததுதான் உண்மை! யாழ்பாணத்தில் அசம்பாவிதங்கள் 31.05.1981 ஆரம்பிக்கப்பட்டிருப்பினும் எமது கல்விக் கோவில் எனத் திகழ்ந்த – எமது பொது சன நூல் நிலையம் 1981 ஜுன் மாதம் முதலாந் திகதி திங்கட்கிழமையே எரியூட்டப்பட்டது! ஆனால் பெரும்பாலானோர் மே 31இல் எரிக்கப்பட்டதாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்! இது தவறு!4. 1981இன் பின்னர் 3 தடவைகள் அது பாரிய தேசதத்திற்குள்ளாகியிருக்கிறது! 1. 1985இல் மே மாதம் 3 திகதிகளில் சம்பவங்கள் இடம்பெற்றதாக தகவல்கள் சொல்கின்றன.அ. சோமீதரனின் எரியும் நினைவுகளில் பதிவிலிருக்கும் 9ஆந்திகதி மாலை.ஆ. சி.வி.கே. சிவஞானம் அவர்கள் குறிப்பிடும் 10ஆந்திகதிஇ. 11ஆந்திகதி நூலகம் தகர்க்கப்பட்ட செய்தி 12ஆந்திகதி ஈழமுரசில் பிரசுரமாகியிருக்கிறது!2. 24.08.1986 இல் ஷெல் தாக்குதலுக்குள்ளானது!3. 15.05.1987இல் எரிக்கப்பட்டது!5. 1981இல் எரிக்கப்பட்டு அதன்பின் பல தடைவ தாக்குதலுக்குள்ளாகி சேதமடைந்த நூல் நிலையம் சந்திரிகா அரசினால் மீள புனரமைக்கப்பட்டு 14.02.2003ஆம் திகதி திறக்கப்படுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டு அதற்கான அழைப்பிதழ்களும் அச்சிடப்பட்ட நிலையில் 12ஆந்திகதி நூல் நிலையத்தை திறக்கக்கூடாது என கோரிக்கைகள் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து 13ஆந்திகதி நடைபெற்ற விசேட கூட்டத்தில் உறுப்பினர்கள் பதவிவிலகியதுடன் நூல்நிலையத் திறப்பு விழாவும் இரத்துச் செய்யப்பட்டது! 13ஆந்திகதி நள்ளிரவு நூலகத் திறப்புகளும் காவலாளிகளிடமிருந்து அபகரிக்கப்பட்டன. 2003.02.14 பத்திரிகைகள் அனைத்திலும் நூலகத் திறப்பு விழா ரத்து என்றும், மேயரும் உறுப்பினர்களும் பதவி துறப்பு என்ற செய்திகள் வந்தபின் – மிக முக்கியமான வரலாற்றுத் தவறாக நூல் நிலையத்தின பிரதான வாசலின் இடது புறத்தில் காணப்படும் 14.02.2003இல் நூலகம் திறக்கப்பட்ட செய்தியையுடைய நினைவுக்கல் 7 வருடங்களின் பின் 2010இல் பொருத்தப்பட்டது. உடனடியாக இக்கல் அகற்றப்பட வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்! காரணம் அக்கல்லில் எனது பெயரும் இருக்கிறது. நடைபெறாத – அதுவும் என்னை சம்பந்தப்படுத்தி செய்திகள் வந்த ஒரு நிகழ்வு இன்று நடந்தது என இருக்கையில் நான் கோபம் கொள்ளுவதில் ஒரு அர்த்தம் இருக்கத்தானே செய்யும்? யாராவது இதை மறுப்பார்களா? எந்தத் திகதியில் திறப்புவிழா நடைபெற்றதாக சொல்லப்படுகிறதோ அந்த நாள் வீரகேசரிப் பத்திரிகையின் முற்பக்கத்தில் அதாவது 14ஆந்திகதி வெள்ளிக்கிழமை ‘ …யாழ் மாவட்ட அரசியல் பிரிவு பொறுப்பாளர் இளம்பரிதி அங்கு பிரசன்னமானார். அவரை வரவேற்ற மேயர் பின்னர் அவரை தனது அலுவலக அறைக்குள் அழைத்துச் சென்றார்.உறுப்பினர் முகுந்தனும் இவர்களுடன் சேர்ந்துகொண்டார். மூவரும் பூட்டிய அறைக்குள் சில நிமிட நேரம் உரையாடினர். மாநகர ஊழியர்கள் யாரும் உள்ளே புகுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. ..’ என்றுள்ளது. பெப்ரவரி 23 – மார்ச் 1 திகதி தினமுரசுப் பத்திரிகையின் 5ஆம்பக்கத்தில் வெளியான ‘மூடிய அறைக்குள் நடந்த உண்மைகளைத் திறக்கிறார் கந்தையன்’ என்ற மேயரின் பேட்டியில் முகுந்தனுக்கும் இளம்பரிதிக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் நடந்தது. ஒரு கட்டத்தில் இளம்பரிதி தனது கதிரையைவிட்டு வேகமாக எழுந்து தனது கோபத்தைக் காட்டினார் என்று கூறியுள்ளார்.ஆங்கிலத்தில் 17ஆந்திகதி த ஐலண்ட் பத்திரிகையிலும் பல்கலைக்கழக ஆசிரியர் குழுவின் அறிக்கையிலும் இவ்விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும் இன்றுவரை என்னிடம் யாரும் என்ன நடந்தது என வினவவுமில்லை. நான் வெளிப்படுத்தவுமில்லை. ஆனால் இந்தச் சம்பவத்தின் பின்னர் அடுத்தநாள் 15ஆந்திகதி ஈபிஆர்எல்எப் உறுப்பினர் சுபத்திரனின் அறிவுறுத்தலுக்கமைய நாம் மனித உரிமைகள் கண்காணிப்பகம், மற்றும் ஐ.நா. சபை அலுவலகம், போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரிடம் இதுபற்றி ஒரு முறைப்பாட்டைத் தெரிவித்திருந்தோம். இதன்பின் நூலகம் திட்டமிட்டபடி திறக்கப்படாததைத் தொடர்ந்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் நூல் நிலையத்திற்கு ஆயிரம் புத்தகங்களை வழங்கி கௌரவிக்க ஒரு நிகழ்வை 24.03.2003இல் ஏற்பாடு செய்தது. இராஜினாமாச் செய்த அத்தனை உறுப்பினர்களையும் இந்நிகழ்வில் பங்குபற்றவும் ஏற்பாடுகள் செய்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்திருந்தது.6. நூலகத்தில் முன்பிருந்த அனைத்து நினைவு நடுகல்கள் வெள்ளைக்கற்களால் ஆனவை.அதாவது நூலகம் 1981இல் எரிக்கப்பட முன்னர் அதற்கு ஆதாரமாக இப்போது இருப்பவை பிரதான கட்டடத்திற்கு வெளியேயுள்ள 3 நினைவுக் கற்கள். 5 அடிக்கற்களில் முன்வாசலில் இருக்கும் முதல்வர் சாம் சபாபதி அவர்களது பெயர் பொறிக்கப்பட்ட கல் காணாமற்போயிருக்கிறது. அது புதிதாக கறுப்புக் கல்லினால் செய்து வைக்கப்பட்டுள்ளது.வண. பிதா லோங் அடிகளாரின் கல் மாற்றப்பட்டிருக்கிறது. அவரது உருவச் சிலையின் அடியில் பதிக்கப்பட்ட பழைய நினைவு நடுகல் அகற்றப்பட்டு புதிதாக வைக்கப்பட்ட கல்லின் எழுத்துக்கள் இக்கட்டுரை எழுதப்படும்வரை அழிந்த நிலையில் இருக்கிறது. பழைய கல்லில் தெளிவான எழுத்துக்கள் இருந்ததை நினைவுபடுத்துவதோடு அக்கல்லை சிலையின் மற்றைய 3 பாகங்களில் ஏதெனும் ஒரு பக்கலில் நினைவாக வைக்கவேண்டும் என ஒரு ஆலோசனையை முன்வைக்க விரும்புகிறேன். அதேபோல தற்போது அகற்றப்பட்ட வண.பிதா லோங் அடிகளாரின் பழைய வெள்ளைக் கல்லை புதிய கல்லுக்கு அருகில் வைத்தால் நூலகம் பாதிக்கப்பட்டதற்கான சான்றாக அவை அமையும் என நம்புவதோடு இனிவரும் காலங்களில் ஏனைய 3 அடிக்கல்களை மாற்ற வேண்டி ஏற்பட்டால் அவற்றையும் ஞாபகமாக வைத்துக் கொண்டு புதிய கல்லை அதனருகில் வைக்கலாம் எனவும் ஆலோசனை கூற விரும்புகின்றேன்.1984இல் திறக்கப்பட்ட புதிய கட்டடம் முனியப்பர் கோவிலைப் பார்த்தபடி இருக்கும் வாசலில் இருபக்கத்திலிருந்த கறுப்புக் கற்களில் ஒன்று இன்றுமுள்ளது. அதாவது மேயர் விசுவாதன் அடிக்கல் நாட்டியது. ஆனால் திறந்து வைக்கப்பட்ட கல் காணாமற் போயிருந்தது. அதை வைப்பதற்குத் தான் நடைபெறாதிருந்த பெரிய மும்மொழிகளாலும் எழுதப்பட்ட கல் முன்பாக வைக்கப்பட்டிருக்கிறது. இதுதான் பிரச்சினைக்குரிய அகற்றப்படவேண்டிய கல். இதைவிட இரண்டாவதாக குறிப்பிட்ட தமிழல் இருந்த ஆசியா பவுண்டேசன் பண அன்பளிப்புச் செய்யப்பட்ட கல் புதிதாக ஏற்படுத்தி இருந்ததுபோல முன் வாசலில் வைக்கப்பட வேண்டும்.7. நூலகம் எரிந்தபொழுது அந்த அதிர்ச்சியில் காலமாகிய வண. பிதா. தாவீது அடிகளாரின் உருவப்படம் பெரியளவில் செய்யப்பட்டு நூலகத்தின் ஒரு பகுதியில் வைக்கப்பட வேண்டுமென்பது அன்று மேற்கொள்ளப்பட்ட கோரிக்கை. (கடந்த வருடம் அவரது நினைவு அனுட்டிக்கப்பட்ட தும்பளைக்கு நேரில் சென்று அந்நிகழ்வுகளில் கலந்து கொண்ட திருப்தி எனக்கு ஓரளவு மன அமைதியை அளித்தது.) இன்றுவரை அது நிறைவேற்றப்படவில்லை.பெரிய அளவில் எரிக்கப்பட்ட நூலக மாதிரிப் படங்களுடன் அவரது முழு உருவப் படமும் அடுத்த வருடம் நூலகத்தில் வைக்கப்படவேண்டும் என்பது எனது அவா. இன்றுகூட இக்கட்டுரையையும் இதற்கு ஆதாரமான விடயங்களையும் தொகுத்து ஒரு சிறு நூலாக வெளியிட எண்ணியிருந்தேன். காலம் கைகூடவில்லை. அடுத்த வருடம் இதற்கு ஒரு முடிவுகட்ட வேண்டும் எனத் தெரிவித்து இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்

வியாழன், 25 மே, 2017

வைரவிழா காணும் அப்பு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், நிற்கிறார், மரம், புல், செடி, வெளிப்புறம் மற்றும் இயற்கை


அகர எழுத்தை அப்புவாய் அரவணைத்து
வாழ்ந்து வந்த பதைக்கும் வாழப்போகும் பதைக்கும்
இடையில் நின்று உன் வரலாற்றை பிரட்டும் நேரம்
வைரவிழாவில் தடம்பதிக்கும்
அப்பு அண்ணன்
நீ துணிவுடையான் துன்பங்கள் கண்டு
துவளா மனம்முடையயான்
நான் தான் வேண்டுமெனக்கு என்பதை விட்டு
நீயும் நீ சார்ந்ததுமே இனியெனக்கு என வாழ்பவன்
இன்று அறுபது வயதுமுற்று பெற்றவன் நீ!
இருப்பதோ இளமைத் துள்ளளோடு!
உன்னை அரவணைக்க இரு புதல்வர்கள்
ஆடுகளம் விளையாட அருமை மனைவி
பொதுப்பணி என்றாள் உன் பனிபோல்
தன்னலமற்ற தார்மிக வைர மனிதன்
நீ ஒரு உலோபி அதனால் தானோ
நாம் சார்ந்த தமிழ் நோர்வே உதவி அமைப்பு
ஓர் அட்ச்சக பாத்திரம் இன்று
அப்பு அண்ணா !
இன்று தனிமனிதன் இல்லை நீ!
தரணியில் உனக்கொரு கூட்டமேயுண்டு
பணிகள் பல செய்தாலும்
பிணிகள் இல்லாப் பெருவாழ்வு வாழ்ந்து
ஊரும் உற வொடும்
சீரும் சிறப்புமாக எண்பதும் கண்டு
நூறும் காண எங்கள் இதயமார்ந்த
நல் வாழ்த்துக்கள்!! நட்புடன் நண்பர்


                                                    ###############################

பதினெட்டவது அகவை பட்டாம்பூச்சி



படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், நிற்கிறார் மற்றும் குளுமையை உணரவைக்கும் கருப்பு கண்ணாடிகள்


உனக்கான உன் உரிமையை .நீயே 
தீர்மானிக்கும் சிறப்பான நாளின்று
அகவை பதின்னெட்டு 
பயம்மற்ற வாழ்வு
பணிவுடன் வாழ்ந்து
பெற்றோர் எனும் சொல் கேட்டு
பெரியவனாய் தம்பியுடன்
பெருமை படைத்து
தமிழோடு புரண்டு
தமிழினம் காத்து
எதிர் காத்தில் அடிவைத்து
உனக்கான சிந்தனை வளத்தை தேடி வர
உன் உறவு தொடரவேண்டும்..!!
உன் உணர்வு வளரவேண்டும்..!!
உன் உள்ளம் என்றும் மகிழவேண்டும்..!!
#அன்பு #பாசம் #உறவு
வாழ்த்தும்
சண் மாமா

வியாழன், 9 மார்ச், 2017

"புங்குடுதீவு சிதைவுறும் நிலம்"

                                                                                         நோர்வே புங்குடுதீவு ஒன்றியம் சார்பில் "புங்குடுதீவு சிதைவுறும் நிலம்"ஆவனத்திரைப்படம் 
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
புலம்பெயர் தமிழர் ,தமிழ்த் தேசிய அரசியல் தமிழ் சமூகத்தின் பிரச்சனைகளிற்கு இலங்கைஅரசு, அரசுசார்ந்த புறக்காரணிகளை மட்டும் அடையாளம் கண்டு தங்கள் சார்ந்த அரசியல் ஒடடத்தில் எமது சார் வார்க்க அகமுரண்பாடுகளை குறைத்து மதிப்பீடு செய்து நகர்ந்து செல்லும் இந்த நிலையில்
ஒருமனிதநேய விழிமியங்களை சமூகப் பிரழ்வுகளுக்குள் சிதைவுண்டு முழ்கி வரும் சமூகங்களில் புங்குதீவு மண்ணும் ஒன்றாகும்
மருதம் ,நெய்தால் பாகுபாடு நிலத்திணை கொண்ட ஒரு சுவரியமானஅழகான தீவுத்தேசம் போர்விட்டு சென்ற வடுக்களால் ஒரு சமூக நெறிப் பிறழ்வுகள் பண்பாட்டு வேரின் சிதைவு அல்லது அழிவு என்ற அடிப்படையில்
உறவு ,சமூகம் ,நிலம் வகிபாகங்கள் உரு பரிமாற்றம் ,எம் மண்ணில் இன்று சமூக பண்பாட்டு மானிடவியலில் இனவரைவியலே இன்னும் ஆதிக்கம் செலுத்துகிற நிலைப்பாடு, சாதிமயம் கொண்ட நிலப்பிரபுத்துவ ஆழ்மை, இருப்புக்களின் ஏழ்மை நிலைமை, சமூக, பொருளாதார ரீதியிலான இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவரும் நலிந்த மக்களின் வாழ்வியல் தனிப்பட்டவர்களின் பொறுப்பிலிருந்து சமூகப் பொறுப்பு நோக்கிச் செல்வதற்கான சமூக விழிப்புணர்வு
போன்ற முரண்பாடுகளால் ஏற்பட்டுள்ள தேக்கதின் நிலைப்பாடை காத்திரமான ஒரு அழகாக உணர்வு பூர்வமாக கோர்க்கப்பட்ட ஆவண திரட்டல் கான்ஒளி வடிவில்"புங்குடுதீவு சிதைவுறும் நிலம்" பெயரில் வெளிகொண்டுவந்தார் சமூகவியல்கலாநிதி பட்டதாரி தங்கேஸ் பரஞ்சோதி Tanges Paranjothy
காணொளியின் தொகுப்புரை:-
சிதறிய சமூகமும் சீர்செயும் நிலமும் பேசும் பொருள் கொண்டு
பேராசியர் சண்முகரட்ணம் பேராசியர் சிறிஸ்கந்தராஜா பரப்புரை நிகழ்த்தினார்கள்
அழிந்து கிடக்கிற அடிப்படைக் கட்டுமானங்களை மீளமைப்பதும் குடிமைச் சமூகத்துக்கான அடிப்படைகளை உருவாக்குவதும் எமது இனத்தின் அடையாளத்தினை தக்கவைப்பதற்கு புலம்பெயர் , சமூக கட்டமைப்புகளை ஒன்றிணைத்து சமூதாயத்தின் வாழ்வியலுக்கான வழிமுறை களையும், குடிமைச் சமூகத்துக்கான நேர்மறை விழுமியங்களையும் செயல்பட பொருளாதார மைய ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை புலம்பெயர் சமுகத்தின் உண்று என்பதை வலியுறுத்தினர்

சனி, 4 பிப்ரவரி, 2017

Avalum Naanum in Bharathi Dasan

பாயும் ஒளி நீ எனக்கு

Kannan en Kaathalan

மர்மயோகி - நாஸ்டிரடாமஸ்...


நாஸ்டிரடாமஸ் எது நடந்ததோ, அதைத்தான் சொன்னார். எது நடக்கிறதோ, அதை சொல்லியிருக்கிறார். எது நடக்கப் போகிறதோ, அதைக்கூட சொல்லியிருப்பார்.

யார்? இந்த நாஸ்டிரடாமஸ்.

கி.பி 1503 - 1566 ஆண்டில் பிரான்சில் வாழ்ந்த தீர்க்கதரிசி Michael De Nostredame. அதாவது ஜோசியர். பளபளக்கும் சட்டை போட்டுக்கொண்டு, கழுத்தில் கொட்டையும், நெற்றியில் பட்டையுமாக கும்பராசி நேயர்களே! என, டீவியில் தினசரி ராசிபலன் சொல்லும் சாதாரண ஜோசியர் இல்லை இவர். இந்த உலகில் நடந்ததை நடப்பதை நடக்கப் போவதை கணித்த உலகமகா ஜோசியர். இவர், அப்படி என்ன சொன்னார் ? சொன்னதெல்லாம் நடந்ததா?


ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு "Every thing has a reason behind it " அதுபோல் இந்த உலகில் நிகழும் சம்பவங்களுக்கும் பின்னணியில் ஒரு காரணம் புதைந்துள்ளது. சில சம்பவங்கள் நிகழும்போது அதற்கான காரணங்கள் புரிந்துவிடும். சில, அந்த சம்பவத்தோடு ஏதோ ஒரு வழியில் தொடர்புடையதாக இருக்கும். இந்த விளைவு "பட்டர்பிளை விளைவு" (Butterfly Effects) எனப்படும்.அதன் தொகுப்பே "கயோஸ் தியரி" (Chaos theory) என்கிறார்கள்.

சம்பவங்கள் நடப்பதற்கு முன்பே அதை உணர்ந்து, இப்படித்தான் நடக்கும் என அடித்துக் கூறுபவர்கள் சிலரே. அவ்வாறு முன்னமே அறிந்து, எதிர்காலத்தைக் கூறுவதை ஜோதிடம், ஆருடம், தீர்க்கதரிசனம் என்றெல்லாம் வகைப்படுத்தலாம். அறிவியல் படி இது ESP - Extra Sensory Perception. நம்ம சித்தர்கள், ஞானிகள் போன்றோர் இந்த வகையறாதான். சினிமாவில் பார்த்திருப்போம், ஹீரோயின் ஊருக்கு போகும் டிரையின் கவிழப் போவது ஹீரோவின் தலைக்குள் முன்கூட்டியே பல்பு எறியும், உடனே பின்னணி இசையோடு ஓடிச்சென்று டிரையினை நிறுத்தி, அனைவரையும் காப்பாற்றி, ஹீரோயினைக் கட்டிபிடித்து டூயட்பாட சென்றுவிடுவார். நடப்பதை முன்கூட்டியே உணர்ந்து கொள்ளும் சக்தி நம்ம ஹீரோவுக்கு இருக்கும் . அதுபோல நிஜத்தில் வாழ்ந்த  சக்தி வாய்ந்த ஹீரோதான் இந்த நாஸ்டிரடாமஸ். இவர் கொஞ்சம் ஒருபடி மேலே சென்று, இன்றுவரை உலகத்தில் நடந்ததையும், நடக்கப் போவதையும், இந்த உலகம் எப்போது அழியப் போகிறது என்பதையும் மனுசன் புரியாத சூத்திரங்கள் நிரம்பிய பாடல்களாய் எழுதி வைத்துவிட்டு சிவனே என்று போய்விட்டார். அதற்குப்பின் இன்றுவரை, உலகில் நடந்த முக்கிய சம்பவங்கள் அவரது குறிப்புகளோடு தொடர்புடையதாக இருக்கிறது. குறிப்பாக பிரெஞ்சுப் புரட்சி, ஹென்றி மன்னர் மரணம், இரண்டாம் உலகப்போர், ஹிட்லர், நெப்போலியனின் ஆட்சி, டயானா மரணம், கென்னடி மரணம், லண்டன் தீவிபத்து, பிளாக் செப்டம்பர் மற்றும் இந்தியாவில் இந்திரா காந்தி கொலை, ராஜிவ்காந்தி கொலை என அவர் முன்கூட்டியே கணித்தது ஏராளம். 2012-ல் உலகம் அழியப்போகிறது என்ற புரளி பரவியபோது, விஞ்ஞானிகள் பலர் வானத்தை வெறித்தபடி ஆராய்ந்து கொண்டிருக்க, அதைவிட இரண்டு மடங்கு ஆராய்ட்சியாளர்கள் குப்புற படுத்துக்கொண்டு நாஸ்டிரடாம்ஸின் புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தனர்.

ஏன்? அவர் இவற்றையெல்லாம் மறைமுகமாக குறிப்பிட வேண்டும். தெளிவாக எழுதியிருந்தால் முன்கூட்டியே தடுத்திருக்கலாம் இல்லையா? ( நம்ம சினிமா ஹீரோ மாதிரி) எனத் தோன்றும். அங்குதான் பிரச்சனையே. அரசர்களும், மதகுருமார்களும் கடவுளின் பிரதிநிதியாக வணங்கப்பட்ட அவர் வாழ்ந்த காலகட்டத்தில் இது சாத்தியமில்லை. வாயைத் திறந்தால், வாயிலே வெட்டுவார்கள். அதனால்தான் அவர் குறியீடுகளால் யாருக்கும் விளங்காத தமிழ் சினிமா பாடல் போல் தான் கணித்ததை எழுதிவைத்தார். இவ்வளவு கணித்தவர் தன் மரணத்தையும் கணித்திருப்பார் அல்லவா. அதுவும் உண்மைதான். "சார் காலையில் பார்க்கலாம்" என அவரது உதவியாளர்  Jean- Aymes -de chavigh இரவு வேலைகளை முடித்துவிட்டு கூறும்போது, சாரி "காலையில் நான் இருக்கமாட்டேன்" என ஜாலியாக கூறி, பல மண்டைகளை இன்றுவரைக்கும் குழம்ப வைத்துவிட்டு மண்டையைப் போட்டு விட்டார்.

இந்த புத்தகம் உலகில் நடந்த சில முக்கிய சம்பவங்களையும், அதற்கு நாஸ்டிரடாமஸ் எழுதிவைத்த குறிப்புகளையும் தெளிவாக காட்டுகிறது. இடையே அவரைப்பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளையும், அறிய புகைப்படங்களையும் தொகுத்திருப்பது அழகு. அவரது நான்குவரி பாடல்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில் கொடுக்கப் பட்டுள்ளது. ஆசிரியர் கார்த்திக் ஸ்ரீநிவாஸின் படைப்பை பாராட்ட தகும். இவர் எடுத்துக் கொண்ட சிரத்தையையும் அளித்த உழைப்பையும் புத்தகத்தை படிப்பவர்கள் உணரலாம். இன்றளவும் நாஸ்டிரடாமஸின் புத்தகமான "தீர்க்கதரிசனங்கள் (The Prophecies)"  பற்றி ரூம்போட்டு ஆராய்ந்து கொண்டிருப்பவர்கள் ஏராளம். ஆராய்ந்து கொட்டிய முடிகள் தாராளம். 
இதெல்லாம் கட்டுக்கதை அவர் எழுதியது வெறும் பா..பா பிளாக்ஷீப் ரைம்ஸ், என வாதிடுபவர்களும் உண்டு. எது எப்படியோ, நாஸ்டிரடாம்ஸ் ஒரு மர்மயோகி, அவரது குறிப்புகள் புரியாத புதிர். அவற்றில் சிலவற்றை இந்த புத்தகத்தில் நமக்கு காட்டுகிறார் ஆசிரியர் . நாஸ்டிரடாமஸ் பற்றியும் அவரது குறிப்புகளைப் பற்றியும் அறிந்து கொள்ள இந்த புத்தகம் ஒரு சிறு துளிதான் ஆனால் கடல் அளவு  அடுத்த புதிர்களுக்கு வழிவகுக்கிறது. தவறாமல் வாசியுங்கள்.