செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022

என் தங்கை

 

 

உறவொன்று எனக்கென்று

ஊரெல்லாம் சொல்ல

எனக்கான தங்கை அவள் !

 

சுடு சுடு  பேச்சில்

குடும்பத்தின் உறவில்

தன்னலம் இன்றி

உடன்பிறந்த உறவை

தங்கமாய் உயர்த்தும்

சொப்பனக்காரி அவள் !

 

சிந்திக்கவும் தெரிந்தவள்

சித்தரிப்பையும் புரிந்தால்

எங்கள் குடும்பத்தின்

தாய்மை அவள் !

 

 

வீட்டின்  ரகசியங்களை

ரகசியமாய் சொல்லி

சகோதர பாசத்தை

 ரகசியமாய்   தன்

நாங்கு சுவருக்குள்

புதைத்து வைத்திருக்கும்

பாசக்காரி அவள் !

 

அண்ணனோ தம்பியோ

இவளின் உலகம்

தாய்மை இருக்கும்

இவள் உலகம்

எங்கள் வாழ்வில் 

எங்கள்  தந்தைக்கு பிறகு

 எங்கள் குடும்பத்தை

 விரல் பிடித்து நடத்திய

இரண்டாவது ஆண்

என் தங்கை அவள் !


-பங்கிரையன்-

கருத்துகள் இல்லை: