செவ்வாய், 13 நவம்பர், 2018

"கால நினைவுகள் "


//////////////////////////////////////
தந்தையர் தினம்
நினைவுகளாய் நிகழ்வுகள்
வந்து வந்து போகின்றன
இன்னும் -நீ
பார்த்த பார்வை
இன்னமும் நினைவுகளில்
அப்பா !
தூரமாய் நின்று
புன்ன்கைத்த நிமிடம்
இன்னமும் மறக்க முடியாமல்
என் நினைவுகளில்
அப்பா !
ஏனெனில்
மேகம் தொடும் விண்மீன்களாய்
எங்கள் வாழ்வில்
நிதர்சனமாய் வாழ்ந்து விட்டாய்
அப்பா !
எஞ்சியிருப்பது நினவு
வாழ்ந்த இதயமும்
தொலைந்த நிமிடமும்
இன்னமும் என் நினைவுகளில்
உன் உருவம் அப்பா !
- பங்கிரையான் -.

கருத்துகள் இல்லை: