நாளை நாளை என்று தினங்களும்,வருடங்கள் ஆகிவிட்டனதூரத்தில் வைத்து பார்த்து பார்த்துஉறவுகளும் துரமாகிவிட்டனமூடிய கதவுகள் இனி
முற்றுப்புள்ளியில் இருந்தே
திறக்கப்படுமா ?
தொலைத்த நாட்கள் எல்லாம்
ஒரு புது முகவரியை தேடிவரும் !
கனவுகள் கூட சுமைகள் ஆகின்றன
ஆனால் நம்பிக்கைகள் மட்டும்
விரும்பியோ ,விரும்பாமலோ
சுமக்கிறது தோள்கள் ...!
நாளையை நம்புவோம்
நாளை என்பது நம்பிக்கை
நாளை என்பது நீயும் ! நானும்!
-பங்கிரையான்-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக