இருண்ட பின்னும் இருளாத வானம் .
அடிவானத்தில் தத்தளிக்கும் நிலா
விரிந்து கிடக்கும் வீதியில்
விலகி செல்கிறது இரவு
ஒரு சகாப்த பேச்சளர்போல் !
ஓர் எழுதுகோல் பிடுங்கப்படுகின்றது
ஒரு மொழியாளன் தள்ளிநின்று ஓலமிடுகின்றான்
ஒவொருமுறைறையும்
ஒவ்வாத மொழியில்
ஒவொருவிதமாக
கனவும் நிஜமும்
கை கோர்த்துக்கொண்டன
ஓர் இரவு ஓர் பகல்
நம்பிக்கையானவை
நம்பப்படடவை
பிரச்சினையும் ஏதும் இருந்ததில்லை
முழுமையம் கோரி
குழிமியம்களின் கையில் -ஆயுதம்
சுகந்திரமாக பறந்த பறவை
பெரும் காற்றின் தாக்கத்தில்
மரணிக்கின்றது
பெரும் அலையில் சிக்கிய
மீன்கள் தரையில் துடிக்கின்றன
குழுமிய கழுகுகள்
தங்களை தாங்களே கொத்தி தின்னுகின்றன !
எழுதுகோலை பிடுங்கியவன்
எல்லை போட்டு காத்திருக்கின்றன்
- பங்கிரையான்-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக