சனி, 13 ஏப்ரல், 2013

முகம் அறிய முகப்புத்தகத்தில் நட்பு தோழமை


 
இன அறியோம் !

மத அறியோம் !

மொழி அறியோம் !

ஊர் அறியோம் !

பிறப்பிடம் அறியோம் !

நட்பெனும் மொழியால் !

அனைவரும் இங்கே ஓர் தளம் !
சந்தித்துக் கொண்டோம்!
இதயத்தை தோழமை நட்பால் !
புரிந்து கொண்டோம்!

எதிர் பார்ப்புகள்
எதுவுமில்லை!
ஏமாற்றங்கள்
சிறிதுமில்லை!

அவரவர் கருத்துக்களை
இடம் (பரி) மாற்றிக்க கொள்வோம்!
பாரட்டுக்களை
பரிமாறிக்க கொள்வோம் !

சின்ன‌ சின்ன‌
ச‌ண்டைக‌ள் இடுவோம்!
சீக்கிர‌த்திலேயே
ச‌மாதான‌த்திற்கு வ‌ருவோம்!

ஆண்டுகள் புரண்டன நட்புகள் பல சேர்ந்தனர்

சிந்தனை பரிமாற்றம் பெற்றன

 

சித்திரை புத்தாண்டு


 


 

நல் இரவு நேரத்தில்

மெல்ல மெல்ல அடியெடுத்து
மெல்லியலாள் சித்திரையும்


மயக்குமொரு புன்னகையுடன்
மீண்டுமிங்கே வந்திட்டாள் விஜய வருடம் !


சாதி மத மோதலில்லா
சமத்துவத்தை அரவணைக்க !

நோய்நொடி இல்லாத
வாழ்க்கையை தந்துவர !

தரணியெல்லாம் ஏழ்மையில்லாத
எம் இனத்தின் விடுதலை பெரிகிவர !

நித்தம் நித்தம் யுத்தமில்லா
நித்திரையை கொண்டுவர !

சித்திரை தமிழ்தாயே வருக -மக்களுக்கு
செழுமையான வாழ்வை தருக!


நிதமும் திடமிருப்பின்,
புன்முறுவல் நிலையாயிருப்பின்,
தினமும் எனக்கு புத்தாண்டு

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

கலை வணக்கம்









அழகான கலை விடியல்

மிதமான குளிர் காற்று

வெண்பனி மூடிய பூமி

சில்லென்று வீசும் பனிக்குளிர்

மேக திரை மறைவில் நின்று

முத்தம் கொடுக்க துடிக்கும் சூரியன்

நடை பயிற்ச்சி எடுக்கும் மக்கள்

யன்னல் ஓரமாய் தேனீர் கோப்பையுடன் .நான்

இவைகளை இரசிக்கும் என் உள்ளதமான என் மனது

உங்களுக்கு எல்லாம் எனது மனம் நிறைந்த காலை வணக்கம்

 

திங்கள், 21 ஜனவரி, 2013

http://musicmazaa.com/MMaPlayer/embedded/player.swf"> name="flashvars" value="id=bae34f14d3fb4accf9de51b05a8c1ba5&p=1">http://musicmazaa.com/MMaPlayer/embedded/player.swf
" flashvars="id=bae34f14d3fb4accf9de51b05a8c1ba5&p=1" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="400" height="90" name="MMaPlayer"><p> <a href="&lt;a href=" http:="">Listen">http://musicmazaa.com/tamil/audiosongs/movie/Neethaane+En+Ponvasantham.html?e">Listen</a> to Neethaane En Ponvasantham Audio Songs at MusicMazaa.com</a></p>

சனி, 8 டிசம்பர், 2012

ஈழப்போரட்டடில் எனது


ஒரு புத்தகத்தில் உள்ளடக்கியிருக்கின்ற விடயங்களில் மாத்திரம் அல்லாமல் அது உருவாகிய முறை, எழுதப்படும் சூ நிலை , வாசிக்கப்படும் காலங்களாலும் முக்கியத்துவம் பெறுகின்றது.

எமது போராட்ட வரலாற்றில் விடுதலை போராட்டம் முன்னெடுக்கப்பட்ட விதத்தையும்

நாங்கள் விடப்பட்ட  பிழைகளை மீள்பரிசீலனை செய்வதற்குமான தேவையும் அதிகரித்தே இருக்கின்றது

 

 

இந்த வகையில் ஈழப்போராட்டம் இராணுவ ரீதியான ஒரு பெரிய இன அழிவுக்கு பின்

மகிந்தவினால் ஒரு த தற்காலிய  ஒரு முடிவுக்கு கொண்டுவந்த காலப்பகுதியில்

 

வந்திருக்கின்ற வரலாறு பதிவுகளுடன் புஸ்பராஜா எழுதிய ஈழப்போரட்டடில் எனது

சாட்சியம் என்ற பதிவுகள்என்கிற நூலை முக்கியமானதாகவே நான் உணர்கின்றேன்

 

 

1952 இல் தமிழரசு கட்சி சந்தித முதல் தேர்தல் சாதனைகளில் இருந்து தொடங்கப் படுகின்றது

1961 இல் நடைபெற்ற உணவிரத போராட்டம்முலம்

இவரது போராட்ட வரலாறு பதிவு

துவங்குகிறது. அவரது மாணவர் காலங்களில்

*தமிழ் மாணவர் பேரவையின் தோற்றம்செயல்பாடுகள்

*தமிழ் இளைஞர் பேரவையின் தோற்றம்

*தமிழர் கூட்டணியின் துவக்கம்

*செல்வநாயகத்தின் செயல்பாடு

.இளைஞர் பேரவையின் பிளவு

*புலிகளின் தோற்றம்

*ஈபிஆர்எல்எ·பின் தோற்றமும் வளர்ச்சியும்

 

*வங்கிக் கொள்ளை,

*போலிஸ் அதிபர் கொலை,

*சிறையில் சித்திரவதை அனுபவங்கள்,

* நூலக எரிப்பு,

*ஜனாதிபதிகள் கொலை,

*சகபோராளிகளின் அழிவுகள்,

என்று சம்பவங்களின் பெரும்பாலான இடங்களில் நேரடிப் பார்வையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பின்பு இலங்கையில் போராட்டதிற்கு ஓய்வு கொடுத்து ஐரோப்பா சென்று

அங்கு போராட்டத்தின் செயல்பாடுகள்

விளக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த நூலை ஒரு முக்கியமான காலகட்டத்தின் நேரடி வரலாற்றுப் பதிவாகக் கொள்ள வேண்டும்

ஒரு வரலாறு பதிவு செய்யும்போது அதில் தன்னை முன்னிலைப்படுத்தியாக வேண்டும்

இந்த பதிவில் புஸ்பராஜாவின் பங்கு மிகவும் மிகைப்படுத்தப்பட்டுத்தான்உள்ளது

பல இயக்கங்களைத் துவக்கியது, ஆரம்ப நாட்களிலேயே மலையகத் தமிழர்களின் நலனை மனதில் கொண்டு செயல்பட்டது, சிவகுமாரன் போன்றோருக்கு தலைமை செயல்படர்ரகவும் வன்முறையை விருன்பதவரகவும் பின்னாளில் மிக முக்கியமான தலைவராகக் கருதப்பட்ட பத்மநாபாவைப் பின்னின்று இயக்கியது உள்ளிட்டுப் பல விஷயங்களில் தன்னை முதன்மைப்படுத்தியிருக்கிறார்

புஸ்பராஜா. தன்னை முதன்மைப்படுத்திக் கொண்டதைப் போலவே தான் சார்ந்திருந்த இயக்கத்தையும் உயர்த்திப் பிடித்திருக்கிறார்.

மற்றைய ஈழவிடுதலை இயக்கங்களின் செயல்பாடுகள் குறித்த தன்னுடைய விரிவான விமர்சனங்களை முன்வைத்த புஸ்பராஜா, தான் சார்ந்திருந்த இயக்கத்தைப் பற்றியும் தன்னுடைய நிலைப்பாடுகளைத் தெளிவாக எழுதியிருக்கலாம் ஈபிஆர்எல்எ·ப் இயக்கத்தின் வெற்றிகளுடனும், நேர்மையான வழிமுறைகளுடனும் தன்னை அடையாளப்படுத்துகின்ற அவர் சில பதிவுகளில் உள்கட்சி பிரட்சனைகளில் தனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை என்று நலிவிவிடுவது .இந்த சாட்சியத்தில் உணர்கின்றேன்

1981இல் கீரிமலைக்கு தமது திணைக்களத்திற்கு ஆதரவு தேடி வந்த சந்ததியாரை தான் வெளியேற்றியதை பெரும் விலாசமாக எழுதியுள்ளார்.

இங்கு உமாமகேஸ்வரன்  சந்ததியாரை  பகைவராகவே காட்டுகின்றார். அவர்களை பற்றி எதிரியைக் குறித்து எழுவது போலவே எழுதுகின்றார். புஸ்பராசாவைப் பொறுத்து கூட்டணிக்கு எதிராக சிந்திப்பது அமிர்தலிங்கத்திற்கு மாறாக கருத்துக் கொண்டிருப்பது மாபெரும் குற்றமாகும். தனக்கும் சந்ததியாருக்குமான முரண்பாடு அரசியல் சார்ந்தது என்பதை கடைசி வரை அவர் சொல்லவில்லை. சந்ததியாரை அதிகம் பேசுபவராக கொச்சையாகக் காட்டுவதன் மூலம் அரசியல் உள்ளடக்கத்தை, கருத்துக்களை தந்திரமாய்த் தவிர்த்து விடுகிறார்

 

மற்றெல்லோரையும் விட போராட்டத்தில் தானே அதிகம் பாரம் சுமந்து துன்ப்பப்பட்டவரகவும் காட்டும் புஸ்பராசா,

ஏன் காந்தீயம் பற்றிய எந்தொரு பதிவும் இதில் இடம்பெறவில்லை ஏன் ?

 

 

 

இறைகுமாரன் - உமைகுமாரன் கொலைக்கு சந்ததியாரே காரணம் குற்றச்சாட்டை புஸ்பராசா எழுதியுள்ளார். அதுசார்ந்த உண்மைகள் ஆதாரங்கள் குறித்தான கவலை எதுவும் அவரிடம் இல்லை. சந்ததியார் மீதான கூட்டணிக்காலத்துக் கோபங்கள், தமிழர் இளைஞர் பேரவை காலத்தைய பகைமைகளை புஸ்பராசா தீர்த்துக் கொள்கிறார். இறைகுமாரன்- உமைகுமாரன் கொலைக்கு காரணம் சுந்தரம் என அழைக்கப்படும் சிவசண்முகமூர்த்தியின் கொலைபற்றிக் கவனயீனமாகப் புஸ்பராசா எழுதாமல் விடவில்லை. அதைக் குறிப்பிட்டால் இறைகுமாரன் - உமைகுமாரன் கொலையானது சில அடிப்படை நியாயங்களை பெற்றுவிடும் என்று புஸ்பராசா அஞ்சியிருக்கிறார்.

இறைகுமாரன், உமைகுமாரன் போன்றோர் சுந்தரம் கொலையினை எப்போதுமே நியாயப்படுத்தி வந்தார்கள். இருவரும் அமிர்தலிங்கம்; பிரபாகரன் இருவருக்கும் மிகவும் நெருக்கமானவர்களாக அப்போது இருந்தார்கள். சந்ததியாரும் இந்தியாவில் ஒரு முறை பிரபாகரனால் கடத்தப்பட்டு மொட்டையடிக்கப்பட்டு கொல்லப்படும் வேளையில் தப்பினார். அமிர்தலிங்கம் பிரபாகரன் கூட்டுச் சதியால் தான் சுந்தரத்தின் கொலை நிகழ்ந்தது

 

 

சனி, 3 நவம்பர், 2012

பிள்ளை அணைப்பை தேடி

                  
உன் உணர்வுகளை மறந்து

உன் பிள்ளை
உணர்வுகளை மட்டுமே
உன் உலகமென நினைத்த
என் உலகம் நீ!
நான் வணங்கும் தெய்வம் நீ!!

அன்னையே உன் அன்புக்கு
நிகர் ஏதம்மா.....
பிள்ளை உள்ளம் தானறிந்து

அயல் நாட்டில் இருந்து

உன் பிள்ளை நோய் அறிந்து

உன் நோய் மறந்தாய்


தேடி தேடிச் சென்றாலும்
தேவையானதை தேடலாம்

ஆனால் அன்பை உன்னுடன் -அம்மா
உலகி எதனை அதிசயம் என்றால்

அது நீ தான் அம்மா

என் புன்கையின் பின் உலகம் -நீ

புதன், 4 ஜூலை, 2012

ஆதங்கம்


 திருமணமான 
 
இத்தனை ஆண்டுகளில்

எத்தனை முறை

கூறியிருப்பாய்….

என்னையே

உனக்கு கொடுத்தேனே

என்று….. 


எண்ணிப் பார்ப்பாயா

என்றேனும்….

நீ உன்னை

என்னிடம் இழந்த

அதே நொடியில்தான்

நானும் என்னை

உன்னிடம் இழந்திருக்கிறேன்

என்பதனை….

சனி, 30 ஜூன், 2012

ஓர் இரவு.. ஒரே இரவு...



முள் ஒடித்த தீர்ப்பின் முடிவில்
என் ஆயுள் முடிவு ஆரம்பித்த இரவு

குற்றமும் பாவமும் கொலைகளும் துரத்த
என் விழிகள் உறக்கம் தொலைத்த இரவு

கண்களின் வழியே திரவம் கசிந்து
அமிலமாய் மாறி சுட்ட இரவு
...
பசியில் அலையும் இரப்பையின் இரைச்சல்
பாவ இறைச்சி புசித்த இரவு

பன்னிய பாவங்கள் பட்டியல் இட்டு
பட்டிணத்தாரை படித்த இரவு

அரக்க புத்தனும் புத்த அரக்கனும்
மாறி மாறி யுத்தம் செய்த இரவு

கம்பிகள் வழியே தப்பித்த அரக்கம்
வெற்றுத்தரையில் தவழ்ந்தது புத்தம்

ஒவ்வொரு இரவும் இருக்க இறுக்க
பாவமுடிச்சுகள் நெகிழ்த்தது கண்டேன்

இக் கடைசி இரவின் இறுக்கத்திலே
இம்மை துறந்து இன்மை உணர்ந்தேன்

பிறப்பால் பெற்ற மனித இடத்தை
இறப்பு நிரப்ப

மரணம் பரிசாய் தந்த
மனிதத்துவத்தில்

கடைசி முடிச்சும் கழுத்தை இறுக்க
பாவங்கள் அவிழ்ந்து புத்தனாய் இறந்தேன்

வெள்ளி, 15 ஜூன், 2012

நான் கவிஞன் அல்ல



நிறைய கவிதைகள் படித்து... நிறைய நிகழ்வுகளை நினைத்து...பாதிக்கப்பட்டு.. .. இப்படி பலவித அனுபவங்களில் எனக்குள் எழுந்த வார்த்தைக் குவியல்களை சேமித்து வைத்திருக்கிறேன்... படித்து முடிக்கும் உங்களுக்கு அது கவிதைதானென தோன்றினால் இந்த வலைப்பூவுக்கு வைத்த தலைப்பில் மகிழ்வேன்...
தொடர்ந்து வாருங்கள்..... இந்தப்பூவை தொட்டுச்செல்லுங்கள்...