புதன், 21 ஆகஸ்ட், 2024

அழகு மிளிர்ந்த புதுமை -பங்கிரையன்-


எதுகும் மாற்றமில்லை எல்லாம் புதிது
விறுவிறுப்பான நாட்டிய அரங்கம்
தீதும் நன்றும்


கடந்த 17 ஆவணி 2024 சனிக்கிழமை கலசாதன பள்ளி மாணவர்களின் இருவரின்
மண்டபம் நிரம்பிய நாட்டிய அரங்கம்
புறநானூறுறில் துறையும் அவை, கணியன் பூங்குன்றன் பாட்டு.யாதும் ஊரே யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர் தர வாரா தலைப்பை தங்கியது அரங்கம்
பெண் அர்ச்சகர் சைவ சமைய ரீதியான முறையை தமிழில் ஆராதனைகளை நிகழ்த்தி நிகழ்வை தொடங்கி வைக்க

#பரதக்கலை ஆரம்பம்
மேடையிலிருந்து ஒளி மங்கி பரவ, நட்டுவனார் இசைக்கருவிகளுடன் இசை முழங்க ,ஆசிரியர் கவிதா லட்சுமி அவர்களின் நெறிப்படுத்தலில் ஆடல்நாயகன்
#ஹரிணி நகுலேஸ்வரதாஸ் ,
#தீபிகா மகேசன்
இருவரும்




அலங்கரிக்கப்பட்ட அரங்கில் மலர்வணக்கம் நடனத்தை மலர்த்தூவி குரு, இசைக்கலைஞர்களுக்கு சிரம்தனை தாழ்த்தி மற்றும் காண்போரையும் வணங்கி உடலும் மனமும் மலர்தது வீற்றிருந்த காட்சி ஒவ்வொருவர் மனதையும் அரவணைத்து கொண்டிருக்கும் என எண்ணலாம் .

*திருக்குறள் > விருத்தம்
*திருக்குறள் > அலாரிப்பு
*தாடகை > கவித்துவம்
*கூனியின் > கதையாடல்
*இராவணன் > வர்ணம்
*பாஞ்சாலி / சூர்ப்பனகை > பதம்
*சிகண்டி /சகுனி > கீர்த்தனம்
திருக்குறள் ,இராமாயணக் காப்பிய பாடபேதங்களில் இருந்து முகாந்திரமாக விமர்சனக்கு ஏற்ற கதைமாந்தர்களை வகைப்படுத்தப்பட்ட பாடல்கள் பாரத நாட்டிய முக்கிய அம்ச அணுகப்பட்டது
சந்த நயமும் ஓசை நயமும் கொண்டு நோர்வே வாழ் இலக்கிய முன்னோடிகள் கவிஞர்கள் உமாபலன் ,ரூபன் சிவராஜா உடன் கவிதா லக்சுமி இவர்களே பாடல்களை எழுதினார்கள்
இவர்களின் பாடலுக்கு பக்கவாத்திய கலைஞர்கள் இசை வாத்தியங்கள் கொண்டு இசைக்க ,உணர்ச்சி ததும்பப் பல பாவனைகளில் அபிநயம் பிடிப்பதற்கு ஏற்றதா அமைந்தது என்றால் அது மிகையாகது.

இதிகாச கதையை எல்லோரும் எளிதில் புரிந்துகொள்ளும் விதமாக முன் கூடியே தொகுப்பாளர் கவிஞர் இளவாலை விஜேந்திரன் சிறு குறிப்பாக சொல்லப்பட்டது காண்போர் எழிதில் உள்வாங்கி புரிதலுடன் இரசிக்க கூடியதாக அமைந்தது

காட்சி அமைப்புகள் எளிமையாக அமைக்கப்பட்டிருந்தது மட்டுமல்லாது அந்த எளிமை காரணமாக எவ்விதத்திலும் அக்கதாபாத்திரங்களின் முக்கியத்துவம் குறைந்துவிடாமல் ஆசிரியர் கவிதா லட்சுமி அவர்களின் நெறி ஆற்றலும் நடன அமைப்பும், கவிஞர்களின் பாடல் வரியமைப்பு, பக்கவாத்திய இசை செய்திருந்தது பார்த்தவர்கள் அனைவராலும் பாராட்டப்பட்ட ஒன்றாகும்.


போட்டிக்கு ஆடும் கலைஞர்கள் போல, போட்டியும் போட்டு, பாசமும் காட்டி, நட்பாய் நல்ல நளினமும் புரிந்து ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்று . நடனம் தந்தமையும், ஆரம்பம் முதல் இறுதி வரை களைப்போ சளைப்போ காட்டாமல் அரங்கினை ஆட்சி செய்தமையும் அவர்களின் நடனத்திறமை என்றே சொல்லமுடியும்.


ஆடற்கலைத்திறனை வெளிக்காட்டி இருவரின் உற்சாகமாக அரங்கினில் மெய்சிலிர்க்க வைத்து, கைதட்டலை அள்ள போதுமாக இருந்தது. இதில் முக்கியமாக சொல்லப்படவேண்டிய செய்தி ஆரம்பம் முதல் இறுதிவைரை மண்டபத்தில் அமர்ந்திருந்த மக்களை தம்வசமிழுத்து, நடனத்தை இரசிக்க வைத்தது மட்டுமன்றி, யாரும் கேட்காமலே மக்கள் தாங்களாகவே கரகோசம் செய்து மகிழ்ச்சியை காட்டி பாராட்டியமை நடனக்கலைஞர்களின் திறமைக்கு கிடைத்த பரிசு என்றே சொல்ல முடியும்.

மிகவும் நேர்த்தியாக திட்டமிடப்பட்ட ஒரு அரங்கேற்றம். ஆடையலங்காரம் ஒலி, ஒளி அமைப்பு, மேடை ஒழுங்கமைப்பு என்பனவும் பாராட்டுக்குரியது. வெறுமனமே அரங்கேற்றம் என்று பாராது, அரங்கேற்றத்திற்கு பின்னாலுள்ள உழைப்பும் சிந்திக்கப்பட வேண்டியது. இந்நிகழ்வுக்காக பாடுபட்ட பெற்றோர் பாராட்டப்பட வேண்டியவர்கள்.



வளரும் சமூகத்தை முன்னிலை நகர்த்த முயற்சிக்கும்
பொது அமைப்புகளின் நிர்வாக /பிரதிநிதிகளுக்கு ஓர் வேண்டுகோள் பாரபட்சம் இன்றி இளம் சிறார்களை கௌரவிக்க பழகுங்கள்
தாழ்த்திப் பேசுவதும் தக்கது அன்று.
அனைவரையும் சமமாக மதிப்பதே தக்கது ஆகும்.
மனிதநேயம் நாம் போற்றத் தக்கது ஆகும்.
நல்லவர் உள்ளம்
வல்லவன் இல்லம்
தொல்லைகள் இல்லா
எல்லையில் இன்பம்
மகிழ்வுடன்
சண் நரேந்திரன்





Alle reaksjone

கருத்துகள் இல்லை: